என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசுகி நிறுவனத்தின இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் 2019 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #MarutiIgnisFacelift



    மாருதி சுசுகி நிறுவனம் 2019 இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் துவக்க விலை ரூ.4.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டாப்-எண்ட் விலை ரூ.7.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சில புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டிருக்கிறது. புதிய மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் டாப்-எண்ட் மாடல்களான சீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்களில் ரூஃப் ரெயில்கள் காணப்படுகின்றன.

    பாதுகாப்பு உபகரணங்களை பொருத்தவரை புதிய இக்னிஸ் 2019 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது. அதில் ரியர்வியூ பார்க்கிங் கேமரா / சென்சார்கள், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், சீட்-பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், டூயல் ஏர்பேக் மற்றும் ஐசோபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.



    இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2-லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    மாருதி இகனிஸ் ஃபேஸ்லிஃப்ட் சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்பா என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. நான்கு வேரியண்ட்களும் நெக்டா புளு, கிளிஸ்டெனிங் கிரே, சில்கி சில்வர், டின்செல் புளு, அப்டவுன் ரெட் மற்றும் பியல் ஆர்க்டிக் வைட் என பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. 

    இதுதவிர இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் டின்செல் புளு/மிட்நைட் பிளாக், டின்செல் புளு/பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் அப்டவுன் ரெட்/மிட்நைட் பிளாக் உள்ளிட்ட டூயல்-டோன் நிறங்களிலும் கிடைக்கும்.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், இந்த கார் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #WagonRElectric



    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மாருதி நிறுவனம் தனது வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை 2020 ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    இந்நிலையில், மாருதியின் ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் காரில் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்படும் என ஆட்டோகார் இந்தியா வெளியிட்டிருக்கும் என தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் காரின் பேட்டரிகளை 80 சதவிகிதம் அளவு சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே எடுத்துக் கொள்ளும்.                                           

    வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் ஏ.சி. சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. இது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும். மாருதி வேகன் ஆர் இரண்டு சார்ஜிங் போர்ட்களுடன் வரும் என கூறப்படுகிறது. ஒன்று ஏ.சி. சார்ஜிங் மற்றொன்று டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங்.



    சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்தை சோதனை செய்வதாக அறிவித்தது. இதற்கென 50 ப்ரோடோடைப் கார்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படுகின்றன. இவை அனைத்து வித சூழ்நிலைகளிலும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இத்துடன் புதிய வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விலை சார்ந்த விவரங்களும் வெளியாகி இருக்கிறது. 

    அதன்படி இந்தியாவில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் ரூ.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு அறிவித்திருக்கும் அனைத்து சலுகைகளையும் கழித்தே இந்த விலை இருக்கும் என கூறப்படுகிறது.

    மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் 72-வோல்ட் சிஸ்டம் மற்றும் 10-25KWh பேட்டரி பேக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மோட்டார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் சோதனை செய்யப்படும் வேகன் ஆர் எலெக்ட்ரிக் மாடல்கள் சோலியோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.
    டாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக உருவாகி வரும் 45X கார் இந்த பெயரில் தான் அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. #Tata45X



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய கார் மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என்றும் இது அந்நிறுவனத்தின் 45X கான்செப்ட் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    டாடா 45X கான்செப்ட் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹேரியர் கான்செப்ட் காருடன் அறிமுகமானது. சமீபத்தில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் புதிய ஹேரியர் எஸ்.யு.வி. காரின் விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய டாடா 45X பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆனால் டாடா 45X கார் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது.



    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடா 45X கார் அக்யூலா என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் பொது மக்களிடம் தனது புதிய கார் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்ற கேலஅவியை எழுப்பி, அதற்கான முதல் எழுத்தாக 'A' என தெரிவித்துள்ளது. 

    புதிய காரின் பெயர் இத்தாலிய மொழியில் இருக்கும் என்றும் இதற்கு அக்யூலா சரியானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்தாலிய மொழியில் அக்யூலா என்றால் தமிழில் கழுகு என்று பொருள்படும்.

