என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனினை இம்மாத துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இதன் 4ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனத்தின் குறைந்தவிலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. 

    இதனை உறுதிப்படுத்தும் வகையில், கேலக்ஸி ஏ32 5ஜிஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி மாடல் என தெரிகிறது. இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றன.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்பினிட்டி வி ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    சர்வதேச சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி 64 ஜிபி வேரியண்ட் விலை 279 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    இந்த ஸ்மார்ட்போன் போக்கோ 5ஜி மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    ரெட்மி கே40 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் போக்கோ போன் மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. சீன சந்தையில் ரெட்மி கே40 சீரிஸ் நேற்று (பிப்ரவரி 25) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. ரெட்மி கே40 சீரிஸ்- ரெட்மி கே40, கே40 ப்ரோ மற்றும் கே40 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களை கொண்டது.

    தற்சமயம் ரெட்மி கே40 மாடல் நம்பரை தழுவிய மற்றொரு ஸ்மார்ட்போன் போக்கோ பிராண்டிங்குடன் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ரி-பிராண்டு செய்யப்பட்டு போக்கோ மாடலாக வெளியிடப்படலாம். முன்னதாக பல மாடல்கள் இவ்வாறு ரி-பிராண்டு செய்யப்பட்டு அறிமுகமாகி இருக்கின்றன.

     ரெட்மி கே40

    புதிய தகவல்களில் M2012K11 AG எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் போக்கோ பிராண்டிங் கொண்டிருக்கிறது. இது ரெட்மி கே40 மாடல் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 சர்வதேச வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புதிய ஸ்மார்ட்போன் பற்றி போக்கோ சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 9 சீரிசில் குறைந்த விலை வேரியண்ட் இந்த பெயர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குறைந்த விலை வேரியண்ட் ஒன்பிளஸ் 9ஆர் எனும் பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஒன்பிளஸ் 9 சீரிசில் - ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் மூன்றாவது மாடல் ஒன்று குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தைய தகவல்களில் குறைந்த விலை ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9இ அல்லது ஒன்பிளஸ் 9 லைட் பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புது ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9ஆர் எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பெயர் கொண்ட குறியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும், குறியீட்டு விவரங்கள் எங்கிருந்து வெளியானது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    குறைந்த விலை ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 திபி மெமரி, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என டூயல் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இன்பேஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஸ்மார்ட்போன் அக்சஸரீ மற்றும் கேட்ஜெட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான இன்பேஸ் இந்திய சந்தையில் அர்பன் LYF எனும் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங், 1.75 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பிட்னஸ் டிராக்கிங் சென்சார், IP67 சான்று மற்றும் இதர அம்சங்களை கொண்டுள்ளது.

    அர்பன் LYF ஸ்மார்ட்வாட்ச் 1.75 இன்ச் அளவில் 240x240 ரெசல்யூஷன் சதுரங்க வடிவ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ப்ளூடூத் 4 கனெக்டிவிட்டி அம்சம் கொண்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஸ்மார்ட்வாட்ச் மூலம் ஏற்க முடியும்.

    மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள பில்ட்-இன் சென்சார்கள் இதய துடிப்பு, இசிஜி, கலோரி, எஸ்பிஒ2, ரத்த அழுத்தம் மற்றும் உறக்கம் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கின்றன.

     இன்பேஸ் அர்பன் LYF

    இத்துடன் அழைப்புகள், சமூக வலைதளம், குறுந்தகவல், வானிலை நோட்டிபிகேஷன் மற்றும் கேமரா, மியூசிக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அழைப்புகள் இன்றி இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என்றும் அழைப்புகளை பயன்படுத்தும் பட்சத்தில் 2 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என இன்பேஸ் தெரிவிக்கிறது.

    இதனுடன் வரும் ஸ்டிராப்களை கழற்றி மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இவை ஜெட் பிளாக் கேஸ் மற்றும் மிட்நைட் பிளாக் பேண்ட், சில்வர் கேஸ் மற்றும் பிராஸ்ட் வைட் பேண்ட், ரோஸ் கோல்டு கேஸ் மற்றும் பின்க் சால்மன் பேண்ட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் அர்பன் LYF ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது அர்பன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கிறது. மார்ச் 5 ஆம் தேதிக்குள் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மாடல் ஒன்று 108 எம்பி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மார்ச் 4 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடலில் 108 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்தின் 108 எம்பி HM2 சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. முன்னதாக சியோமி வெளியிட்ட எம்ஐ 10ஐ மற்றும் ரெட்மி கே40 ப்ரோ பிளஸ் மாடல்களிலும் இதே சென்சார் வழங்கப்பட்டு இருந்தது. புதிய நோட் 10 சீரிஸ் துவக்க மாடலில் 48 எம்பி சென்சார் வழங்கப்படலாம்.

