என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • சாம்சங் நிறுவன பயனர் விவரங்கள் களவாடப்பட்டதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • இந்த விவகாரம் குறித்து சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பதில் அளித்து இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் பயனர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆன விவகாரத்தில் வெளிப்படையாக பதில் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அரங்கேறிய சைபர் செக்யுரிட்டி சம்பவத்தில் சாம்சங் பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட தகவல்களான பிறந்த, பிறந்த தேதி மற்றும் இதிர விவரங்கள் இணையத்தில் வெளியாகி விட்டன.

    எனினும், இதை விட மிக முக்கிய தகவல்களான கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயனர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துவங்கி விட்டதாக சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த விவகாரம் பற்றி சாம்சங் நிறுவனம் பொது வெளியில் தகவல் வெளியிட்டு உள்ளது.


    "சாம்சங்-ஐ பொருத்தவரை பாதுகாப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாங்கள் சமீபத்தில் சைபர் செக்யுரிட்டி சம்பவத்தை கண்டறிந்து இருக்கிறோம். இதில் பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 2022 மாத வாக்கில் சாம்சங் அமெரிக்க சிஸ்டம்களில் இருந்து தகவல்களை இயக்கி இருக்கின்றன. ஆகஸ்ட் 4, 2022 வாக்கில் சில பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம்," என சாம்சங் தனது வலைதள பதிவில் தெரிவித்து இருக்கிறது.

    பாதிக்கப்பட்ட சிஸ்டம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் துவங்கி விட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சைபர்செக்யுரிட்டி நிறுவனம் ஒன்றை நியமித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சோஷியல் செக்யுரிட்டி நம்பர்கள், கிரெடிட், டெபிட் கார்டு நம்பர்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. எனினும், பெயர், தொடர்பு விவரம், பிறந்த தேதி, சாதனம் பதிவு விவரம் உள்ளிட்டவை வெளியாகி இருக்கிறது.

    • இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
    • பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஏர்டெல், ஜியோ மற்றும் வி (வோடபோன் ஐடியா) என இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் நாட்டில் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மிக விரைவில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னமும் 4ஜி சேவையை நாடு முழுக்க வெளியிட திண்டாடி வருகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் வெளியிடப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலின் படி பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் 4ஜி அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.


    திடீரென 4ஜி வெளியீடு தாமதமாக என்ன காரணம் என்றும் டெலிகாம் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிட விசேஷ உபகரணங்களை வாங்க முடியாமல் தவிப்பதாக தெரிவித்து இருக்கிறார். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த உபகரணங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

    உபகரணங்களை வாங்கும் பணிகளை பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு தான் நிறைவு செய்யும். 4ஜி அப்கிரேடு பணிகளில் பிஎஸ்என்எல் உள்நாட்டு தயாரிப்புகளையே பயன்படுத்தும், இதுவே வெளியீட்டு தாமதமாக காரணம் ஆகும். இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் போதே பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளையும் வெளியிட முடியும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    • ட்விட்டர் தளத்தில் எடிட் பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
    • தற்போதைய தகவல்களின் படி ஒரு வழியாக இந்த வசதி வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் எடிட் பட்டன் வழங்குவதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. நிறுவனத்திற்குள் எடிட் பட்டன் டெஸ்டிங் துவங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் விரைவில் எடிட் ட்விட் அம்சத்தை விரைவில் ட்விட்டர் புளூ சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    புதிய எடிட் ட்விட் அம்சம் மூலம் யார் வேண்டுமானாலும், ட்விட் எடிட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ட்விட் செய்த முதல் அரை மணி நேரத்திற்குள் அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.


    இவ்வாறு எடிட் செய்யப்பட்ட ட்விட்களில், உண்மையான பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை உணர்த்தும் ஐகான், டைம்ஸ்டாம்ப் மற்றும் லேபல் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கும். இதன் மூலம் ட்விட்டர் பதிவு எத்தனை முறை எடிட் செய்யப்பட்டு இருக்கிறது, எந்த நேரத்தில் எடிட் செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    ட்விட்டர் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக எடிட் பட்டன் இருந்து வந்த நிலையில், ஒரு வழியாக இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும்.

