என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் சார்பில் அதிக சலுகை வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
    • இந்த சிறப்பு விற்பனைக்கான தேதி பற்றிய அறிவிப்புகளை வலைதள நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

    ப்ளிப்கார்ட் தளத்தின் பிளாக்‌ஷிப் நிகழ்ச்சி "தி பிகே பிலேலியன் டேஸ்" செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் ஒன்பது ஆண்டாக ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை துவங்கும் இதே தேதியில் தான் அமேசான் நிறுவனத்தின் "கிரேட் இந்தியன் பெஸ்டிவல்"சிறப்பு விற்பனையும் துவங்குகிறது.

    ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது பல லட்சம் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் கிரானா வினியோகஸ்தர்கள் ஒருங்கிணைக்கிறார்கள். இந்த விற்பனையின் மூலம் அனைவருக்கும் பண்டிகை காலத்தை மகிழ்ச்சியானதாக மாற்றுகிறோம். சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் செயலியில் பிரத்யேக சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.


    அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் துவங்கும் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விற்பனையில் 2 ஆயிரம் புது பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. முன்னணி பிராண்டுகளான சாம்சங், புமா, லோ-ரியல், பிலிப்ஸ், ஹவெல்ஸ், ஹீரோ சைக்கிள்ஸ், போஷ் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை அறிமுகம் செய்கின்றன. அமேசான் தளத்தில் வாடிக்கையாளர்கள் எட்டு மொழிகளில் தங்களுக்கு விருப்பமுள்ள பொருட்களை வாங்க முடியும்.


    இது மட்டுமின்றி பொருட்களை வாங்கும் போது ரூ. 7 ஆயிரத்து 500 மதிப்பிலான ரிவார்டுகளை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு. இதற்கு பயனர்கள் அமேசானில் ஷாப்பிங் செய்வதற்கு அமேசான் பே மூலம் பணம் செலுத்தினாலே போதும். இது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சமயத்தின் போது செல்லுபடியாகும். முன்னதாக சிறப்பு விற்பனை துவங்க இருப்பதை உணர்த்தும் டீசர்களை அமேசான் வெளியிட்டு இருந்தது.

    அமேசான் வழக்கப்படி பிரைம் சந்தா வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு விற்பனை முன்கூட்டியே துவங்கி விடும். இந்த விற்பனையில் மொபைல் போன் மாடல்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் தள்ளுபடி, டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வங்கி சார்ந்த சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
    • புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 30 அல்ட்ரா பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா மாடலில் 6.67 இன்ச் pOLED FHD+ எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    200MP பிரைமரி கேமரா, 16-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இத்துடன் 50MP பிரைமரி கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 12MP டெலிபோட்டோ கேமரா, 60MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இவை 4K HDR+ ரெக்கார்டிங், 8K 30fps வீடியோ ரெக்கார்டிங் வசதிகளை வழங்குகின்றன.


    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை வழங்குகிறது. இத்துடன் 4610 எம்ஏஹெச் பேட்டரி, 125 வாட் பாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அம்சங்கள்:

    6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 144Hz OLED எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிளஸ் பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யுஐ 4.0

    டூயல் சிம் ஸ்லாட்

    200MP பிரைமரி கேமரா

    50MP அல்ட்ரா வைடு கேமரா

    12MP டெலிபோட்டோ கேமரா

    60MP செல்பி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    4610 எம்ஏஹெச் பேட்டரி

    125 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

    50 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங்

    10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ல்மார்ட்போன் ஸ்டார்லைட் வைட் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 22 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் துவங்குகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 54 ஆயிரத்து 999 எனும் விலையில் விற்பனைக்கு வருகிறது. இதன் உண்மை விலை ரூ. 59 ஆயிரத்து 999 ஆகும்.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். மேலும் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ. 14 ஆயிரத்து 699 மதிப்பிலான பலன்களை பெறலாம். 

    • ஆப்பிள் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
    • புது ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் முன்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு துவங்கியது. ஐபோன் 14 பிளஸ் தவிர ஐபோன் 14 சீரிசில் உள்ள மற்ற மாடல்களின் விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. ஐபோன் 14 பிளஸ் விற்பனை அக்டோபர் மாத வாக்கில் துவங்குகிறது. கடந்த கால வழக்கப்படி புதிய ஐபோன் 14 சீரிஸ் உலக சந்தையில் சம அளவு வரவேற்பு மற்றும் எதிர்கருத்துக்களை விமர்சனமாக பெற்று வருகிறது.