     ரெட்மி நோட் 10 சீரிஸ் டீசர்

    முந்தைய டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் மிக மென்மையான டிஸ்ப்ளே அனுபவம், வழக்கமான ரெட்மி போன்களில் இருப்பதை விட இருமடங்கு அதிக பிரைட்னஸ், ஸ்னாப்டிராகன் பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மிக குறைந்த எடை, பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, சிறப்பான ஹேப்டிக் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதை ரெட்மி தெரிவித்து இருக்கிறது.

    ரெட்மி நோட் 10 சீரிஸ் அமேசான், எம்ஐ மற்றும் எம்ஐ ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
    எக்சைனோஸ் பிராசஸர், விண்டோஸ் 10 ஒஎஸ் கொண்ட லேப்டாப்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் விண்டோஸ் 10 கணினி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ARM கட்டமைப்பில் எக்சைனோஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    புதிய கணினியில் AMD GPU-க்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் விண்டோஸ் 10 லேப்டாப் ஒன்றை கேலக்ஸி புக் எஸ் எனும் பெயரில் விற்பனை செய்கிறது. இதுவும் ARM சார்ந்த மாடல் ஆகும். இந்த லேப்டாப் முதலில் குவால்காம் பிராசஸர் கொண்டிருந்தது. பின் இதில் இன்டெல் சார்ந்த சிபியு வழங்கப்பட்டது.

     சாம்சங்

    ஆப்பிள் நிறுவனம் ARM சார்ந்த ஆப்பிள் சிலிகான் எம்1 சிப் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்து, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்சமயம் சாம்சங் நிறுவனமும் இதைபோன்று ARM சார்ந்த சாதனங்களை உருவாக்கி வருகிறது. 
    108 எம்பி கேமரா கொண்ட ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன.


    இந்தியாவில் ரியல்மி 8 சீரிஸ் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனை ரியல்மி இந்தியா தலைவர் மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் பதிவிட்டு இருந்தார். முன்னதாக ரியல்மி நார்சோ 30 ப்ரோ மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

    மாதவ் சேத் ட்விட்டர் பதிவில் ரியல்மி 8 குறிப்பிடப்படவில்லை என்றாலும், #InfiniteLeapWith8 எனும் ஹேஷ்டேக் இடம்பெற்று இருக்கிறது. இதை கொண்டு புதிய டீசர் ரியல்மி 7 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் வெளியாவதையே குறிக்கும் வகையில் அமைந்து உள்ளது.

     ரியல்மி 8 டீசர்

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 108 எம்பி கேமரா சென்சார் வழங்கப்படலாம் என்பதையும் மாதவ் சேத் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதுபற்றிய தகவலை நாளை அறிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், ரியல்மி 8 சீரிஸ் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.  

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மீடியாடெக் எம்டி6853 பிராசஸர், 8 ஜிபி ரேம், 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி சென்சார், 2 எம்பி + 2 எம்பி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம்.
    கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அப்டேட் மூலம் புது வசதியை வழங்க இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக டார்க் மோட் ஆப்ஷனை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு 
    வழங்க இருக்கிறது. கடந்த சில மாதங்கள் டார்க் மோட் ஆப்ஷனை பரிசோதனை செய்து வந்தது. உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் அறிவித்து உள்ளது.

