என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எம்5 காம்படீஷன் மாடல் சிபியு முறையில் இந்தியா கொண்டு வரப்படுகிறது.


    பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடல் இந்தியாவில் அறிமுகமானது. புதிய பி.எம்.டபிள்யூ. கார் விலை ரூ. 1.62 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். சிபியு முறையில் கிடைக்கும் புதிய பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடலுக்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் நடைபெறுகிறது.

     பி.எம்.டபிள்யூ எம்5 காம்படீஷன்

    புதிய பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடலில் வி8 ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 625 ஹெச்பி திறன், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடிகளில் எட்டிவிடும். 

    பி.எம்.டபிள்யூ. எம்5 காம்படீஷன் மாடல்- ரோட், ஸ்போர்ட் மற்றும் டிராக் என மூன்றுவித மோட்களை கொண்டிருக்கிறது. இவற்றை சென்டர் கன்சோலில் உள்ள எம் பட்டன் கொண்டு தேர்வு செய்ய முடியும்.  
    சுசுகி நிறுவனம் தனது பிஎஸ்6 ஹயபுசா மாடலின் முன்பதிவை மீண்டும் துவங்கி இருக்கிறது.


    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக ஹயபுசா மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. தற்போதைய முன்பதிவு ஹயபுசா பிஎஸ்6 இரண்டாம் கட்ட யூனிட்களுக்கானவை ஆகும். புது ஹயபுசா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். 

    2021 ஹயபுசா மாடல்களின் முதற்கட்ட யூனிட்கள் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. முதற்கட்டமாக 101 யூனிட்கள் விற்பனைக்கு வந்தது. 101 யூனிட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பின்புற இருக்கைக்கான கவுல் இலவசமாக வழங்கப்பட்டது. பின்புற கவுல் கொண்டு மோட்டார்சைக்கிளை ஒற்றை இருக்கை கொண்ட மாடலாக மாற்ற முடியும்.  

     2021 சுசுகி ஹயபுசா

    இந்தியாவில் புதிய சுசுகி ஹயபுசா மாடல் துவக்க விலை ரூ. 16.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது முந்தைய மாடலை விட ரூ. 2.65 லட்சம் அதிகம் ஆகும். ஹயபுசா பிஎஸ்6 மாடலில் புல் எல்இடி லைட்டிங், எல்சிடி ஸ்கிரீன், முற்றிலும் புது வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புது சுசுகி ஹயபுசா மாடல் கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    பி.எம்.டபிள்யூ. என்ஜின் கொண்ட பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.


    பறக்கும் கார்கள் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அதிசயம் மிக்க வாகனமாகவே அறியப்பட்டு வந்தது. சாலையில் வழக்கமான கார்களை போன்று செல்வதோடு, வானத்திலும் பறக்கும் திறன் கொண்ட வாகனம் என்றால் சுவாரஸ்யமான விஷயமாக இருப்பதோடு மட்டுமின்றி தொழில்நுட்ப சவால்கள் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.

    எனினும், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து புதுமை மிக்க சில ப்ரோடோடைப் மாடல்களையும் வெளியிட்டுள்ளன. அந்த வகையில் கிளைன் விஷன் எனும் நிறுவனமும் பறக்கும் கார் ப்ரோடோடைப் மாடலை உருவாக்கி உள்ளது. இத்துடன் உலகில் முதல் முறையாக இன்டர்-சிட்டி சோதனையையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

     ஏர்கார்

    இந்த பறக்கும் கார் நித்ராவில் இருந்து ஸ்லோவேகியாவில் உள்ள பிரடிஸ்லாவா என இரண்டு சர்வதேச விமான நிலையங்களுக்கு பறந்து சென்றுள்ளது. ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் பறக்கும் கார் இரு விமான நிலையங்களை கடக்க 35 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. 

    கிளைன் விஷன் ஏர்கார் மாடலில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 160 பிஹெச்பி திறன் வழங்கும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் தரையில் இருந்து 8200 அடி உயரத்தில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 170 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். 

