என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதினர்.
      • அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும் பெற்றனர்.

      திசையன்விளை:

      மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்றனர்.

      மாணவர்கள் அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும், அனிஷ் 487 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். இவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

      சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

      • முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
      • பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் நாகர்கோவில் பெஜான்சிங் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மூலம் சங்கரன்கோவில் தெற்கு ஒன்றியம் வீரசிகாமணியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக லென்ஸ், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாரிசாமி, நிர்வாகிகள் முருகையா, வைரமுத்து, வெள் ளைச்சாமி, வேலுத்தாய், முனியம்மாள், முக்கையா, தர்மராஜ், சந்திரன், ஈஸ்வரன், சந்திரசேகர், ஹைதர்அலி, கடல்துரை, ராமகிருஷ்ணன், நடராஜன், பாஸ்கர், மதியழகன், பூக்குமார், கருப்பசாமி வீரபாண்டி, கணேசன், முருகன், கிருஷ்ணன், சண்முகையா, குருசாமி, அனுசிய பாண்டியன், சுப்பையா, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

      • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
      • கடந்த ஓராண்டிற்கும் மேலாக இலவசமாக பயிற்சி மையம் அமைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடத்திய 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

      கடந்த ஓராண்டிற்கும் மேலாக இலவசமாக பயிற்சி மையம் அமைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர். இதற்கான கல்வி திருவிழா நடைபெற்றது.

      விழாவிற்கு ஆசிரியர்கள் லூக்காஸ், ராமசாமி, கார்த்திக், ஆறுமுகச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.ஏ. சூசை, தலைமை ஆசிரியர் மரிய அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை செந்தில்குமாரி வரவேற்று பேசினார். தமிழ் ஆசிரியர் சங்கர் ராம், நகர் மன்ற உறுப்பினர்கள் ராமு ராமர், விஜயகுமார், சந்தனமகாராஜன், இசக்கிமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியைகள் முத்துச்செல்வி, மேகலா ஆகியோர் நன்றி கூறினார்கள்.

      விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக மற்றும் மேம்பட்ட கல்வி வளர்ச்சிக்கான சங்க பொருளாளர் இளையராஜா, ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி, ராஜ், செந்தில்குமார், ஆனந்த், ராமர் ஆகியோர் செய்திருந்தனர்.

      • ஆட்டுக்கொட்டகைக்குள் சென்ற நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.
      • நாய்களால் அப்பகுதி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செந்தட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது39). இவர் செந்தட்டியில் இருந்து வேப்பங்குளம் செல்லும் சாலையில் ஆட்டு கொட்டகை அமைத்து அங்கு சுமார் 41 ஆடுகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

      இந்நிலையில் நேற்று இரவு அந்த ஆட்டுக்கொட்டகைக்குள் சென்ற நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. இதில் 24 செம்மறி ஆடுகளும் 8 வெள்ளாடுகளும் உயிரிழந்தன. மேலும் நாய்கள் கடித்ததில் 9 ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன.

      நாய்கள் கூட்டமாக சென்று ஆடுகளைக் கடித்து குதறும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பதாகவும், அவற்றால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • 2-ம் பரிசு மாணவி பிருந்தாவுக்கு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் ரூ.1000 வழங்கினார்.
      • 10-ம் வகுப்பு மாணவி துர்காதேவிக்கு ரூ.1000- பரிசுதொகை வழங்கப்பட்டது.

      சாம்பவர்வடகரை:

      சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சாம்பவர்வடகரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மற்றும் தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் இணைந்து ரொக்க பரிசுகள் வழங்கினர். 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அப்துல் வாகித்திற்கு ரூ.1,500 -ஐ பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி வழங்கினார். 2-ம் பரிசு மாணவி பிருந்தாவுக்கு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் ரூ.1000 வழங்கினார். 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பத்மாவுக்கு ரூ.1,500-ஐ சங்கத் தலைவர் சண்முகவேல் வழங்கினார். 2-ம் பரிசு ரூ.1000-ஐ மாணவி துர்காதேவிக்கு ஏ.ஈ.ஓ. சிவணைந்த பெருமாள் வழங்கினார். விழாவில் இளஞ்செழியன், சிவணைந்த பெருமாள், சண்முகவேல் , பாலசுப்ரமணியன், செயலாளர் சின்ன இசக்கி, பொன் சொர்ணவேல், ஆறுமுகம், பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • தூங்குவதற்காக புதிய வீட்டிற்கு ராமச்சந்திரன் சென்றுள்ளார்.
      • பழைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

      சங்கரன்கோவில்:

      தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பருவக்குடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது53), விவசாயி.

      இவருக்கு பருவக்குடியில் 2 வீடுகள் உள்ளன. அதில் பழைய வீட்டில் முக்கியமான பொருட்களை வைத்துள்ளார். மேலும் அங்கு சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டு விட்டு இரவு தூங்குவதற்கு மட்டும் அவரது புதிய வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

      ரூ. 2 லட்சம் நகை-பணம்

      சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு 9 மணிக்கு பழைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு வீட்டை பூட்டி விட்டு தூங்குவதற்காக புதிய வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் அதிகாலை தனது வேலைகளை பார்பதற்காக அங்குள்ள விவசாய பொருட்களை எடுக்க பழைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

      அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் தங்க சங்கிலி, 3 ஜோடி தங்க கம்மல்கள், மோதிரம் மற்றும் அதனுடன் வைக்கப்பட்டிருந்த ரூ. 8 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டி ருந்தது தெரியவந்தது. கொள்ளைபோன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும்.

