search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோடியின் மிரட்டலுக்கு இந்தியா கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்
    X

    கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    மோடியின் மிரட்டலுக்கு இந்தியா கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • நம்முடைய இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாகவும், எதிர்கட்சிகளின் கூட்டணி உதிரி கட்சிகளின் கூட்டணியாகவும் உள்ளது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக த்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தவைலர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் ஒன்றியம் வாரியாக, மாவட்டம் முழுவதும் என்ன நிகழ்வுகள் நடத்தலாம் என்பது குறித்து நடைபெறுவது மட்டுமின்றி, வரும் 4-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்தும், என்ன பணிகள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்வதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. அரசு யார் மீது வழக்கு போடலாம், யாரை மிரட்டி சிறையில் அடைக்கலாம் என்று திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. முதல்-அமைச்சர் சொன்னதை போல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். போர் களத்திற்கு செல்லும் போது எப்படி ஆயுதத்திற்கு பட்டை தீட்டுவோமோ, அதேபோல் 2024-ல் நடைபெறும் தேர்தல் களத்தை சந்திப்பதற்கு மு.க.ஸ்டாலின் வழியில், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் தேர்தல் களத்தை முன்னெடுத்துச் சென்று பணியாற்றி வருகின்றனர்.

    மோடியின் மிரட்டலுக்கு 2024-ல் இந்தியா கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும். எழுச்சி மாநாடு சம்பந்தமாக 4-ந் தேதி நமது மாவட்டத்திற்கு வரும் அமைச்சர் உதயநிதி, இரு மாவட்டங்களின் சார்பில் 1000 பொற்கிழிகள் கழக முன்னோடிகளுக்கு வழங்குகிறார்.

    அதேபோல், நடைபெறும் கூட்டத்திற்கு தெற்கு மாவட்டத்திலிருந்து சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். வடமாநிலங்களில் பா.ஜனதாவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    நம்முடைய இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாகவும், எதிர்கட்சிகளின் கூட்டணி உதிரி கட்சிகளின் கூட்டணியாக உள்ளது. அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலைஞர் நூற்றாண்டு விழாயையொட்டி தெற்கு மாவட்டத்தில் புதிதாக 100 கொடி கம்பங்கள் அமைப்பது, கலைஞரின் இமாலய சாதனைகளை துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவது, வருகிற 4-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்து இளைஞரணி கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்செல்வின், மாடசாமி, செந்தூர் மணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், நவின்குமார், ரமேஷ், முத்து முகம்மது, சுடலை, ரவி, ஜோசப், கோட்டாளம், இசக்கிபாண்டியன், பாலமுருகன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சரவணக்குமார், இளைய ராஜா, பகுதி செயலாளர் ஆஸ்கர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரவி என்ற பொன்பாண்டி, சாரதா பொன்இசக்கி, ஆரோக்கியமேரி, பேரின்பராஜ் லாசரஸ், செல்வகுமார், ரகுராமன், வீரபாகு, ஜான்பாண்டியன், விபிஆர் சுரேஷ், துறைமுகம் ராமசாமி, ராஜேந்திரன், ஜனகர், ஆனந்த், மகாவிஷ்ணு, பேரூர் செயலாளர்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீத முத்துக்குமார், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், நவநீத பாண்டியன், ஜமீன் சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×