என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்சிஜன் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டினை தனது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கு வழங்கி வருகிறது. முன்னதாக ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கு இரண்டு பீட்டா அப்டேட்கள் வழங்கப்பட்டு இருந்தன. ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் மாடல்களுக்கு இதுவரை ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படவில்லை.

முன்னதாக ஜனவரி மாதத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி மாடல்களுக்கு ஆக்சிஜன் ஒஎஸ் 11 சார்ந்த பீட்டா வெர்ஷன்களை வெளியிட்டது. மேலும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியீட்டில் டேட்டா டிக்ரிப்ஷன் கோளாறு ஏற்பட்டது.
சில பயனர்களுக்கு ஒடிஏ அப்டேட் வழங்கப்படும். வரும் நாட்களில் அனைவருக்கும் அப்டேட் வழங்கப்படும். இந்த அப்டேட் 2.9 ஜிபி அளவு கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் பல்வேறு புது மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
ஜியோனி நிறுவனத்தின் புதிய 6000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 6999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜியோனி நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோனி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1520 பிக்சல் டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது கேமரா, பொக்கே லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் ஜியோனி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 4.2, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பிரத்யகே கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்,பேஸ் அன்லாக் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐடெல் நிறுவனம் மேக் இன் இந்தியா ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஐடெல் நிறுனம் இந்திய சந்தையில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டும் ஐடெல் ஆண்ட்ராய்டு டிவிக்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில் இந்த ஆண்டும் புது டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஐடெல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆண்ட்ராய்டு டிவிக்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

சமீபத்திய ஆய்வுகளில் நம்பத்தகுந்த பிராண்டுகள் பட்டியலில் ரூ 5 முதல் 7 ஆயிரம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ஐடெல் இடம்பெற்று இருக்கிறது. டிவிக்களை பொருத்தவரை புது ஐடெல் மாடல்களில் பிரேம்லெஸ் பிரீமியம் ஐடி டிசைன், அல்ட்ரா-பிரைட் டிஸ்ப்ளே, தரமான ஆடியோ அனுபவம் மற்றும் டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கலாம்.
புதிய டிவி மாடல்கள் 32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் அதிக அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இந்தியாவில் இதன் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
ஐடெல் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் எம்ஐ, ரியல்மி மற்றும் டிசிஎல் பிராண்டு டிவிக்களுக்கு போட்டியாக அமைகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் இதே ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. வியட்நாமை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகமாகிறது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச்HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 2GHz ஆக்டாகோர் எக்சைனோஸ் 850 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3 வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்12 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 720×1600 பிக்சல் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர்
- மாலி-G52
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3
- 48 எம்பி கேமரா, f/2.0
- 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6,000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இதுதவிர சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மார்ச் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே தினத்தில் இதன் விற்பனையும் துவங்க இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஒஎஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய விண்டோஸ் ஒஎஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒஎஸ் “தி நியூ விண்டோஸ்” (The New Windows) எனும் பெயரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
டூயல் ஸ்கிரீன் சாதனங்களுக்காக வெளியாக இருந்த விண்டோஸ் 10எக்ஸ் வெர்ஷன் தான் தி நியூ விண்டோஸ் எனும் பெயரில் வெளியாக இருக்கிறது. முதற்கட்டமாக இது ஒற்றை ஸ்கிரீன் சாதனங்களுக்காக வெளியாகும். புது ஒஎஸ் பற்றி வேறு எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை.

