என் மலர்
கார்
ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்விட் இ.வி. காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #KwidEV
ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் இ.வி. காரை ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய ரெனால்ட் இ.வி. அந்நிறுவனத்தின் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. க்விட் இ.வி. கார் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் அறிமுகமாகிறது.
ரெனால்ட் க்விட் இ.வி. முன்னதாக கான்செப்ட் வடிவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்ப்டடது. இதன் தயாரிப்பு முந்தைய வெர்ஷன் முன்னதாக வெளியிடப்பட்டது. இதில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்ற வடிவமைப்பு முன்னதாக டாடா ஹேரியர் காரிலும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹூன்டாய் வென்யூ காரிலும் காணப்பட்டது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய கிரில், சற்று வித்தியாசமான முன்புறம், பின்புறம் புதிய பம்ப்பர்கள் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

புதிய க்விட் இ.வி. காரின் தொழில்நுட்ப விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. எனினும், இதன் பவர்டிரெயின் ரெனால்ட் மர்ரும் டாங்ஃபெங் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இருநிறுவனங்களும் இதற்கான பணிகளை கடந்த ஆண்டு துவங்கின. இதற்கென இ.ஜி.டி. நியூ எனர்ஜி ஆட்டோமோட்டிவ் எனும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றன.
க்விட் எலெக்ட்ரிக் காரின் விவரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் இதில் வழங்கப்படும் மோட்டார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் காரை பயனர்கள் பொதுவெளியில் கிடைக்கும் சார்ஜிங் தளங்களிலும் சார்ஜ் செய்யலாம் என ரெனால்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புத்தம் புதிய எக்ஸ்5 எஸ்.யு.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BMWX5
சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 12 கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் முதலாவது காராக பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 எஸ்.யு.வி. அறிமுகமாக இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த கார் மே மாதம் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டீசல்
என்ஜின் மாடலையும் பின்னர் பெட்ரோல் மாடலையும் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 காரில் 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய மாடல் கார் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்5 வரிசையில் ஐந்தாவது தலைமுறை மாடலாகும்.
காரில் இது மிகவும் நீளமானது. இதன் அகலமும், உயரமும் முந்தைய மாடலைக் காட்டிலும் அதிகம். விரிவுபடுத்தப்பட்ட இந்த இடவசதி பயணிகள் சவுகரியமாக பயணிக்க ஏதுவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 4,921 மி.மீ., அகலம் 1,970 மி.மீ., உயரம் 1,737 மி.மீ. ஆகும்.
இதன் சக்கரங்கள் 2,975 மி.மீ. அளவில் இருக்கிறது. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. முன்புற மற்றும் பின்புற விளக்குகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. சொகுசாக நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.
ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #CompassSportPlus
ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் எஸ்.யு.வி. மாடலின் ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் கார் இந்தியாவில் ரூ.15.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் கார் ஸ்போர்ட் மற்றும் லாங்கிடியூட் வேரியண்ட்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரில் 16-இன்ச் அலாய் வீல்கள், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், பிளாக் ரூஃப் ரெயில்கள் மற்றும் பின்புறம் பார்க்கிங் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட் மற்ற வேரியணட்களை போன்றே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் வழங்குகிறது. இத்துடன் 1.4 லிட்டர் மல்டிஏர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 162 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
இந்திய எஸ்.யு.வி. சந்தையில் ஜீப் காம்பஸ் கார் அதிக பிரபல மாடலாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும் ஜீப் காம்பஸ் இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500, டாடா ஹேரியர் மற்றும் நிசான் கிக்ஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் ஆட்டோமேடிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #TataHarrier
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹேரியர் எஸ்.யு.வி. கார் மாடலை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் துவக்க விலை ரூ.12.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டாப்-எண்ட் வேரியண்ட் விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடல் தற்சமயம் ஒற்றை என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் ஆகும். இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 350 என்.எம். டார்க் செயல்திறனை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்குகிறது.
டீசல் என்ஜின் கொண்ட ஹேரியர் கார் அதன் விலைக்கு ஏற்ற அம்சங்களுடன் லிட்டருக்கு 16.7 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. எனினும், இந்த காரின் ஆட்டோமேடிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட் மாடல் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இதை அறிந்த டாடா மோட்டார்ஸ் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