    டாடா புதிய ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின்களில் நெக்சனை விட சற்று அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
    ஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புத்தம் புதிய சான்ட்ரோ காரை வாங்க இதுவரை சுமார் 57,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HyundaiSantro



    ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் வெளியானது. புதிய ஹூன்டாய் சான்ட்ரோ ரூ.3.89 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், டாப்-என்ட் வேரியன்ட் விலை ரூ.5.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் அக்டோபர் 10ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் புதிய சான்ட்ரோ காரை வாங்க இதுவரை சுமார் 57,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் புதிய ஹூன்டாய் சான்ட்ரோ வாங்குவோர் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    மேலும் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் புதிய சான்ட்ரோ மாடல்களில் 30 சதவிகிதம் AMT வேரியன்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்ட்ரோவின் AMT வேரின்ட் மிட்-ரேஞ்ச் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரின்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய காரின் மீது எழுந்துள்ள வரவேற்பை வைத்து பார்க்கும் போது காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் முந்தைய சான்ட்ரோ கார் போன்ற டால்பாய் வடிவமைப்பைத் தழுவி முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், குரோம் இன்சர்ட், ஸ்பெவ்ப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், முன்பக்கம் கிரில், ஃபாக் லேம்ப்கள் மற்றும் புதிய பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கொண்டுள்ளது.



    புதிய சானட்ரோ கார் டைஃபூன் சில்வர், போலார் வைட், ஸ்டார்டஸ்ட், இம்பீரியல் பெய்க், மரீனா புளுஷ ஃபியரி ரெட் மற்றும் டையானா கிரீன் என ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. 2018 சான்ட்ரோ காரின் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் பிளாக் மற்றும் பெய்க் என டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

    ஹூன்டாய் சான்ட்ரோ காரில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மிரர்லின்க் போன்ற வசதிகள் வழங்கப்ட்டுள்ளன. இத்துடன் மின்சார முறையில் மாற்றக்கூடிய ORVMகள், மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. போர்ட், மடிக்கக்கூடிய பின்புற இருக்கைகள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018 மாடலில் டிரைவர் ஏர்பேக், ABS, EBD மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் வழங்கப்பட்டுள்ளது. சான்ட்ரோ டாப்-என்ட் மாடலில் பாசென்ஜர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கேமரா, ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பின்புற டீஃபாகர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஹூன்டாய் முதல் முறையாக வழங்கி இருக்கிறது. இத்துடன் புதிய சான்ட்ரோ CNG வசதியும் கொண்டுள்ளது. 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை கடந்திருக்கிறது. #TataTiago



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ காரின் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி டாடா டியாகோ கார் இந்தியாவில் சுமார் இரண்டு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் ஏப்ரல் 2016 இல் அறிமுகமான டாடா டியாகோ கார் கொடுக்கும் விலைக்கு தரமான ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டியாகோ கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் பழைய ஃபார்மிற்கு வந்ததை குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.



    டாடா டியாகோ கார் சமீபத்தில் XZ+ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் டியாகோ XZ+ வேரியண்ட் விலை ரூ.5.57 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய வேரியண்ட்டில் டாடா மோட்டார்ஸ் 7.0 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 15-இன்ச் அளவில் அலாய் வீல்களை வழங்கியிருக்கிறது.

    டாடா டியாகோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அந்த வகையில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது. 

    இந்த என்ஜின்கள் முறையே 85 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 114 என்.எம். டார்க் செயல்திறனும் 70 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் AMT வேரியண்ட் ஆப்ஷனும் கிடைக்கிறது. 
    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.யு.வி. 300 கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. #MahindraXUV300 #Car



    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி. 300 காரை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.யு.வி. 300 விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனலவே துவங்கிவிட்ட நிலையில், இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.



    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

    புதிய எக்ஸ்.யு.வி. 300 காரில் எல்.இ.டி. ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் இக்னிஷன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும், 3-பாயிண்ட் சீட் பெல்ட், ஐசோஃபிக்ஸ், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 ரேபிட் மான்ட் கார்லோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #Skoda #RapidMonteCarlo



    ஸ்கோடா நிறுவனம் 2019 ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய மான்ட் கால்ரோ ரேபிட் கார் விலை ரூ.11.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மான்ட் கார்லோ எடிஷன் காரில் பல்வேறு பிரத்யேக அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் மான்ட் கார்லோ பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்கோடா நிறுவனம் மான்ட் கார்லோ மார்க்யூ மாடலின் பல்வேறு வேரியண்ட்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் தற்சமயம் ஃபிளாஷ் ரெட் எனும் ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் செடான் மாடல் நாட்டின் அனைத்து ஸ்கோடா அதிகாரப்பூர்வ விற்பனையகங்களிலும் கிடைக்கும். ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் பிராண்டின் எமோட்டிவ் வடிவமைப்பு, வெளிப்புறம், பாதுகாப்பு மற்றும் அதிநவீன கனெக்டிவிட்டி அம்சங்களை வழங்குகிறது.



