என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் 2021 ஸ்பெக்டர் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் ஸ்பெக்டர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

    செப்டம்பர் மாத வாக்கில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் காரை உருவாக்க முடிவு செய்தது. இந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி 2023 வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள் காணப்படுகின்றன. இந்த காரின் கிரில் அளவில் பெரியதாக காட்சியளிக்கின்றது.

     ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 700 ஹெச்.பி. திறன், 765 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

    ஓலா எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் வினியோகம் மேலும் சில நகரங்களில் துவங்க இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகத்தை மேலும் சில நகரங்களுக்கு நீட்டிக்க இருக்கிறது. தற்போது பெங்களூரு மற்றும் சென்னை என இரு நகரங்களில் மட்டும் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

    தற்போதைய தகவல்களின்படி மும்பை, பூனே, ஆமதாபாத் மற்றும் விசாகபட்டினம் போன்ற நகரங்களில் அடுத்த வாரம் முதல் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் துவங்குகிறது. இந்தியாவில் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்கியது. முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய பெங்களூரு மற்றும் சென்னையில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 1.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    சீனாவை சேர்ந்த நியோ நிறுவனத்தின் நியோ இ.டி.5 முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.


    சீன எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான நியோ இ.டி.5 பெயரில் புதிய எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் செடான் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    சீனாவில் புதிய நியோ இ.டி.5 விலை 51,476 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 38,90,594 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்குகிறது. ரேன்ஜ் அடிப்படையில் இந்த கார் டெஸ்லாவின் மாடல் 3-க்கு போட்டியாக அமைகிறது.

     நியோ இ.டி.5

    நியோ இ.டி.5 மாடல் - 75 கிலோவாட் ஹவர், 100 கிலோவாட் ஹவர் மற்றும் 150 கிலோவாட் ஹவர் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 150 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இதன் பேஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்களும், 100 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல் முழு சார்ஜ் செய்தால் 750 கிலோமீட்டர்களும் செல்லும். இந்த கார் டூயல் மோட்டார் செட்டப் கொண்டது ஆகும். இவை இணைந்து 483 பி.ஹெச்.பி. திறன், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.
    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்ளுக்கு வழங்கி வந்த இலவச சார்ஜிங் சேவை வேலிடிட்டியை நீட்டித்து இருக்கிறது.


    இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வது மட்டுமின்றி ஏத்தர் கிரிட் பெயரில் பொது சார்ஜிங் மையங்களை ஏத்தர் எனர்ஜி இயக்கி வருகிறது. 

    முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாட்டின் 200 கிரிட் மையங்களில் இலவச சார்ஜிங் வசதியை அறிவித்தது. இந்த நிறுவனம் விற்பனை செய்த ஏத்தர் 450 மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் மாடல்களுக்கு இலவச சார்ஜிங்கை அனைத்து பொது சார்ஜிங் மையங்களிலும் வழங்கி வருகிறது. முன்னதாக இலவச சார்ஜிங் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்படும் என ஏத்தர் எனர்ஜி அறிவித்து இருந்தது. 

     ஏத்தர் கிரிட்

    தற்போது இலவச சார்ஜிங் அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படும் என ஏத்தர் எனர்ஜி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. 
    இத்தாலி நாட்டில் பயன்படுத்தாத நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார் மாடல் ஒன்று சுற்றுலா தளமாகி இருக்கிறது.


    ஒரு கார் பயன்படுத்தாத நிலையில் இருந்தால், அது பாழாகி தான் போகும். எல்லோருக்கும் இது நன்றாகவே தெரியும். ஆனால், இங்கு மட்டும் பயன்படுத்தாத கார் ஒன்று மக்கள் பொழுதுபோக்கிற்காக வந்து காரை பார்த்து செல்லும் வகையில் சுற்றுலா தளமாகி இருக்கிறது.