முந்தைய தகவல்களின் படி விண்டோஸ் 10எக்ஸ் புதிய ஆக்ஷன் சென்டர் மற்றும் ஸ்டார்ட் மெனு கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதில் ஸ்டார்ட் மெனு பல்வேறு செயலிகள், சமீபத்தில் இயக்கப்பட்ட டாக்யூமென்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. மேலும் மல்டி டாஸ்கிங் செய்ய புது ஜெஸ்ட்யூர்களை கொண்டிருக்கும்.
புது ஒஎஸ் இதற்கென வடிவமைக்கப்பட்ட கணினிகளுடன் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் குறைந்த விலை மாடல்கள் கல்வி மற்றும் கார்ப்பரேட் பயனர்களுக்கு ஏற்றவாரு இருக்கும்.
ஒப்போ நிறுவனத்தின் பிளாக்ஷிப் பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனம் பைண்ட் எக்ஸ்3 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மார்ச் 11 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வில் பைண்ட் எக்ஸ்3, பைண்ட் எக்ஸ்3 ப்ரோ மற்றும் பைண்ட் எக்ஸ்3 லைட் போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய தகவல்களில் பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ட்ரூ 10-பிட் புகைப்படம், வீடியோக்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கும் என ஒப்போ தெரிவித்து இருந்தது. இதுதவிர இணையத்தில் வெளியான விவரங்களில் புது ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் குவாட் ஹெச்டி 120 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 50 எம்பி டூயல் கேமரா மாட்யூல்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ப்ரோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.7 இன்ச் 1440x3216 பிக்சல் Quad HD+ OLED 20.1:9 டிஸ்ப்ளே
- முழுமையான 10-பிட் கலர் சப்போர்ட்
- 2.84GHz ஆக்டகோர் ஸ்னாப்டிராகன் 888 5nm பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 11
- டூயல் சிம் ஸ்லாட்
- 50 எம்பி பிரைமரி கேமரா
- 50 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யுஎஸ்பி டைப் சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் சூப்பர்வூக் 2.0 பிளாஷ் சார்ஜ்
- 30 வாட் வூக் ஏர் வயர்லெஸ் சார்ஜிங்
ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐமேக் மாடல் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சிறிய மேக் ப்ரோ மற்றும் 24 இன்ச் ஐமேக் சீரிஸ் மாடல்களை வெளியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய ஐமேக் பற்றிய விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஐமேக் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய ஐமேக் சில்வர், ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்டு, ஸ்கை புளூ மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் போர்ட்கள் 2020 ஐமேக் மாடல்களில் இருந்ததை போன்றே வழங்கப்படலாம். புதிய ஐமேக் மாடல்களின் போர்ட்கள் வெவ்வேறு இடங்களில் வழங்கப்படலாம்.
புதிய ஐமேக் பேஸ் ஐடி போன்ற அம்சங்களை கொண்டிருக்காது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபேட் ப்ரோ, மேக்புக் ப்ரோ மாடல்களுடன் ஏர் டேக்ஸ் மற்றும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்கள் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோ போன் 2021 சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் 2021 சலுகை இந்திய சந்தையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை அன்லிமிடெட் வாய்ஸ் கால், 24 மாதங்களுக்கு டேட்டா உள்ளிட்டவைகளை ரூ. 1999 விலையில் வழங்குகிறது. இத்துடன் இதே சலுகைகளை 12 மாதங்களுக்கு ரூ. 1,499 விலையிலும் வழங்கப்படுகிறது.
இந்தியா முழுக்க தற்சமயம் 10 கோடிக்கும் அதிகமானோர் ஜியோ போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தி நாடு முழுக்க 30 கோடி பயனர்களை அடைய ரிலையன்ஸ் ஜியோ புதிய 2021 சலுகையை அறிவித்து இருக்கிறது.
ஜியோ போன் 2021 சலுகையை ரூ. 1999 விலையில் பெறும் வாடிக்கையாளர்கள் ஜியோ போன், 24 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். மேலும் இதில் மாதம் 2 ஜிபி டேட்டா 24 மாதங்களுக்கும் வழங்கப்படுகிறது. மாதாந்திர 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64Kbps என குறைக்கப்படுகிறது.

24 மாதங்களுக்கான சலுகை வேண்டாம் எனில், வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கான சலுகையை ரூ. 1,499 விலையில் அதே பலன்களுடன் பெற முடியும். ஏற்கனவே ஜியோபோன் வைத்திருப்போர் 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா (மாதம் 2 ஜிபி டேட்டா) உள்ளிட்டவைகளை ரூ. 749 விலையில் பெற முடியும்.
புதிய ஜியோ போன் 2021 சலுகை மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக 2017 ஜூலை மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோவின் முதல் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் பீச்சர் போன் மாடலாக ஜியோ போன் அறிமுகம் செய்யப்பட்டது. கை ஒஎஸ், 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 2 எம்பி பிரைமரி கேமரா, 0.3 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை ஜியோ போனின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் மூன்று புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை மோட்டோ வாட்ச், மோட்டோ வாட்ச் ஒன் மற்றும் மோட்டோ ஜி வாட்ச் பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
புதிய மோட்டோரோலா வாட்ச் மாடல்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் இவற்றின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய மோட்டோ வாட்ச் சதுரங்க டையலுடன் ஆப்பிள் வாட்ச் தோற்றம் கொண்டிருக்கும். மோட்டோ வாட்ச் ஒன் வட்ட வடிவ டையல் கொண்டிருக்கிறது.