    • கூகுள் நிறுவனம் ஆய்வாளர்களுக்கு சன்மானம் வழங்கும் புது திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
    • ஆய்வாளர்கள் கண்டறியும் பிழையின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் சார்ந்து சன்மான தொகை வேறுபடும்.

    கூகுள் நிறுவனம் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறிய புது திட்டம் ஒன்றை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் வரையிலான சன்மானம் வழங்கப்பட இருக்கிறது.

    சன்மான தொகை ஆய்வாளர்கள் கண்டறியும் பிழை, அதன் குறிக்கோள் என பல்வேறு அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது. சன்மான தொகை 100 டாலர்களில் துவங்கி அதிகபட்சமாக 31 ஆயிரத்து 337 டாலர்கள் வரை வழங்கப்பட இருக்கிறது. அதிகபட்ச சன்மானம் வழக்கமில்லாத அல்லது வித்தியாசமான பிழைகளுக்கே வழங்கப்படுகிறது. சன்மானம் வழங்கும் புது திட்டம் Open Source Software Vulnerability Rewards Programme என அழைக்கப்படுகிறது.


    உலகின் மிகப்பெரிய ஓபன் சோர்ஸ் மென்பொருள்களை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் விளங்குகிறது. கூகுளின் கோலங், ஆங்குலர் மற்றும் ஃபுகிசியா போன்ற திட்டங்கள் மிக முக்கியமானவை ஆகும். கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது ஓபன் சோர்ஸ் வினியோகத்தின் மீதான தாக்குதல்கள் 650 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

    சொந்தமாக பிழை கண்டறியும் திட்டத்தை அறிவித்து இருப்பதன் மூலம் ஆய்வாளர்கள், ஓபன் சோர்ஸ் திட்டத்தை பாதிக்கும் பிழையை கண்டறிவதற்கு ஏற்ப தகுதியான தொகையை சன்மானமாக பெற்றுக் கொள்ளலாம்.

    • ஐஆர்சிடிசி நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் உணவு ஆர்டர் செய்ய வாட்ஸ்அப்-இல் புது வசதியை வழங்குகிறது.
    • இந்த வசதியை கொண்டு பயணத்தின் போது வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம்.

    இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயில்களில் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம். இதற்கு எந்த விதமான கூடுதல் செயலியையும் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    பயணத்தின் போது பயணிகள் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்தால், ரெயிலில் அமர்ந்து இருக்கும் இருக்கைக்கே ஆர்டர் செய்த உணவு வந்து சேரும். பயணிகள் தங்களின் பிஎன்ஆர் நம்பரை பதிவிட்டு, உணவை முன்பதிவு செய்யலாம். அதன் பின் ஆர்டர் செய்த உணவின் நிலை குறித்து ரியல்-டைம் டிராக்கிங் செய்யலாம். இது குறித்து ஹாப்டிக் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.


    ஐஆர்சிடிசி-இன் சூப் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயிலில் வாட்ஸ்அப் மூலம் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது. இந்த பிளாட்பார்ம் மூலம், ரெயில் பயணத்தின் போது பயணிகள் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதற்கு வாட்ஸ்அப் சாட்பாட் "சிவா" உடன் இணைய +91 7042062070 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின் தங்களின் பிஎன்ஆர் எண்ணை பதிவிட்டு உணவு ஆர்டர் செய்யலாம்.

    சாட்பாட் உங்களின் பயண விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு உணவு எந்த ரெயில் நிலையத்தில் டெலிவரி செய்யப்பட வேண்டும் என கேட்கும். இதன் பின் ஆர்டர் செய்த உணவுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரொக்கம் மூலமாகவோ பணம் செலுத்த முடியும். 

    • ஸ்னாப்சாட் செயலியில் புது அம்சம் வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் தனது வலைதள பதிவில் தெரிவித்து இருக்கிறது.
    • இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனின் இரு கேமராக்களை பயன்படுத்தி பதிவிட முடியும்.

