என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டு டிவிக்கள் இந்தியாவில் வெளியாகுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது.


    இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ டிவிக்கள் அதிக பிரபலமாக இருக்கின்றன. மேலும் நாட்டில் அதிகம் விற்பனையாகும் முன்னணி ஸ்மார்ட் டிவிக்களாகவும் எம்ஐ பிராண்டு மாடல்கள் இருக்கின்றன. இந்த நிலையில், ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகமாகுமா என்ற கேள்விக்கு சியோமி பதில் அளித்துள்ளது.

     ஸ்மார்ட் டிவி

    சியோமி இந்தியா நிர்வாக இயக்குனரான மனு குமார் ஜெயின் ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு நிகழ்வில் ரெட்மி பிராண்டு டிவிக்களின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் தகவலை சூசகமாக தெரிவித்தார். ரெட்மி டிவியில் எந்தெந்த மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

    “கடந்த ஆண்டு ரெட்மி பிராண்டு பல்வேறு புதிய பிரிவுகளில் களமிறங்கி தனது பயணத்தை முன்னோக்கி எடுத்து சென்றது. போன்-பிளஸ் திட்டத்தின் கீழ் பவர் பேங்க், ட்ரூ வயர்லெஸ் இயர்போன் மற்றும் பிட்னஸ் பேண்ட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தோம். இந்த ஆண்டும் மேலும் பெரியதை அறிமுகம் செய்வதில் பெருமையாக இருக்கிறோம்,” என மனு குமார் ஜெயின் தெரிவித்தார்.
    சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போனினை அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்தது.


    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ரெட்மி நோட் 10 5ஜி மற்றும் ரெட்மி நோட் 10எஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

    ரெட்மி நோட் 10எஸ் மாடலில் ரெட்மி நோட் 10 அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும், நோட் 10எஸ் மாடலில் ஹீலியோ ஜி95 பிராசஸருக்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 10 5ஜி மாடலில் டிமென்சிட்டி 700 பிராசஸர், 6.5 இன்ச் FHD பிளஸ் 90 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் சின்க் டாட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

    ரெட்மி நோட் 10 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் 
    - மாலி-G57 MC2 GPU
    - 4 ஜிபி LPDDR4X ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

     ரெட்மி நோட் 10எஸ்

    ரெட்மி நோட் 10எஸ் சிறப்பம்சங்கள் 

    - 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் 
    - மாலி-G76 3EEMC4 GPU
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம் 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 13 எம்பி செல்பி கேமரா, f/2.0 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் 
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ரெட்மி நோட் 10 5ஜி மாடல் குரோம் சில்வர், கிராபைட் கிரே, நைட்-டைம் புளூ மற்றும் அரோரா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 199 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,535 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 229 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16,730 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரெட்மி நோட் 10 எஸ் மாடல் ஆனிக்ஸ் கிரே, பெபிள் வைட் மற்றும் ஓசன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை 229 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16,730 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 249 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 18,190 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 279 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 20,380 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது. நார்டு ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு 2 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 168 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் மீடியாடெக் 1000எல் 5ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை தொடர்ந்து நார்டு என்10 5ஜி மற்றும் என்100 மாடல்களில் ஸ்னாப்டிராகன் 690 மற்றும் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் மீடியாடெக் பிராசஸருடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனாக நார்டு 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 648 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11, புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் கேமரா வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     ரெட்மி நோட் 10

    ரெட்மி நோட் 10 சிறப்பம்சங்கள்

    - 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 
    - 2.2GHz ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர் 
    - அட்ரினோ 612 GPU
    - 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, LED பிளாஷ்
    - 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார் 
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 13 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் பிராஸ்ட் வைட், அக்வா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா, நோட் 10 ப்ரோ மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவைதவிர 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 5 எம்பி டெலிமேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

    ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

    - 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் 
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி 
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
    - டூயல் சிம் 
    - ரெட்மி நோட் 10 ப்ரோ - 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா
    - ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் - 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, LED பிளாஷ்
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார் 
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5020 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வின்டேஜ் பிரான்ஸ், கிளேசியல் புளூ மற்றும் டார்க் நைட் நிறங்களில் கிடைக்கிறது. 

    ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999, 6ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலின் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 51 மற்றும் ரூ. 301 விலையில் இரண்டு பிரீபெயிட் காம்போ சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரு சலுகைகளிலும் ஆதித்யா பிர்லா இன்சூரன்ஸ் பலன்களை வழங்குகிறது. இரண்டு சலுகைகளில் இன்சூரன்ஸ் பலன்கள் 18 முதல் 55 வயதுடையவர்களுக்கு கிடைக்கும். 

    வி ரூ. 51 சலுகை ஆட்-ஆன் வகையில் வழங்கப்படுகிறது. ரூ. 301 சலுகை தனி பிரீபெயிட் சலுகை ஆகும். இரு சலுகைகளும் ‘Vi Hospicare' என அழைக்கப்படுகிறது. ஆதித்யா பிர்லா வழங்கும் இன்சூரன்ஸ் திட்டம் முன்னணி மருத்துவமனைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    மருத்துவமனையில் இருந்து பெற்ற டிஸ்சார்ஜ் சான்றை காண்பித்து இன்சூரன்ஸ் பலன்களை பெற முடியும் என வி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இன்சூரன்ஸ் பலன்கள் மட்டுமின்றி ரூ. 51 ஆட் ஆன் சலுகையில் 28 நாட்களுக்கு 500 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

    ரூ. 301 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, கூடுதலாக 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்குகிறது. இரு சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.
    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை ரூ. 21 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி ஏ32 மாடலில் 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3, புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     சாம்சங் கேலக்ஸி ஏ32

    சாம்சங் கேலக்ஸி ஏ32 சிறப்பம்சங்கள்

    - 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே 
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் 
    - 950MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
    - 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3
    - டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் கேமரா
    - 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் ஆசம் பிளாக், ஆசம் வைட், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரியல்மி உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் டில்ட் ஷிப்ட் வசதி, 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    2021 ரியல்மி கேமரா இன்னோவேஷன் நிகழ்வில் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி புதிய ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் 108 எம்பி HM221/1.52 பிரைமரி கேமரா கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த சென்சார் 9 இன் 1 பிக்சல் பின்னிங், ISOCELL பிளஸ், ஸ்மார்ட் ISO என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புது ஸ்மார்ட்போனில் பிரைமரி கேமரா மட்டுமின்றி மூன்று இதர சென்சார்கள் வழங்கப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ கேமரா, 3எக்ஸ் மோட் கொண்ட சூப்பர் ஜூம் வசதி கொண்டுள்ளது. இதன் விசேஷ அம்சம் புகைப்படங்களை 12 எம்பி தரத்தில் மிக தெளிவாக கொடுக்கும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. 12 எம்பி தரத்தில் எடுக்கப்படும் போது புகைப்படம் வழக்கத்தை விட அதிக சிறப்பானதாக இருக்கும் என்றும் ரியல்மி தெரிவித்து உள்ளது.

    மேலும் ஸ்டேரி டைம்-லேப்ஸ் வீடியோ (Stary time-lapse) மற்றும் டில்ட்-ஷிப்ட் டைம்-லேப்ஸ் வீடியோ (tilt-shift time-lapse) வசதிகளை ஸ்மார்ட்போனில் வழங்கிய முதல் நிறுவனமாக ரியல்மி இருக்கும். ஸ்டேரி டைம்-லேப்ஸ் வீடியோக்கள் வழக்கமாக பல்வேறு காட்சிகளை தொழில்முறை கேமராக்களில் படமாக்கி பின் அவற்றை கணினி மென்பொருள் மூலம் எடிட் செய்யப்படும். 

     ரியல்மி 8 ப்ரோ

    ஆனால் புது ஸ்மார்ட்போனில் ரியல்மி பிரத்யேக டைம்-லேப்ஸ் வீடியோ முறையை கொண்டு வீடியோ எடுக்கிறது. இது 4 நிமிடங்களில் 30 புகைப்படங்களை எடுத்து அவற்றை ஸ்டேரி புகைப்படம் அல்லது டைம்-லேப்ஸ் வீடியோவாக மாற்றுகிறது. ஷிப்ட் போட்டோகிராபி அம்சம் டில்ட்-ஷிப்ட் லென்ஸ் மூலம் சாத்தியமாக்கப்படுகிறது. டில்ட்-ஷிப்ட் முறையை கொண்டு டில்ட்-ஷிப்ட் புகைப்படங்கள் மற்றும் 10 மடங்கு வேகமாக டில்ட் ஷிப்ட் டைம்-லேப்ஸ் வீடியோக்களை எடுக்க முடியும்.

    ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று தலைசிறந்த பில்ட்டர்கள், நியோன் போர்டிரெயிட், டைனமிக் பொக்கே போர்டிரெயிட் மற்றும் ஏஐ கலர் போர்டிரெயிட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் புதிய ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த மாதத்திலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

    இந்திய சந்தையில் சியோமி ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10டி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டது. விலை குறைப்பு 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்களுக்கும் பொருந்தும். புதிய சியோமி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    விலை குறைப்பின் படி எம்ஐ 10டி மாடலின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ. 32,999, 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ. 35,999 என மாறி இருக்கிறது. புதிய விலை எம்ஐ மற்றும் அமேசான் வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது. ஆப்லைன் தளங்களிலும் எம்ஐ 10டி புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை எம்ஐ 10டி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எக்ஸ்55 5ஜி மோடெம், கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

     சியோமி எம்ஐ 10டி

    சியோமி எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம் 
    - 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - எம்ஐ 10டி ப்ரோ - 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - டூயல் சிம்
    - எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, எல்இடி பிளாஷ்
    - 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
    - 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
    - எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, எல்இடி பிளாஷ்
    - 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் இந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மாடல்கள் போர்ட்லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. தற்போது ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். 

    மேலும் இவை 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படவில்லை. புது தகவல்களின் படி அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஐபோன் சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

     ஐபோன் 11

    யுஎஸ்பி சி போர்ட்-ஐ விட லைட்னிங் போர்ட் சிறப்பான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதனால் அடுத்த இரு ஐபோன் சீரிசில் போர்ட்லெஸ் வடிவமைப்பு வழங்கப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான். இத்துடன் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் பெரிய பேட்டரிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 13 ப்ரோ மாடலில் லோ-பவர் LTPO டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் எப்19 ப்ரோ ஸ்மார்ட்போன்களை மார்ச் 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த ஒப்போ நிறுவனம் பாலிவுட் நடிகர் வருன் தவானை விளம்பர தூதராக நியமித்து உள்ளது.

    புதிய ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஏஐ ஹைலைட் போர்டிரெயிட் வீடியோ அம்சம் கொண்டுள்ளது. இது குறைந்த வெளிச்சம் கொண்ட இடங்களில் வீடியோ எடுக்கப்படும் போதும் காட்சிகளை துல்லியமாக வெளிப்படுத்தும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது. 

     ஒப்போ எப்19 சீரிஸ் டீசர்

    புதிய எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஒப்போ ஸ்மார்ட் 5ஜி 3.0 வசதி கொண்ட முதல் எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இது அதிவேக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தை பெற வழி செய்கிறது. மேலும் இதில் எட்டு ஆன்டெனாக்கள் 360 கோணங்களில் பொருத்தப்படுகிறது. இது ஸ்மார்ட்போன் எந்த நிலையில் இருந்தாலும் சீரான 4ஜி மற்றும் 5ஜி டேட்டா அனுபவத்தை வழங்கும்.
    இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை செய்ய புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரே சமயத்தில் நான்கு பேர் இணைந்து விர்ச்சுவல் ரூம் கொண்டு நேரலை செய்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இதேபோன்ற வசதி கிளப்ஹவுஸ் எனும் சேவையிலும் வழங்கப்பட்டது. புது வசதியை இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ் என அழைக்கிறது.

    புதிய லைவ் ரூம்ஸ் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் நான்கு பேர் ஒன்றிணைந்து நேரலை ஸ்டிரீமிங் செய்ய முடியும். இதுவரை நேரலை ஸ்டிரீமிங்கில் ஒருவர் மட்டுமே இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. 

     இன்ஸ்டாகிராம்

    "முன்னதாக ஸ்டிரீம் செய்யும் போது ஒருவரை மட்டுமே இணைத்துக் கொள்ள முடியும், ஆனால் இப்போது நேரலையில் நாங்கள் இதனை இருமடங்கு அதிகரிக்கிறோம்," என இன்ஸ்டாகிராம் தனது வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளது. 

    "நேரலையில் இதுபோன்ற அம்சம் புது வாய்ப்புகளை உருவாக்க வழி செய்யும் - இதை கொண்டு விவாத நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களுடன் உரையாடல், பேட்டி அல்லது நண்பர்களுடன் இணைந்து உரையாட முடியும்." என தெரிவித்து இருக்கிறது.
    ×