என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவை சேர்ந்த ஆளுமை மிக்க பெண் தலைவர்களாக விளங்குவோர் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    உலகின் மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஆண்களின் ஆதிக்கம் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த காலங்களில், பல்வேறு துறைகளில் பெண்கள் கால்பதிக்க துவங்கிவிட்டனர். சமீபத்தில் பலதுறைகளில் சாதனை புரிவதை பெண்கள் வாடிக்கையான நிகழ்வாக மாற்றி வருகின்றனர்.

    இதுபோன்ற சூழலுக்கு பலர் வித்திட்டுள்ளனர். அவ்வாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய பெண்கள் ஆளுமைகளாக மாறி இஸ்ரோ மற்றும் இதர முன்னணி நிறுவனங்களில் பெரும் பதவிகளில் இருந்தபடி சத்தமின்றி பெரும் சாதனைகளை புரிந்து இருக்கின்றனர். 

    டெஸ்ஸி தாமஸ்:

    இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண் எனும் பெருமைக்குரியவர் டெஸ்ஸி தாமஸ். இவர் இந்தியாவில் ஏவுகணை திட்டம் ஒன்றின் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்மணி ஆவார். இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் அக்னி 4 ஏவுகணையின் திட்ட இயக்குனராக இருந்தார். இதுதவிர அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பங்களை இவர் வடிவமைத்து இருக்கிறார்.

     முத்தையா வனிதா மற்றும் டெஸ்ஸி தாமஸ்

    முத்தையா வனிதா:

    இஸ்ரோவில் விண் கோள்களுக்கிடையிலான திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்ற முதல் பெண் முத்தையா வனிதா. சென்னையை சேர்ந்த இவர் சந்திராயன் 2 திட்டத்தின் இயக்குனர் ஆவார். மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இவர் இஸ்ரோவில் பணியாற்றி இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு இவர் சிறந்த பெண் ஆராய்ச்சியாளர் விருதை வென்றார்.

    ரித்து கரிதால்:

    சந்திராயன் 2 திட்டத்தில் பணியாற்றிய ரித்து கரிதால் விண்வெளியில் செயற்கைக்கோள் சீராக இயங்க செய்யம் பணிகளில் ஈடுபட்டார். 2007 ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த ரித்து கரிதால் இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். இதுமட்டுமின்றி இஸ்ரோவின் மங்கல்யான் திட்டத்திலும் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு இஸ்ரோவின் இளம் ஆராய்ச்சியாளர் விருதை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

     ரித்து கரிதால் மற்றும் ககன்தீப் காங்

    ககன்தீப் காங்:

    இந்திய தொற்றுநோய் மருத்துவத்துறையின் மூத்த விஞ்ஞானியாக விளங்கியவர் தான் ககன்தீப் காங். பெலோ ஆப் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய பெண்மணி ககன்தீப் காங். இந்திய மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளில் இவர் ஒருவர் ஆவார். இவர் மத்திய அறிவில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் Translational Health Sciences and Technology Institute (THSTI) அமைப்பின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 

    மங்களா மணி:

    அண்டார்ட்டிக்காவில் 403 நாட்கள் செலவழித்த முதல் இந்திய பெண் ஆராய்ச்சியாளர் மங்களா மணி. இந்த பணிக்கு தேர்வாகும் முன் இதுபோன்ற பனிச்சூழலுக்கு இவர் பரிச்சயமற்றவர் ஆவார். அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி மையத்திற்கு பயணம் மேற்கொள்ள 2016-ம் ஆண்டு தேர்வான 23 பேர் அடங்கிய குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.  
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியா உள்பட பல்வேறு இதர நாடுகளில் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஒன்பிளஸ் 9 சீரிஸ் வெளியீடு மட்டுமின்றி, முன்னணி கேமரா உற்பத்தியாளரான ஹேசில்பிளாடு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

    அதன்படி ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் ஹேசில்பிளாடு கேமராக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் வடிவமைப்பு முந்தைய ரென்டர்களில் வெளியான தகவல்களில் இருந்ததை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் சில்வர் நிற பேக் பேனலில் செவ்வக கேமரா மாட்யூல் மற்றும் ஹேசில்பிளாடு பிராண்டிங் கொண்டிருக்கலாம்.

