என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    அசுஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    அசுஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரோக் போன் 5 மாடலை அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 18 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 24 எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் ஹைப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

     அசுஸ் ரோக் போன் 5

    அசுஸ் ரோக் போன் 5 அம்சங்கள்:

    - 6.78 இன்ச் 2448x1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் 
    - அட்ரினோ 660 GPU
    - 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
    - 16 ஜிபி (ரோக் போன் 5 ப்ரோ) LPDDR5 ரேம், 512 ஜிபி மெமரி
    - 18 ஜிபி (ரோக் போன் 5 அல்டிமேட்) LPDDR5 ரேம், 512 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரோக் யுஐ 
    - டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
    - 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
    - 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.0
    - 24 எம்பி செல்பி கேமரா, 0.9µm, f/2.0
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 65 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

    அசுஸ் ரோக் போன் 5 பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டாம் வைட், கிளாசி பேக் நிறங்களிலும், ரோக் போன் அல்டிமேட் லிமிடெட் எடிஷன் ஸ்டாம் வைட் மற்றும் மேட் பினிஷ் கொண்டுள்ளது. புதிய ரோக் போன் 5 8 ஜிபி+ 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 57,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரோக் போன் 5 ப்ரோ பேண்டம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 16 ஜிபி + 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 69,999 ஆகும். ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்டாம் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 18 ஜிபி + 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 79,999 ஆகும். இது ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    போட் நிறுவனம் இந்திய சந்தையில் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் மாடலை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.


    ஸ்மார்ட்போன் அக்சஸரீ மற்றும் ஆடியோ சாதனங்களை விற்பனை செய்து பிரபலமான போட் நிறுவனம் இந்திய சந்தையில் பிளாஷ் எனும் பெயரில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் வாட்ச் வட்ட வடிவ எல்சிடி கலர் டிஸ்ப்ளே, மெல்லிய மெட்டாலிக் டிஸ்ப்ளே, டூயல் டோன் சிலிகான் ஸ்டிராப்களை கொண்டுள்ளது.

     போட் பிளாஷ் ஸ்மார்ட்வாட்ச்

    இதில் உள்ள சென்சார்கள் பிட்னஸ் டிராக்கிங் மற்றும் இதர பணிகளை மேற்கொள்கிறது. IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் பல்வேறு சென்சார்களை கொண்டிருக்கிறது. மேலும் இதில் 10 ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. 

    போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதி, நோட்டிபிகேஷன் மற்றும் 200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்களுக்கு தேவையான ஸ்டான்ட்பை வழங்குகிறது.

    புதிய போட் பிளாஷ் ஸ்மார்ட் வாட்ச் ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ மற்றும் விவிட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 ஆகும். விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
    போக்கோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அந்த தேதியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    போக்கோ இந்தியா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில், போக்கோவை போக்கோ மட்டும்தான் வெல்ல முடியும் எனும் தகவலை #PROformance எனும் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

    அந்த வகையில் புதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்ஸ் சீரிசுக்கு மாற்றாக இருக்கும் என போக்கோ தெரிவித்து உள்ளது. தற்போதைய தகவல்களின் படி போக்கோ எக்ஸ்3 ப்ரோ இந்திய சந்தையில் புது போக்கோ எப் சீரிஸ் மாடலாக அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     போக்கோ

    முன்னதாக M2012K11AG எனும் மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியானது. அதில் புது ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் FHD+ 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 5200 எம்ஏஹெச் பேட்டரி, அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    ஐரோப்பிய சந்தையில் இந்த மாடல் விலை 250 யூரோக்கள் ஆகும். இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
    டிசிஎல் நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்ட புது டிவி சீரிஸ் மாடல்களை குறைந்த விலையில் வெளியிட்டு உள்ளது.

    டிசிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் பி725 4கே ஹெச்டிஆர் டிவி சீரிசை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவி 11 கொண்ட முதல் டிவி சீரிஸ் ஆகும். 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என நான்கு வித அளவுகளில் இந்த சீரிஸ் கிடைக்கிறது.

    புதிய டிசிஎல் பி725 சீரிஸ் மாடல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு டிவி இன்டர்பேஸ் மற்றும் டிசிஎல் நிறுவனத்தின் கஸ்டம் லான்ச்சர் என இரு மென்பொருள்களில் இயங்குகிறது. இந்த டிவி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிக கேம்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது.

