என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ஆப்பிள் நிறுவனம் புது ஐபோன் மாடல்களின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
- புது ஐபோன் வெளியீட்டு நிகழ்வுக்கு ஃபார் அவுட் என ஆப்பிள் நிறுவனம் பெயரிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி சிறப்பு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு ஃபார் அவுட் என அழைக்கப்படுகிறது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.
2022 ஆண்டிற்கு ஆப்பிள் நிறுவனம் 6.1 இன்ச் ஐபோன் 14, 6.7 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவுகளில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐபோன் 12 அல்லது ஐபோன் 13 மினி மாடல்கள் கணிசமான அளவு விற்பனையாகாத நிலையில், இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 5.4 இன்ச் அளவில் ஐபோன் 14 மினி மாடலை அறிமுகம் செய்யாது என்றே தகவல் வெளியாகி உள்ளது.

ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் மேம்பட்ட 48MP பிரைமரி கேமரா, மாத்திரை அளவு கொண்ட பன்ச் ஹோல் கட்-அவுட், ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 மாடல்களில் இந்த அம்சங்கள் இடம்பெறாது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களும் ஃபார் அவுட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த ஆப்பிள் வாட்ச் SE, முற்றிலும் ஆப்பிள் வாட்ச் ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என தெரிகிறது. ஆப்பிள் வாட்ச் ப்ரோ மாடலில் பெரிய பாடி, மேம்பட்ட டிசைன் மற்றும் அதிக ரக்கட் பில்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஆப்பிள் வாட்ச் மாடல் உடல் வெப்பநிலையை கண்டறியும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை தொடர்ந்து புதிய ஐபேட் 10th Gen, ஏர்பாட்ஸ் ப்ரோ 2nd Gen மற்றும் ஆப்பிள் சிலிகான் மேக் ப்ரோ போன்ற சாதனங்கள் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
- புதிய ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி பணிகள் இந்தியாவிலும் விரைவில் துவங்க இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், அமேசான் தளத்தில் ஐபோன் 13, ஐபோன் 12 போன்ற மாடல்களுக்கு சிறப்பு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பின் படி ஐபோன் 13 (128 ஜிபி) தற்போது ரூ. 69 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. இந்த மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 24 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். ஐபோன் 12 (64 ஜிபி) மாடலுக்கு 18 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 53 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்த மாடலுக்கும் அதிகபட்சமாக ரூ. 24 ஆயிரம் வரை எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் அளவில் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, 2532x1172 பிக்சல் ரெசல்யூஷன், ஏ14 பயோனிக் சிப்செட், 2815 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 4 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட், 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் 6.1 இன்ச் அளவில் ஐபோன் 14, 6.7 இன்ச் அளவில் ஐபோன் 14 மேக்ஸ், 6.1 இன்ச் ஐபோன் 14 ப்ரோ மற்றும் 6.7 இன்ச் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மாடல்களை விட ஐபோன் 14 ப்ரோ மாடல்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் ஐபோன் 14 மாடல்களை இந்தியாவிலும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
- புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாத துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிவிக்கப்பட உள்ளன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் இந்திய உற்பத்தியில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி சீனாவில் உற்பத்தியான ஐபோன் 14 யூனிட்கள் விற்பனைக்கு வந்ததும், இந்த மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் இந்தியாவில் ஐபோன் 14 கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்படி தீபாவளி பண்டிகை காலத்தில் இந்திய சந்தையில் ஐபோன் 14 விற்பனைக்கு வரும். ஐபோன் உற்பத்தி துவங்கும் முன் அவை ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய தர கட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். இதனை சீனா தவிர மற்ற சந்தைகளில் இதனை சாத்தியப்படுத்துவது எளிய காரியம் கிடையாது.

ஐபோன் உற்பத்தியில் ஆப்பிள் எதிர்பார்க்கும் வசதிகள் எதுவும் தற்போது சரியாக பின்பற்றப்படுவதில்லை. பணியிடத்தில் மோசமான நிலையை காரணம் காட்டி ஊழியர்கள் போராட்டம் நடத்திய சம்பவங்கள் முன்னதாக அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில் இது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு ஆப்பிள் உற்பத்தியாளரான பாக்ஸ்கான் ஐபோன் 14 இந்திய உற்பத்தியை சீன யூனிட்கள் விற்பனைக்கு வந்த பின் துவங்க முடிவு செய்துள்ளது.
இந்திய சந்தையில் ஐபோன் மாடல்களுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை அடுத்து உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாகவும் இந்தியா விளங்குகிறது. இதை கொண்டு ஐபோன் விற்பனையை பன்மடங்கு அதிகரித்துக் கொள்ள ஆப்பிள் திட்டமிட்டு வருகிறது.
- சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இருவித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A53 5ஜி ஸ்மார்ட்போன் விலையை இந்தியாவில் அதிரடியாக குறைத்து இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி என இருவித ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்போது கேலக்ஸி A53 5ஜி மாடலின் விலையில் ரூ. 3 ஆயிரத்து 500 குறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது நிரந்தர விலை குறைப்பா அல்லது தற்காலிகமான ஒன்றா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மாற்றப்பட்ட புதிய விலை சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான், ப்ளிப்கார்ட், விஜய் சேல்ஸ் மற்றும் க்ரோமா உள்ளிட்ட தளங்களில் மாற்றப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A53 5ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 34 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 ஆகும்.

