என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    இந்தியாவில் நவம்பர் மாத வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
     

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் நவம்பர் மாத வாக விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி உள்நாட்டு வாகனங்கள் விற்பனை வளர்ச்சி பெற்ற நிலையில், வெளிநாட்டு ஏற்றுமதியில் 122 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது.

    2020 நவம்பர் மாத வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு மொத்தம் 63,782 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 60,411 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதன்படி வாகன விற்பனையில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    வருடாந்திர அடிப்படையை பொருத்தவரை வாகன விற்பனையில் 30 சதவீத வீழ்ச்சியடைந்து இருக்கிறது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ராயல் என்பீல்டு 3,38,461 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. முந்தைய நிதியாண்டில் ராயல் என்பீல்டு 4,82,673 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது தன்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக Meteor 350 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது. புதிய Meteor 350 மாடல் பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    பயணிகள் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடி வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நவம்பர் 2020, பயணிகள் வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. 2020 நவம்பர் மாதத்தில் டாடா நிறுவனம் 49,650 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. 

     டாடா கார்

    அதன்படி 2019 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டாடா நிறுவனம் 20.7 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. டாடா நிறுவனத்தின் மொத்த விற்பனை வணிக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் என பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வணிக வாகனங்கள் 9 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

    டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை முந்தைய பண்டிகை கால மாதத்துடன் ஒப்பிடும் போது 108 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் எட்டு சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.

    பசுமை வாகனங்களில் அசத்திய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் பசுமை வாகனங்களில் தீங்கு விளைவிக்காத தன்மைக்கு 5 நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. சுத்தமான காற்று, செயல்திறன் மேம்பாடு மற்றும் பசுமை எரிவாயு என மூன்று நிலைகளில் ஆய்வு செய்த பின் இந்த புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    காற்று மாசு விளைவிக்காத வகையில் உருவாகி இருக்கும் ஹூண்டாய் கோனா சுத்தமான காற்று மற்றும் பசுமை எரிவாயு போன்ற நிலைகளில் அதிக புள்ளிகளை பெற்று இருக்கிறது. பாதுகாப்பு சோதனையில் பங்கேற்ற 24 முழு எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக புள்ளிகளை பெற்ற இரு வாகனங்களில் கோனா மாடலும் இடம்பெற்று இருக்கிறது.

     ஹூண்டாய் கோனா

    சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலெக்ட்ரிக் மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்தது. கோனா பேஸ்லிப்ட் மாடலில் கிரில், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், 3 பிராக்ஷன் எல்இடி ஹெட்லைட்கள், கீழ்புறம் அகலமான ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பின்புறம் டெயில் லேம்ப்கள் மெல்லியதாகவும், உள்புறம் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் பேஸ்லிப்ட் மாடலில் 39.2 கிலோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறை 136 பிஹெச்பி மற்றும் 204 பிஹெச்பி பவர் வழங்குகிறது. மேலும் இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 305 கிலோமீட்டர் மற்றும் 484 கிலோமீட்டர் வரை செல்கிறது.

    நிசான் மேக்னைட் சப்காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிசான் மேக்னைட் மாடல் ஒருவழியாக வெளியிடப்பட்டது. இந்தியாவில் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விலை ரூ. 4.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய நிசான் மேக்னைட் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.35 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இவை அறிமுக விலை தான் என்றும் டிசம்பர் 31, 2020 ஆம் தேதிக்கு பின் இந்த விலை மாற்றப்படும்.

     நிசான் மேக்னைட்

    இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் முன்பதிவில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை ஐ20 மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இதன் முன்பதிவு துவங்கப்பட்டது. தற்சமயம் புதிய தலைமுறை ஐ20 மாடல் முன்பதிவில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறது. 

     ஹூண்டாய் ஐ20

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் துவக்க விலை ரூ. 6.80 லட்சம் என துவங்குகிறது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (ஒ) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ஒவ்வொரு என்ஜினுக்கு ஏற்ப மேனுவல், இன்டெலிஜன்ட் மேனுவல், இன்டெலிஜன்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    யமஹா நிறுவனத்தின் எப்இசட்எஸ் எப்ஐ ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    யமஹா மோட்டார் இந்தியா எப்இசட்எஸ் எப்ஐ வின்டேஜ் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 1,09,700, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் டிசம்பர் மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

    தோற்றத்தில் எப்இசட்எஸ் எப்ஐ வின்டேஜ் எடிஷன் ஸ்டான்டர்டு எப்இசட்எஸ் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாடல் வின்டேஜ் கிரீன் நிறம் மற்றும் புதிய கிராபிக்ஸ், லெதர் இருக்கை கொண்டிருக்கிறது. வின்டேஜ் எடிஷன் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     யமஹா எப்இசட்எஸ் எப்ஐ

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் வின்டேஜ் எடிஷன் மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் என்ஜின் அன்டர் கௌல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 149சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 12.2 பிஹெச்பி பவர், 13.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை செலரியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த தலைமுறை செலரியோ மாடல் காரை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்நிலையில், புதிய செலரியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    புதிய ஸ்பை படங்களின் படி மாருதி சுசுகி செலியோ டாப் எண்ட் மாடல் உற்பத்திக்கு தயாரான நிலையில் காட்சியளிக்கிறது. இதில் பிளாக் அலாய் வீல்கள், பாக் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஹாலோஜென் ஹெட்லேம்ப்கள், ஒற்றை ஸ்லாட் கிரில், அகலமான ஏர் டேம், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     மாருதி சுசுகி செலரியோ

    புதிய தலைமுறை செலரியோ கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. இதே பிளாட்ஃபார்மிலேயே வேகன்ஆர் மாடலும் உருவாகி இருக்கிறது. புதிய தலைமுறை செலரியோ மாடலில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    மேம்பட்ட செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் இது பார்க்க வேகன்ஆர் ஹேட்ச்பேக் போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட் சக்திவாய்ந்த என்ஜினுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.


