search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அசுஸ் சென்போன் 8
    X
    அசுஸ் சென்போன் 8

    அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

    அசுஸ் நிறுவனத்தின் இரு புதிய சென்போன் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

    அசுஸ் நிறுவனம் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ளிப் ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் முறையே 5.9 இன்ச் 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே, 6.67 இன்ச் FHD பிளஸ் 90Hz சாம்சங் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 5ஜி SA/NSA, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த சென் யுஐ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சென்போன் 8 ப்ளிப் மாடலில் ப்ளிப் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     அசுஸ் சென்போன் 8 ப்ளிப்

    சென்போன் 8 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ளிப் மாடல்களில் முறையே 5000எம்ஏஹெச் மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 30 வாட் குவிக் சார்ஜ் 4.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    சென்போன் 8 மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் ஹாரிசான் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,095 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்போன் 8 ப்ளிப் மாடல் கேலக்டிக் பிளாக் மற்றும் கிளேசியல் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 965 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 71,040 ஆகும்.
    Next Story
    ×