என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    விவோ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சேவையை நீட்டித்து வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

    விவோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சேவையை 30 நாட்கள் நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை விவோ விற்பனை செய்த அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும். எனினும், இது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

     விவோ ஸ்மார்ட்போன்

    அந்த வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் வசிக்கும் விவோ வாடிக்கையாளர்களின் சாதனங்களுக்கு  வாரண்டி நிறைவுபெற இருக்கும் பட்சத்தில் அதனை 30 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். ஊரடங்கு காரணமாக சர்வீஸ் மையங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும். 

    வாரண்டி நீட்டிப்பு மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் சாதனங்களை வீட்டிற்கு வந்து சரி செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. 30 நாட்கள் கால அவகாசம் விவோ மீண்டும் தனது வியாபாரத்தை துவங்கிய நாள் முதல் கணக்கிடப்படும் என விவோ அறிவித்து இருக்கிறது.
    சபையர் கிளாஸ் கவர், கோபால்ட் அலாய் பிரேம் கொண்ட ஒன்பிளஸ் வாட்ச் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் வாட்ச் கிளாசிக் எடிஷன் மட்டுமே வெளியானது. தற்போது இந்த வாட்ச்-இன் மற்றொரு வேரியண்ட் கோபால்ட் எடிஷன் எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது.

    ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கிறது. இதன் விலையும் கிளாசிக் எடிஷன் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

     ஒன்பிளஸ் வாட்ச்

    புதிய கோபால்ட் எடிஷன் மாடலில் சபையர் கிளாஸ் கவர், 316L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கோபால்ட் அலாய் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வட்ட வடிவ டையல் கோல்டு பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் லெதர் மற்றும் புளுரோ ரப்பர் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ஒன்பிளஸ் வாட்ச் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    சீன சந்தையில் ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன் விலை RMB1599 இந்திய மதிப்பில் ரூ. 18,250 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் வாட்ச் புது வேரியண்ட் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
    பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் நடைபெற இருக்கிறது.


    பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் மே 18 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான அறிவிப்பு அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் பப்ஜி மொபைல் இந்திய வெர்ஷனுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     கூகுள் பிளே ஸ்டோர்

    பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை தென் கொரியாவை சேர்ந்த கிராப்டான் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. புது கேம் பற்றிய அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது இதன் முன்பதிவு விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த கேமினை முன்பதிவு செய்வோருக்கு பிரத்யேக ரிவார்டுகள் வழங்கப்படும் என கிராப்டான் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் கேமிற்கான மேப் ஒன்றின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. 
    ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி எனும் ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 14,999 ஆகும்.

    தற்போது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் எனும் பெருமையை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சூப்பர்சோனிக் புளூ மற்றும் சூப்பர்சோனிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

     ரியல்மி 8 5ஜி

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 8 5ஜி மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி 8 5ஜி 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி 8 5ஜி புதிய 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் மே 18 ஆம் தேதி துவங்குகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் ரெட்மி வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.4 இன்ச் டச் கலர் LCD ஸ்கிரீன், 200-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, அதிகபட்சம் 11 ஸ்போர்ட் மோட்கள் உள்ளன.

     ரெட்மி வாட்ச்

    ரெட்மி வாட்ச் அம்சங்கள்

    - 1.4 இன்ச் 320×320 பிக்சல் 323 PPI டச் கலர் LCD ஸ்கிரீன்
    - 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், 3-ஆக்சிஸ் கைரோஸ்கோப்
    - ப்ளூடூத் 5.1
    - 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - இதய துடிப்பு சென்சார்
    - ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் / GLONASS
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM)
    - 230 எம்ஏஹெச் பேட்டரி

    ரெட்மி வாட்ச் பிளாக், புளூ மற்றும் ஐவரி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் மே 25 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
    போக்கோ நிறுவனத்தின் புதிய எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மே 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை போக்கோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

    புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு அறிமுகமாகிறது. வெளியீட்டு தேதி, நேரம் தவிர புது ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

     போக்கோ ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    போக்கோ எம்3 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 662-ஐ விட வேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 10 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ எம்3 ப்ரோ மாடலில் பிரத்யேக வடிவமைப்பு, அதிக ரேம், அதிவேக ஸ்டோரேஜ் மாட்யூல் மற்றும் மூன்று நிறங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் விலை போக்கோ எக்ஸ்3 என்எப்சி மாடலை போன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 13 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 ஒஎஸ் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

     ரெட்மி நோட் 10எஸ்

    ரெட்மி நோட் 10எஸ் அம்சங்கள்

    - 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
    - 900MHz மாலி-G76 3EEMC4 GPU
    - 6 ஜிபி LPDDR4X ரேம்
    - 64 ஜிபி (UFS 2.2) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - 64 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.79, LED பிளாஷ்
    - 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 13 எம்பி செல்பி கேமரா, f/2.45
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP52)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக், பிராஸ்ட் வைட் மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியை எத்திரியம் இணை நிறுவனர் க்ரிப்டோகரென்சியாக வழங்கி இருக்கிறார்.