    2019 ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் கார் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDI டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 153 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது DSG டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    வடிவமைப்பை பொருத்தவரை 2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் ஸ்போர்ட் பிளாக் மற்றும் ரேசிங் சார்ந்த அக்சென்ட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் காரில் ஸ்கோடாவின் பிரபல கிரில், குவாட்ஸ் கட் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 16-இன்ச் கிளபர் அலாய் வீல்கள் மற்றும் கிளாஸ் பிளாக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஸ்கோடா காரின் உள்புறம் 6.5 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, ஸ்மார்ட் லின்க், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர் லிண்க் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. 

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இன்டெலிஜண்ட் ரெயின் சென்சிங் வைப்பர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., எலெக்டிராணிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
    2019 ஐந்து ஆண்டுகள் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் என்ற விருதினை நிசான் நிறுவனத்தின் லீஃப் எலெக்ட்ரிக் கார் வென்றுள்ளது. #NissanLeaf #ElectricCar



    நிசான் நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் கார் மாடலான லீஃப் அமெரிக்காவில் 2019 ஐந்து ஆண்டுகள் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் என்ற விருதை வென்றிருக்கிறது.

    நிசான் நிறுவனத்தின் பேட்டரியில் இயங்கும் லீஃப் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத காராக இது திகழ்கிறது.

    கடந்த டிசம்பர் மாதமே இந்த பேட்டரி கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. நிசான் நிறுவனத்தின் தயாரிப்புகளில் சர்வதேச அளவில் பிரபல மாடலாக திகழ்வதால் இந்த மாடல் கார் இதுவரை 38 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    ஆசிய நாடுகள் மற்றும் அண்டை நாடான பூடானிலும் இது அறிமுகமாகி பலரது பாராட்டுதலை நிசான் லீஃப் பெற்றுள்ளது. இது சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. இந்த கார் இந்தியாவில் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் என்றே தெரிகிறது.



    இந்தியாவில் நிசான் லீஃப் காரின் விலை ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்தியாவில் இந்த மாடலின் இரண்டாம் தலைமுறை கார் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பேட்டரி காரை 2010-ம் ஆண்டில் நிசான் அறிமுகம் செய்த போதிலும் அதில் இரண்டாம் தலைமுறை காரை 7 ஆண்டுகள் கழித்தே வெளியிட்டது. இந்த மாடல் கார் 148 ஹெச்.பி. மற்றும் இ.எம்.57 எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டுள்ளது. இதில் 40 கிலோவாட் பேட்டரி உள்ளது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு முறை சார்ஜ் செய்த நிலையில் 380 கி.மீ. ஓடியது.

    இது முந்தைய மாடல் அதாவது முதல் தலைமுறை லீஃப் கார் ஓடிய தூரத்தைக் காட்டிலும் 129 கி.மீ. அதிகமாகும். இதில் விரைவான சார்ஜிங் (ஃபாஸ்ட் சார்ஜிங்) வசதியும் உள்ளதால் 40 நிமிடத்தில் 80 சதவீத அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இதுவரை இந்த காரை வாங்க சுமார் 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MahindraXUV300



    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்குள் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க சுமார் 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

    புதிய எக்ஸ்.யு.வி.300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.



    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

    புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டாடா ஹேரியர் எஸ்.யு.வி. கார் விற்பனை துவங்கிய பத்து நாட்களில் 420 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #TataMotors #TataHarrier



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஹேரியர் எஸ்.யு.வி. கார் மாடலை ஜனவரி 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய ஹேரியர் காரின் துவக்க விலை ரூ.12.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், புதிய ஹேரியர் எஸ்.யு.வி. விற்பனை துவங்கிய பத்தே நாட்களில் சுமார் 420 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. புதிய ஹேரியர் காரை வாங்குவோர் தற்சமயம் மூன்று மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டாடா ஹேரியர் எஸ்.யு.வி. முன்னதாக நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டாடா H5X கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டாடா ஹேரியர் கார் டாடாவின் OMEGA பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த பிரிவில் வெளியாகி இருக்கும் பெரிய கார்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவாக்கயிருக்கும் டாடா நிறுவனத்தின் முதல் கார் டாடா ஹேரியர் ஆகும்.



