என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் மியூசிக் செயலியில் ஜூன் மாதம் முதல் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

    ஆப்பிள் நிறுவனம் தனது மியூசிக் செயலியில் ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் லாஸ்லெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் மியூசிக் சந்தாதாரர்களுக்கு இந்த சேவைகள் ஜூன் மாதம் முதல் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இது இசை கலைஞர்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த வழிவகுக்கும். ஹெச்1 அல்லது டபிள்யூ1 சிப் கொண்டிருக்கும் அனைத்து ஏர்பாட்ஸ், பீட்ஸ் ஹெட்போன்கள் டால்பி அட்மோஸ் பாடல்களை தானாக இயக்கும்.

     ஆப்பிள் மியூசிக்

    இதே வசதி ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களிலும் பிரதிபலிக்கும். ஹெட்போன்களில் இந்த அம்சத்தை பெற செட்டிங்ஸ் -- மியூசிக் -- ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்து ஆல்வேஸ் ஆன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

    லாஸ்லெஸ் ஆடியோ அம்சம் இசையை ஸ்டூடியோ தரத்தில் கேட்க வழி வகுக்கும். இந்த அம்சம் ஆப்பிள் மியூசிக் சேவையில் கிடைக்கும் சுமார் 7.5 கோடி பாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் -- மியூசிக் -- ஆடியோ குவாலிட்டி ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். 

    இந்தியாவில் ஆப்பிள் மியூசிக் சந்தா மாதத்திற்கு ரூ. 99 ஆகும். மாணவர்களுக்கு இந்த சேவை மாதம் ரூ. 49 என்றும் குடும்ப சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 149 ஆகும். இந்த சந்தாவில் அதிகபட்சம் ஆறு பேர் பயன்படுத்தலாம்.
    மும்பையை சேர்ந்த சிறுவன் உருவாக்கி இருக்கும் நிலவின் முப்பரிமாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் நிலவின் முப்பரிமாண படத்தை உருவாக்கி இருக்கிறான். இதற்கு அந்த சிறுவன் சுமார் 50 ஆயிரம் படங்களை ஒருங்கிணைத்து இருக்கிறான்.

    பூனேவை சேர்ந்த பிரதமேஷ் ஜாஜு எனும் சிறுவன் தன்னை வளரும் வானியலாளர் என கூறுகிறார். நிலவின் முப்பரிமாண படத்தை உருவாக்க அதிக புகைப்படங்களை இயக்கும் போது தனது லேப்டாப் கிட்டத்தட்ட பாழாகிவிட்டதாக பிரதமேஷ் தெரிவித்தார்.

    ஒருங்கிணைக்கப்பட்ட படங்களின் ஒட்டுமொத்த அளவு 186 ஜிபி ஆகும். ஒருங்கிணைக்கப்பட்ட படம் 50 எம்பி அளவில் இருந்தது. பின் மொபைல் போனில் பார்க்க ஏதுவான புகைப்படத்தின் அளவை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதிக ரெசல்யூஷன் கொண்ட படத்தில் நிலவின் பரப்பளவு மிக சிறப்பாக காட்சியளிக்கிறது. 

    இந்த படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை பிரதமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இதே புகைப்படம் சிறுவனின் ரெடிட் அக்கவுண்டிலும் பகிரப்பட்டு இருக்கிறது. சிறுவனின் முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    அவிட்டா நிறுவனத்தின் காஸ்மோஸ் லேப்டாப் இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது.


    அவிட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லேப்டாப் 11.6 இன்ச் FHD IPS டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி eMMC வழங்கப்பட்டு இருக்கிறது.

    2 இன் 1 மாடல் என்பதால் இதனை டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும். இது கழற்றக்கூடிய வசதி கொண்ட கீபோர்டு, பில்ட்-இன் ஸ்டான்டு கொண்டிருக்கிறது. 