விலை குறைப்பின் படி இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது முறையே ரூ. 31 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 32 ஆயிரத்து 999 என மாற்றப்பட்டு விட்டது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் சாம்சங் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து அசத்தல் தள்ளுபடி பெறலாம்.
சிறப்பம்தங்களை பொருத்தவரை கேலக்ஸி A53 5ஜி மாடலில் 6.5 இன்ச் இன்பினிட்டி ஒ sAMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், எலிவேடிங் கேமரா மாட்யுல், 64MP பிரைமரி கேமராவுடன், நான்கு கேமரா சென்சார்கள், 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
- நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடல் போன் 1 சமீபத்தில் விற்பனைக்கு வந்தது.
- இந்த மாடலுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவது பற்றி அந்நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது.
நத்திங் போன் 1 ஆண்ட்ராய்டு 13 அப்டேட் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போனில் உள்ள மென்பொருளை முதலில் சரி செய்ய முடிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து நத்திங் போன் 1 மாடலுக்கு அடுத்தடுத்து மென்பொருள் அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
முதல் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது முதல் நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்த செய்யும் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

"போன் 1 பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து கடினமான உழைப்பை கொடுத்து வருகிறோம். ஆண்ட்ராய்டு 13 -ஐ பொருத்தவரை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் நத்திங் போன் பயனர்கள், இதனை பெறுவர்."
"புது அப்டேட் வெளியிடும் முன் நத்திங் ஹார்டுவேருக்கு இணையாக மென்பொருள் அனுபவத்தை வழங்க முடிவு செய்து இருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும்," என தனியார் நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில் நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட நத்திங் ஓஎஸ் 1.1.3 அப்டேட்டில் அந்நிறுவனம் ஸ்மார்ட்போனில் ஏராளமான புது அம்சங்கள், பிழை திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடு மற்றும் கேமரா மேம்படுத்தல் போன்றவற்றை வழங்கி இருக்கிறது. இந்த அப்டேட் 64.33 எம்பி அளவு கொண்டது ஆகும்.
- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
- சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 43 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிக்சல் 6a மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எனினும், பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை அமேசான் தளத்தில் சற்றே குறைந்த விலையில் வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் பிக்சல் 6a விலை ரூ. 37 ஆயிரத்து 710 என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ப்ளிப்கார்ட் விலையை விட ரூ. 5 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும். பல்வேறு மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை ரூ. 37 ஆயிரம் அல்லது ரூ. 38 ஆயிரம் விலையிலேயே விற்பனை செய்து வருகின்றன.
அமேசான் தளத்தில் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாங்குவோர் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அமேசான் தளத்தில் வாங்கும் போது பிக்சல் 6a ஸ்மாரட்போனிற்கு வாரண்டி எதுவும் வழங்கப்படாது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
விலை குறைவாக கிடைப்பதால், விற்பனையாளர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட யூனிட்டையும் விற்பனை செய்யும் வாய்ப்புகள் அதிகம். இந்த ரிஸ்க்-களை எடுக்க தயார் எனில், அமேசான் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.
- ஐபோன், ஐபேட் மற்றும் மேக் சாதனங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த வாரம் அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருந்தது.
- அப்டேட் வெளியானதன் பின்னணியில் இப்படியொரு காரணம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹேக்கர்கள் சாதனத்தை முழுமையாக இயக்க வழி செய்யும் பாதுகாப்பு குறைபாடு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் போன்ற சாதனங்களில் தீர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சினையில் பயனர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆப்பிள் நிறுவனம் இரண்டு செக்யுரிட்டி அப்டேட்களை வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு பிரச்சினை குறித்த தகவல் முதலில் வெளியாகமல் தான் இருந்தது.

