என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுன்சிலர்களின் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்-சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் அறிவிப்பு
    X

    நகராட்சி கூட்டத்தில் சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் பேசிய போது எடுத்தபடம்.

    கவுன்சிலர்களின் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்-சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் அறிவிப்பு

    • கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள்,கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
    • கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதனை தொடர்ந்து பேசிய சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதில் நகராட்சி கவுன்சிலர்கள், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேலாளர் மாரியம்மாள், மேற்பார்வையாளர் கோமதி நாயகம், கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×