    டார்க் மோட் ஆப்ஷனை ஆண்ட்ராய்டு பயனாளிகள் எனேபில் செய்வதால் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் சேமிக்கப்படும். மேலும் இதில் உள்ள கிரேஸ்கேல் இன்டர்பேஸ் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும். கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மோட் தவிர மேலும் சில புது அம்சங்களை இணைத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

    கூகுள்

    ஆண்ட்ராய்டில் உள்ள பாஸ்வேர்டு செக்கப் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் புதிய மாற்றங்களை செய்து உள்ளது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்ஸ் டார்க் மோட் ஆப்ஷன் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளது.
    தென் கொரிய நிறுவனம் உருவாக்கி வரும் பப்ஜி மொபைல் 2 கேம் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பப்ஜி மொபைல் 2 கேம் அடுத்த வாரம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சீன நிறுவனம் என்பதால், இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் பப்ஜி மொபைல் தடை செய்யப்பட்டது. தற்சமயம் பப்ஜி மொபைல் 2 கேம் தென் கொரியாவை சேர்ந்த கிராப்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை பப்ஜி மொபைல் 2 வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதன் வெளியீடு மட்டுமின்றி இந்த கேம் கதைக்களம் 2051 ஆண்டு நடைபெறுவதை போன்று இருக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் இதில் பல்வேறு அதிநவீன ஆயுதங்கள், கேட்ஜெட்கள் மற்றும் புதிய மேப் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

    முந்தைய கேம் போன்றே புதிய பப்ஜி மொபைல் 2 வெர்ஷனும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பப்ஜி குளோபல் இன்விடேஷனல் எஸ் 2021 நிகழ்வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியாவில் விவோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    விவோ நிறுவனத்தின் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் விலை திடீரென குறைக்கப்பட்டது. இந்தியாவில் அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வி20 எஸ்இ ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பின் படி விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போதைய விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் அமலாகி இருக்கிறது. எனினும், புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் இதுவரை பிரதிபலிக்கவில்லை. விவோ வி20 எஸ்இ மாடலில் 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஹாலோ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4100 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனை 0 முதல் 62 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

     விவோ வி20 எஸ்இ

    விவோ வி20 எஸ்இ சிறப்பம்சங்கள்

    - 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 11nm பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி 120° வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
    - 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4100 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    ரியல்மி பிராண்டின் நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ரூ. 8999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் நார்சோ 30 ப்ரோ 5ஜி மாடல் ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்டு வெர்ஷன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் கொண்டு 5ஜி கனெக்டிவிட்டி வழங்குகிறது.

    ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களுடன் ரியல்மி மோஷன் ஆக்டிவேடெட் நைட் லைட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இது சியோமியின் எம்ஐ மோஷன் ஆக்டிவேடெட் நைட் லைட் 2 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்

    டூயல் சிம் கொண்ட ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது. இத்துடன் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.1, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ரியல்மி நார்சோ 30ஏ

    ரியல்மி நார்சோ 30ஏ அம்சங்கள்

    நார்சோ 30ஏ மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா, மோனோகுரோம் போர்டிரெயிட் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
     
    இத்துடன் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்தியாவில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நார்சோ 30ஏ 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரியல்மி மோஷன் ஆக்டிவேடெட் நைட் லைட் விலை ரூ. 599 ஆகும்.
    இந்தியா முழுக்க அதிவேக 5ஜி சேவை வழங்க ஏர்டெல் மற்றும் குவால்காம் கூட்டணி அமைத்து இருக்கின்றன.


    இந்தியாவின் ஐதராபாத் நகரில் பாரதி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை வர்த்தக நெட்வொர்க்கில் வெற்றிகரமாக சோதனை செய்து அசத்தியது. தற்சமயம் இந்தியாவில் 5ஜி சேவையை முழுவீச்சில் வழங்க குவால்காம் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.

    ஏல்டெல் நெட்வொர்க் விற்பனையாளர் மற்றும் சாதனங்களை வழங்கும் ஒப்பந்ததாரர்களை கொண்டு குவால்காம் 5ஜி RAN பிளாட்பார்ம் மூலம் RAN சார்ந்த 5ஜி சேவையை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் O RAN (ரேடியோ அக்சஸ் நெட்வொர்க்) அலையன்ஸ் குழுவின் உறுப்பினர் ஆகும். 

     5ஜி

    இந்தியாவில் RAN சார்ந்த திட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் O RAN வழிமுறையை அமல்படுத்த ஏர்டெல் திட்டமிடுகிறது. O RAN போன்ற தளம் கொண்டு சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களும் 5ஜி நெட்வொர்க்குகளை செயல்படுத்த வழி செய்ய முடியும்.

    இதுதவிர ஏர்டெல் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை பல்விதங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளில் செயல்பட இருக்கின்றன. இத்துடன் அதிவேகமாக பிராட்பேண்ட் சேவைகளை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க இரு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. 
    ×