என் மலர்
செய்திகள்
- இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.
- இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. சச்சின் 19 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ள நிலையில், கோலி 20 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
இந்த பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் 17 முறை தொடர் நாயகன் விருதை வென்று 3 ஆம் இடத்தில உள்ளார்.
- சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது.
- பா.ஜ.க.விடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது.
மண்ணடி:
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாறினால் என்ன தவறு என்ற தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து கூறுகையில்,
வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க.வினர் நினைத்த செயல் நடைபெறலாம், தமிழ்நாட்டில் நடக்காது.
சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது.
சனாதனம் மட்டுமல்ல எந்தவொரு கொள்கையும் மக்களை பிளவுபடுத்த கூடாது.
பா.ஜ.க.விடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது என்றார்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.
- வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.
பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 04.12.2025 அன்று நடந்த விசாரணையில் நேற்று 06.12.2025 தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நான் தொடர்ந்த வழக்கில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. மருத்துவர் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லாததால், தேவை ஏற்படின் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28.05.2022 முதல் 28.05.2025 வரை மூன்றாண்டு காலம் தலைவர் பதவி என்பதற்கு மாறாக, ஒரு போலி ஆவணத்தை (கடிதம்) தயாரித்து 2023 முதல் 2026 வரை என்று தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி கொடுத்த போலி கடிதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.
எனவே நான் 46 ஆண்டு காலம் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இயக்கத்தை வளர்த்து மருத்துவர் அன்புமணியை மத்திய அமைச்சராக மேலும் பலரை மத்திய அமைச்சர்களாக, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற செய்த என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் என்னிடமிருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும், நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது.
- த.வெ.க.வில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.
- விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனிடையே, காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் உள்அரங்கத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இதன்பின் எந்தவொரு சந்திப்பும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
இதனிடையே, வருகிற 16-ந்தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு ஆட்சியரை சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்தார்.
ஈரோட்டில் வருகிற 16-ந்தேதி விஜயின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,
* த.வெ.க.வில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.
* விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும்.
* தனியார் இடம் தேர்வு செய்திருக்கிறோம், ரோடு ஷோ தவிர்த்திருக்கிறோம் என்றார்.
- தயாரிப்பாளர் சிவா மகளின் திருமண ரிசப்ஷன் நேற்று இரவு நடைபெற்றது.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார்.
அப்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. த.வெ.க. சார்பில் உள் அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உள்ளரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சிவா மகளின் திருமண ரிசப்ஷனில் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். சேமிக்க முற்படுவீர்கள். தொழிலில் லாபம்.
ரிஷபம்
சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. கடன்பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் தனித்திறமை வெளிப்படும்.
மிதுனம்
பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்கள் ஏற்படும். நண்பர்கள் வாயிலாக நல்ல தகவல் கிடைக்கும்.
கடகம்
வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். உடல் நலனில் கவனம் தேவை. வீடு மாற்றம் உறுதியாகலாம். உத்தியோகத்தில் பணியாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
வரவை விடச் செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் செயலில் குறை கண்டுபிடிப்பர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள்.
கன்னி
சந்தோஷமான நாள். கல்யாண முயற்சி கைகூடும். பழைய வாகனத்தைக்கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.
துலாம்
சொந்த பந்தங்களால் வந்த துயர் மறையும் நாள். குடும்பச்சுமை கூடும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
விருச்சிகம்
கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.
தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்தமுயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்
தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
கும்பம்
புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும். அலைபேசி வழியில் உத்தியோகம் பற்றிய நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் லாபம் உண்டு.
மீனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அகலும்.
- உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது
- இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், காசிமா இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் வென்றார்.
அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.
- தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம்..!
தங்கத்தின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் பெண்களை கேட்கவே வேண்டாம். புதுப்புது டிசைன்களில் தங்கம் வாங்கி அணியனும்னு என்று ஆர்வம் கொள்வார்கள். இளம்வயது பெண்கள் திருமணத்திற்காக பார்த்து பார்த்து நகை எடுப்பார்கள். திருமணம் ஆன பெண்களோ தனக்கோ அல்லது தன்னுடைய மகளின் எதிர்காலத்திற்கு என நகை வாங்குவார்கள்.
இப்படி சேமிப்பு, எதிர்கால நலன், அவசர தேவை, திருமணம் போன்றவற்றிற்கு தங்கம் பயன்படும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு 20 சவரன், 50 சவரன் என வசதிக்கேற்ப பெற்றோர்கள் நகை அணிவித்து திருமணம் செய்து வைப்பார்கள்.