    புதிய ஐபோன் 14 சீரிஸ் விலை இந்தியாவில் ரூ. 79 ஆயிரத்து 900 என துவங்குகிறது. டாலர் மதிப்பு காரணமாக அமெரிக்காவில் புது ஐபோன்களின் விலை அப்படியே வைக்கப்பட்டு விட்டது. எனினும், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் புது ஐபோன் மாடல்கள் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில நாடுகளில் பழைய ஐபோன் மாடல்கள் விலையும் சமீபத்தில் உயர்த்தப்பட்டது.


    இந்திய சந்தையில் ஐபோன் மாடல்களின் விலையிலேயே 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி மற்றும் 22 சதவீதம் இறக்குமதி வரி உள்ளிட்டவை சேர்த்து வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது பற்றி ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. எனினும், முதல் ஆறு மாத காலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐபோன்களே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதன் காரணமாக அமெரிக்காவில் ஐபோன் 14 சீரிஸ் விலை குறைவு தான். இதே போன்று உலகின் மேலும் சில நாடுகளில் ஐபோன் 14 சீரிஸ் விலை குறைவாக கிடைக்கிறது. அந்த வகையில் குறைந்த விலையில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செய்யப்படும் ஐந்து நாடுகள் எவை என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    அமெரிக்கா:

    ஐபோன் 14 799 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 601

    ஐபோன் 14 பிளஸ் 899 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 71 ஆயிரத்து 561

    ஐபோன் 14 ப்ரோ 999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 79 ஆயிரத்து 920

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1099 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 491

    குறிப்பு: இந்த விலை அமெரிக்க மாநில வரிகள் சேர்க்கப்படாமல் கணக்கிடப்பட்டவை ஆகும்.

    கனடா:

    ஐபோன் 14 1099 CAD இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 601

    ஐபோன் 14 பிளஸ் 1249 CAD இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 222

    ஐபோன் 14 ப்ரோ 1399 CAD இந்திய மதிப்பில் ரூ. 85 ஆயிரத்து 376

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1549 CAD இந்திய மதிப்பில் ரூ. 94 ஆயிரத்து 530

    ஹாங் காங்:

    ஐபோன் 14 8599 HK இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 262

    ஐபோன் 14 பிளஸ் 7699 HK இந்திய மதிப்பில் ரூ. 78 ஆயிரத்து 129

    ஐபோன் 14 ப்ரோ 8599 HK இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 262

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 8599 HK இந்திய மதிப்பில் ரூ. 95 ஆயிரத்து 380

    சிங்கப்பூர்:

    ஐபோன் 14 1299 SGD இந்திய மதிப்பில் ரூ. 73 ஆயிரத்து 893

    ஐபோன் 14 பிளஸ் 1489 SGD இந்திய மதிப்பில் ரூ. 85 ஆயிரத்து 270

    ஐபோன் 14 ப்ரோ 1649 SGD இந்திய மதிப்பில் ரூ. 93 ஆயிரத்து 802

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1799 SGD இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 02 ஆயிரத்து 335

    ஆஸ்திரேலியா:

    ஐபோன் 14 1399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 312

    ஐபோன் 14 பிளஸ் 1579 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 86 ஆயிரத்து 131

    ஐபோன் 14 ப்ரோ 1749 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 95 ஆயிரத்து 404

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1899 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரத்து 586

    • ஆப்பிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன் தான் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
    • புதிய ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு இந்தியாவில் நேற்று (செப்டம்பர் 09) மாலை துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன் தான் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு இந்தியாவில் நேற்று (செப்டம்பர் 09) மாலை துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபோன் சீரிசின் அனைத்து மாடல்களிலும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இவற்றில் எத்தகைய மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளன.


