search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா கிராவிடாஸ்
    X
    டாடா கிராவிடாஸ்

    டாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் இந்திய வெளியீட்டு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கிராவிடாஸ் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் விற்பனை பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என கூறப்பட்டது. 

    எனினும், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கிராவிடாஸ் மாடல் வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. டாடா நிறுவனத்தின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய எஸ்யுவி மாடல் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என தெரிகிறது.

     டாடா கிராவிடாஸ்

    புதிய கிராவிடாஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது ஹேரியர் மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. டாடா கிராவிடாஸ் வெளியீடு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    டாடா கிராவிடாஸ் மாடல் அந்நிறுவனத்தின் ஹேரியர் மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷன் ஆகும். இது 63 எம்எம் நீளமாகவும், 80 எம்எம் அகலமாகவும், 2741 எம்எம் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 172 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×