என் மலர்
- முத்துலட்சுமி வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலி முதலிடம் பிடித்துள்ளார்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் முத்துலட்சுமி 583 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் சண்முகசாமி.இவரது மனைவி வள்ளியம்மாள். சண்முக சாமி ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார்.
இவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மகள் முத்துலட்சுமி வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். முத்துலட்சுமி தனது ஆரம்ப கால பள்ளி படிப்பை நவநீதகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து உள்ளார். 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சங்கரன்கோவில் எஸ்.என்.ஆர். மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். தற்போது வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய 4 பாடங்களில் முழு மதிப்பெண்களுடன் முத்துலட்சுமி 600-க்கு 583 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
தொடர்ந்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தர வரிசைப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளில் முத்துலட்சுமியும் ஒருவர் ஆவார். வேளாண் பல்கலைக்கழக பட்டியலில் முதலிடம் பிடித்த முத்துலட்சுமிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ், வகுப்பு ஆசிரியர் பார்வதி சிவகாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி முத்துலட்சுமியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார். அப்பொழுது மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தலைவன் கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- நிகழ்ச்சியில் யூனியன் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
- ஆலோசனை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார்.
தென்காசி:
ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள், தொழிலதிபர் மணிகண்டன், யூனியன் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து 32 கிராம ஊராட்சி தலைவர்களுக்கான வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் முதல்- அமைச்சரின் கிராம சாலை கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 தொழில்நுட்ப உதவி யாளர்கள் பணி நியமன ஆணையை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார்.
- கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள்,கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
- கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதனை தொடர்ந்து பேசிய சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதில் நகராட்சி கவுன்சிலர்கள், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேலாளர் மாரியம்மாள், மேற்பார்வையாளர் கோமதி நாயகம், கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
- சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு தங்கப்பதக்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
- விண்ணப்பப்படிவங்களை 26-ந் தேதி அலுவலக நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்குவித்து கவுரவிக்கப்படுத்துவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழா அன்று கீழ் காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
1.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.
2.மாற்றுத்திற னாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.
3.மாற்றுத்திறனாளி களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.
4.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்களுக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
5.சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ்.
இந்த விருதுகளுக்கான விண்ணப்பப்படிவங்களை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை - 5 என்ற முகவரியிலோ அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 26-ந் தேதி அன்று அலுவலக நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும்,https://awards.tn.gov.in"என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாரியப்பன் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார்.
- போலீசார், மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
புளியங்குடி:
புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 45). இவர் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார். தினமும் மாலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து புளியங்குடி ஊருக்கு வெளியே ஒருவரது கிணற்றில் அமர்ந்து பேசுவது வழக்கம்.
நேற்றும் அவர் தனது நண்பர்களுடன் இரவில் பேசிக்கொண்டிருந்த நிலையில் அனைவரும் கிணற்று ஓரத்திலேயே தூங்கி விட்டனர். இந்நிலையில் இன்று காலை அவரது சக நண்பர்கள் எழுந்துவிட்ட நிலையில், மாரியப்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் அங்கு சென்று மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- கல்வி தொலைக்காட்சி குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைக்காட்சி வழங்குமாறு ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- குத்தாலிங்கராஜன் என்ற கோபி தனது சொந்த நிதியிலிருந்து வண்ண தொலைக்காட்சி வாங்கி அதனை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கினார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மாடியனூர் பாளையம் ஆ.பொன்னுச்சாமி நாடார் தொடக்க பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வரும் குழந்தைகளுக்கு கல்வி தொலை க்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கு அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் கவிதா, ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபியிடம் தொலைக்காட்சி வழங்கு மாறு கோரிக்கை விடுத்தி ருந்தார்.
அதனை ஏற்று ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து வண்ண தொலைக்காட்சி வாங்கி அதனை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கினார்.
தொடர்ந்து அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் திருமலை செல்வன், ராஜாராம், ராதா சிங், தங்க ராஜா, தங்கம், கார்த்திக் ராஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
- மேற்குரத வீதியில் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன.
நெல்லை:
பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோவிலில் மேற்கு ரத வீதியில் உள்ள ஆன்மீக மண்டபங்களில் வழிபாடு நடத்த தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் மேற்கு ரத வீதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இந்த பகுதியில் விக்கிரமசிங்கபுரம் சுற்று வட்டார பகுதி மக்கள் நடைபாதை கடைகள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் மேற்கு ரத வீதியில் இரும்பு கதவு அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு விக்கிரமசிங்கபுரம் ஊர் போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த இரும்பு கதவு அமைக்கும் பணியை ரத்து செய்யக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விக்ரமசிங்கப்புரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மனு சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் ஊர் பொதுமக்கள் சார்பாக 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாபநாச சுவாமி கோவிலின் மேற்கு ரத வீதியை பல நூற்றாண்டு காலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். திடீரென நிர்வாக காரணங்கள் கூறி இந்து அறநிலையத்துறை இரும்பு கதவு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
23 சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் கோவிலின் பூஜைகள் தவறாமல் செய்து வந்தும், கோவிலை தூய்மையாகவும் பராமரித்து வருகிறோம். மேற்குரத வீதியில் இரும்பு கதவு பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதனை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
இவர் அந்த மனுவில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விக்கிர மசிங்கபுரம் பொதுமக்கள் கூறியதாவது:
மேற்குரத வீதியில் 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. தினசரி இந்த வீதி வழியாக இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. திடீரென இரும்பு கதவு அமைப்பதில் உள்நோக்கம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக அவர்கள் கொண்டு வந்த பாதாகைளை கலெக்டர் அலுவலக்திற்குள் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் பறிமுதல் செய்த பதாகைகள்.