    காரின் முன்புற லைட்டிங் பிரத்யேகமாக காட்சியளிக்கிறது. எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் கார் பொனெட்டின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்கள் பம்ப்பர் அருகில் பொருத்தப்பட்டுள்ளது. ஹேரியர் காரில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்று 17-இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    பின்புறம் எளிய டெயில்-லேம்ப் வடிவமைப்புடன் ஹேரியர் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது மிக அழகாக காட்சியளிக்கிறது. காரின் உள்புறம் லெதர், அலுமினியம், கிளாஸ் பிளாக் பேனல்கள் மற்றும் மரத்தாலான பாகங்களை கொண்டு உருவாகியிருக்கிறது. இதில் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் ரேப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.

    டாடா ஹேரியர் கார் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் ஜீப் காம்பஸ் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    2018 ஆம் ஆண்டு உலகின் முன்னணி கார் நிறுவனமாக ஃபோக்ஸ்வேகன் உருவெடுத்திருக்கிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க சுமார் ஒரு கோடி வாகனங்களை விற்பனை செய்துள்ளது. #Volkswagen



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 2018 ஆம் ஆண்டின் முன்னணி கார் நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமம் சார்பில் ஃபோக்ஸ்வேகன் நுகர்வோர் வாகனங்கள், வணிகம், போர்ஷ், லம்போர்கினி, பென்ட்லி, ஆடி, ஸ்கோடா, மேன் மற்றும் ஸ்கேனியா உள்ளிட்ட பிராண்டுகளை கொண்டிருக்கிறது.

    கடந்த ஆண்டு மட்டும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உலகம் முழுக்க சுமார் 1.083 கோடி வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இது 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 0.98 சதவிகிதம் அதிகம் ஆகும். 2018 ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தைத் தொடர்ந்து ரெனால்ட்-நிசான்-மிட்சுபிஷி குழுமம் சர்வதேச அளவில் 1.076 கோடி வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இது 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.4 சதவிகிதம் அதிகம் ஆகும்.



    இரு நிறுவனங்களை தொடர்ந்து டொயோட்டா குழுமம் உலகம் முழுக்க சுமார் 1.059 கோடி வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இந்நிறுவனம் 2017 ஆம் ஆண்டு 1.038 கோடி வாகனங்களை விற்பனை செய்திருந்தது. அந்தவகையில் கடந்த ஆண்டு டொயோட்டா குழுமம் விற்பனையில் மட்டும் 2 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நான்காவது இடம்பிடித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் குழுமம் செவர்லே, புயிக், ஜி.எம்.சி., கேடிலாக், ஹோல்டென் போன்ற பிராண்டுகளை கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு சுமார் 80 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. 

    சர்வதேச சந்தையில் ஹூன்டாய் நிறுவனம் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுக்க சுமார் 74 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. விரைவில் கியா மோட்டார்ஸ் இந்தியாவில் தனது வியாபாரத்தை துவங்க திட்டமிட்டுள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataMotors #ElectricCar



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தையில் டியாகோ எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    டியாகோ எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே உருவாக்கி வருகிறது. எனினும், இந்த கார் சந்தையில் அறிமுகம் செய்யப்படாமல் இருக்கிறது. இதற்கு எலெக்ட்ரிக் கார்களுக்கு ஏற்ற போதுமான உள்கட்டமைப்பு வசதியில்லாததே காரணமாக இருக்கிறது.

    டாடா ஹேரியர் காரின் அறிமுகத்தின் போது டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் குயின்டர் புட்ஷெக், டாடா எலெக்ட்ரிக் கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டியாகோ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.



    டியாகோ எலெக்ட்ரிக் கார் 85 கிலோவாட் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த மோட்டார் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதுதவிர இந்த கார் மணிக்கு 0 - 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெறும் 11 நொடிகளில் செல்லும் என்றும் மணிக்கு அதிகபட்சமாக 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

    ஒரு முறை சார்ஜ் செய்தால் டியாகோ எலெக்ட்ரிக் கார் 100 கிலோமீட்டர் வரை செல்லும். சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. ஹேரியர் எஸ்.யு.வி. கார் துவக்க விலை ரூ.12.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 

    டாடா மோட்டார்ஸ் தவிர மாருதி சுசுகி நிறுவனமும் வேகன் ஆர் எலெக்ட்ரிக் பதிப்பின் ப்ரோடோடைப் மாடலை சோதனை செய்ய துவங்கியுள்ளது. இந்த கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க டொயோட்டாவுடன் இணைந்திருக்கிறது.
    ×