     ஒன்பிளஸ் 9

    `தலைசிறந்த ஹார்டுவேர், சிறப்பான கேமரா மற்றும் புகைப்பட துறையில் ஹேசில்பிளாடு பிராண்டின் நிபுணத்துவம் கொண்டு ஒன்பிளஸ் 9 சீரிஸ் இதுவரை வெளியானதில் பிரீமியம், பிளாக்ஷிப் கேமரா கொண்டிருக்கும்' என ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்து இருக்கிறார்.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் ப்ரோ மாடல்களின் ஸ்டாக் இருக்கும் போதே அவற்றின் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் ப்ரோ விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த கம்ப்யூட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது என்றாலும், ஸ்டாக் தீர்ந்ததும் வலைதளத்தில் இருந்து நீக்கப்படும் என கூறப்படுகிறது. ஐமேக் ப்ரோ மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விற்பனையும் நிறுத்தப்படுகிறது.

    இந்தியாவுக்கான ஆப்பிள் வலைதளத்தில் ஐமேக் ப்ரோ ரூ. 4,64,900 விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்தால் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இது வினியோகம் செய்யப்படுகிறது. எனினும், தற்போதைய ஸ்டாக் தீர்ந்தால், மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

     ஐமேக் ப்ரோ

    ஆப்பிள் வலைதளத்திலும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே கிடைக்கும் என்ற தகவல் இடம்பெற்று இருக்கிறது. தற்போதைய ஐமேக் ப்ரோ மாடலில் 5கே டிஸ்ப்ளே, இன்டெல் சியான் பிராசஸர், ஏஎம்டி வீகா கிராபிக்ஸ், 10 ஜிகாபிட் ஈத்தர்நெட் மற்றும் ஆப்பிள் டி2 சிப்செட் கொண்டிருக்கிறது.
    பெண்களுக்கு பாதுகாப்பான, மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் புதிய சமூக வலைதளம் பிரத்யேகமாக துவங்கப்பட்டு இருக்கிறது.


    ரிலையன்ஸ் பவுன்டேஷன் தலைவர் நீட்டா முகேஷ் அம்பானி பெண்களுக்கென பிரத்யேகமாக Her Circle எனும் சமூக வலைதளத்தை வெளியிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய வலைதளம் துவங்கப்பட்டு இருக்கிறது. இது பெண்களுக்கு அதிகாரம், மகிழ்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில் துவங்கப்பட்டு இருக்கிறது.

    முதற்கட்டமாக இந்த தளம் இந்திய பயனர்களை குறிவைத்து துவங்கப்பட்டு உள்ளது. எனினும், இதனை பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தலாம் என ரிலையன்ஸ் பவுன்டேஷன் தெரிவித்து உள்ளது. புதிய Her Circle வலைதளம் அனைத்து வகையான பின்னணியில் இருந்துவரும் பெண்களுக்கு அவர்களின் கனவு, லட்சியம் மற்றும் சிக்கல் நிறைந்த சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

     ஹெர் சர்கில்

    இது வலைதளம், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஜியோ ஆப் ஸ்டோர்களில் செயலி வடிவிலும் கிடைக்கிறது. தற்போது இந்த சேவை ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கவில்லை. இந்த தளம் மூலம் உருவாக்கப்படும் தரவுகள் அனைத்தையும் அனைவரும் பார்க்க முடியும். எனினும், இந்த தளத்தின் சமூக வலைதள பிரிவு பெண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    புதிய Her Circle தளத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு இதர தரவுகள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆரோக்கியம், வர்த்தகம், பணி, சமூக சேவை, அழகு, பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கிடைக்கின்றன. இதில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களும் பங்கேற்க முடியும்.  
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் விரைவில் தனது ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு போட்டியாக வெளியாகிறது. அதன்படி ரியல்மி 8 ப்ரோ மாடலின் வடிவமைப்பு மற்றும் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

     ரியல்மி 8 ப்ரோ

    இந்த நிலையில், ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் RMX3081 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருக்கிறது. இது ரியல்மி 8 ப்ரோ 4ஜி வேரியண்ட்டாக இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு வெளியான ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருந்தது. புதிய தகவல்களுடன் ரியல்மி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோஒஎஸ் கொண்ட லேப்டாப் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய லேப்டாப் ஜியோபுக் எனும் பெயரில் அறிமுகமாகலாம். ஜியோவின் முதல் லேப்டாப் மாடல் ஆண்ட்ராய்டு சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஜியோவின் முதல் லேப்டாப் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஜியோவின் சொந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஒஎஸ் ஜியோஒஎஸ் என அழைக்கப்படலாம். இதுகுறித்து இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புிய லேப்டாப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 4ஜி எல்டிஇ வசதி கொண்டுள்ளது.

