என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
      • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

      தூத்துக்குடி:

      தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

      புதிய வடிகால்கள்

      தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் சாலை பார்டர் பஜாரில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு குத்தகை உரிமத்திற்கு பொது ஏலம் ஒப்பந்தம் கோரியவர்களுக்கு அனுமதி வழங்குதல், ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி கோராத கடைகளுக்கு மறு ஏலம் விடப்படுகிறது,

      மாநகராட்சி முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், அய்யாசாமி காலனி,பொன் சுப்பையா நகர், லூர்தம்மாள் புரம் மற்றும் செயின்ட் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் பெய்த பருவ மலையின் காரணமாக அதிக அளவு வெள்ள நீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

      எனவே அந்தப் பகுதியில் மழை நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கி கடன் மானியம் மற்றும் உள்ளாட்சி பங்கு தொகையுடன் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 4 சிப்பங்களாக ரூ.87.01 கோடி மதிப்பீட்டில் 36.36 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வடிகால் திட்ட பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

      இவ்வாறு அவர் பேசினார்.

      தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

      கலந்து கொண்டவர்கள்

      கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ்,ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

      • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
      • நம்முடைய இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாகவும், எதிர்கட்சிகளின் கூட்டணி உதிரி கட்சிகளின் கூட்டணியாகவும் உள்ளது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

      தூத்துக்குடி:

      தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக த்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தவைலர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.

      கூட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

      முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் ஒன்றியம் வாரியாக, மாவட்டம் முழுவதும் என்ன நிகழ்வுகள் நடத்தலாம் என்பது குறித்து நடைபெறுவது மட்டுமின்றி, வரும் 4-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்தும், என்ன பணிகள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்வதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

      பா.ஜ.க. அரசு யார் மீது வழக்கு போடலாம், யாரை மிரட்டி சிறையில் அடைக்கலாம் என்று திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. முதல்-அமைச்சர் சொன்னதை போல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். போர் களத்திற்கு செல்லும் போது எப்படி ஆயுதத்திற்கு பட்டை தீட்டுவோமோ, அதேபோல் 2024-ல் நடைபெறும் தேர்தல் களத்தை சந்திப்பதற்கு மு.க.ஸ்டாலின் வழியில், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் தேர்தல் களத்தை முன்னெடுத்துச் சென்று பணியாற்றி வருகின்றனர்.

      மோடியின் மிரட்டலுக்கு 2024-ல் இந்தியா கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும். எழுச்சி மாநாடு சம்பந்தமாக 4-ந் தேதி நமது மாவட்டத்திற்கு வரும் அமைச்சர் உதயநிதி, இரு மாவட்டங்களின் சார்பில் 1000 பொற்கிழிகள் கழக முன்னோடிகளுக்கு வழங்குகிறார்.

      அதேபோல், நடைபெறும் கூட்டத்திற்கு தெற்கு மாவட்டத்திலிருந்து சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். வடமாநிலங்களில் பா.ஜனதாவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

      நம்முடைய இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாகவும், எதிர்கட்சிகளின் கூட்டணி உதிரி கட்சிகளின் கூட்டணியாக உள்ளது. அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

      இவ்வாறு அவர் பேசினார்.

      கலைஞர் நூற்றாண்டு விழாயையொட்டி தெற்கு மாவட்டத்தில் புதிதாக 100 கொடி கம்பங்கள் அமைப்பது, கலைஞரின் இமாலய சாதனைகளை துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவது, வருகிற 4-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்து இளைஞரணி கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

      கூட்டத்தில், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்செல்வின், மாடசாமி, செந்தூர் மணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், நவின்குமார், ரமேஷ், முத்து முகம்மது, சுடலை, ரவி, ஜோசப், கோட்டாளம், இசக்கிபாண்டியன், பாலமுருகன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சரவணக்குமார், இளைய ராஜா, பகுதி செயலாளர் ஆஸ்கர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரவி என்ற பொன்பாண்டி, சாரதா பொன்இசக்கி, ஆரோக்கியமேரி, பேரின்பராஜ் லாசரஸ், செல்வகுமார், ரகுராமன், வீரபாகு, ஜான்பாண்டியன், விபிஆர் சுரேஷ், துறைமுகம் ராமசாமி, ராஜேந்திரன், ஜனகர், ஆனந்த், மகாவிஷ்ணு, பேரூர் செயலாளர்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீத முத்துக்குமார், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், நவநீத பாண்டியன், ஜமீன் சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இருதய செயலிழப்பிற்கான முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
      • டாக்டர் ஷீயாவுல்லா இருதய செயலிழப்புக்கான காரணங்களையும், முதலுதவி சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து பேசினார்.