    எத்திரியம் க்ரிப்டோகரென்சி இணை நிறுவனர் விடலிக் புடெரின் இந்தியாவுக்கு ரூ. 7360 கோடி மதிப்பிலான ஷிபா இனு க்ரிப்டோகரென்சியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். ஷிபா இனு கரென்சியை உருவாக்கியவர்கள் புடெரினுக்கு 50 சதவீத மீம் டோக்கன்களை பரிசாக வழங்கினர். 

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    உலகின் இளைய க்ரிப்டோகரென்சி கோடீஸ்வரரான புடெரின் அவற்றை தொண்டு காரியங்களுக்கு செலவிட முடிவு செய்து நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். புடெரின் சுமார் 120 கோடி டாலர்கள் மதிப்பிலான ஷிபு டோக்கன்களை இந்தியா கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறார். 

    இத்தகைய தொகை க்ரிப்டோகரென்சி மூலம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் இவ்வளவு க்ரிப்டோகரென்சியை இந்திய ரொக்கமாக மாற்றும் போது அதன் மதிப்பு சற்றே குறையும்.
    அசுஸ் நிறுவனத்தின் இரு புதிய சென்போன் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

    அசுஸ் நிறுவனம் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ளிப் ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் முறையே 5.9 இன்ச் 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே, 6.67 இன்ச் FHD பிளஸ் 90Hz சாம்சங் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 5ஜி SA/NSA, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த சென் யுஐ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சென்போன் 8 ப்ளிப் மாடலில் ப்ளிப் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     அசுஸ் சென்போன் 8 ப்ளிப்

    சென்போன் 8 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ளிப் மாடல்களில் முறையே 5000எம்ஏஹெச் மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 30 வாட் குவிக் சார்ஜ் 4.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    சென்போன் 8 மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் ஹாரிசான் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,095 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்போன் 8 ப்ளிப் மாடல் கேலக்டிக் பிளாக் மற்றும் கிளேசியல் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040 ஆகும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் நடைபெற இருந்த மோசடி நோக்கம் கொண்ட பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான தளம் என அவ்வப்போது தெரிவித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆப் ஸ்டோரில் நடைபெற இருந்த சுமார் 150 கோடி டாலர்கள் மதிப்பிலான மோசடி பண பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஆப்பிள் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.

     ஆப்பிள் ஆப் ஸ்டோர்

    இவ்வாறு செய்ததில் ஆப்பிள் வாடிக்கையாளர்களின் பணம், தகவல்கள் மற்றும் நேரம் காப்பாற்றப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான புது செயலிகள் சரியான தகவல்களை வழங்காததால் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

    மேலும் பத்து லட்சத்திற்கும் அதிக அப்டேட்கள் நிராகரிக்கவோ அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன. செயலிகளை ஆய்வு செய்யும் குழு சுமார் 48 ஆயிரம் செயலிகளில் தவறான அம்சங்களை கொண்டிருந்ததால், நீக்கப்பட்டுள்ளன. இத்துடன் பயனரின் பிரைவசி விதிகளை மீறியதாக 2.15 லட்சம் செயலிகள் நீக்கப்பட்டன. 
    சோனி நிறுவனம் தனது பிஎஸ்5 கன்சோல்களுக்கான முன்பதிவு மீண்டும் நடைபெற இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் பிஎஸ்5 கன்சோல்கள் மீண்டும் விற்பனைக்கு வருவது சற்றே சவாலான விஷயம் தான் என சோனி நிறுவன அதிகாரி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பிஎஸ்5 முன்பதிவு மீண்டும் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சோனி தனது பிஎஸ்5 கன்சோல்களுக்கான முன்பதிவை மே 17 ஆம் தேதி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறையும் மிக குறைந்த யூனிட்களே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த விற்பனை ஊரடங்கு அமலில் இல்லாத பகுதிகளில் மட்டுமே நடைபெறும் என கூறப்படுகிறது.

     சோனி பிஎஸ்5

    இந்தியாவில் பிஎஸ்5 டிஜிட்டல் எடிஷன் மாடலை சோனி அறிமுகம் செய்யாமல் இருந்தது. இந்த நிலையில், பிஎஸ்5 டிஜிட்டல் எடிஷன் மாடலும் மே 17 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் விற்பனை சோனியின் சொந்த வலைதளத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
    மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர், பிரத்யேக வடிவமைப்பு கொண்ட புது போக்கோ ஸ்மார்ட்போன் உருவாக்கப்படுகிறது.


    போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்கோ நிறுவனம் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    போக்கோ குளோபல் நிறுவன தலைவர் சியாபோ கியூ, விளம்பர பிரிவு தலைவர் அங்குஸ் என் ஆகியோர் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் போக்கோவின் 5ஜி ஸ்மார்ட்போன் ரி-பிராண்டு செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 5ஜி மாடலாக இருக்கும் என கூறப்பட்டது.

     போக்கோ ஸ்மார்ட்போன்

    போக்கோ எம்3 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 662-ஐ விட வேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 10 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ எம்3 ப்ரோ மாடலில் பிரத்யேக வடிவமைப்பு, அதிக ரேம், அதிவேக ஸ்டோரேஜ் மாட்யூல் மற்றும் மூன்று நிறங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் விலை போக்கோ எக்ஸ்3 என்எப்சி மாடலை போன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
    ×