search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா ஹேரியர் ஆட்டோமேடிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்
    X

    டாடா ஹேரியர் ஆட்டோமேடிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் ஆட்டோமேடிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #TataHarrier



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹேரியர் எஸ்.யு.வி. கார் மாடலை இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் துவக்க விலை ரூ.12.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டாப்-எண்ட் வேரியண்ட் விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடல் தற்சமயம் ஒற்றை என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் ஆகும். இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 350 என்.எம். டார்க் செயல்திறனை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்குகிறது. 

    டீசல் என்ஜின் கொண்ட ஹேரியர் கார் அதன் விலைக்கு ஏற்ற அம்சங்களுடன் லிட்டருக்கு 16.7 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. எனினும், இந்த காரின் ஆட்டோமேடிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட் மாடல் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இதை அறிந்த டாடா மோட்டார்ஸ் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.



    புதிய காரில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஹூன்டாயின் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த யூனிட் பெட்ரோல் மாடல் ஹேரியர் காரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த கார் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகமாகலாம் என தெரிகிறது. 

    எனினும், இந்த காரில் டார்க் கன்வெர்டருக்கு மாற்றாக டூயல் கிளட்ச் அமைப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் ஹேரியர் மாடல்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பி.எஸ். VI ரக எமிஷன்களுக்கு ஏற்ற காராக ஹேரியர் ஆட்டமேடிக் மாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.

    டாடா ஹேரியர் பெட்ரோல் காரில் 1.6 லிட்டர் யூனிட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் என்றும் இது மேலும் அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 
    Next Story
    ×