    1970-களில் உருவாக்கப்பட்ட லான்சியா ஃபுல்வியா பெர்லினா ஒரே இடத்தில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஓடோமீட்டரில் அதிக மைல்களை கடக்கவில்லை. எனினும், ஒரே இடத்தில் 47 ஆண்டுகளாக இந்த கார் நிறுத்தப்பட்டு இருக்கிறது. 

     லான்சியா ஃபுல்வியா பெர்லினா

    கடந்த 47 ஆண்டுகளில் இந்த கார் ஒரு இன்ச் அளவும் அசையவில்லை. இத்தாலி நாட்டின் காங்கிலியானோ பகுதியின் பொது நிறுத்தமிடத்தில் இந்த கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உரிமையாளர் 2019 ஆம் ஆண்டு வரை செய்தித்தாள் ஸ்டாண்டை நடத்தி வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் இந்த காரில் செய்தித்தாளை வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    ஆரம்பத்தில் இந்த கார் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், 1974 முதல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் மர்மமாகவே இருக்கிறது. 
    ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்த இருக்கிறது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 1, 2022 அன்று அமலுக்கு வருகிறது. கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு அமையும். 

    முன்னதாக ஸ்கோடா குஷக் ஆக்டிவ் 1.0 டி.எஸ்.ஐ. எம்.டி. வேரியண்ட் விலை ரூ. 29 ஆயிரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை ஆக்டேவியா மற்றும் முற்றிலும் புதிய குஷக் மாடல்களை அறிமுகம் செய்தது. 

     ஸ்கோடா கார்

    அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக கோடியக் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகமாகிறது. இந்த மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள், புதிய பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய கார் வாங்கும் கனவை நிறைவேற்றும் முன் அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    சில ஆண்டுகளுக்கு முன் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு திடீரென அதிகரித்தது. முன்பு ஒன்றிரண்டு வீடுகளில் மட்டுமே இருசக்கர வாகனங்களை பார்க்க முடிந்தது. பின் நிலைமை அப்படியே மாறி, அனைவரின் வீடுகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.

    அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் கார் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது. ஒரு காலத்தில் கார் வாங்குவது ஒவ்வொருவரின் கனவாக இருந்தது. ஆனால் இன்றைய நிலையில் வீடுகள் தோறும் கார்கள் நிற்கும் காட்சியை பார்க்க முடிகிறது. 

    புத்தாண்டை ஒட்டி பலர் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பீர்கள். அந்த வகையில் புதிய கார் வாங்கும் முன் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம். 

     கார் - கோப்புப்படம்

    கார் வாங்கும் போது அதிக கவனமுடன் இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியது என்பதால் கார்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கார் உதிரிபாகங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்கள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார்களுக்கு உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்கும். அதிகமாக விற்பனையாகும் கார்களை கணக்கில் கொண்டுதான் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

    நம் நாட்டில் அறிமுகம் இல்லாத காரை தேர்வு செய்ய கூடாது. ஏனெனில் இதுபோன்ற கார்களில் பழுது ஏற்பட்டாலோ, உதிரி பாகங்கள் தேய்மானம் அடைந்து, அதனை மாற்றும் நிலை வந்தால் அவை கிடைப்பது கடினம். பராமரிப்பு செலவும் எதிர்பார்த்ததை விட அதிகமாகும்.
    கேரளா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய புதுவிதமான சார்ஜிங் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துவிட்டது. விலை உயர்வை தொடர்ந்து பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதன் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துவருகிறது.

    இதுதவிர மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகளை வழங்குகிறது. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்புகள் இன்னும் போதுமான அளவு வளர்ச்சி பெறாத நிலையிலேயே இருக்கிறது. 

     சார்ஜிங் மையம்

    இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்த பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கேரளா மாநில மின்துறை சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய புது திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    அதன்படி மின்கம்பங்களில் எலெக்ட்ரிக் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சார்ஜர்களை எலெக்ட்ரிபை (Electrify) எனும் செயலி மூலம் பயன்படுத்தலாம். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் கோழிக்கோடு மாவட்டத்தில் பத்து சார்ஜர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சார்ஜ் செய்வதற்கான யூனிட் ஒன்றுக்கு ரூ. 9 கட்டணம் (வரிகள் இன்றி) வசூலிக்கப்படுகிறது. 
    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய விற்பனையில் இதுவரை இல்லாத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 5 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை வினியோகம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 100 சதவீதம் அதிகம் ஆகும். 

