என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹோண்டா நிறுவனம் 2021 ஹோண்டா ரிபெல் 1100 மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனம் புதிய ரிபெல் 1100 குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 ஹோண்டா ரிபெல் 1100 பல்வேறு புது அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் சத்கிவாய்ந்த என்ஜினுடன் கிடைக்கிறது.

    வடிவமைப்பு ஹோண்டா ரிபெல் 300 மற்றும் 500 மாடல்களை தழுவி மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய மாடலில் ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட பியூவல் டேன்க், டிரெலிஸ் பிரேம், ஒற்றை இருக்கை மற்றும் பின்புற பென்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

     2021 ஹோண்டா ரிபெல் 1100

    இத்துடன் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், சிங்கிள் பாட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா ரிபெல் 1100 மாடலில் 1084சிசி பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 100 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டிசிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    நிசான் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய நிசான் மேக்னைட் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

    புதிய நிசான் மேக்னைட் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களுக்கு கனெக்டெட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மூன்று வாகனங்களுக்கு ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அம்சம் ஹீரோ கனெக்ட் என அழைக்கப்படுகிறது. 

    முதற்கட்டமாக இந்த தொழில்நுட்பம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, டெஸ்டினி 125 மற்றும் பிளஷர் பிளஸ் போன்ற மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இது ரூ. 4999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

     ஹீரோ கனெக்ட்

    இந்த தொழில்நுட்பம் பிரத்யேக செயலியுடன் வாகன உரிமையாளரின் ஸ்மார்ட்போன் உடன் இணைந்து கொண்டு செயல்படுகிறது. மேலும் இது பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது.
    கவாசகி நிறுவனம் தனது 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    கவாசகி நிறுவனத்தின் 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிளில் புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    2021 இசட் ஹெச்2 எஸ்இ மாடலில் கவாசகி நிறுவனத்தின் செமி ஆக்டிவ் எலெக்டிரானிக் கண்ட்ரோல் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இது பயணிக்கும் போது சாலை மற்றும் ரைடிங் நிலைகளுக்கு ஏற்ற வகையில் டேம்பிங் செய்கிறது.

     2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ

    சஸ்பென்ஷனிற்கு ஷோவாவின் 43எம்எம் யுஎஸ்டி போர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய புதிய யுனி டிராக், BFRC லைட் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் வழங்கப்பட்டு இரு்கிறது. ரெயின் மோடில் ஷோவா தொழில்நுட்பம் சிறந்த கண்ட்ரோல் வழங்குகிறது.

    புதிய 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிளில் 998சிசி சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 198 பிஹெச்பி பவர், 137 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் பை-டைரெக்ஷனல் குவிக் ஷாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
    பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்க இருக்கிறது.


    பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலின் உற்பத்தி விரைவில் இந்தியாவில் துவங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் பூனேவில் உள்ள பாரமதி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 

    இத்துடன் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 புதிதாக புளூ நிறத்திலும் கிடைக்கும் என பியாஜியோ அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை பியாஜியோ 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. அப்போது இந்த மாடல் சிவப்பு நிற பெயின்டிங் மற்றும் பிளாக் இன்சர்ட்களை கொண்டிருந்தது.

     அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160

    அப்ரிலியா தனது எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் ஏற்கனவே வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    சத்திவாய்ந்த அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இதே என்ஜின் அப்ரிலியா எஸ்ஆர் 160 பிஎஸ்6 ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின 10.8 பிஹெச்பி பவர், 11.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    அசத்தல் அம்சங்கள் கொண்ட 2021 வால்வோ எஸ்60 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    வால்வோ கார்ஸ் நிறுவனம் மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வால்வோ எஸ்60 மாடல் பல்வேறு அப்டேட்களை கொண்டிருக்கிறது. இதன் வடிவமைப்பு, கூடுதல் அம்சங்கள் மற்றும் என்ஜின் உள்ளிட்டவை அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன.

    புதிய வால்வோ எஸ்60 மாடல் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஜனவரி மாதத்தில் துவங்குகிறது. முன்பதிவு மறஅறும் விற்பனை தேதி சார்ந்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

     2021 வால்வோ எஸ்60

    2021 வால்வோ எஸ்60 மாடலில் மேம்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், தார் ஹேமர் எல்இடி டிஆர்எல்கள், மெல்லிய முன்புற கிரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 19 இன்ச் அலாய்வீல்கள், சி வடிவ எல்இடி டெயில் லைட்கள், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய வால்வோ எஸ்60 செடானில் 2.0 லிட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜின் என்ஜின் 160 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    பிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ கார் விலை ரூ. 1.94 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடலை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் விற்பனையகத்திற்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம். புதிய காரை இந்த ஆண்டு இறுதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்சலன்ஸ் கிளப் வடிவமைத்த பிரத்யேக சேவை வழங்கப்படுகிறது. 

     பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படீஷன்

    பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடலில் 4.4 லிட்டர் எம் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 625 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படீஷன் மாடல் சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த மாடல் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புதிய மைலக்ல் எட்டியுள்ளது.


    பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இது பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் துவக்க விலை ரூ. 1.15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்சமயம், செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையில் ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக பஜாஜ் தெரிவித்து இருக்கிறது. தற்சமயம் பஜாஜ் செட்டாக் மாடல் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. துவக்கத்தில் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்று வந்தது.

     செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    பின் கொரோனா ஊரடங்கு சமயத்தில் இதன் விற்பனை சரிவடைந்தது. தற்சமயம் ஊரடங்கிற்கு பின் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு வேரியண்ட்களிலும் 3kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 4KW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வரை செல்லும்.

    மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் ஆகிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஹோண்டா ஆக்டிவா மாடல் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக இருக்கிறது. இந்தியாவில் ஆக்டிவா மாடல் ஆறாம் தலைமுறை வெர்ஷன் விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா மாடல் இந்திய சந்தையில் இருபது ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் 20 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் ஹோண்டா ஆக்டிவா தற்சமயம் புதிய ஸ்பெஷல் எடிஷன் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஆக்டிவா 6ஜி வெர்ஷனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

     ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன்

    புதிய ஹோண்டா ஆக்டா 6ஜி 20 ஆண்டுகள் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் மாடல் ரூ. 66,816 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 68,316 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஸ்பெஷல் எடிஷன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மேட் மெச்சூர் பிரவுன் மற்றும் பியல் நைட்ஸ்டார் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 109சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.7 பிஹெச்பி பவர், 8.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் கார் கிராஷ் டெஸ்டில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய தார் மாடல் குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் சோதனையை எதிர்கொண்டது. இதில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பில் புதிய தார் மாடல் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    புதிய மஹிந்திரா தார் மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17-க்கு 12.52 புள்ளிகளை பெற்று இருக்கிறது. சிறுவர்கள் பாதுகாப்பிற்கு 49-க்கு 41.11 புள்ளிகளை பெற்று இருக்கிறது.  அந்த வகையில் புதிய தார் மாடல் இந்தியாவின் பாதுகாப்பான ஆப் ரோடர் எஸ்யுவி மாடல் ஆகும்.

     மஹிந்திரா தார்

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யுவி300 தவிர சிறுவர் பாதுகாப்பிற்கு 4 நட்சத்திர புள்ளிகளை பெற்ற ஒரே கார் மாடலாக புதிய தார் இருக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் ஸ்டான்டர்டு பாதுகாப்பு உபகரணங்களுடன் சோதனை செய்யப்பட்டது.

    புதிய மஹிந்திரா தார் மாடலில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், சீட்பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    டொயோட்டா நிறுவனம் கேம்ரி பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. 2021 கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மாற்றப்பட்டு, புதிய இன்டீரியர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பேஸ்லிப்ட் செய்யப்பட்ட கேம்ரி ஹைப்ரிட் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் செடான் மாடல் ஆகும். 2021 கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலில் புதிய பம்ப்பர், கிரில் வழங்கப்பட்டு உள்ளது. 
     
     கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட்

    புதிய செடான் மாடல் 17 இன்ச் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் டீப் மெட்டல் கிரே ஆப்ஷனில் கிடைக்கிறது. இதன் உள்புறம் சென்ட்ரல் கன்சோல், புதிய 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வழங்கப்படுகிறது.

    டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் மாடலில் 2.5 லிட்டர் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 216 பிஹெச்பி பவர், 221 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் இந்திய வெளியீட்டு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிராவிடாஸ் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் விற்பனை பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என கூறப்பட்டது. 

    எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கிராவிடாஸ் மாடல் வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. டாடா நிறுவனத்தின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய எஸ்யுவி மாடல் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என தெரிகிறது.

     டாடா கிராவிடாஸ்

    புதிய கிராவிடாஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது ஹேரியர் மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. டாடா கிராவிடாஸ் வெளியீடு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    டாடா கிராவிடாஸ் மாடல் அந்நிறுவனத்தின் ஹேரியர் மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷன் ஆகும். இது 63 எம்எம் நீளமாகவும், 80 எம்எம் அகலமாகவும், 2741 எம்எம் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 172 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.
    ×