இப்படிப்பட்ட தங்கம் இரு விதமாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது 22 கிராட், 24 கிராட் என்று... (இதனை சாதாரண நகை என்றும் 916 நகை என்றும் சொல்வர்). அரசாங்கம் ஒரு விதிமுறையை கொண்டு வந்தது. அந்த விதியில் இனி சாதாரண நகை என்று சொல்லப்படும் 22 கிராட் நகை விற்கக்கூடாது. 24 கிராட் முத்திரையிடப்பட்ட நகை தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று. இதனால் ஏழை மக்கள் சிரமம் அடைந்தனர்.

சரி அதுபோகட்டும் என்று பார்த்தால், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையானது. ஆண்டின் தொடக்கத்தில் சற்று தான் உயர்ந்தது என்று பரவாயில்லை என்று தோன்றியது அன்று...

ஆனால் இன்று அதன் தொடக்கமாக தங்கம் விலை உச்சத்தில் விற்பனையாகிறது. அதாவது வரலாற்றில் இல்லாத வகையில் தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. தங்கத்திற்கு போட்டியாக நீ மட்டும் தான் ஏறுவீயா... நானும் ஏறுவேன் என்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஒவ்வொரு மாத இறுதியில் விற்பனையான தங்கம் மற்றும் வெள்ளி விலை விவரம்:-
| மாதம் | கிராம் | சவரன் | கிராம் | பார் வெள்ளி |
| ஜனவரி | ரூ.7,730 | ரூ.61,840 | ரூ.107 | ரூ.1,07,000 |
| பிப்ரவரி | ரூ.7,960 | ரூ.63,680 | ரூ.105 | ரூ.1,05,000 |
| மார்ச் | ரூ.8,425 | ரூ.67,600 | ரூ.113 | ரூ.1,13,000 |
| ஏப்ரல் | ரூ.8,980 | ரூ.71,840 | ரூ.111 | ரூ.1,11,000 |
| மே | ரூ.8,920 | ரூ.71,360 | ரூ.111 | ரூ.1,11,000 |
| ஜூன் | ரூ.8,915 | ரூ.71,320 | ரூ.119 | ரூ.1,19,000 |
| ஜூலை | ரூ.9,170 | ரூ.73,360 | ரூ.125 | ரூ.1,25,000 |
| ஆகஸ்ட் | ரூ.9,620 | ரூ.76,960 | ரூ.134 | ரூ.1,34,000 |
| செப்டம்பர் | ரூ.10,860 | ரூ.86,880 | ரூ.161 | ரூ.1,61,000 |
| அக்டோபர் | ரூ.11,300 | ரூ.90,400 | ரூ.165 | ரூ.1,65,000 |
| நவம்பர் | ரூ.11,800 | ரூ.94,400 | ரூ.192 | ரூ.1,92,000 |
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு ஏற்ற, இறக்கங்கள் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து இன்று (06-12-2025) முறையே ஒரு சவரன் தங்கம் ரூ.96,320-க்கும் ஒரு கிராம் ரூ.12,040-க்கும், வெள்ளி ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் இனி விலை குறையுமா? என்றால் அது சாத்தியமே இல்லை தான் என்கிறார்கள். மேலும் இனி பிறக்கப்போகும் 2026-ம் ஆண்டில் தங்கம் விலை 15 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரம் வரை விற்பனையாகலாம் என்ற தகவலை சொல்லும் போது இடி இறங்கியது போல் இருந்தது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சற்று யோசித்தே செயல்படுவதே நல்லது.
- உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது.
- இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
7 ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
கேரம் உலக கோப்பை தொடரில் மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்
- உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
- சிலிண்டர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாயின.
கோவா:
கோவா அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதமாயின.
இந்த நிலையில், கோவா தீவிபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவா அர்போராவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீவிபத்து குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்திடம் கேட்டறிந்தேன். காயமடைந்தோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-21 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை இரவு 11.23 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.41 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சிபுரம், இருக்கன்குடி, சமயபுரம், தஞ்சை புன்னைநல்லூர் அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி பவனி வரும் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் திருவீதியுலா.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-வெற்றி
கடகம்-பயணம்
சிம்மம்-உண்மை
கன்னி-திடம்
துலாம்- உறுதி
விருச்சிகம்-வெற்றி
தனுசு- லாபம்
மகரம்-நன்மை
கும்பம்-நிறைவு
மீனம்-தெளிவு