எனினும், அப்டேட் வெளியிட்டதாக ஆப்பிள் அறிவித்த தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது. ஆப்பிள் வெளியிட்ட தகவல்களில், இந்த பாதுகாப்பு பிழையானது ஹேக்கர்களுக்கு சாதனத்தை முழுமையாக இயக்க செய்வதற்கான வசதியினை வழங்கி விடும். இதன் மூலம் அவர்கள் பயனர்கள் சாதனங்களில் எந்த மென்பொருளையும் இயக்க முடியும், என சோஷியல் ப்ரூஃப் செக்யுரிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரக்கேல் டோபாக் தெரிவித்தார்.
ஐபோன் 6எஸ் மற்றும் அதன் பின் வெளியான மாடல்களை பயன்படுத்துவோர் தங்களின் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என செக்யுரிட்டி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐபேட் ஜென் 5 மற்றும் அதன் பின் வெளியான மாடல்கள், அனைத்து ஐபேட் ப்ரோ மாடல்கள் மற்றும் ஐபேட் ஏர் 2, மேக் ஒஎஸ் மாண்டெரி கொண்டு இயங்கும் அனைத்து மேக் கம்ப்யூட்டர்களும் இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளன.
- ஆப்பிள் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஐபேட் மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த ஐபேட் மாடல் ரிடிசைன் செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து அக்டோபர் மாத வாக்கில் முற்றிலும் புதிய ஐபேட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புது ஐபேட் மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் பத்தாவது தலைமுறை எண்ட்ரி லெவல் ஐபேட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபேட் மாடல் குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும். 10-ஆம் தலைமுறை ஐபேட் மாடல் உற்பத்தி துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபேட் மாடல் ஆப்பிள் ஏ14 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த டேப்லெட் மாடல் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இது அளவில் 10.5 இன்ச், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பேக் பேனலில் கேமரா பம்ப், ஹோம் பட்டன் மற்றும் டச் ஐடி உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது விற்பனை செய்யப்படும் 9-ம் தலைமுறை ஐபேட் மாடலில் 10.2 இன்ச் டிஸ்ப்ளே, ஏ13 பயோனிக் சிப், 12MP பிரைமரி கேமரா, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- விஎல்சி மீடியா பிளேயரை உருவாக்கி நிர்வகித்து இருக்கும் வீடியோ லேன், இந்தியாவில் விஎல்சி வலைதளம் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
- இந்த மல்டிமீடியா பிளேயர் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.
தொண்டு நிறுவனமான வீடியோலேன் தனது விஎல்சி மீடியா பிளேயர் இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. பாரிஸ் சார்ந்த வீடியோலேன் இந்தியாவில் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் தனது அதிகாரப்பூர்வ வலைதளம் முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த வலைதளம் எதற்காக முடக்கப்பட்டது என்ற காரணம் மர்மமாகவே உள்ளது.
இது குறித்து டிஜிட்டல் லிபர்டீஸ் அமைப்பு சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வலைதளம் முடக்கப்பட்டதற்கான காரணம் கேட்கப்பட்டது. இதில் விஎல்சி வலைதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதற்கான காரணம் பற்றி அரசுக்கு எதுவும் தெரியாது என பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மல்டிமீடியா பிளேயர் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.
விஎல்சி மீடியா பிளேயருக்கான ஒபன் சோர்ஸ் வலைதளம் இந்தியாவில் பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து முடக்கப்பட்டு இருக்கிறது என வீடியோலேன் தலைவர் மற்றும் மூத்த டெவலப்பர் ஜீன்-பேப்டிஸ்ட் கெம்ப் தெரிவித்து இருக்கிறார். சில இணைய சேவை வழங்கும் (ISP) நிறுவனங்கள் வலைதளத்தை முடக்கி உள்ளன என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
"நாங்கள் இந்திய அரசிடம் கேட்டோம், ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. நாங்கள் சரியான இடத்தில் கேட்கவில்லை என தோன்றுகிறது. எப்படி முறையாக கேட்க வேண்டும் என்று எனக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். சில ISP-க்கள் வலைதளத்தை முடக்கி உள்ளன. ஆனால் சில ISP-க்கள் முடக்கவில்லை. இது உண்மை எனில், இவை அரசின் முடிவுக்கு கட்டுப்படவில்லையா?" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன் விலையை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது.
- முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறனை மேம்படுத்தும் அப்டேட் வெளியிடப்பட்டு இருந்தது.
நத்திங் போன் 1 மாடலின் விலை இந்தியாவில் ரூ. 1000 உயர்த்தப்பட்டது. விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். ரூபாய் மதிப்பில் மாற்றம் மற்றும் இதர காரணங்களால் விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது என நத்திங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் நத்திங் போன் 1 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் டிரான்ஸ்பேரண்ட் பேக் பேனல், க்ளிஃப் இண்டர்பேஸ், 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்லாம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.