புதிய காரில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஹூன்டாயின் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த யூனிட் பெட்ரோல் மாடல் ஹேரியர் காரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த கார் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.
எனினும், இந்த காரில் டார்க் கன்வெர்டருக்கு மாற்றாக டூயல் கிளட்ச் அமைப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் ஹேரியர் மாடல்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பி.எஸ். VI ரக எமிஷன்களுக்கு ஏற்ற காராக ஹேரியர் ஆட்டமேடிக் மாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.
டாடா ஹேரியர் பெட்ரோல் காரில் 1.6 லிட்டர் யூனிட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் என்றும் இது மேலும் அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹோன்டா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹோன்டா சிவிக் காரினை வாங்க 40 நாட்களில் சுமார் 2400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCivic
இந்தியாவில் ஏழு ஆண்டுகளுக்கு பின் புதிய அம்சங்களுடன் ஹோன்டா சிவிக் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்த சிவிக் காரை வாங்க இதுவரை சுமார் 2400 பேர் முன்பதிவு செய்திருப்பதாக ஹோன்டா கார் இந்தியா தெரிவித்துள்ளது.
முன்பதிவு எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட நிலையிலும், இவை வெறும் 40 நாட்களுக்குள் நடைபெற்றிருக்கின்றன. புதிய சிவிக் கார் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹோன்டா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

தற்சமயம் உலகம் முழுக்க சுமார் 170 நாடுகளில் ஹோன்டா சிவிக் விற்பனையாகி வருகிறது. இவற்றில் இந்த கார் 10 இடங்களில் மட்டுமே உறபத்தி செய்யப்படுகிறது. பத்து இடங்களஇலும் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை விற்பனை செய்கிறது. கிரேட்டர் நொய்டா ஆலையில் 20 சதவிகிதம் டீசல் வேரியண்ட்டும் 80 சதவிகிதம் பெட்ரோல் வேரியண்ட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய ஹோன்டா சிவிக் மாடலில் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம்., 174 என்.எம். டார்க் @4300 ஆர்.பி.எம். வழங்குகிறது. இத்துடன் முதல் முறையாக சிவிக் மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதிய சிவிக் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 300 என்.எம். டார்க் @2000 ஆர்.பி.எம். வழங்குகிறது. பெட்ரோல் என்ஜின் சி.வி.டி. யூனிட் கொண்டிருக்கும் நிலையில், டீசல் வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கே.யு.வி. 100 காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mahindra
இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்க கார் கம்பெனிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதை ஏற்று, மஹிந்திரா நிறுவனம் புதிய மின்சார காரை வடிவமைத்துள்ளது.
மஹிந்திரா இ.கே.யு.வி. 100 என அழைக்கப்படும் இந்தக்கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் மேலும் இரு மாதங்கள் தள்ளிப்போகும் என தெரிகிறது.

எலெக்ட்ரிக் கார் என்பதால் என்ஜினிற்கு மாற்றாக லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் பேட்டரி சார்ஜ் ஆகி விடும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் இ.கே.யு.வி. 100 மாடலை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் எஸ்.யூ.வி., எக்ஸ்.யூ.வி. 300 உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாருதியின் ஆல்டோ காருக்கு போட்டியாக என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. #TataMotors
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய டாடா ஹேட்ச்பேக் கார் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் டாடா டியாகோ, டிகோர் மற்றும் நெக்சான் உள்ளிட்ட மாடல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் பிரிவில் டாடா சார்பில் எந்த மாடலும் இதுவரை அறிமுகமாகவில்லை. இந்த குறையை போக்க நானோ மாடல் இருந்தபோதும், இது எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை.