    புதிய ஜீப் ஏழு பேர் பயணிக்கக்கூடிய எஸ்யுவி மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஜீப் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இது 2.0 லிட்டர், 4 சிலிண்டர், மல்டிஜெட் டர்போ டீசல் யூனிட் ஆகும். இந்த என்ஜின் 200 பிஹெச்பி திறன் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 

     ஜீப் காம்பஸ்

    இதே என்ஜின் காம்பஸ் மாடலில் 173 பிஹெச்பி பவர் வழங்குகிறது. எம்ஜி ஹெக்டாரில் இதே என்ஜின் 176 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய ஜீப் மாடல் காம்பஸ் மோனோக் பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. மூன்றாம் அடுக்கு இருக்கைகளுக்கு ஏற்றவாரு புதிய கார் சற்று நீளமாக இருக்கும் என தெரிகிறது.
    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக அரைவ் செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வாகன விற்பனையை ஆன்லைன் தளத்திற்கு மெல்ல மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக பிரத்யேக வலைதளம், செயலி உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்து வருகின்றன.

    அந்த வரிசையில் டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் செயலியை அரைவ் எனும் பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் வாகனங்களை முன்பதிவு செய்யும் வழிமுறையை முற்றிலும் மாற்றுகிறது.

     டிவிஎஸ் அரைவ்

    டிவிஎஸ் அரைவ் செயலியில் - ‘Place to explore’, ‘Scan a real bile’ மற்றும் ‘3D mode’ என மூன்று மோட்களை கொண்டிருக்கிறது. இதல் முதல் இரண்டு மோட்களும் ஆக்மென்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ‘Place to explore’ மோட் டிவிஎஸ் வாகனத்தை 360 டிகிரி கோணத்தில் காண்பிக்கிறது. 

    இத்துடன் ‘Scan a real bile’ மோட் மோட்டார்சைக்கிள் ஒன்றை முழுமையாக ஸ்கேன் செய்து அதன் அம்சங்கள் மிக துல்லியமாக அறிந்து கொள்ள வழி செய்கிறது. இதில் உள்ள ‘3D mode’ ஏஆர் தொழில்நுட்பத்திற்கான வசதி இல்லாத ஸ்மார்ட்போன்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த அம்சம் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மற்ற இரண்டு அம்சங்களை போன்றே இயங்குகிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் விலை இந்திய சந்தையில் மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனம் தனது தார் மாடல் விலையை உயர்த்துகிறது. ஏற்கனவே மஹிந்திரா தார் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால், விலை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் புதிய மஹிந்திரா தார் மாடல் அக்டோபர் 2 ஆம் தேதி ரூ. 9.8 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் பேஸ் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக புதிய தார் துவக்க விலை ரூ. 11.9 லட்சமாக மாறியது. எனினும், இந்த விலை நேற்று வரை முன்பதிவு செய்தவர்களுக்கானது ஆகும்.

     மஹிந்திரா தார்

    அந்தவகையில் இன்று (டிசம்பர் 1) முதல் புதிய தார் மாடலை முன்பதிவு செய்வோர் சற்றே அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. புதிய தார் மாடலை ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அறிமுக விலையில் வாங்கிடலாம்.

    இந்திய சந்தையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையை பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் நிறுத்திவிட்டது. இந்த மாடல் விற்பனை நவம்பர் 28 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது.

    ஏத்தர் 450 மாடல் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏத்தர் எனர்ஜி அறிமுகம் செய்த ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

     ஏத்தர் 450

    இந்திய சந்தையில் இரண்டு புதிய ஏத்தர் ஸ்கூட்டர்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால், பழைய ஏத்தர் 450 விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இந்திய சந்தையில் அறிமுகமான முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஏத்தர் 450 பெற்று இருந்தது. இதன் பின் அறிமுகமான ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 பிளஸ் உள்ளிட்டவை முந்தைய மாடலுக்கான பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
    இந்தியாவில் ஹெல்மெட் பயன்பாடு பற்றி மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் புதிய உத்தரவு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இந்தியாவில் விற்பனையாகும் ஹெல்மெட்கள் அனைத்தும் இந்திய தரம் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான சான்றளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

    இந்த உத்தரவு ஜூன் 1, 2020 முதல் அமலாகிறது. இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது பயன்படுத்தப்படும் ஹெல்மெட்கள் தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் விபத்தில் சிக்குவோர் முன்பை விட அதிகளவு பாதுகாக்கப்படுவர்.

     ஹெல்மெட்

    மத்திய அரசின் புதிய உத்தரவு படி ஜூன் 1, 2020 முதல் இந்திய தரம் நிர்ணய செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட (BSI) இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகள்  மட்டுமேஇந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும். 

    மேலும், இதுவரை விற்பனை செய்யப்பட்ட மலிவு விலை மற்றும் BSI சான்றிதழ் இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு, 2021 ஜூன், 1 முதல் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தடைவிதித்து உள்ளது.
    ×