      திருச்செந்தூர்:

      திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் இருதய செயலிழப்பிற்கான முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அதிகாரி வீ.சிவ இளங்கோ வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். ஷிபா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ஷீயாவுல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருதய செயலிழப்புக்கான காரணங்களையும், முதலுதவி சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து பேசினார். முதலுதவி குறித்து மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் ஜிம்ரீவ்ஸ் சைலண்டு நைய், மாலை சூடும் பெருமாள், மருதையா பாண்டியன், சிவ முருகன், அசோகன், பிரியதர்ஷினி, சிவந்தி வானொலி மைய பொறுப்பாளர் கண்ணன், ஷிபா மருத்துவமனை ஊழியர்கள் ராதாகிருஷ்ணன், அருண், சுகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின் பேரில் இளைஞர் செங்சிலுவை சங்க இயக்குனர், தேசிய மாணவர் படை அதிகாரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

      • வாகனம் காத்த விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
      • நாளை பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

      உடன்குடி:

      உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் முத்தாரம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆவணி திருவிழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு குலசை முத்தாரம்மன் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து பரமன்குறிச்சி பஜாரில் உள்ள வாகனம் காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து பின்பு அங்கு இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்றனர். அம்பாளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்தனர். மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் அம்பாள் மஞ்சள் நீராடுதல் நையாண்டி மேளத்துடன் அம்பாள் வீதியுலா வந்தது.

      இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு படை கஞ்சி வார்த்தல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று (புதன்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு சிறப்பு பூஜை நடைபெறும்.

      விழாவையொட்டி வில்லிசை, கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (31-ந்தேதி) பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

      • அரிமா சங்கம் சார்பிலான இந்த யாத்திரைக்கு காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
      • இந்த யாத்திரை சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு ஊர்களை கடந்து செப்டம்பர் 8-ந்தேதி கன்னியாகுமரியை சென்றடைகிறது.

      ஆறுமுகநேரி:

      தமிழகம் அளவில் கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி யாத்திரை கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் பங்கேற்றுள்ளனர். அரிமா சங்கம் சார்பிலான இந்த யாத்திரைக்கு காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியின் ஆட்சிமன்ற குழு தலைவர் அஷ்ரப் ஏற்பாட்டில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

      ஆட்சிமன்ற குழு உறுப்பினர் இப்ராகிம் வரவேற்று பேசினார். யாத்திரை குழுவின் ஒருங்கிணைப்பாளர் சோபா ஸ்ரீகாந்த் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் இந்த யாத்திரை சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு ஊர்களை கடந்து செப்டம்பர் 8-ந்தேதி கன்னியாகுமரியை சென்றடைகிறது.

      பின்னர் அங்கிருந்து நெல்லை, தேனி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக மீண்டும் சென்னைக்கு செல்கிறது என்று தெரிவித்தார். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது மைதீன் நன்றி கூறினார். இதில் தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் சேக்பீர் முகமது காமீல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

      • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார்.
      • மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

      தென்காசி:

      தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி வருகிறார்.

      ஆலோசனை கூட்டம்

      அவரது வரவேற்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோ சனை கூட்டம் தென்காசி ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில் தென்காசி தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      கூட்டத்தில், மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி மாவட்டத்திற்கு முதல்முறையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவழைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனுக்கு பாராட்டுவது, தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கவும், இளைஞரணி ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தர சம்மதித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் திரளான தொ ண்டர்களுடன் சிறப்பான வரவேற்பு அளிப்பது, தொகுதிக்கு 250 என்று 3 தொகுதிகளுக்கு 750 பேருக்கு பொற்கிழி வழங்கு வது, இந்தியாவிலேயே அனைத்து மக்களுக்குமான நம்பர் 1 முதல்-அமைச்சராக செயல்பட்டு வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தென்காசி மாவட்டம் சார்பில் சேலத்தில் நடை பெற உள்ள இளை ஞரணி மாநாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது.