     டிசிஎல் ஸ்மார்ட் டிவி

    மேலும் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஸ்டிரீமிங் சேவைகள், பில்ட்-இன் குரோம்காஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஹெச்டிஆர், டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆடியோ, MEMC தொழில்நுட்பம், வீடியோ கால் கேமரா, கூகுள் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இத்துடன் பல்வேறு ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    டிசிஎல் பி725 சீரிஸ் 43 இன்ச் மாடல் விலை ரூ. 41,990, 50 இன்ச் மாடல் விலை ரூ. 56,990, 55 இன்ச் மாடல் விலை ரூ. 62,990 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 89,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    சியோமி நிறுவனம் தனது எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்குகிறது.


    சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் இணையத்தில் அதிகம் விற்பனையான அல்ட்ரா-ஸ்லிம் ஐ7 விண்டோஸ் லேப்டாப் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்த தகவல் ஐடிசி வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

    எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன், எம்ஐ நோட்புக் இ லேர்னிங் எடிஷன் மற்றும் எம்ஐ நோச்புக் 14 ஐசி சீரிஸ் உள்ளிட்ட மாடல்கள் கிடைக்கின்றன. எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை கொண்டாடும் வகையில் எம்ஐ இந்தியா தனது லேப்டாப் மாடல்களுக்கு மார்ச் 15 ஆம் தேதி வரை சிறப்பு சலுகை வழங்குவதாக அறிவித்து உள்ளது.

    அதன்படி எம்ஐ நோட்புக் இ லெர்னிங் எடிஷன் துவக்க விலை ரூ. 35,999 என்றும், எம்ஐ நோட்புக் ஹாரிசான் எடிஷன் ரூ. 49,999 என்றும் எம்ஐ நோட்புக் 14 ஐசி விலை ரூ. 40,999 ஆகும்.

     எம்ஐ நோட்புக்

    எம்ஐ நோட்புக் மாடல்கள் புதிய விலை விவரம்:

    எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் ஐ5 8ஜிபி + 512 ஜிபி எம்எக்ஸ்350 கிரே விலை ரூ. 49,999

    எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் ஐ7 8ஜிபி + 512 ஜிபி எம்எக்ஸ்350 கிரே விலை ரூ. 54,999

    எம்ஐ நோட்புக் இ லெர்னிங் எடிஷன் ஐ3 8ஜிபி + 256 ஜிபி யுஹெச்டி கேமரா சில்வர் விலை ரூ. 35,999

    எம்ஐ நோட்புக் 14 ஐசி ஐ5 8ஜிபி + 256 ஜிபி யுஹெச்டி கேமரா சில்வர் மாடல் விலை ரூ. 40,999

    எம்ஐ நோட்புக் 14 ஐசி ஐ5 8ஜிபி + 512 ஜிபி யுஹெச்டி கேமரா சில்வர் மாடல் விலை ரூ. 43,999

    எம்ஐ நோட்புக் 14 ஐசி ஐ5 8ஜிபி + 512 ஜிபி எம்எக்ஸ்250 கேமரா சில்வர் மாடல் விலை ரூ. 47,999
    சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.



    சாம்சங் நிறுவனம் மார்ச் 17 ஆம் தேதி கேலக்ஸி ஆசம் அன்பேக்டு 2021 நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த விழாவில் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இரு ஸ்மார்ட்போன்களும் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி ஏ72 மாடலில் 6.7 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 5ஜி வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி ஆசம் அன்பேக்டு 2021

    இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கலாம்.

    கேலக்ஸி ஏ52 மாடலில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 5ஜி வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை மெல்ல இந்தியாவுக்கு மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 உற்பத்தி இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் 12 சீரிசில் - ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

     ஐபோன் 12

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஐபோன் 12 உற்பத்தி தமிழ் நாட்டில் இயங்கி வரும் பாக்ஸ்கான் ஆலையில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு ஆலைகளில் இருந்து 10 சதவீத உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டுவர ஆப்பிள் முடிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன் 12 உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என தெரிகிறது. தற்சமயம் இதே ஆலையில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 8 சீரிஸ் மாடல்கள் இந்த தேதியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் 25 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ரியல்மி 8 சீரிசில் ரியல்மி 8 4ஜி, ரியல்மி 8 ப்ரோ 4ஜி மற்றும் ரியல்மி 8 ப்ரோ 5ஜி உள்ளிட்ட மாடல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி, 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ 5ஜி மாடலில் சாம்சங் நிறுவனத்தின் 108 எம்பி HM221/1.52 பிரைமரி கேமரா கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிரைமரி கேமரா மட்டுமின்றி மூன்று இதர சென்சார்கள் வழங்கப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ கேமரா, 3எக்ஸ் மோட் கொண்ட சூப்பர் ஜூம் வசதி கொண்டுள்ளது. 