இதனால் டாடா அறிமுகம் செய்ய இருக்கும் புதிய என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் ஆல்ஃபா (ALFA) பிளாட்ஃபார்மில் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மில் 3.6 முதல் 4 மீட்டர் வரையிலான நீளமுள்ள கார்களை உருவாக்க முடியும்.
ஏற்கனவே டியாகோ, டிகோர் மற்றும் நெக்சான் உள்ளிட்ட கார்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துவிட்டது. முன்னதாக ஆல்ஃபா வடிமைப்பு அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த கார் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.
அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் டாடா மோட்டார்ஸ் இன் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் ஆகும். இந்த ஹேட்ச்பேக் மாடலில் டாடாவின் புத்தம் புதிய இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் சமீபத்தில் நடந்து முடிந்த 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் குகா எஸ்.யு.வி. மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ford
அமெரிக்காவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் குகா என்ற பெயரில் மற்றொரு எஸ்.யு.வி. மாடல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் கார்கள் வட அமெரிக்காவில் மிகவும் பிரபலம். அங்கு இந்த மாடல் கார்கள் ஃபோர்டு எஸ்கேப் என்ற பெயரில் விற்பனையாகிறது.
இதுவரை 1.5 லட்சம் கார்களை விற்றுள்ள நிலையில் இந்த மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 மாடல் எஸ்.யு.வி. தயாராகும் அதே பிளாட்பார்மில் ஃபோர்டு குகா தயாராகிறது. பிரீமியம் மாடலாக உருவாக்கப்படும் இந்த எஸ்.யு.வி. தற்போது 5 பேர் பயணிக்கும் வகையிலும் 7 பேர் பயணிக்கும் வகையிலும் தயாராகிறது.

புதிய மாடல் ஃபோர்டு இகோ ஸ்போர்ட் மற்றும் எண்டேவர் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடைப்பட்டதாக இருக்கும். அதேசமயம் இதே பிரிவில் தயாராகும் ஜீப் கம்பாஸ் மற்றும் ஹூண்டாய் டக்சன் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் கார் 2016-ம் ஆண்டு முதல் உருவாக்கப்படுகிறது.
இதில் மிகச் சிறப்பான முகப்பு விளக்கு, எஸ்.யு.வி. கார்களுக்கே உரிய பிரமாண்டமான டயர்கள் அதை தாங்கும் அலாய் சக்கரங்கள், பெரிய அளவிலான தொடு திரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, பன்முக பயன்பாடு கொண்ட ஸ்டீரிங் வீல், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா, 6 ஏர்பேக்குகள் மற்றும் ஏ.பி.எஸ்., இ.பி.டி. வசதிகளை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஃபோர்டு குகா விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MahindraXUV300
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகமானோர் முன்பதிவு செய்திருக்கும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை வாங்க பயனர்கள் மூன்று வாரங்களுக்கு காத்திருக்க வேண்டி இருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 W4, W6, W8 மற்றும் W8 OPT நான்கு வேரியண்ட்களில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காரில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 1.2 லிட்டர் யூனிட் 110 பி.ஹெச்.பி., 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 115 பி.ஹெச்.பி., 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இருவித என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
புதிய எக்ஸ்.யு.வி.300 காரின் ஆட்டோமேடிக் வெர்ஷனை சோதனை செய்யும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இந்த வெர்ஷன் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 முன்னணி இடம் பிடித்திருக்கிறது.
புதிய மஹிந்திரா காம்பேக்ட் எக்ஸ்.யு.வி. கார் இந்தியாவில் விற்பனையாகும் மொத்தம் எஸ்.யு.வி. கார்களில் 40 சதவிகித பங்கு வகிப்பதாக மஹிந்திரா தெரிவித்திருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் அறிமுகமாகி இருக்கிறது. புதிய எஸ்.யு.வி. காமிக் என அழைக்கப்படுகிறது. #SkodaKamiq
சொகுசு கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. காமிக் என்ற பெயரில் ஜெனீவா மோட்டார் கண்காட்சிக்கு முன்பாகவே இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.யு.வி. பிரிவில் ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே கோடியாக் மற்றும் கரோக் என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது மூன்றாவதாக இந்த மாடலை அறிமுகம் செய்துள்ளது.
வடக்கு கனடா மற்றும் கிரீன்லாந்து பகுதியில் வாழும் மக்கள் பேசும் மொழியில் காமிக் என்றால் சரியான பொருத்தம் என்று அர்த்தம். அதாவது உங்களுக்கு பொருந்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் இந்தப் பெயரை சூட்டியுள்ளது. நகர் பகுதிகளுக்கு ஏற்ற எஸ்.யு.வி.யாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.யு.வி. மாடல்களில் இது மேம்பட்ட ரகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரட்டை முகப்பு விளக்கு, பகலில் எரியும் எல்.இ.டி. விளக்கு, கம்பீரமான தோற்றத்துக்கு பம்பர் ஆகியவை இந்த காரின் சிறப்பம்சமாக இருக்கின்றன. 16 முதல் 18 இன்ச் அலாய் வீல், பெரிய ரூப்ரெயில், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அனைத்தும் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கும்.
இந்த கார் 4,241 மி.மீ. நீளமும், 1,793 மி.மீ. அகலமும், 1,531 மி.மீ. உயரமும் கொண்டது. இதில் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் வசதி ஆகியன உள்ளன. அனைத்துக்கும் மேலாக டிரைவர் சோர்வில் தூங்கும் நிலைக்குச் சென்றால் எச்சரிக்கை எழுப்பும் வசதியும் கொண்டது.
இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ள இது 9 ஹெச்.பி. திறனையும், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது. இது 6 கியர்களைக் கொண்டது. இதில் 7 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் வசதி கொண்ட காரை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம்.
இதில் 9.2 இன்ச் தொடுதிரை உள்ளது. இந்தப் பிரிவு வாகனங்களில் மிக அகலமான திரையை கொண்டுள்ள காரும் இது தான். முழங்கால்களையும் பாதுகாக்கும் ஏர்பேக் உள்பட இதில் 9 ஏர்பேக்குகள் பாதுகாப்புக்காக இணைக்கப்பட்டுள்ளன. இதன் விலை பத்து லட்சத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் வேகன் ஆர் 2019 ஹேட்ச்பேக் மாடலின் சி.என்.ஜி. வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WagonRCNG
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2019 வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் சி.என்.ஜி. வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் எஸ்-சி.என்.ஜி. கார் LXI மற்றும் LXI (O) வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை முறையே ரூ.4.84 லட்சம் மற்றும் ரூ.4.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய காரில் 1.0 லிட்டர் என்ஜினுடன் சி.என்.ஜி. கிட் வழங்கப்பட்டிருக்கிறது. இது கிலோவிற்கு 33.54 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. புதிய வேகன் ஆர் எஸ்-சி.என்.ஜி. மாடலில் ஸ்டான்டர்டு வாரண்டி மர்றும் மாருதி சுசுகி சர்வீஸ் சேவையுடன் வருகிறது.