    ஸ்னாப்சாட் செயலியில் டூயல் கேமரா எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனின் ரியர் மற்றும் செல்பி என இரு கேமரா சென்சார்களையும் பயன்படுத்த முடியும்.

    புது அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் பல்வேறு பரிணாமங்களை ஸ்னாப்சாட்டில் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் அனைவரும் மொமண்டில் பங்கேற்க முடியும். டூயல் கேமரா அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் ஸ்னாப்சாட் செயலியை திறந்து கேமரா டூல்பாரில் உள்ள புதிய ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.


    இவ்வாறு செய்த பின் ஸ்னாப், ஸ்டோரிஸ் மற்றும் ஸ்பாட்லைட் வீடியோக்களை உருவாக்குவதற்கான ஆப்ஷனை பார்க்க முடியும். துவக்கத்தில் டூயல் கேமரா அம்சம் நான்கு லே-அவுட்கள் இடம்பெற்று இருக்கும். டூயல் கேமரா அம்சத்துடன் மற்ற ஸ்னாப்சாட் அம்சங்களும் இடம்பெற்று இருக்கும்.

    முதற்கட்டமாக இந்த அம்சம் ஸ்னாப்சாட் ஐஓஎஸ் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஐஒஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டு வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் கூகுளுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    5ஜி சார்ந்த சேவைகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயனர்களுக்கு ஜியோவின் தனியார் 5ஜி ஸ்டாக் மூலம் வழங்க கூகுள் நிறுவனத்தின் மேம்பட்ட கிளவுட் சேவையை பயன்படுத்த இருக்கிறது. இத்துடன் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து தலைசிறந்த தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.


    ஜியோவின் கிளவுட்-ஸ்கேல் டேட்டா செண்டர்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம், 5ஜி எட்ஜ் லொகேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இண்டெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஜியோ தெரிவித்து இருக்கிறது. இதுதவிர எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்களுடன் நல்லுறவு கொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது.

    இத்துடன் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. சர்வதேச அளவில் முன்னணி செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் முதலீடு செய்து இருக்கிறது. ஜியோவுடன் இணைந்து கிளவுட்-நேடிவ், 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என குவால்காம் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ்டியானோ அமோன் தெரிவித்தார்.

    • நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது சலுகைகளை மாற்றியமைக்க முடிவு செய்து இருக்கிறது.
    • இந்தியாவில் விரைவில் குறைந்த விலை புதிய சலுகைகளை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புது சலுகைகள் விலை எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்க விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    புதிய சலுகைகள் அதிக பணம் சேமித்து தரும் வகையில் காணப்படுகின்றன. இதோடு ஏராளமான புது வாடிக்கையாளர்களை சேவைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் நெட்ப்ளிக்ஸ் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகள் விலை 7இல் இருந்து அதிகபட்சம் 9 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 559 முதல் ரூ. 719 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


    அமெரிக்க சந்தையில் தற்போது நெட்ப்ளிக்ஸ் மாதாந்திர சலுகைகள் விலை 9.99 டாலர்களில் தொடங்கி 19.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,239 முதல் ரூ. 1599 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புது சலுகைகள் விலை கணிசமான அளவு குறைவு தான் எனலாம். விலை மட்டுமின்றி விளம்பரங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன.

    அந்த வகையில், ஒரு மணி நேரத்திற்கு நான்கு நிமிடங்கள் வரை விளம்பரங்கள் வரும் என கூறப்படுகிறது. இவை நிகழ்ச்சி தொடக்கம், மத்தியில் வரும் என தெரிகிறது. முந்தைய தகவல்களில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

    நெட்ப்ளிக்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து விளம்பரங்கள் வழங்குவது பற்றி கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்துள்ளன. நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல் மூவிஸ் மற்றும் சீரிஸ் உள்ளிட்டவைகளில் விளம்பரங்கள் இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகள் விலை வித்தியாசமாக இருக்கும். தற்போது நெட்ப்ளிக்ஸ் பேசிக் மொபைல் பிளான் விலை மாதம் ரூ. 149 என தொடங்குகிறது. அந்த வகையில் விளம்பரங்கள் அடங்கிய சலுகைகள் விலை ரூ. 100க்கும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு நீண்ட காலம் வரை அப்டேட் வழங்குவதாக சமீப காலங்களில் அறிவித்து வருகிறது.
    • இந்த வரிசையில் தற்போது ஒன் யுஐ 5.0 பீட்டா 2 வெர்ஷன் வெளியிடும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது.