புதிய விலை விவரங்கள்:
நத்திங் போன் 1 (8 ஜிபி ரேம், 128 ஜிபி) ரூ. 33 ஆயிரத்து 999
நத்திங் போன் 1 (8 ஜிபி ரேம், 256 ஜிபி) ரூ. 36 ஆயிரத்து 999
நத்திங் போன் 1 (12 ஜிபி ரேம், 256 ஜிபி) ரூ. 39 ஆயிரத்து 999
புது அறிவிப்பின் படி நத்திங் போன் 1 மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அம்சங்கள்:
நத்திங் போன் 1 மாடலில் 6.55 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் OLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
- வி நிறுவனத்தின் இரண்டு புது சலுகை பலன்கள் சத்தமின்றி மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.
- அதிக விலையில் கிடைக்கும் இரு சலுகைகளும் தற்போது 75 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்குகின்றன.
வி என்கிற வோடபோன் ஐடியா இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருக்கிறது. மற்ற டெலிகாம் நிறுவனங்களை போன்றே வி நிறுவனமும் அவ்வப்போது சலுகைகளை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது இரண்டு பிரீபெயிட் சலுகை பலன்களை வி மாற்றி இருக்கிறது. புதிய மாற்றத்தின் படி இரு சலுகைகளும் தற்போது கூடுதல் டேட்டா வழங்குகின்றன.
ரூ. 1449 மற்றும் ரூ. 2,889 விலையில் கிடைக்கும் இரண்டு சலுகைகளும் தற்போது அதிக பலன்களை வழங்குகிறது. இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க வி முடிவு செய்து இருக்கிறது. ஏற்கனவே இந்த சலுகைகள் வி ஹீரோ அன்லிமிடெட் பலன்களுடன் கிடைக்கின்றன.

இந்த நிலையில், கூடுதல் டேட்டாவும் சேர்க்கும் பட்சத்தில் இந்த சலுகை மேலும் வலுவானதாக மாறி இருக்கிறது. இத்துடன் இந்த இரு சலுகைகளும் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்குவதோடு, நீண்ட நாள் வேலிடிட்டியும் வழங்கி வருகின்றன.
மாற்றப்பட்ட பலன்கள்:
வி ரூ. 1449 மற்றும் ரூ. 2889 பிரீபெயிட் சலுகைகள் தற்போது 75 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கும் வகையில் மாற்றப்பட்டு உள்ளன. தற்போது இந்த கூடுதல் டேட்டா பயனர் அக்கவுண்டில் சேர்க்கப்பட்டு விடும்.
வி ரூ. 1449 சலுகை ஆறு மாதங்கள் அல்லது 180 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இது தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் போன்ற சேவைகளை வழங்குகிறது. இத்துடன் 50 ஜிபி கூடுதல் டேட்டாவும் இதே சலுகையில் வழங்கப்படுகிறது.
ரூ. 2889 வி சலுகையில் முந்தைய ரூ. 1449 வழங்கியதை போன்ற பலன்களே கிடைக்கிறது. எனினும், இந்த சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இத்துடன் இந்த சலுகை 75 ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற்று இருக்கிறது.
இது மட்டுமின்றி வி பிரீபெயிட் சலுகைகளில் வி ஹீரோ அன்லிமிடெட் ஆஃபர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இது வீக்எண்ட் டேட்டா ரோல் ஓவர், டேட்டா டிலைட், பின்ஜ் ஆல் நைட் போன்று ஏராளமான பலன்களை வழங்குகிறது. வீக்எண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகையில் பயனர்கள் வார நாட்களில் பயன்படுத்தாமல் விட்ட டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பின்ஜ் ஆல் நைட் சலுகை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா டிலைட்ஸ் சலுகை ஒவ்வொரு மாதமும் அவசர கால பயன்பாட்டிற்காக 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
- சியோமி நிறுவனத்தின் மிக்ஸ் போல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது.
- முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சியோமி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் ரெட்மி K50 எக்ஸ்டிரீம் எடிஷன், சியோமி மிக்ஸ் போல்டு 2 ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. பெயருக்கு ஏற்றார் போல் மிக்ஸ் போல்டு 2 அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சியோமி மிக்ஸ் போல்டு மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இன்று மிக்ஸ் போல்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை சீனாவில் நடைபெற்றது. விற்பனை துவங்கிய ஐந்தே நிமிடங்களில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக சியோமி அறிவித்து இருக்கிறது. எனினும், இந்த விற்பனையில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

அம்சங்களை பொருத்தவரை சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடலில் 8.02 இன்ச் சாம்சங் Eco² OLED 120Hz LTPO 2.0 மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற ஸ்கிரீன் 6.56 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED பேனல் ஆகும். இது டால்பி விஷன் மற்றும் HDR 10+ சப்போர்ட், வெளிப்புற ஸ்கிரீனுக்கு கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடல் பிளாக் மற்றும் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 250 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 11 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 645 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.