    2018 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் ஜியோ லேப்டாப் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இதோடு ஜியோ லேப்டாப் என கூறி ப்ரோடோடைப் மாடல் ஒன்றின் படமும் இணையத்தில் வெளியானது.

     ஜியோ

    புதிய லேப்டாப் உருவாக்க ஜியோ நிறுவனம் சீனாவை சேர்ந்த புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு மொபைல் சாதனங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கி தருகிறது. 

    ஜியோ மற்றும் புளூபேங்க் இணைந்து மற்ற உற்பத்தியாளர்களிடம் இருந்து பாகங்களை வாங்க இருக்கின்றன. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் DRAM மற்றும் NAND சிப், குவால்காம் நிறுவனத்தின் சிப்செட் உள்ளிட்டவைகளை வாங்கி பயன்படுத்த இருக்கிறது.

    தற்போதைய தகவல்களின்படி ஜியோபுக் மாடலில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் இதில் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன், ஜியோ, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன செயலிகள் பிரீ-லோட் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் OLED ரக டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் மற்றும் மேக்புக் லேப்டாப்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. OLED கொண்ட புதிய சாதனங்களின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்றும் இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய மாடல்கள் ஆப்பிள் அறிமுகம் செய்ய இருக்கும் மினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் மாடல்களுடன் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. முதலில் 10.9 இன்ச் ஐபேட், அதன்பின் ஐபேட் ஏர் மாடல்களில் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

     ஐபேட்

    இரு சாதனங்களை தொடர்ந்து 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கின்றன. முன்னதாக வெளியான தகவல்களில் மேக்புக் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களுக்கு ஆப்பிள் மினி எல்இடி டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக கூறப்பட்டது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு விதமான டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களை வெவ்வேறு விலைகளில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் OLED பேனல்களை பயன்படுத்தி வருகிறது.
    சாம்சங் நிறுவனம் 5.3 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 850 பிராசஸர் கொண்ட புதிய ரக்கட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ரக்கட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிக கடுமையான பணிச்சூழல்களில் பயன்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது 2016 ஆம் ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ7 ஆக்டிவ் ஸ்மார்ட்போனை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் ரக்கட் மாடல் ஆகும்.

    கேலக்ஸி எக்ஸ்கவர் 5 மாடலில் ஷாக்-ரெசிஸ்டண்ட் ரக்கட் எக்ஸ்டீரியர் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் 1.5 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே கையுறை அணிந்தும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

     சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5

    சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 சிறப்பம்சங்கள்

    - 5.3 இன்ச் 1480x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 
    - எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
    - மாலி-G52
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1
    - டூயல் சிம் 
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ் 
    - 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - அமெரிக்கா ராணுவ தரம் MIL-STD 810G
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போனின் விலை 329 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 33,245 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்சமயம் இது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் இது ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்கா சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
    ஜெபிஎல் நிறுவனம் பூம்பாக்ஸ் 2, கோ 3 மற்றும் க்ளிப் 4 வயர்லெஸ் ஸ்பீக்கர்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.


    ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ப்ளூடூத் வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது. இவை பூம்பாக்ஸ் 2, கோ 3 மற்றும் க்ளிப் 4 என அழைக்கப்படுகின்றன. புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன், தரமான ஆடியோ, நீண்ட நேர பேட்டரி பேக்கப், ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஜெபிஎல் கோ 3 மாடல் காம்பேக்ட் டிசைன் கொண்டுள்ளது. இதனை எளிதில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். எனினும், இது 4.2 வாட் பவர் அவுட்புட் வழங்குகிறது. வாட்டர் ரெசிஸ்டண்ட், ப்ளூடூத் 5.1 வசதிகளை கொண்டிருக்கிறது. யுஎஸ்பி சி முறையில் சார்ஜ் ஆகும் கோ 3 ஸ்பீக்கர் ஐந்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும்.

     ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்

    ஜெபிஎல் க்ளிப் 4 வயர்லெஸ் ஸ்பீக்கர் அல்ட்ரா-போர்டபிள் டிசைன், இன்டகிரேட் செய்யப்பட்ட கேராபைனர் கொண்டுள்ளது. முந்தைய கோ 3 மாடலில் உள்ளதை போன்று வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிகளை கொண்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. 

    பூம்பாக்ஸ் 2 மற்ற இரு ஸ்பீக்கர்களை விட அதிகளவு ஒலியை வெளிப்படுத்துகிறது. இது பார்டிபூஸ்ட் தொழில்நுட்பம் கொண்டு மேம்பட்ட பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இதில் பில்ட்-இன் பவர் பேங்க் உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்திய விலை விவரம்

    ஜெபிஎல் கோ 3 விலை ரூ. 3999
    ஜெபிஎல் க்ளிப் 4 விலை ரூ. 4499
    ஜெபிஎல் பூம்பாக்ஸ் 2 விலை ரூ. 33,999

    மூன்று புதிய ஜெபிஎல் ஸ்பீக்கர்களும் ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் இந்தியா முழுக்க விற்பனைக்கு கிடைக்கின்றன.
    விவோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியீடு பற்றி விவோ இந்தியா இயக்குனர் பதில் அளித்திருக்கிறார்.


    விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 ஸ்மார்ட்போனினை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை விவோ இந்தியா இயக்குனர் நிபுன் மர்யா உறுதிப்படுத்தி இருக்கிறார். விவோ எக்ஸ்60, எக்ஸ்60 ப்ரோ மற்றும் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் மாடல்களை ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்தது. 

     விவோ எக்ஸ்50

    புதிய விவோ எக்ஸ்60 சீரிஸ் தவிர RGBW கேமரா சென்சார் கொண்ட புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக விவோ தெரிவித்து இருக்கிறது. தற்போது விவோ எக்ஸ்60 சீரிசில் எந்தெந்த மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னதாக விவோ எக்ஸ்60 மாடல் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருந்தது. இது V2045 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. 

    எக்ஸ்60 சீரிஸ் தவிர விவோ உருவாக்கி வரும் புதிய RGBW கேமரா ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புது கேமரா பிரத்யேக RGBW கலர் பில்ட்டர் அரே கொண்டிருக்கும். இதில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய முதன்மை நிறங்களை புதுவித முறையில் அடுக்கப்பட்டு இருக்கும்.  இதனால் புகைப்படங்களை எடுக்கும்போது ஏற்படும் கலர் காஸ்ட் பிரச்சனை சரி செய்யப்படும்.  
    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எப்3 சீரிஸ் வெளியீட்டை அதன் தலைமை செய்தி தொடர்பாளர் சூசகமாக தெரிவித்தார்.
     

    போக்கோ எப்3 மற்றும் போக்கோ எப்3 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. போக்கோ நிறுவனத்தின் சர்வதேச செய்தி தொடர்பாளர் அங்குஸ் கை ஹோ ஜி தனது  ட்விட்டரில் மார்ச் எனும் வார்த்தை பதிவிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து புது போக்கோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 மற்றும் கே40 ப்ரோ மாடல்கள் ரி-பிராண்டு செய்யப்பட்டு போக்கோ எப்3 மற்றும் எப்3 ப்ரோ பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

     ரெட்மி கே40

    இரண்டு புதிய போக்கோ ஸ்மார்ட்போன்களும் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் 2018 ஆம் ஆண்டு மிக குறைந்த விலையில் அறிமுகமாகி, சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில், இம்முறையும் போக்கோ பிராண்டு இரு மாடல்களின் விலையை சந்தையில் பெரும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யலாம். போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ரெட்மி கே40 மாடலின் அம்சங்களையும், எப்3 ப்ரோ மாடல் ரெட்மி கே40 ப்ரோ அம்சங்களையும் கொண்டிருக்கும்.
    மோட்டோரோலா நிறுவனம் இரண்டு மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது.


    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற மோட்டோ சாதனங்களை போன்றே புதிய ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    முன்னதாக மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ ஜி10 பவர் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

     மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30

    மோட்டோ ஜி30 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 எம்பி குவாட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இரு மாடல்களிலும் கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ ஜி30 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும், மோட்டோ ஜி10 பவர் மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளன. 
    ×