    வானில் பறந்து வந்து தரையிறங்கியதும், ஒரே பட்டனை க்ளிக் செய்ததும் வழக்கமான ஸ்போர்ட்ஸ் காராக மூன்றே நிமிடங்களில் மாறிவிடுகிறது. வானில் பறப்பது மட்டுமின்றி சாதுர்யமான வளைவுகளையும் இந்த கார் நேர்த்தியாக செய்கிறது. இந்த கார் இதுவரை 40 மணி நேரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் தரையில் இருந்து டேக் ஆப் ஆக 15 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. மேலும் காராக இருந்து விமானமாக மாற 2.15 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
    ஹூண்டாய் நிறுவனம் வாகனங்கள் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் இருந்து ஒரு கோடியாவது யூனிட்டை வெளியிட்டுள்ளது. ஒரு கோடியாவது யூனிட் ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் மாடலாக வெளியாகி இருக்கிறது. சென்னை ஆலையில் ஹூண்டாய் உற்பத்தி பணிகள் 1998 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 

     ஹூண்டாய் அல்காசர்

    இந்த நிலையில், உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்களை கடக்க 23 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. புது மைல்கல் எட்டியதை கொண்டாடும் வகையில் ஒரு கோடியாவது யூனிட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹூண்டாய் இந்தியாவின் முன்னணி வாகன ஏற்றுமதியாளராக இருக்கிறது.

    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்துள்ளது. கிரெட்டா மாடலை போன்றே புதிய அல்காசர் மாடலும் வெற்றி பெறும் என ஹூண்டாய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வாகனங்கள் விற்பனை குறித்து அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் பதில் அளித்துள்ளார்.


    கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் ஆன்லைன் மூலம் வாகன விற்பனையை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் விற்பனை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. இதன் காரணமாக ஆடம்பர கார் உற்பத்தியாளர்களும் ஆன்லைன் மூலம் தங்களின் வாகனங்களை விற்பனை செய்ய துவங்கின.

     மெர்சிடிஸ் பென்ஸ்

    அந்த வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனமும் தனது விற்பனையை டிஜிட்டல் தளத்திற்கு கொண்டுவந்தது. இதற்காக பென்ஸ் நிறுவனம் ‘Merc From Home' வலைதளத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த வலைதளம் மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் பெரும் பங்கு வகித்துள்ளது. 

    ``மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனையில் 20 சதவீதம் ஆன்லைன் மூலம் நடைபெற்று இருக்கிறது. உலகளவில் ஒப்பிடும் போது இந்தியா ஆன்லைன் விற்பனையில் முன்னணி இடம்பிடிக்கும். இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் ஆகும்," என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் சந்தோஷ் ஐயர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 
    டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மற்றொரு நகரத்துக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையை பூனேவில் துவங்கி உள்ளது. இதன் விலை ரூ. 1,10,898 ஆன்-ரோடு என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக டிவிஎஸ் ஐ கியூப் ஸ்கூட்டர் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

     டிவிஎஸ் ஐ கியூப்

    தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை நாட்டின் 20 நகரங்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இந்த ஆண்டு மே மாதத்தில் அறிவித்தது. செயல்திறன் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் திறன் கொண்ட 125சிசி வாகனங்களுக்கு இணையாக உள்ளது. 

    டிவிஎஸ் ஐ கியூப் மாடலில் உள்ள 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார் 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 78 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M340i மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் மீண்டும் துவங்கி உள்ளது.

    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் M340i மாடலை இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த கார் விலை ரூ. 62.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். மொத்தத்தில் 40 யூனிட்களே விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் வெளியான ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன.

     பி.எம்.டபிள்யூ. M340i

    தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிய M340i மாடலுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடல் டன்சனைட் புளூ மற்றும் டிராவிட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. M340i மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த யூனிட் 387 பிஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
     

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது SVR மாடல் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் சீரிசின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். புதிய ரேன்ஜ் ரோவர் காருக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் நடைபெறுகிறது.

     ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR

    புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடல் நான்கு பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் CBU (Completely Built Up) வடிவில் கிடைக்கிறது. ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SVR மாடலில் 5 லிட்டர் சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது.

    இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 567 பிஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 283 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ XT O வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை ரூ. 5.48 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது வேரியண்ட் டியாகோ XT மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் விலை XT வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     டாடா டியாகோ

    புதிய டியாகோ XT O மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. XT மாடலில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மற்றப்படி புதிய XT O வேரியண்டிலும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ XT O மாடல் மாருதி சுசுகி செலரியோ, வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் டேட்சன் கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    பெனலி நிறுவனத்தின் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.

    பெனலி இந்தியா நிறுவனம் தனது இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் ரூ. 799 வரை உயர்த்தி இருக்கிறது.  விலை உயர்வின் படி பெனலி இம்பீரியல் 400 சில்வர் நிற மாடலின் விலை ரூ. 1,89,799 என்றும் ரெட் மற்றும் பிளாக் நிற மாடல்களின் விலை ரூ. 1,93,976 என்றும் மாறி இருக்கின்றன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

     பெனலி இம்பீரியல் 400

    பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் பெனலி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் கடந்த ஆண்டு ரூ. 1.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ. 1.89 லட்சம் எனும் புது விலையில் இந்த மாடல் மீண்டும் விற்பனைக்கு வந்தது.

    2021 பெனலி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளில் 374சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி பவர், 29 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ஆடி நிறுவனத்தின் இ டிரான் எஸ்யுவி மற்றும் ஸ்போர்ட்பேக் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.


    ஆடி நிறுவனம் தனது இ டிரான் எஸ்யுவி மற்றும் ஸ்போர்ட்பேக் மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இரு மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 லட்சம் ஆகும். முன்பதிவு ஆடி வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்திய சந்தையில் ஆடி இ டிரான் மாடல் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது.

    இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இவற்றின் டிசைன் சற்றே வேறுப்பட்டு இருக்கும். இந்தியாவில் புதிய இ டிரான் எஸ்யுவி துவக்க விலை ரூ. 1 கோடி, எக்ஸ்-ஷோரூம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஆடி இ டிரான்

    ஆடி இ  டிரான் மாடலில் 125kW மற்றும் 140kW என இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இவை இணைந்து 408 பிஹெச்பி பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டார்கள் 95kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயக்கப்படுகிறது.

    இந்த பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 448 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. டிசி பாஸ்ட் சார்ஜர் கொண்டு இதில் உள்ள பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே ஆகிறது. ஸ்போர்ட்ஸ் மோடில் இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சந்தா முறையை மேலும் சில நகரங்களுக்கு நீட்டித்துள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகன சந்தா முறை சேவையை மேலும் நான்கு நகரங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. தற்போது ஜெய்பூர், இந்தூர், மங்களூரு மற்றும் மைசூரு போன்ற நகரங்களுக்கு மாருதி சுசுகி சந்தா முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. புது அறிவிப்பின் மூலம் மாருதி சந்தா முறை  நாட்டின் 19 நகரங்களில் கிடைக்கிறது.

     மாருதி சுசுகி கார்

    சந்தா முறையில் மாருதி சுசுகி அரினா மற்றும் நெக்சா சேனல்களை சேர்ந்த ஏராளமான மாடல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து பயன்படுத்தலாம். மாருதி சுசுகி அரினாவில் இருந்து வேகன்ஆர், ஸ்விப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா போன்ற மாடல்கள் கிடைக்கின்றன.

    நெக்சாவில் இருந்து இக்னிஸ், பலேனோ, சியாஸ், எஸ் கிராஸ் மற்றும் எக்ஸ்எல்6 போன்ற மாடல்கள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் ஆரிக்ஸ், ALD ஆட்டோமோடிவ் மற்றும் மைல்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
    ×