search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே வட்டாலூர் கிராமத்தில் சீரான குடிநீர் வழங்க வேண்டும்-கீழப்பாவூர் பேரூராட்சியில் பொதுமக்கள் மனு
    X

    கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜாவிடம் கிராம மக்கள் மனு வழங்கிய காட்சி.

    பாவூர்சத்திரம் அருகே வட்டாலூர் கிராமத்தில் சீரான குடிநீர் வழங்க வேண்டும்-கீழப்பாவூர் பேரூராட்சியில் பொதுமக்கள் மனு

    • வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் சின்டெக்ஸ் தொட்டிக்கு நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படு கிறது. இதனால் கடந்த 10 நாட்க ளுக்கு மேலாக தண்ணீர் சரி வர கிடைக்காததால் இதனை சரி செய்து முறையான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வட்டாலூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கீழப்பாவூர் பேரூ ராட்சியின் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் மற்றும் செயல் அலுவலர் மாணிக்க ராஜாவை சந்தித்து மனு வழங்கினர். அப்போது உடனடியாக சம்பந்தப்பட்ட ஊழியர்களை அழைத்து மின் மோட்டாரை சரி செய்து மீண்டும் வழக்கம் போல் தண்ணீர் வழங்கப் படும் என உறுதி அளித்தனர்.

    Next Story
    ×