     ரியல்மி 8

    இதன் விசேஷ அம்சம் புகைப்படங்களை 12 எம்பி தரத்தில் மிக தெளிவாக கொடுக்கும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. 12 எம்பி தரத்தில் எடுக்கப்படும் போது புகைப்படம் வழக்கத்தை விட அதிக சிறப்பானதாக இருக்கும் என்றும் ரியல்மி தெரிவித்து உள்ளது.

    ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று தலைசிறந்த பில்ட்டர்கள், நியோன் போர்டிரெயிட், டைனமிக் பொக்கே போர்டிரெயிட் மற்றும் ஏஐ கலர் போர்டிரெயிட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.


    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் மோட்டோ ஜி10 பவர் மற்றும் மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மோட்டோ ஜி10 பவர் மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4ஜிபி ரேம், 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அரோரா கிரே மற்றும் பிரீஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,999 ஆகும்.

     மோட்டோ ஜி30

    மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி சென்சாருடன் குவாட் கேமரா, 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போ பவர் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டார்க் பியல் மற்றும் பேஸ்டல் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட் டிவி மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரெட்மியின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல் மார்ச் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    ரெட்மி ஸ்மார்ட் டிவி

    தற்போது எம்ஐ சீரிசில் 65 இன்ச் டிவி மாடல்களை சியோமி ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் 70 இன்ச் ரெட்மி டிவி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 86 இன்ச் மாடல் இங்கு அறிமுகமாகும் என்றும் கூறப்படுகறது.

    சியோமி இந்தியா ஸ்மார்ட் டிவி பிரிவுக்கான தலைவர் ஈஷ்வர் நீலகண்டன், புதிய ஸ்மார்ட் டிவிக்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் என தெரிவித்து இருந்தார். மேலும் சியோமி நிறுவனம் உற்பத்தியை ஊக்குவிக்க ரேடியண்ட் எனும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து உள்ளது.
    அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஒப்போ எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.


    ஒப்போ நிறுவனம் எப்19 மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய எப்19 ப்ரோ மாடலில் மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் கொண்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.1 வழங்கப்பட்டு இருக்கின்றன.

     ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ்

    இரு மாடல்களிலும் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் ப்ரோ பிளஸ் மாடலில் போர்டிரெயிட் வீடியோ மற்றும் அல்ட்ரா நைட் வீடியோ அல்காரிதம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் 4310 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 50 வாட் பிளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுடன் 65 வாட் சார்ஜரும், எப்19 ப்ரோ மாடலுடன் 30 வாட் வூக் பிளாஷ் சார்ஜரும் வழங்கப்படுகின்றன.

    ஒப்போ எப்19 ப்ரோ மற்றும் எப்19 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றன. ஒப்போ எப்19 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,490 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 23,490 என்றும் நிர்ணயம்  செய்யப்பட்டு உள்ளன. ஒப்போ எப்19 ப்ரோ பிளஸ் மாடலின் விலை ரூ. 25,990 ஆகும்.

    ரியல்மி நிறுவனம் தனது நார்சோ ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியிட துவங்கி இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 20 ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரியல்மி யுஐ 2.0 ஓபன் பீட்டா அப்டேட் வெளியிட்டது. முன்னதாக ரியல்மி எக்ஸ்50 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி யுஐ 2.0 அப்டேட் வெளியிட்டு இருக்கிறது.

     ரியல்மி நார்சோ 20

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யுஐ 2.0 சிஸ்டம் குளோனர், குவிக் ரிட்டன் பபிள், மேம்பட்ட டார்க் மோட், புதிய ஆப் டிராயர், மூன்றாம் தரப்பு ஐகான் வசதி, புது வடிவமைப்பு கொண்ட நோட்டிபிகேஷன் பேனல், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, மேம்பட்ட கேம் ஸ்பேஸ் என பல்வேறு புது அம்சங்களை வழங்குகிறது.

    புதிய அப்டேட் படிப்படியாக வழங்கப்படுகிறது. இதனால் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில நாட்கள் ஆகும். நார்சோ 20 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ரியல்மி 7 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×