- பிரின்ஸ் ஷெல்டன் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
- அக்கம் பக்கத்தினர் பிரின்ஸ் ஷெல்டனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
பாளை சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ஷெல்டன் (வயது 28). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, கங்கைகொண்டான் சிப்காட் அருகே முன்னால் சென்ற டிராக்டர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத பிரின்ஸ் ஷெல்டன் டிராக்டரின் பின்புறத்தில் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கங்கை கொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஜீவநதியாய் விளங்கும் தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில். இங்கு மூலவராக நெல்லையப்பா் - காந்திமதி அம்பாள் அருள்பாலித்து வருகின்றனா்.
கொடியேற்றம்
நடராஜா் சன்னதி தாமிரசபை என்று அழைக்கப்படுகின்றது. மகாவிஷ்ணு, அக்னிபகவான், அகத்தியர், வாம தேவரிஷி, மணப்படை வீடு அரசன் ஆகி யோர்க ளுக்கு சிவபெருமான் தனது நடன தரிசனம் கொடுத்த சிறப்புடையது ஆகும்.
இங்கு எழுந்தருளியுள்ள அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிபட்டம் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடந்து கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராத னைகள் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வருகிற 22-ந் தேதி (வியாழன்) ஸ்ரீநடராஜ பெருமான் தாமிர சபையில் இருந்து திருவிழா மண்டபத்திற்கு ஏழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து சிகப்பு சாத்தி, வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி தாிசனம் நடைபெறுகின்றது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 24-ந் தேதியும், 25-ந் தேதி அழகிய கூத்தருக்கு ஆனித்திருமஞ்சனம் மற்றும் நடன தீபாராதனையும், சுவாமி வீதி உலாவும் நடை பெறுகிறது. கொடியேற்ற விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
- கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார்.
- மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூரில் நெல்லை மத்திய மாவட்டம் மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மைதீன்கான் தலைமை தாங்கினார். நெல்லை தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மேயர் சரவணன், துணை மேயா் கே.ஆர். ராஜூ, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், பாளை பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரை, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, புலிகண்ணன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், நெல்லை மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மீரான்மைதீன், மாவட்ட பிரதிநிதி இசக்கிபாண்டியன், சுரேஷ், ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மணிகண்டன், சமுத்திரம் மற்றும் தொப்பிமைதீன், குழந்தை இயேசு, ஜெயச்சந்திரன், போத்திக்கண்ணு, ரவி, நயினாா், லெட்சுமணன், காளியப்பன், சுந்தா், மிக்கேல், ஜேக்கப், பால்ராஜ், தலைமை நிலைய பேச்சாளர்கள் நெல்லை ரவி, முத்தையா மற்றும் ஒன்றிய, கிளை செயலாளா்கள், பிரதிநிதி கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி செய்திருந்தார். முடிவில் பிரபாஅருள்மணி, ஜாஷகான் ஆகியோர் நன்றி கூறினர்.
- நாகராஜாவின் தாயார் பற்றி அஜித் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
- அஜித்தின் தலை மற்றும் கை இடுப்பு பகுதிகளில் நாகராஜா சரமாரியாக வெட்டினார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித் (வயது 25) கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற நாகராஜன் (25) இருவரும் நண்பர்கள்.
வாலிபர் கொலை
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது நாகராஜாவின் தாயார் பற்றி அஜித் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அஜித்தின் தலை மற்றும் கை இடுப்பு பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பின்னர் அங்கிருந்து நாகராஜா தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உறவினர் வீட்டில் வைத்து இன்று நாகராஜனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- சிங்கிகுளத்தில் இருந்து தேங்காய் தும்புகளை ஏற்றுக்கொண்டு ஒரு லாரி சென்றது.
- மின் வயரில் லாரியில் இருந்த தும்புகள் உரசியதில் திடீரென தீப்பிடித்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் என்ற பகுதியில் இருந்து சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு தேங்காய் தும்புகளை ஏற்றுக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
திடீர்தீ
லாரியை ஆலங்குளத்தை சேர்ந்த முருகானந்தம் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். லாரி சுமார் இரவு 8.30 மணியளவில் சேரன்மகாதேவி அடுத்த மேலச்சேவல் வாணியங்குளம் என்ற பகுதியில் வந்த போது லாரியின் அதிக பாரம் ஏற்றி சென்றதால் மேலே சென்ற மின் வயரில் லாரியில் இருந்த தும்புகள் உரசியதில் திடீரென தீப்பிடித்தது.
தொடர்ந்து தீ மளமளவென பிடித்து லாரியிலும் தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் லாரியை விட்டுவிட்டு டிரைவர் ஓடிவிட்டார்.
தொடர்ந்து தகவல் அறிந்த சேரன்மாதேவி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. திடீரென லாரி தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.