      போலீசார் விசாரணை

      இது குறித்து ராமச்சந்தி ரன் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.

      • மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ரூ. 12 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
      • சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி செயலாளர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

      சிவகிரி:

      சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கீர்த்தனா, சக்தி பார்கவி, சுமித்ரா, மாணவர் கார்த்திகேயன் ஆகிய 4 பேர் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

      மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ரூ. 12 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இப்பள்ளியில் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களின் திறமை தேடல் தேர்வில் ஹரணி தங்கம், ரவீணா ஆகிய 2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் கலைஞர் என்ற மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம், பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேலு, பள்ளியின் கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள், பெற்றோ ர்கள், பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

      • 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
      • பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

      நெல்லை:

      நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, வாகன காப்பக வசதியுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு கோர்ட்டு வழக்குகள் காரணமாக பஸ் நிலையம் திறப்பது தள்ளிப்போகிறது.

      இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் அதனை தற்காலிகமாக திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

      இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று பஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் முதற்கட்டமாக டவுன் பஸ்களை இயக்குவதற்காக பஸ் நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புவேலிகளை அகற்றி, பஸ்கள் வந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று பஸ் நிலையத்தை சுற்றி பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்றும் 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

      பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து பாளை, புதிய பஸ் நிலையம், தச்சநல்லூர், டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

      வருகிற 19-ந் தேதி முதல் முழுமையாக அனைத்து டவுன் பஸ்களையும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      • தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும்.
      • வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது.

      நெல்லை:

      நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

      கூட்டத்தில் நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் வந்து அளித்த மனுவில்,

      நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்தில் பெரியார் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

      வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் வந்து அளித்த மனுவில், இளங்கோவடிகள் தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்கு தெற்கு பக்கமாக கழிவு நீர் ஓடை செல்வதற்கு கிழக்கிலிருந்து வாறுகால் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு அந்த சாக்கடை குறிச்சி சாலையில் உள்ள கழிவுநீர் ஓடையில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியை சிலர் ஆக்கிரமித்து விட்டதால் எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏற்படும் சூழல் உள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

      • பழையபேட்டை, காந்திநகர் பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.
      • 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

      நெல்லை:

      நெல்லை மாநகர பகுதியில் சில இடங்களில் பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட பழையபேட்டை, காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. பழையபேட்டை அரசு பள்ளி அருகே நேற்று பணிக்காக தொழிலாளர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது குடிநீர் குழாயை உடைத்ததாக தெரிகிறது. இதனால் குடிநீர் வீணாகி வெளியேறி வருகிறது. சாலையில் வீணாகி செல்லும் தண்ணீரை பிடித்து சிலர் அங்கேயே குளித்து வருகின்றனர்.

      இது தொடர்பாக அவர்கள் கூறும்போது. 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றால் இப்பகுதி வழியாக தண்ணீர் செல்வதை நிறுத்த வேண்டும். அப்படி செய்தால் பல கிராமங்களுக்கு தண்ணீர் செல்லாமல் இருக்கும். இதனால் அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்யாமல் உள்ளனர்.

      இந்த தண்ணீர் பாதாளச் சாக்கடைக்கு தோண்டப் பட்ட பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. மேலும் இன்று வரை 2 நாட்களாக ஆறுபோல் தண்ணீர் சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் செல்வோர் பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சகதிக் காடாக காட்சி யளிக்கிறது. எனவே உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்த தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

      • தருவை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது.
      • போலீசார் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

      நெல்லை:

      நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கபெருமாள். இவரது மகன் சக்திவேல்(வயது 23). கூலி தொழிலாளி.

      நேற்று நள்ளிரவு இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்(23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அம்பை சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்டிச்சென்றார். தருவையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது.

      அப்போது அப்பகுதியில் இருந்த பஸ் நிறுத்தம் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

      அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சக்திவேல் பரிதாபமாக இறந்தார். கதிர்வேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • வசூல் தொகையில் ரூ. 50 ஆயிரம் மாயமானது ஊழியர்களுக்கு தெரியவந்தது.
      • அடையாளம் தெரியாத நபர் பணத்தை திருடிச் செல்வதும் சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது.

      நெல்லை:

      கல்லிடைக்குறிச்சியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த பங்கில் வசூலான பணத்தை ஊழியர்கள் சரி பார்த்தனர். அப்போது வசூல் தொகையில் ரூ. 50 ஆயிரம் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்குள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு வருவதும், பின்னர் பெட்ரோல் பங்கில் உள்ள பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்வதும் அதில் பதிவாகி இருந்தது.

      இது தொடர்பாக பெட்ரோல் பங்க் மேலாளர் ஆறுமுகம் (வயது53) என்பவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

      ×