என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களின் வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரு மாடல்களும் இந்தியாவில் ஜனவரி 19 ஆம் தேதி அறிமுகமாகும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது.
அறிமுக தேதி மட்டுமின்றி டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ஒவ்வொரு பகுதி மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. தோற்றத்தில் புதிய சி.என்.ஜி. மாடல்களும் முந்தைய பெட்ரோல் வேரியண்ட் போன்றே காட்சியளிக்கும்.

புதிய டாடா டியாகோ சி.என்.ஜி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சி.என்.ஜி. கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் செயல்திறன் பெட்ரோல் யூனிட்டை விட குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தனது யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மாடலுக்கான புதிய டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் யெஸ்டி பிராண்டு மோட்டார்சைக்கிள்களை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. டீசர் வீடியோவில் யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மாடல் இந்தியவில் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது.
யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் அட்வென்ச்சர் பைக் மாடலாகவும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், டீசரில் ஸ்கிராம்ப்ளர் மாடல் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. புதிய யெஸ்டி மாடலில் பீக் போன்ற முன்புற ஃபெண்டர், நீண்ட சஸ்பென்ஷன், டையர் ஹக்கர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஒற்றை இருக்கை அமைப்பு, வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஸ்போக் வீல்கள், குரோம் எக்சாஸ்ட் கேனிஸ்டர் வழங்கப்படுகிறது.
After all every blockbuster has a teaser.
— yezdiforever (@yezdiforever) January 5, 2022
Here's ours.
.#YezdiIsBack#YezdiForever#Yezdi#YezdiMotorcycles#RetroCoolpic.twitter.com/xBhHTiKtat
புதிய யெஸ்டி மாடலில் 334 சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. திறன், 32.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் 2026 ஆண்டு வாக்கில் உலக சந்தையில் 17 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் குழுமம் இந்த ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹூண்டாய் நிறுவன பிராண்டுகளின் கீழ் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா இ.வி.6 மற்றும் ஜெனிசிஸ் ஜி.வி.60 போன்ற மாடல்கள் அடங்கும்.
இதுதவிர 2025 வாக்கில் பத்து லட்சம், 2026 வாக்கில் 17 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹூண்டாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. என்ஜின் வளர்ச்சி மையத்தை முழுமையாக புறக்கணிக்காமல், அதனை எலெக்ட்ரிக் பிரிவுக்கு மாற்ற ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

என்ஜின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த குழுக்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் கீழ் இயங்கும் வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் என்ஜின் வளர்ச்சி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தும். இந்த ஆண்டு மட்டும் ஹூண்டாய் நிறுவனம் 43.2 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்கோடா நிறுவனம் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய கார் அம்சங்களை ஸ்கோடா தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவித்து இருக்கிறது. மேம்பட்ட எஸ்.யு.வி. மாடலை தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் ஸ்லேவியா செடான் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பட்டர்ஃபிளை கிரில், வெர்டிக்கல் ஸ்லாட்கள், குரோம் சரவுண்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர். எல்., புதிய முன்புற பம்ப்பர், அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், பூட் லிட் மீது ஸ்கோடா பெயர், எலெக்ட்ரிக் டெயில் கேட் மற்றும் விர்ச்சுவல் பெடல் உள்ளது.

காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பானரோமிக் சன்ரூப், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் யூனிட், 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ, வெண்டோ மற்றும் டைகுன் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. மூன்று கார்களில் டைகுன் மாடல் விலை மட்டும் ரூ. 29 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் வோக்ஸ்வேகன் போலோ மாடல்- டிரெண்ட்லைன், கம்ஃபர்ட்லைன், ஹைலைன் பிளஸ் மற்றும் ஜி.டி. என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் ஜி.டி. லைன் விலை ரூ. 26 ஆயிரமும், மற்ற வேரியண்ட்கள் ரூ. 13 ஆயிரத்தில் துவங்கி ரூ. 19,900 வரையிலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

வெண்டோ மாடலின் கம்ஃபர்ட்லைன் மற்றும் ஹைலைன் 1.0 டி.எஸ்.ஐ. மேனுவல் வேரியண்ட்களின் விலைகள் மாற்றப்படவில்லை. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 29 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டைகுன் மிட்-சைஸ் எஸ்.யு.வி. கம்ஃபர்ட்லைன் மற்றும் ஜி.டி. பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 45,700 அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 15,700 இல் துவங்கி ரூ. 44,700 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் டிசம்பர் 2021 மாதத்தில் 65,197 வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. 2020 டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 65,492 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாத விற்பனையில் ராயல் என்பீல்டு சிறிதளவு சரிவை சந்தித்து இருக்கிறது.
ஆண்டு அடிப்படையில் சரிவை சந்தித்து இருந்தாலும், மாதாந்திர விற்பனையில் ராயல் என்பீல்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2021 நவம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 44,133 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி டிசம்பர் விற்பனையில் ராயல் என்பீல்டு 45 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது. மேலும் 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போதும் கடந்த டிசம்பரில் ராயல் என்பீல்டு வளர்ச்சி பெற்று இருக்கிறது.

உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதியிலும் ராயல் என்பீல்டு கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிசம்பர் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது 2021 டிசம்பரில் ராயல் என்பீல்டு நிறுவன வாகனங்கள் ஏற்றுமதி 144.13 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த டிசம்பரில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 8552 யூனிட்களை ஏற்றுமதி செய்தது. 2020 டிசம்பரில் மொத்தம் 3503 யூனிட்களை ராயல் என்பீல்டு ஏற்றுமதி செய்து இருந்தது.
டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வருவாய் விவரங்கள் வெளியாகி உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 2021 ஆண்டு முதலிடம் பிடித்தார். எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் டெஸ்லாவின் அசுர வளர்ச்சி காரணமாக எலான் மஸ்க் வருவாய் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 3, 2022) மட்டும் டெஸ்லா நிறுவன பங்குகள் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தன.
டெஸ்லா நிறுவன பங்குகள் 13.5 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 1,199.78 டாலர்களாக அதிகரித்தது. டெஸ்லா பங்குகளில் 18 சதவீதத்தை எலான் மஸ்க் வைத்திருக்கிறார். கடந்த மாதம் டெஸ்லா நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களாக அதிகரித்தது.

2021 ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் கார் மாடல்கள் வினியோகம் இருமடங்கு அதிகரித்தது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனம் 3 லட்சம் யூனிட்களை வினியோகம் செய்தது. டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் மாடல் வை அதிக பிரபலமான மாடல்களாக இருந்துள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
2022 மெர்சிடிஸ் விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். மாடல் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவை பூமியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் கார் மொத்த எடை 1750 கிலோ ஆகும். இதில் உள்ள பேட்டரி 900 வோல்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. எனினும், இந்த பேட்டரி அளவில் 50 சதவீதமும், எடையில் 30 சதவீதமும் குறைவாக இருக்கிறது. இதன் மேற்கூரையில் மெல்லிய சோலார் பேனல்கள் உள்ளன. இவை காரை 25 கிலோமீட்டர் வரை இயக்க வழி செய்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் 2021 டிசம்பர் மாத வாகன விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் கடந்த டிசம்பர் 2021 மாதத்தில் 1,53,149 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. உள்நாட்டில் 1,26,031 யூனிட்களும் வெளிநாடுகளுக்கு 22,280 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 2021, மாதத்தில் மாருதி சுசுகியின் உள்நாட்டு விற்பனை 13 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. பயணிகள் வாகனங்களான மினி மற்றும் காம்பேக்ட் பிரிவில்- ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, ஸ்விப்ட், டிசையர், இக்னிஸ் மற்றும் பலேனோ போன்ற மாடல்கள் 69,345 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