மோட்டோ ஜி வாட்ச் மாடலும் வட்ட வடிவ டையல் மற்றும் மெட்டாலிக் பினிஷ் கொண்டிருக்கும் என தெரிகிறது. மற்ற இரு மாடல்களும் சிலிகான் ஸ்டிராப்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஜி சீரிசில் வெளியாகும் என்பதால், இது பட்ஜெட் பிரிவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மோட்டோ ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும். மோட்டோ வாட்ச் மற்றும் மோட்டோ வாட்ச் ஒன் மாடல்கள் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் மோட்டோ ஜி வாட்ச் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய மோட்டோரோலா வாட்ச்களை ப்ளிப்கார்ட் உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. முன்னதாக மோட்டோ பிராண்டு ஸ்மார்ட் டிவிக்களை ப்ளிப்கார்ட் உற்பத்தி செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 44 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
விவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போனினை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டை தெரிவிக்கும் டீசர்களை விவோ வெளியிட்டது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனிற்கான மற்றொரு டீசரை விவோ வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி புதிய விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் 44 எம்பி செல்பி கேமரா, சாப்ட் பிளாஷ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர புதிய எஸ்9 மாடல் மூன்று பிரைமரி கேமரா, OIS வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் மெல்லிய மெட்டல் பிரேம், கிரேடியன்ட் பினிஷ், புளூ பினிஷ் என இரு நிறங்களில் உருவாகி இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக விவோ எஸ்9 இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் செல்பி கேமரா வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
முந்தைய தகவல்களின் படி புதிய விவோ எஸ்9 மாடலில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 4000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டது. பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ கேமரா வழழங்கப்படலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299 விலையில் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299, ரூ. 399 மற்றும் ரூ. 555 விலைகளில் புதிய டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது. மூன்று புதிய சலுகைகளும் 10Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவை மார்ச் 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கின்றன.
டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகைகள் பிஎஸ்என்எல் பாரத் பைபர் சலுகைகளை விட குறைந்த வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றில் முறையே 100 ஜிபி, 200 ஜிபி மற்றும் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இந்த அளவை கடந்ததும், டேட்டா வேகம் மேலும் குறையும்.

பிஎஸ்என்எல் ரூ. 299 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. 100 ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதன்பின் பயனர்கள் ரூ. 399 சலுகைக்கு மாற்றப்படுவர். இது அந்தமான் மற்றும் நிகோபார் தவிர அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது.
ரூ. 399 சலுகையில் 200 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதிலும் முந்தைய சலுகையை போன்று நிர்ணயிக்கப்பட்ட 200 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும். ரூ. 555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகையில் 500 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இதிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது.
மூன்று புதிய சலுகைகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்படுகிறது. ரூ. 299 மற்றும் ரூ. 399 சலுகைகளுக்கு ரூ. 500 பாதுகாப்பு முன்பணம் செலுத்த வேண்டும். ரூ. 299 மற்றும் ரூ. 555 டிஎஸ்எல் பிராட்பேண்ட் சலுகைகளை புதிய மற்றும் தற்போதைய வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.
சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடலுக்கான விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 19,499 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. விலை குறைப்பின் படி கேலக்ஸி எம்31எஸ் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 18,499 என மாறி இருக்கிறது.
இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 21,499 இல் இருந்து ரூ. 20,499 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு அமேசான், சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மாறி இருக்கிறது. ஆப்லைன் தளங்களிலும் விலை குறைப்பு அமலாகி இருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்31எஸ் மாடலில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-G72MP3 ஜிபியு
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்






