என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • சங்கரன்கோவில் பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக வரவில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கின்றது.
      • கோடைகாலம் காரணமாக குடிநீர் வினியோகம் சீராக செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சங்கரன்கோவிலில் குடிநீர் வினியோகம், துப்புரவு பணி, வாறுகால் அகற்றும் பணி ஆகியவை குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

      இதில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேற்பார்வையாளர் கோமதிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், தற்போது சங்கரன்கோவில் பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக வரவில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கின்றது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் தற்போது சங்கரன்கோவிலுக்கு வரும் குடிநீர் வரத்து கோடைகாலம் காரணமாக குறைந்துள்ளதால் குடிநீர் வினியோகம் சீராக செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுகாதார பணிகள், வாறுகால் அகற்றும் பணிகள் ஆகியன முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டுமென ஆலோசனைகள் வழங்கி னார். இதில் ஏதேனும் தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

      • உறுதி பூசுதல் விழாவுக்கு பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கினார்.
      • விழாவில் சிறுவர், சிறுமிகளுக்கு உறுதி பூசுதல் அருளடையாளம் வழங்கப்பட்டது.

      தென்காசி:

      பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் உறுதிபூசுதல் விழா கொண்டாடப்பட்டது. பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கி புது நன்மை எடுத்த 75 சிறுவர், சிறுமிகளுக்கு உறுதி பூசுதல் அருளடையாளம் வழங்கப்பட்டு திருப்பலி நிறை வேற்றப்பட்டது .ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர். இதில் உறுதி பூசுதல் பெற்ற சிறுவர், சிறுமிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

      • ஆலங்குளத்தில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
      • காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

      தென்காசி:

      காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்குளத்தில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் ஆலங்குளம் நகர தலைவர் வில்லியம் தாமஸ் ஏற்பாட்டில் காங்கிரசார் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். முன்னதாக அங்கு உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

      நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா, மாநில பொது செயலாளர் ஞானபிரகாஷ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், பி.எஸ்.என்.எல். ராஜேந்திரன், நகர செயலாளர் தமிழ் மணி, இலக்கிய அணி தொகுதி தலைவர் லிவிங்ஸ்டன், மாவட்ட தலைவர் ராஜாராம், இளைஞர் காங்கிரஸ் தனி அமைப்பு அரவிந்த், இயேசு ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      • களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராக சிவசங்கரியும், துணைத் தலைவராக மரகதம் என்பவரும் உள்ளனர்.
      • விசாரணையில் களப்பாகுளம் பஞ்சாயத்தில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராக சிவசங்கரியும், துணைத் தலைவராக மரகதம் என்பவரும் உள்ளனர். இந்த பஞ்சாயத்தில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள ப்பட வில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தென்காசி மாவட்ட கலெக் டரிடம் தொடர்ந்து வந்தது.

      குற்றச்சாட்டு

      இதனையடுத்து சங்கரன்கோவில் வட்டார மண்டல அலுவலர் ராஜா மணி மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன் ஆகியோரை விசாரணை அதிகாரிகளாக நியமித்து விசாரணை நடத்த கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

      அவர்கள் நடத்திய விசாரணையில் களப்பாகுளம் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

      அதிகாரம் பறிப்பு

      இது குறித்த அவர்கள் அளித்த அறிக்கையின் பேரில் கலெக்டர் ரவிச்சந்திரன் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மற்றும் துணைத் தலைவர் மரகதம் ஆகியோர்களுக்கு காசோலை கள் மற்றும் பி.எப்.எம்.எஸ். என்ற பணம் வழங்கும் ரசீதுகளில் கையெழுத்து இடும் அதிகாரத்தை பறித்து அதனை சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கினார். பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் நடைபெறாததால் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது கலெ க்டர் அதிரடி நடவ டிக்கை எடுத்து மேற்கொண்ட சம்பவம் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

      தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறும்போது, சங்கரன்கோவில் நகராட்சி எல்லையின் அருகில் களப்பாகுளம் பஞ்சாயத்தின் பெரும்பாலான பகுதிகள் அமைந்துள்ளது. தனி கிராம பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் அடிப்படை வசதிகள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் என்பதால் எம்.எல்.ஏ. இந்த விஷயத்தில் அக்கறை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

      • கோவில் கொடை விழாவை முன்னிட்டு மின்னொளி கபடி போட்டி நடந்தது.
      • 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ. 17 ஆயிரம் ரொக்கம், கோப்பை வழங்கப்பட்டது.

      தென்காசி:

      ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அம்மன் பிளவர்ஸ் கபடி கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஒரு நாள் மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதனை ஸ்ரீ மாரியம்மன் கோவில் நிர்வாக குழுத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

      60 கபடி அணியினர்

      போட்டியில் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் குருவன்கோட்டை அம்மன் பிளவர்ஸ் கபடி அணியினர் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது.

      2-வது இடம் பிடித்த லட்சுமிபுரம் வி.ஆர்.என். அணிக்கு ரூ. 17 ஆயிரம் ரொக்கம், கோப்பை வழங்க ப்பட்டது. 3-வது பரிசை கல்லூத்து வெண்புறா அணி பிடித்தது. அந்த அணிக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கம், கோப்பை வழங்கப்பட்டது.

      தொடக்க விழா

      முன்னதாக நடந்த தொடக்க விழாவில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், எழில்வாணன், மதுரை நாடார் சங்க தலைவர் வெங்கடேஷ் ராஜா, வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல் நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் குகன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செய லாளர் பால கிருஷ்ணன், தொழி லதிபர் ராமர், தெ ன்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக இணைச் செய லாளர்கள் அலெக்சாண்டர் தங்கம், ஹரிஹரசுதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

      ஏற்பாடுகளை அம்மன் பிளவர்ஸ் முன்னாள், இந்நாள் கபடி அணியினர் செய்திருந்தனர்.

      • குட்டிகுளம் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
      • மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகி சேதமடைந்து வருகிறது.

      கடையம்:

      கடையம் ஊராட்சி ஒன்றியம் கடையம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது குட்டி குளம். இதன் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் உள்ள வாய்க்கால் பாசன மடை சேதம் அடைந்து சுமார் 10 வருடங்கள் ஆகிறது.

      இதனால் இந்த மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகியும், தூரத்தில் உள்ள பயிர்கள் சரிவர நீர்ப்பாசனம் இல்லாததால் கருகியும் சேதமடைந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் குட்டி குளம் மடையை சீரமைத்து தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் பொதுமக்கள் சார்பாக, மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

      • சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
      • ராஜா எம்.எல்.ஏ., உயிரிழந்த தங்கச்சாமியின் தாயார் கருப்பியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

      புளியங்குடி:

      புளியங்குடியில் மது பாட்டில் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி(வயது 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

      இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா, உயிரிழந்த தங்கச்சாமியின் தாயார் கருப்பி மற்றும் சகோதரர் ஈஸ்வரன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் சட்டப்படி தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது புளியங்குடி நகர தி.மு.க. செயலாளர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், பத்திரம் சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், ஆசை கனி, மாரிசெல்வம், குகன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

      • மாணவர்கள் சுயமாக சிந்திக்கவும், எழுதவும் படிக்க வேண்டும் என்று பேராசிரியர் சுதாகரன் பேசினார்.
      • அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

      தென்காசி:

      இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விருது விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி கல்வி குழும தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி முதல்வர் வனிதா மற்றும் கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் சுதாகரன் பங்கேற்று பேசுகையில், இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், மாணவர்கள் சுயமாக சிந்திக்கவும், எழுதவும் படிக்க வேண்டும் என்றார். முன்னதாக அவருக்கு பள்ளி கல்வி குழும செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். மாணவி கவுசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மாணவன் ஜெர்வீன் சாம் ராஜ் வரவேற்று பேசினார்.

      இதில் இயற்கையை பாதுகாக்கும் விதமாக பேராசிரியர் சுதாகரன் இயற்கை கழகத்தினை தொடங்கி வைத்து அனைவரும் இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து பரணிதரன் குழுவினர் இயற்கையை பாதுகாப்பு பற்றி நாடகம் நடத்தினர்.துவிதி குழுவினர் குறு நாடகம் நடத்தினர். மீனாட்சி குழுவினர் நடனம் ஆடினர். அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவன் நிகிஸ்ராம் நன்றி கூறினார். கலந்து கொண்ட மாணவர்களையும், பரிசு பெற்றவர்களையும் பள்ளி கல்வி குழும தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் மற்றும் முதல்வர் வனிதா பாராட்டினர்.

      • சங்கர் ஒரு கல் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
      • கணவர் இறந்த செய்தி கேட்டதும் கல்யாணி மயங்கி விழுந்து இறந்தார்.

      செங்கோட்டை:

      செங்கோட்டை மேலூர் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி என்ற துரை. இவருடைய மகன் சங்கர் (வயது 28). இவர் ஒரு கல் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

      கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி மாயாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கணவர் இறந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் சங்கரின் அம்மா கல்யாணி மாயாண்டி உடல் மீது மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனார். ஒரேநாளில் தாய்-தந்தையை இழந்த சங்கர் அன்று முதல் துக்கத்தில் இருந்து வந்தார்.

      இந்நிலையில் செங்கோட்டை அருகில் இருக்கும் விஸ்வநாத புரம் கலங்காதகண்டி வாய்க்காலில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செங்கோட்டைபோலீசார் விரைந்து சென்று சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

      • பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் குறித்த பதாகைகள் பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
      • மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

      தென்காசி:

      செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் பேரில் பூமியை பாதுகாத்தல் என்னும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் துணையோடு பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளை பள்ளியின் வளாகத்தில் அமைத்தனர். மேலும் அறிவியல் ஆசிரியைகள் ராஜேஸ்வரி, அபிஷா மற்றும் ரெக்ஸி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

      முடிவில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.

      • சுடலி தனது மகன் சிவன்பாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
      • மான் ஒன்று குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.

      நெல்லை:

      அம்பை அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி சுடலி(வயது 50). இவர் சம்பவத்தன்று தென்காசியில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது மகன் சிவன்பாண்டி யுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

      அவர்கள் பழைய குற்றாலம் பகுதியில் இரவில் வந்து கொண்டிருந்தபோது மான் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியதில் சுடலி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுடலியை அங்கிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
      • செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

      செங்கோட்டை:

      செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் 112-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அரசு சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், செங்கோட்டையில் உள்ள வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

      நிகழ்ச்சயில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், செங்கோட்டை வருவாய் தாசில்தார் முருகுசெல்வி, செங்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் வெங்கடேசன், நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, வடகரை சேர்மன் சேக்தாவூது, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகேசன், நூலகர் ராமசாமி, வாஞ்சிநாதனின் உறவினர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ரஹீம், கலைஞர் தமிழ்சங்க செயலாளா் வக்கீர் ஆபத்துக்காத்தான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

      இதபோல் செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

      ×