என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    கூகுள் நிறுவனத்தின் பேமண்ட் செயலியில் பண பரிமாற்றத்தை செயல்படுத்துவதில் புது வசதி வழங்கப்படுகிறது.

    கூகுள் பே சேவையில் பண பரிமாற்றம் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது. பேமண்ட் செயலிகள் பிரிவில் இந்தியாவின் முன்னணி தளமாக கூகுள் பே இருக்கிறது. தற்போது இந்த செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி வழங்கப்படுகிறது.

    முதற்கட்டமாக பண பரிமாற்ற வசதி அமெரிக்காவில் இருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும். கூகுள் பே செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி மிக எளிமையான வழிமுறையாக வழங்கப்பட்டு இருக்கிறது.

     கூகுள் பே

    கூகுள் பே செயலியில் உள்ள Pay ஆப்ஷனில் Western Union அல்லது Wise போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் அடுத்தடுத்த வழிமுறைகளை பின்பற்றி எளிமையாக பணம் அனுப்பலாம். அறிமுக சலுகையாக Western Union சேவையில் அன்லிமிடெட் பரிமாற்றங்கள் வழங்கப்படுகிறது. Wise சேவையில் முதல் பரிமாற்றம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    சர்வதேச பண பரிமாற்ற சேவை அமெரிக்க பயனர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இவர்கள் அமெரிக்காவில் இருந்தபடி இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு பணம் அனுப்பலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 200 நாடுகளுக்கு இந்த சேவை நீட்டிக்கப்பட இருக்கிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கூடுதலாக 5ஜி பேண்ட் வழங்குவது பற்றி அந்நிறுவன ஊழியர் பதில் அளித்துள்ளார்.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் போது இந்த மாடல்களில் 5ஜி SA/NSA பேண்ட்கள், N41 மற்றும் N78 வசதி இருப்பதாக ஒன்பிளஸ் அறிவித்தது. 

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    அதன்பின் வெளியான தகவல்களில் ஒடிஏ அப்டேட் மூலம் இரு மாடல்களுக்கும் கூடுதலாக 5ஜி பேண்ட்களின் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இந்த தகவல்களில் உண்மையில்லை என ஒன்பிளஸ் ஊழியர் தெரிவித்து இருக்கிறார். 

    எதிர்காலத்தில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களுக்கு கூடுதலாக 5ஜி பேண்ட்களுக்கான வசதி அப்டேட் மூலம் வழங்கப்படாது என அவர் தெரிவித்து இருக்கிறார். 
    நத்திங் நிறுவனத்தின் முதல் சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    கார்ல் பெய் துவங்கி இருக்கும் நத்திங் நிறுவனம் தனது முதல் சாதனத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இயர் 1 எனும் பெயரில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை நத்திங் தனது முதல் சாதனமாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் வடிவமைப்பு விவரங்கள் இதுவரை ரகசியமான ஒன்றாகவே இருக்கிறது. 

     நத்திங் இயர் 1

    நீண்ட பயணத்தின் முதல் படியாக இயர் 1 அறிமுகமாகிறது என கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். தலைசிறந்த வடிவமைப்பு, நம்பகத்தன்மையை உருவாக்கும் பல்வேறு சாதனங்கள் மற்றும் சேவைகளின் துவக்கம் தான் இது என அவர் மேலும் தெரிவித்தார்.

    இயர்போன்கள் சந்தையில் கிடைக்கும் மாபெரும் வளர்ச்சி கொண்டு நிறுவனம் பல்வேறு புது சாதனங்கள் பிரிவில் களமிறங்க முடியும் என கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார்.
    அசுஸ் நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.


    அசுஸ் நிறுவனம் தனது சென்போன் 8 சீரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி சர்வதேச அறிமுக நிகழ்வின் போதே புது ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய அசுஸ் திட்டமிட்டு இருந்தது.

     அசுஸ் சென்போன் 8

    எனினும், சென்போன் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டை மாற்றுவதாக அசுஸ் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வினியோகம் செய்ய அரசாங்கங்கள் அனுமதி அளித்துள்ளன. முன்னதாக ரியல்மி நிறுவனமும் மே 4 ஆம் தேதி புது சாதனங்களை அறிமுகம் செய்ய இருந்தது. எனினும், வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
    லாவா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


    லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்2 மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய லாவா இசட்2 மேக்ஸ் மாடலில் 7 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது சென்சார், எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

     லாவா இசட்2 மேக்ஸ்

    லாவா இசட்2 மேக்ஸ் அம்சங்கள்

    - 7.0 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8GHz குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 பிராசஸர்
    - 2 ஜிபி LPDDR3 ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன்
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.85
    - 2 எம்பி டெப்த் சென்சார், LED பிளாஷ்
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி

    லாவா இசட்2 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்டிரோக்டு புளூ மற்றும் ஸ்டிரோக்டு சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7799 ஆகும். இது முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள ட்விட்டர் நிறுவனம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


    இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 110 கோடி வழங்குவதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. முன்னதாக கூகுள், மைக்ரோசாப்ட், சியோமி போன்ற நிறுவனங்கள் இதேபோன்று நிவாரண உதவிகளை அறிவித்தன.

     கோப்புப்படம்

    மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாக ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி தனது சமூக வலைதள அக்கவுண்டில் தெரிவித்தார். அதன்படி CARE, Aid India மற்றும் Sewa International USA போன்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. 

    நிதி தொகை தற்காலிக கொரோனா மையங்களை கட்டமைத்தல், ஆக்சிஜன் வழங்குதல், பிபிஐ கிட் மற்றும் இதர தேவையான உபகரணங்களை வழங்க பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைக்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30ஏ மற்றும் நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்போது நார்சோ 30 ஸ்மார்ட்போன் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

    புதிய நார்சோ 30 ஸ்மார்ட்போன் மே 18 ஆம் தேதி மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ ஜி95 பிராசஸர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் மற்றும் எப்சிசி போன்ற தளங்களில் இடம்பெற்று இருந்தது.