      கலந்து கொண்டவர்கள்

      கூட்டத்தில் தனுஷ்குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஜேசுராஜன், ஆறுமுகசாமி, ஷேக்தாவுது, முத்துப்பா ண்டி, மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் செரீப், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் கிருஷ்ண ராஜா, முன்னாள் அமை ச்சர் தங்கவேலு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப் ராஜா, நகரச் செயலாளர்கள் சாதிர், அப்பாஸ், வெங்க டேஷ், மாவட்ட துணை செயலா ளர்கள் கென்னடி, கனிமொழி தமிழ் செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, ராஜேஸ்வரன், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, அழகு சுந்தரம், மகேஷ் மாயவன், சிவன் பாண்டி யன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே.கே. ரமேஷ், கனகராஜ் முத்து பாண்டியன், ஐவேந்திரன் தினேஷ், ஆறுமுகசாமி, சங்கரநயினார், பேரூர் செயலாளர்கள் முத்தையா சுடலை, பண்டாரம், குட்டி சிதம்பரம், நாகராஜன், தங்கப்பா, நெல்சன், லெட்சுமணன், அழகேசன், வளன் அரசு, இஞ்சி இஸ்மாயில், செல்வகுமார், கோமதிநாயகம், மகளிர் அணி திவ்யா மணிகண்டன், சங்கீதா, மகளிர் அணி நிஷா, பொன் செல்வன், சாம்பவர்வடகரை மாறன், தொண்டரணி அமை ப்பாளர் இசக்கி பாண்டி யன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் குற்றாலம் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நாகராஜ் சரவணார், வக்கீல் அணி வேலுச்சாமி, ரகுமான் சாதத், முத்துக்குமாரசாமி, சுரண்டை சுதன், வார்டு செயலாளர் ராமராஜ், கிளைச் செயலாளர் காசி கிருஷ்ணன் உள்ளிட்ட தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      • தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
      • சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி.சுதீர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் நகராட்சிக்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் சரியாக ஊதியம் வழங்க வில்லை என கூறப்படுகிறது.

      இந்நிலையில் ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியா ளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

      இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி.சுதீர் சாலை மறிய லில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

      அப்போது இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

      இன்று காலை நடந்த இந்த திடீர் சாலை மறியலால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது.

      • நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.
      • சங்கரன்கோவில்-நெல்லை இடையே குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      சங்கரன்கோவில்:

      தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திரகுமாரை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:-

      சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரை வரை புதிய பஸ்கள் மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்கு இடைநில்லா ஒன்-டு-ஒன் பஸ் மற்றும் சங்கரன்கோவில் - நெல்லை குளிர்சாதன பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

      அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

      • மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
      • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி கேலிவதை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

      சிவகிரி:

      வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரியில் கடந்த 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கேலி வதைத் தடுப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. நிறைவாக கேலி வதைத் தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சட்டக் கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி வரவேற்றார். தலைமை விருந்தினராக தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் வினுதா கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி கேலிவதை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

      நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தங்கப்பழம் சட்டக் கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி ஆகியோர் செய்தனர். இதில் மாணவ- மாணவிகள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டர். முன்னதாக மாணவி பவித்ரா சண்முகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி ரக்ஷனா நன்றி கூறினார்.

      • ஆசிரியை மாலதியை தி.மு.க.வினர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
      • ராஜா எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க.வினர் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அரசு பள்ளியின் ஆசிரியை மாலதியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தி.மு.க.வினர் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கோப்பை வழங்கி பாராட்டினர்.

      நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

      • வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
      • சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படுகிறது.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் சின்டெக்ஸ் தொட்டிக்கு நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படு கிறது. இதனால் கடந்த 10 நாட்க ளுக்கு மேலாக தண்ணீர் சரி வர கிடைக்காததால் இதனை சரி செய்து முறையான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வட்டாலூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கீழப்பாவூர் பேரூ ராட்சியின் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் மற்றும் செயல் அலுவலர் மாணிக்க ராஜாவை சந்தித்து மனு வழங்கினர். அப்போது உடனடியாக சம்பந்தப்பட்ட ஊழியர்களை அழைத்து மின் மோட்டாரை சரி செய்து மீண்டும் வழக்கம் போல் தண்ணீர் வழங்கப் படும் என உறுதி அளித்தனர்.

      • உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் நடந்தது.
      • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் ரூ. 21.6 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் பாக்கியம் முன்னிலை வகித்தார்.

      இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பழனிசாமி, ராசையா, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் பட்டறைச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கரபாண்டி மற்றும் நாட்டாமைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ×