என் மலர்tooltip icon

    பைக்

    யமஹா எப்.இசட்.எஸ். எப்.ஐ.
    X
    யமஹா எப்.இசட்.எஸ். எப்.ஐ.

    2022 யமஹா எப்.இசட்.எஸ். எப்.ஐ. இந்தியாவில் அறிமுகம்

    யமஹா நிறுவனம் 2022 எப்.இசட்.எஸ். எப்.ஐ. மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2022 எப்.இசட்.எஸ். எப்.ஐ. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய எப்.இசட்.எஸ். எப்.ஐ. மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் டி.எல்.எக்ஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 1,15,900 என்றும் டி.எல்.எக்ஸ். மாடல் விலை ரூ. 1,18,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேம்பட்ட புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் விற்பனையகம் வருகின்றன. இரு வேரியண்ட்களிலும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 149சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.2 பி.ஹெச்.பி. திறன், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. 

     யமஹா எப்.இசட்.எஸ். எப்.ஐ.

    இந்த மோட்டாரைச்சிக்கிளில் டெலிஸ்கோபிக் போர்க், மோனோ ஷாக் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் எல்.இ.டி. டெயில் லைட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, சிங்கில் சேனல் ஏ.பி.எஸ்., பின்புறம் டிஸ்க் பிரேக், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்படுகிறது.

    யமஹா எப்.இசட்.எஸ். எப்.ஐ. மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் டீப் ரெட் மற்றும் சாலிட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. டி.எல்.எக்ஸ். வேரியண்டில் வித்தியாசமான கிராபிக்ஸ், டூயல்-டோன் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    Next Story
    ×