சியாஸ் மிட்-சைஸ் செடான் மாடல் 1,204 யூனிட்களும், யுடிலிட்டி மற்றும் வேன் பிரிவில்- ஜிப்சி, எர்டிகா, எக்ஸ்.எல்.6, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ் மற்றும் ஈகோ போன்ற மாடல்கள் 36,147 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன.
யமஹா நிறுவனம் 2022 எப்.இசட்.எஸ். எப்.ஐ. மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2022 எப்.இசட்.எஸ். எப்.ஐ. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய எப்.இசட்.எஸ். எப்.ஐ. மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் டி.எல்.எக்ஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 1,15,900 என்றும் டி.எல்.எக்ஸ். மாடல் விலை ரூ. 1,18,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேம்பட்ட புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் விற்பனையகம் வருகின்றன. இரு வேரியண்ட்களிலும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 149சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.2 பி.ஹெச்.பி. திறன், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

இந்த மோட்டாரைச்சிக்கிளில் டெலிஸ்கோபிக் போர்க், மோனோ ஷாக் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் எல்.இ.டி. டெயில் லைட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, சிங்கில் சேனல் ஏ.பி.எஸ்., பின்புறம் டிஸ்க் பிரேக், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்படுகிறது.
யமஹா எப்.இசட்.எஸ். எப்.ஐ. மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் டீப் ரெட் மற்றும் சாலிட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. டி.எல்.எக்ஸ். வேரியண்டில் வித்தியாசமான கிராபிக்ஸ், டூயல்-டோன் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கடந்த மாதம் பாஸ்டேக் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுக்க செயல்பட்டு வரும் சுவங்கச் சாவடிகளில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ‘பாஸ்டேக்’ மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதத்தில் ‘பாஸ் டேக்’ மூலம் நாடு முழுவதும் ரூ. 3,679 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு பாஸ்டேக் மூலம் ரூ. 119 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இது தினசரி வசூலில் புது சாதனை ஆகும்.

கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டிசம்பர் 2021, மாதத்தில் சுங்க கட்டணம் ரூ. 502 கோடி அதிகரித்து இருக்கிறது. 2020 டிசம்பரில் ரூ. 2,304 கோடியாக இருந்த கட்டண வசூல் கடந்த மாதத்தில் 1,375 கோடி அதிகரித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெற்றதால் சுங்க கட்டண வசூல் அதிகரித்துள்ளது. மேலும் பொருளாதார நடவடிக்கை காரணங்களாலும் கட்டண வசூல் அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான யமஹா மோட்டார் இந்தியா பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் தமிழகத்தில் ஜனவரி 31, 2022 வரை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் யமஹா 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர், 150சிசி எப்.இசட். மாடல் மற்றும் 155 சிசி ஆர்15 வி3 போன்ற மாடல்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்.

1. பசினோ 125 எப்.ஐ. ஹைப்ரிட் | ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் | ரேஇசட்.ஆர். ஸ்ட்ரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட்: ரூ. 5,000/- கேஷ் பேக் சலுகை மற்றும் 0% வட்டி விகிதம்.
2. யமஹா எப்.இசட். 15: குறைந்த முன்பணம்- ரூ. 9,999/- அல்லது 9.25% வட்டி விகிதம்.
3. யமஹா ஆர்.15 வி3: குறைந்த முன்பணம் - ரூ 19,999/- அல்லது 10.99% வட்டி விகிதம்.
யமஹா நிறுவனம் இந்தியாவில் தற்போது ஆர்.15 வி4 (155சிசி), ஆர்15 வி3 (155சிசி), ஆர்15எஸ் வி3 (155சிசி), எம்.டி.-15 (155 சிசி), எப்.இசட். 25 (249சிசி), எப்.இசட்.எஸ். 25 (249சிசி), எப்.இசட்.எஸ். எப்.ஐ. (149சிசி), எப்.இசட். எப்.ஐ. (149சிசி), எப்.இசட். எக்ஸ். (149சிசி) போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இத்துடன் ஏ.பி.எஸ். உடன், ஏரோக்ஸ் (155சிசி) ஏ.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி. வசதியுடன் பசினோ 125 எப்.ஐ. ஹைப்ரிட் (125சிசி), ரே இசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் (125சிசி), ஸ்ட்ரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட் (125சிசி) போன்ற ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.