    விற்பனையில் மேட் இன் இந்தியா மாடல்களான பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். அதிக பங்கு வகித்துள்ளன. பி.எம்.டபிள்யூ. மோட்டராட் வருடாந்திர விற்பனையில் 90 சதவீதம் பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். மாடல் ஆகும். 

     பி.எம்.டபிள்யூ. மோட்டார்சைக்கிள்

    இதைத் தொடர்ந்து பி.எம்.டபிள்யூ. சி 400 ஜி.டி., ஆர் 1250 ஜி.எஸ்./ஜி.எஸ்.ஏ, பி.எம்.டபிள்யூ. ஆர்18 கிளாசிக், பி.எம்.டபிள்யூ. எஸ் 1000 ஆர் மற்றும் பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்.ஆர். உள்ளிட்ட மாடல்களை பி.எம்.டபிள்யூ. மோட்டராட் விற்பனை செய்து வருகிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சி400 ஜி.டி., பி.எம்.டபிள்யூ. ஆர் 1250 ஜி.எஸ்., பி.எம்.டபிள்யூ. ஆர் 1250 ஜி.எஸ். அட்வென்ச்சர், பி.எம்.டபிள்யூ. ஆர் நைன் டி, பி.எம்.டபிள்யூ. ஆர் நைன் டி ஸ்கிராம்ப்ளர், பி.எம்.டபிள்யூ. எஸ் 1000 ஆர், புதிய பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்.ஆர். மற்றும் பி.எம்.டபிள்யூ. ஆர் 18 கிளாசிக் போன்ற மாடல்களை புதிதாக அறிமுகம் செய்தது.
    டேட்சன் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


    டேட்சன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் டேட்சன் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. டேட்சன் நிறுவனத்தின் ரெடி-கோ, கோ மற்றும் கோ பிளஸ் எம்.பி.வி. போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை பலன்கள் கார் மாடல்களின் வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும்.

     டேட்சன் சலுகை

    டேட்சன் ரெடி-கோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் விலை ரூ. 3.98 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 4.96 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோ ஹேட்ச்பேக் மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களுக்கும் ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. டேட்சன் கோ விலை ரூ. 4.02 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 6.51 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டேட்சன் கோ பிளஸ் மாடல் விலை ரூ. 4.26 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் 2022 ஸ்கார்பியோ மாடலில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை உருவாக்கும் பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்கார்பியோ தற்போதைய மாடலை விட அசத்தலான வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்கார்பியோ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்.யு.வி.700 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் முந்தைய மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என்றும், அதிக இடவசதி கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் உள்புறம் அதிநவீன வசதியுடன் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் இருவித டியூனிங்கில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின், 2 லிட்டர் எம்-ஸ்டேலியன் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
    வால்வோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.


    எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக வால்வோ இருக்கிறது. வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்.சி.90 மாடலின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய பிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலின் பெயரை மாற்ற வால்வோ திட்டமிட்டுள்ளதாக வால்வோ கார்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹக்கன் சாமுவேல்சன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். முன்னதாக வால்வோ நிறுவனம் எம்ப்ளா எனும் பெயரை தனது கார் மாடலுக்கு பயன்படுத்த காப்புரிமை கோரி விண்ணப்பத்து இருந்தது. 

     வால்வோ எக்ஸ்.சி.90

    அந்த வகையில் வால்வோ நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் மாடல் எம்ப்ளா என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடலின் இருக்கை உயரமாக இருக்கும். இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும். மேலும் இந்த காரின் பவர்டிரெயின் போல்ஸ்டார் 3 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.
    ×