    அதன்படி RMX2156 மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது ரியல்மி ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், பன்ச் ஹோல் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

     நார்சோ 30

    ரியல்மி நார்சோ 30 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
    - 900MHz மாலி-G76 3EEMC4 GPU
    - 6 ஜிபி LPPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - டூயல் சிம் ஸ்லாட் 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
    - 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
    - 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக் 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முக்கிய முடிவை எடுத்துள்ளது.


    இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இதனை அமேசான் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

    நாட்டில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

     அமேசான் பிரைம் டே சேல்

    தொற்று அதிக தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து அமேசான், கூகுள் என பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள் வழங்குவதில் துவங்கி, அவற்றை இலவசமாக இந்தியா கொண்டு வருவது என பலவிதங்களில் உதவிகளை செய்து வருகின்றன.

    வழக்கமாக அமேசான் நிறுவனம் ஜூலை மாத வாக்கில் தனது வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகை, தள்ளுபடி, வங்கி சார்ந்த கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படும்.
    மத்திய அரசின் கொரோனாவைரஸ் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்போருக்கு பிரத்யேக செக்யூரிட்டி கோட் அனுப்பப்படுகிறது.

    மத்திய அரசு செயல்படுத்தி வரும் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொது மக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி முறையை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மேற்கொள்ள இந்த முறை பின்பற்றப்படுகிறது.

    இந்த நிலையில், CoWIN தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு நான்கு இலக்க பாதுகாப்பு குறியீடு அனுப்பப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தீயவர்கள் சதி செய்து பணம் பறிக்கும் முயற்சியை தடுக்க முடியும். தடுப்பூசி மையங்களில் இந்த நான்கு இலக்க குறியீட்டை தெரிவித்ததும், தடுப்பூசி சான்று உருவாக்கப்படும். 

     கோவின் வலைதள ஸ்கிரீன்ஷாட்

    குறியீட்டு முறையை கொண்டு தடுப்பூசி சான்று உருவாக்குவதில் ஏற்படும் தவறுகளை குறைக்க முடியும். தனிப்பட்ட முறையில் தடுப்பூசி திட்டம் மூலம் ஆதாயம் தேட முயற்சி செய்வோரிடம் இருந்து மக்களை காப்பாற்றவும் புதிய குறியீட்டு முறை பயன்தரும்.

    பொது மக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்யும் போது, அவர்களுக்கான தடுப்பூசி மையம் உறுதி செய்யப்பட்டதும், நான்கு இலக்க குறியீடு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் தினத்தன்று இந்த குறியீட்டை தடுப்பூசி மையத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

    பின் தடுப்பூசி செலுத்திக் கொண்டதும், CoWIN தளம் சென்று தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
    வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் புது பிரைவசி பாலிசியை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளது.


    புது பிரைவசி பாலிசி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை வாட்ஸ்அப் எதிர்கொண்டது. பிரைவசி பாலிசி மாற்றத்திற்கு பயனர்கள் மே 15 ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வாட்ஸ்அப் காலக்கெடு விதித்து இருந்தது. இந்த நிலையில், பிரைவசி பாலிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது. 

    மே 15 ஆம் தேதிக்கு பின்பும் பிரைவசி பாலிசி அப்டேட் செய்யாதவர்கள் அக்கவுண்ட்  அழிக்கப்படாது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். எனினும், புது அப்டேட் செய்யக் கோரி பயனர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவோம் என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

     வாட்ஸ்அப்

    பெரும்பாலான பயனர்கள் புது மாற்றத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர் என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். முன்பு புது மாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அக்கவுண்ட்களை அழிப்பதாக கூறிய நிலையில், தற்போது வாட்ஸ்அப் தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என இதுவரை அறிவிக்கவில்லை.

    புது அப்டேட் செய்வோரின் தகவல்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் ஏற்படுத்தாது என வாட்ஸ்அப் அதன் பயனர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதுதவிர புது அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரியில் இருந்து மே 15 ஆக அதிகப்படுத்தியது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் SM-A526B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இத்துடன் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. கேலக்ஸி ஏ52 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய தளத்தில் இடம்பெற்று இருப்பதை ஒட்டி விரைவில் இது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் ஆசம் பிளாக், ஆசம் புளூ, ஆசம் வைலட் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 429 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி அம்சங்கள்

    சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் கேலக்ஸி ஏ52 5ஜி மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமண்ட் வசதி வழங்க மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.


    உலகில் ட்விட்டர் சேவையை பயன்படுத்துவோரில் டிப் ஜார் அம்சம் தற்போது தொண்டு நிறுவனங்கள், செய்தியாளர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்டு வருகிறது. 

     ட்விட்டர் டிப் ஜார்

    இதுதவிர டிப் ஜார் வசதியை வழங்க இந்திய பேமண்ட் நிறுவனங்களுடன் ட்விட்டர் பணியாற்றி வருகிறது. இந்த சேவையை ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் சில மொழிகளில் வழங்க இருக்கிறது. தற்போது டிப் ஜார் அம்சம் பேண்ட்கேம்ப், கேஷ் ஆப், பேட்ரியான், பேபால் மற்றும் வென்மோ போன்றே ஆப்ஷன்களை வழங்குகிறது.

    ட்விட்டர் நிறுவனம் பேமண்ட் வசதியை வழங்க இந்த சேவைகளை நாடி இருக்கிறது. ஒருவரின் ப்ரோபைலில் இருக்கும் டிப் ஜார் ஐகான் கொண்டு மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. 
    ×