ஐபோனுக்கு ரூ. 29 ஆயிரம் வரை விலை குறைப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடியாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் 14 சீரிஸ் வெளியிடப்பட இருப்பதை அடுத்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐபோனுக்கு ரூ. 29 ஆயிரம் வரை விலை குறைப்பு
Published on

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புது ஐபோன் மாடல்கள் வெளியாகும் முன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு 128 ஜிபி ஐபோன் 13 மாடல் தற்போது ரூ. 69 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 256 ஜிபி விலை ரூ. 79 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஐபோன் 13 மாடலுக்கு அசத்தலான எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

எக்சேன்ஜ் சலுகையில் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக், ஐந்து சதவீதம் வரை தள்ளுபடி ரூ. 1000 கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் பிராசஸர், 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன்களின் விலை அதன் முந்தைய மாடலை விட 50 டாலர்கள் வரை விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 14 மாடலின் விலை 750 டாலர்கள் என துவங்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com