search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோனா எலெக்ட்ரிக்"

    ஹூன்டாய் நிறுவனம் 2017-இல் அறிமுகம் செய்த கோனா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #HyundaiKONA



    ஹூன்டாய் நிறுவனம் தனது கோனா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் காரை 2017-இல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் வெளிநாடுகளில் விற்பனையாகி வரும் கோனா எலெக்ட்ரிக் இந்தியாவில் ஜூலை 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    கோனா எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை ஹூன்டாய் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்து இருந்ததை தொடர்ந்து இத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய கோனா எஸ்.யு.வி. சென்னையில் இயங்கி வரும் ஹூன்டாய் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தது.

    இந்தியாவில் ஹூன்டாய் கோனா விலை ரூ.30 லட்சத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 2019-ம் ஆண்டில் 1,000 யூனிட்களை உற்பத்தி செய்து அதன் பின் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது.



    ஹூன்டாய் கோனா எஸ்.யு.வி. மாடல் பெட்ரோல் மற்றும் சுத்தமான எலெக்ட்ரிக் இன்ஜின் கொண்ட வேரியன்ட் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திரா கே.யு.வி. 100 எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாகும் முன் கோனா எலெக்ட்ரிக் அறிமுகமானால், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற பெருமையை கோனா பெரும்.

    கோனா எலெக்ட்ரிக் 470 மற்றும் 500 கிலோமீட்டர் என இருவித திறன்களில் வெளியிடப்பட இருக்கிறது. இத்துடன் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களுடன் பாதுகாப்பு மற்றும் டிரைவிங் அசிஸ்டண்ஸ் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதற்கென ஹூன்டாய் நிறுவனம் எல்ஜியுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலெக்ட்ரிக் பேட்டரி செவி போல்ட் மாடலில் வழங்கப்பட்டதை போன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கும் போது 40 கிலோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி பேக்களை கொண்டிருக்கும்.
    ×