     அவிட்டா காஸ்மோஸ்

    அவிட்டா காஸ்மோஸ் அம்சங்கள்:

    - 11.6 இன்ச் 1920×1080 பிக்சல் FHD IPS மல்டி-டச் டிஸ்ப்ளே
    - இன்டெல் செலரான் N4000 டூயல் கோர் பிராசஸர்
    - UHD 600 Graphics
    - 4 ஜிபி DDR4 ரேம்
    - 64 ஜிபி eMMC மெமரி
    - மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
    - விண்டோஸ் 10 ஹோம்
    - 2 எம்பி பிரைமரி மற்றும் செல்பி கேமரா
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - கழற்றக்கூடிய கீபோர்ட
    - வைபை, ப்ளூடூத் 4
    - அதிகபட்சம் 6 மணி நேர பேட்டரி பேக்கப்

    அவிட்டா காஸ்மோஸ் சார்கோல் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17,990 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆப்பிள் மியூசிக் சேவை குறித்த புது அறிவிப்பை அந்நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் மியூசிக் செயலி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. டீசரில் ஆப்பிள் மியூசிக் லோகோ மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. 

     ஆப்பிள் மியூசிக்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் மியூசிக் செயலியில் லாஸ்லெஸ் மற்றும் ஹை ரெஸ் லாஸ்லெஸ் என இரு அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஐஒஎஸ் 14.6 தளத்தின் குறியீடுகளில் லாஸ்லெஸ் ஆடியோ அம்சத்தை குறிக்கும் குறியீடுகள் இடம்பெற்று இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

    தற்போது ஆப்பிள் மியூசிக் செயலியில் ஏஏசி கோடெக் மூலம் அதிகபட்சம் 256kbps ஸ்டிரீமிங் செய்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. ஆப்பிள் மியூசிக் ஆண்ட்ராய்டு செயலியிலும் லாஸ்லெஸ் மியூசிக் வசதி வழங்கப்பட இருக்கிறது. லாஸ்லெஸ் தரத்தில் மூன்று நிமிட ஆடியோ 36 எம்பி அளவிலான டேட்டாவை பயன்படுத்தும் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 சீரிஸ் இதுவரை பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    எனினும், ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலுக்கு மட்டும் பிளாஷ் விற்பனையை நிறுத்த சியோமி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இனி ஓபன் சேல் விற்பனை செய்யப்படுகிறது. ஓபன் சேல் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பின் படி ரெட்மி நோட் 10 ப்ரோ விலை ரூ. 17,999 இல் இருந்து தற்போது ரூ. 15,999 ஆக மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ரெட்மி நோட் 10 ப்ரோ புது விலை பட்டியல்:

    ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 15,999 

    ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999 

    ரெட்மி நோட் 10 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 18,999 

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 732 ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 
    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


    சாம்சங் நிறுவனம் தனது குறைந் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ32 அறிமுகம் செய்யப்பட்டு சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதைவிட குறைந்த விலையில் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

     சாம்சங் ஸ்மார்ட்போன் - கோப்புப்படம்

    புதிய கேலக்ஸி ஏ22 5ஜி மாடலில் 6.4 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளே, AMOLED, பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே பிராசஸர் சமீபத்தில் அறிமுகமான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புது 5ஜி ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் மெமரி விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி மற்றும் 2 எம்பி சென்சார்கள் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் மேம்படுத்தப்பட்ட புது பிரைவசி பாலிசி விதிகளை ஏற்காதவர்களுக்கு புது கட்டுப்பாடு அமலாகிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பிரைவசி பாலிசியை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கு பிறப்பித்த மே 15 காலக்கெடுவை நீக்கிவிட்டது. இதனால், புது அப்டேட்டை இன்ஸ்டால் செய்யாதவர்கள் மே 15 ஆம் தேதிக்கு பின் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம். 

    எனினும், புது அப்டேட் இன்ஸ்டால் செய்யக் கோரி வாட்ஸ்அப் சார்பில் அடிக்கடி நோட்டிபிகேஷன் அனுப்பப்படுவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். புது விதிகள் வாட்ஸ்அப் அதன் பயனர் விவரங்களை பேஸ்புக் இயக்கும் வசதியை வழங்கும். 

     வாட்ஸ்அப்

    புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்யாதவர்களுக்கு சில அம்சங்களை பயன்படுத்தும் வசதி படிப்படியாக நிறுத்தப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்-ஐ இயக்க முடியாது. மேலும் வாட்ஸ்அப்பில் வரும் அழைப்புகளை ஏற்க முடியும்.