    சாம்சங் நிறுவனம் ஒன் யுஐ 5 பீட்டா வெர்ஷனை கேலக்ஸி S22 சீரிஸ் சாதனங்களுக்கு இம்மாத துவக்கத்தில் வழங்கி வந்தது. இந்த நிலையில், இரண்டாவது பீட்டா வெர்ஷனை தற்போது அமெரிக்கா, லண்டன் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வழங்கி வருகிறது.

    இந்த அப்டேட் பல்வேறு பிழை திருத்தங்கள், ஸ்பீடு மேம்படுத்தல்கள் மற்றும் சாம்சங் ஸ்டாக் செயலிகளின் ஐகான் உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட ஒன் யுஐ 5.0 பீட்டா அப்டேட் அளவில் 3 ஜிபியாக இருந்தது. தற்போது கிடைக்கும் இரண்டாவது பீட்டா அளவில் 1 ஜிபியாக உள்ளது.


    இந்த பீட்டாவில் ஸ்மார்ட் சஜெஷன்ஸ் எனும் அம்சம் சமீபத்திய செயலிகளை பரிந்துரை செய்வது சிறப்பான அம்சமாக பார்க்கப்படுகிறது. இத்துடன் மெயிண்டனன்ஸ் மோட் கொண்டு ஸ்மார்ட்போனை சரி செய்ய கொடுக்கும் போது தனிப்பட்ட தகவல்களை மறைத்து வைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர பிரைவசி டிடெக்‌ஷன் அம்சத்தையும் சாம்சங் தனது சாதனங்களில் வழங்கி வருகிறது. புகைப்படம், கிரெடிட் கார்டு, ஐடி கார்டு அல்லது பாஸ்போர்ட் என மிக முக்கிய தகவல்களை பரிமாறும் போது அவசியம் இதனை அனுப்ப வேண்டுமா என்பதை கேட்கும். பிக்ஸ்பி ரொடின்ஸ் அம்சத்தில் தற்போது லைப்ஸ்டைல் மோட் சேர்க்கப்பட்டு உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை மிக விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 2007 ஆம் ஆண்டு வாக்கில் முதல் ஐபோன் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தலைமுறை 2007 ஐபோன் மாடல் 35 ஆயிரம் டாலர்கள், ரூ. 28 லட்சம் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் பிரிக்கப்படாத 2007 ஐபோன் மாடல் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. 2007 ஜனவரி 9 ஆம் தேதி அப்போதைய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை அறிமுகம் செய்தார்.

    முதல் தலைமுறை ஐபோன் மாடலில் தொடுதிரை வசதி, ஐபாட், கேமரா, பிரவுசிங் வசதி மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஐபோன் அறிமுக நிகழ்வு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேக்வொர்ல்டு கன்வென்ஷனில் நடைபெற்றது. இந்த மாடலில் தொடுதிரை, 2MP கேமரா, விஷூவல் வாய்ஸ் மெயில், வெப் பிரவுசர் போன்ற அம்சங்கள் உள்ளன.