வேகன் ஆர் காருடன் வரும் சி.என்.ஜி. கிட் டூயல் இ.சி.யு. மற்றும் இன்டெலிஜெண்ட் கியாஸ் போர்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் மூலம் காரின் பிக்கப் சீராகவும், அதிக மைலேஜ் கிடைக்கும். இதுதவிர புதிய கார் ஆட்டோமேடிக் ஃபியூயல் சேஞ் ஸ்விட்ச் மற்றும் ஃபியூயல் லெவல் இன்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மோடில் 1.0-லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 67 பி,ஹெச்.பி. பவர் @5500 ஆர்.பி.எம். செயல்திறன், 90 என்.எம். டார்க் @ 3500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. சி.என்.ஜி. வேரியண்ட் 58 பி,ஹெச்.பி. பவர் @5500 ஆர்.பி.எம். செயல்திறன், 78 என்.எம். டார்க் @ 3500 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை ஸ்டான்டர்டு LXI மற்றும் LXI (O) வேரியண்ட்களில் கிடைக்கும் வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது. #HyundaiCreta
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் மே 2018 இல் அறிமுகம் செய்தது. ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் பேஸ் வேரியண்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ.9.43 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட் விலை ரூ.9.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் டாப் எண்ட் மாடலின் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.13.59 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட் விலை ரூ.15.03 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹூன்டாய் கிரெட்டா விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்துவிட்டதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டாவின் முதல் மாடல் 2015 ஆம் ஆண்டு அறிமுகமானது. அறிமுகமானது முதல் அதிக பிரபலமான பிரீமியம் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது.

ஹூன்டாய் கிரெட்டா பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவ்வாறு: 1.6 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட் 121 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம், 151 என்.எம். டார்க் @4850 ஆர்.பி.எம் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.4 லிட்டர் டீசல் வேரியண்ட் 89 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம், 219 என்.எம். டார்க் @1500 ஆர்.பி.எம் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 1.6 லிட்டர் டீசல் வேரியண்ட் 126 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம், 260 என்.எம். டார்க் @1900 ஆர்.பி.எம் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.4 லிட்டர் டீசல் வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், பெட்ரோல் மற்றும் டீசர் யூனிட்கள் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா எஸ்.யு.வி. கார் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500, நிசான் கிக்ஸ், ரெனால்ட் டஸ்டர் மற்றும் புத்தம் புதிய டாடா ஹேரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.