    எனினும், நோட்டிபிகேஷன் அலெர்ட்களை க்ளிக் செய்த பின்பே குறுந்தகவல்களை படிக்க முடியும். சில வாரங்களுக்கு பின் பயனர்களுக்கு வரும் குறுந்தகவல்கள் நிறுத்தப்படும்.
    விவோ நிறுவனம் மீடியாடெக் 5ஜி பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    விவோ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் V2123A எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் எந்த பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

    எனினும், கீக்பென்ச் தகவல்களின்படி புதிய விவோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த 5ஜி பிராசஸர் 6nm முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது டிமென்சிட்டி 1100 மற்றும் டிமென்சிட்டி 1200 போன்ற பிராசஸர்களுக்கு இணையான ஒன்றாகும்.

     விவோ ஸ்மார்ட்போன்

    மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. கீக்பென்ச் சோதனையில், இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 3467 புள்ளிகளையும், மல்டி கோரில் 8852 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. 

    புதிய விவோ ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ்70 மாடலின் ரி-பிரான்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் ஐகூ பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் 3 விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் இயர்போனினை மே 18 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதே தினத்தில் ஆப்பிள் மியூசிக் சேவையில் ஹை பிடிலிட்டி வசதியை அறிவிக்கும் என கூறப்படுகிறது. புது சாதனங்கள் வெளியீடு பற்றி ஆப்பிள் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

     ஆப்பிள் ஏர்பாட்ஸ்

    மே 18 ஆம் தேதி அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டு அறிக்கை மூலம் புது ஏர்பாட்ஸ் 3 மாடலை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வயர்லெஸ் இயர்போன் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என தெரிகிறது.

    ஏர்பாட்ஸ் மட்டுமின்றி ஆப்பிள் மியூசிக் சேவையில் புதிதாக ஹை பிடிலிட்டி வசதியை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் மியூசிக் ஹைபை சேவைக்கான கட்டணம் 9.99 டாலர்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் அதற்கேற்ற ஹார்டுவேர் கொண்ட சாதனங்களில் மட்டுமே இயங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது.

    ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் பயனர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பில் இருக்க இரண்டு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. 

     ஜியோபோன்

    ஜியோ மற்றும் ரிலையன்ஸ் பவுன்டேஷன் இணைந்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது. இந்த சலுகை கொரோனா தொற்று சரியாகும் வரை வழங்கப்படுகிறது. தொற்று காலக்கட்டத்தில் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஜியோபோன் பயனர்களுக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும்.

    இத்துடன் ஜியோபோன் சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது ஜியோபோன் பயனர்களுக்கு அதே மதிப்புள்ள கூடுதல் ரீசார்ஜ் சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரூ. 75 சலுகையை தேர்வு செய்யும் போது கூடுதலாக ரூ. 75 சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இந்த சலுகை ஜியோபோன் வருடாந்திர அல்லது சாதனத்துடன் வரும் சலுகைகளுக்கு பொருந்தாது. இரு சலுகைகளும் மே 15 முதல் வழங்கப்படுகிறது.
    அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்தார். பின் அவருக்கு வழங்கப்பட்ட பார்சலை திறந்து பார்த்ததும், அதில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ந்து போனார். தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டார். 

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ரூ. 396 மதிப்புள்ள மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு மே 10 ஆம் தேதி ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை அமேசானுக்கு ட்விட்டர் மூலம் அவர் தெரியப்படுத்தினார். தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியாக இருப்பதாகவும், அதில் உள்ள கட்டண ரசீது வேறொரு வாடிக்கையாளருக்கானது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

    இந்த சம்பவம் ட்விட்டரில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து, நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர். பலர் இது குறித்து நக்கலடிக்கும் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ அப்டேட் வழங்கப்படுகிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.1 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் தற்போது பனாமா பகுதியில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கப்படுகிறது. எனினும், ஏப்ரல் அல்லது மே மாத அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இந்த ஸ்மார்ட்போனிற்கு முதல் முறையாக மிகமுக்கிய அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புது அப்டேட் வழங்கும் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த அப்டேட் A115MUBU2BUE1 வெர்ஷன் கொண்டிருக்கிறது. புது அப்டேட் பெற ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாப்ட்வேர் அப்டேட் -- டவுன்லோட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். 
    ×