    2007 ஜூன் மாத வாக்கில் ஐபோன் மாடல் விற்பனைக்கு வந்தது. ஐபோன் 4ஜிபி மாடல் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 39 ஆயிரத்து 884 என்றும் 8 ஜிபி மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 47 ஆயிரத்து 877 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆர்ஆர் ஆக்‌ஷன் நிறுவனம் சிறிதளவும் பிரிக்கப்படாத ஐபோன் பாக்ஸ்-ஐ ஏல விற்பனைக்கு அறிவித்து இருந்தது. இந்த ஐபோன் ஸ்கிரீனில் 12 ஐகான்கள் இடம்பெற்று இருந்தது. ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற ஏலம் "ஆப்பிள், ஜாப்ஸ் மற்றும் கம்ப்யுட்டர் ஹார்டுவேர்" தலைப்பில் நடைபெற்றது. இதில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

    இதே ஏலத்தில் ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியக் தனது கையால் சோல்டரிங் செய்த 1 சர்கியுட் போர்டு, 6 லட்சத்து 77 ஆயிரத்து 196 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இத்துடன் திறக்கப்படாத முதல் தலைமுறை ஐபாட் 5ஜிபி மாடல் 25 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 

    • இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
    • 5ஜி சேவையை வெளியீடு அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என மத்திய மந்திரி தெரிவித்து இருக்கிறார்.

    இந்தியாவில் விரைவில் வர்த்தக ரீதியிலான 5ஜி சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. இது குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறும் போது, இந்தியாவில் 5ஜி சேவைகள் அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார்.

    முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் எப்போது 5ஜி சேவைகள் வெளியாகும் என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது.


    5ஜி சேவையை வெளியிடுவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட டெலிகாம் வட்டாரங்களில் சேவையை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளன. அந்த வகையில், அரசு திட்டம் சரியாக இருப்பின் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் வழங்கும் நகரங்கள் பட்டியலை கீழே காணலாம்.

    ஆமதாபாத்

    பெங்களூரு

    சண்டிகர்

    சென்னை

    டெல்லி

    காந்திநகர்

    குருகிராம்

    ஐதராபாத்

    ஜாம்நகர்

    கொல்கத்தா

    லக்னோ

    மும்பை

    பூனே

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நகரங்களில் 5ஜி சேவை முதற்கட்டமாக வெளியிடப்படும் என எதிர்பாக்கலாம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் வெளியிடும் என தெரிகிறது. வி நிறுவனம் முதலில் டெல்லி பகுதியில் 5ஜி சேவைகளை வழங்க இருப்பதாக தனது பயனர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் 5ஜி சேவைகளை வழங்கும் வகையிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி உள்ளது.

    • இந்தியாவில் ஆண்ட்ரய்டு 13 அப்டேட் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதே போன்று ஐகூ ஸ்மார்ட்போனிற்கும் புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

    விவோ நிறுவனம் தனது புதிய X80 ப்ரோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கி வருகிறது. இதே போன்று ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கும் புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது. விவோ X80 ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராய்டு 13 சார்ந்த பன்டச் ஒஎஸ் 13 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

    இரு நிறுவனங்களும் புது ஆண்ட்ராய்டு அப்டேட் பற்றிய தகவலை தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள அக்கவுண்ட்களில் தெரிவித்து உள்ளன. பிரிவியூ திட்ட முறையில் மிக குறுகிய பயனர்களுக்கு மட்டும் இந்த அப்டேட் முதற்கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இரு டாப் எண்ட் மாடல்களில் ஒன்றை பயன்படுத்தி வருபவர்கள் இந்த அப்டேட் பெற முடியும்.


    இதற்கு பயனர்கள் ஆண்ட்ராய்டு 13 பிரிவியூ திட்டத்தில் இணைய வேண்டும். ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருப்பவர்கள் புது அப்டேட் பெற்று இருப்பர். இவ்வாறு செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் அப்டேட்ஸ் பகுதிக்கு சென்று புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

    விவோ X80 ப்ரோ மாடலில் 12.0.12.7 ஃபர்ம்வேர் வெர்ஷன் உள்ளது. ஐகூ 9 ப்ரோ மாடலில் ஃபர்ம்வேர் வெர்ஷன் 12.0.5.8 இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஆண்ட்ராய்டு 13 பிரிவியூ திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம். நாடு முழுக்க 500 விவோ X80 ப்ரோ மற்றும் 500 ஐகூ 9 ப்ரோ பயனர்களுக்கு இந்த பிரிவியூ திட்டம் வழங்கப்படுகிறது.

    ×