    ஐபோன்களில் வழங்கப்படும் ரேம் வகை மற்றும் திறன் பற்றி ஆப்பிள் எப்போதும் விளம்பரப்படுத்துவதில்லை. புது ஐபோன்கள் வெளியீட்டுக்கு முன் வெளியான தகவல்களில், ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் 6 ஜிபி LPDDR5 ரேம், ஐபோன் 14 மாடல்களில் 6 ஜிபி LPDDR4x ரேம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தற்போது தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களிலும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான நான்கு ஐபோன் 13 மாடல்களிலும் LPDDR4X ரேம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், புது ஐபோன்களில் வழங்கப்பட்டு இருக்கும் ரேம் பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. புது ஐபோன்களின் டியர்-டவுன் வீடியோ வெளியாகும் போது அதில் இருக்கும் அனைத்து பாகங்கள் (ரேம் திறன் உள்பட) தெரியவவரும். அந்த வகையில் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டும் LPDDR5 ரேம் வழங்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • பிரிட்டன் ராணி எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டில் பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் ராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாளை மறுநாள் தேசி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட இருக்கிறது.

    பிரட்டனில் நீண்ட காலம் அரசியாக இருந்து சாதனை படைத்த ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரசு குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ராணி எலிசபெத் மறைவுக்கு பிரிட்டனில் பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகள் மற்றும் அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறது. இரங்கல் செய்தியுடன் ராணி எலிசபெத் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறது.


    ஆப்பிள் வலைதளத்தில் உள்ள ராணி எலிசபெத் புகைப்படத்தை 1952 ஆம் ஆண்டு டோரோத்தி வைல்டிங் எடுத்தார் என கூறப்படுகிறது. ராணி எலிசபெத் மறைவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப வழக்கப்படி அரசி அல்லது மன்னர் உயிரிழந்தார் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வாரிசு பதவி ஏற்க வேண்டும். அதன்படி இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராணி எலிசபெத் உடலுக்கு உலக தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர்.

    ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையில் நடைபெற இருக்கிறது. அங்கு ராணியின் உடல் மூன்று நாட்களுக்கு வைக்கப்பட இருக்கிறது. அந்த மூன்று நாட்களும் பொதுமக்கள் தினமும் 23 மணி நேரம் அஞ்சலி செலுத்தலாம்.

    • ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
    • புது ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு இந்தியாவில் இன்று (செப்டம்பர் 9) மாலை துவங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. புது ஐபோன் 14 சீரிஸ் முன்பதிவு இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இன்று (செப்டம்பர் 9) மாலை துவங்குகிறது. இவற்றின் விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஐபோன் 14 மாடல்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் புதிய ஐபோன் 14 சீரிஸ் இந்திய உற்பத்தி இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன் 14 மாடல்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. ஏற்கனவே இதே தகவலை கணிக்கும் வகையில் ஆய்வு அறிக்கை வெளியாகி இருந்தது.


    ஐபோன் 14 சீரிஸ் சென்னை அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் உற்பத்தி ஆலையில் நடைபெற இருக்கிறது. இதே ஆலையில் தான் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 2022 நான்காவது காலாண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் 5 லட்சத்து 70 ஆயிரம் ஐபோன்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் 3 லட்சத்து 70 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்து இருந்தது.

    2022 முழுக்க ஆப்பிள் நிறுவனம் 11 முதல் 12 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரன் மற்றும் பெகட்ரான் என மூன்று உற்பத்தியாளர்களிடம் இந்தியாவில் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. உலகளவில் ஆப்பிள் ஐபோன் வினியோகத்தில் 5 முதல் 7 சதவீத யூனிட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இவை உள்நாட்டு தேவையில் 85 சதவீதத்தை பூர்த்தி செய்யும்.

    • வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கும் சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • இது அந்நிறுவனத்தின் எண்ட்கி லெவல் போஸ்ட்பெயிட் சலுகையாக அறிமுகமாகி இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியா ரூ. 399 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையுடன் 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆன்லைனில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் போனஸ் டேட்டா வழங்கப்படும்.


    இது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் சலுகை ஆகும். இந்த சலுகை புதிதாக போஸ்ட்பெயிட் சிம் வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இது எண்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகை ஆகும். ரூ. 399 போஸ்ட்பெயிட் சலுகையில் 40 ஜிபி டேட்டா, ஆன்லைனில் சிம் வாங்குவோருக்கு 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

    இத்துடன் 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் சலுகை, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வி மூவிஸ் மற்றும் டிவி செயலியின் விஐபி சந்தா, ஆறு மாதத்திற்கு விளம்பரம் இல்லா ஹங்காமா மியூசிக், ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. வி போஸ்ட்பெயிட் ரூ. 399 சலுகையில் வரிகள் சேர்க்கப்படவில்லை.

    • ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் மற்றும் ஐபோன் மாடல்களுடன் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் புது ஏர்பாட்ஸ் ப்ரோ ஏராளமான அப்டேட்களை பெற்று இருக்கிறது.

    ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆப்பிள் வயர்லெஸ் இயர்பட்ஸ் அதன் அளவுக்கு அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. புது இயர்பட்ஸ் தோற்றத்தில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் உள்புற அம்சங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ள H2 பிராசஸர் இருமடங்கு மேம்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ வசதிகளை வழங்குகிறது. இத்துடன் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பாடல்களை மாற்றுவது, வால்யும் அட்ஜஸ்ட் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். புது இயர்பட்ஸ் உடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சிறிய ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.


    ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ அம்சங்கள்:

    ஹை டைனமிக் ரேன்ஜ் ஆப்ளிபையர் கொண்ட ஆப்பிள் டிரைவர்

    ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்

    ப்ளூடூத் 5.3 வயர்லெஸ் கனெக்டிவிட்டி

    தனித்துவம் மிக்க ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங்

    இன் கேஸ் ஸ்பீக்கர், கான்வெர்சேஷன் பூஸ்ட், பிரெசிஷன் ஃபைண்டிங்

    அடாப்டிவ் டிரான்ஸ்பேரன்சி, அடாப்டிவ் இகியூ

    ஆப்பிள் H2 பிராசஸர்

    சார்ஜிங் கேசில் ஆப்பிள் U1 சிப்

    அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கான பிளேபேக் டைம்

    மேக்சேப் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கான பிளேடைம்

    ஐந்து நிமிட சார்ஜில் ஒரு மணி நேரம் பயன்படுத்தும் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 26 ஆயிரத்து 900 ஆகும்.

    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்கள் விற்பனையை நிறுத்த பிரேசில் அரசாங்கம் உத்தரவிட்டு இருக்கிறது.
    • பயனர்களுக்கு முழுமையற்ற சாதனங்களை விற்பனை செய்வதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

    பிரேசில் நாட்டு அரசாங்கம் சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்யக்கூடாது என ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் முழுமை பெறாத நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு மேலும் தெரிவித்து உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.38 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து இருப்பதோடு சார்ஜர் இல்லாமல் ஐபோன் 12 மற்றும் அதற்கு பின் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களின் விற்பனையை நடத்தக் கூடாது என பிரேசில் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மிகவும் அத்தியாவசியமான சாதனம் இன்றி ஐபோன் விற்பனை செய்யப்பட்டு வந்தது என அந்நாட்டு அரசிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்வதால் காற்று மாசு குறைக்கப்படுவதாக கூறும் ஆப்பிள் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சார்ஜர் இல்லாமல் ஸ்மார்ட்போன் விற்பனை செய்வதால் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு என்பதை உணர்த்தவும் எந்த ஆதாரமும் இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    இன்று (செப்டம்பர் 7) இரவு நடைபெற இருக்கும் ஃபார் அவுட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பிரேசில் அரசு இத்தகைய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இது பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    • லாவா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் பிரச்சினைகளை வாடிக்கையாளர் வீடுகளுக்கே சென்று சரி செய்ய இருக்கிறது.
    • லாவா அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த வசதி பொருந்தும்.

    லாவா நிறுவனம் "Service at Home" பெயரில் புது திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டம் இனி நாடு முழுக்க சுமார் 9 ஆயிரம் அஞ்சல் குறியீட்டு பகுதிகளில் செயல்பாட்டு வருகிறது. மேலும் லாவா இதன் பின் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

    முன்னதாக இதே திட்டம் லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. புது அறிவிப்பின் படி இந்த திட்டம் லாவா அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பொருந்தும். போனிற்கான வாரண்டி இருக்கும் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும்.

    இதனை பயன்படுத்த லாவா அதிகாரப்பூர்வ வலைதளம், கால் செண்டர், லாவா கேர் ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மற்றும் ஸ்மார்ட்போன் பெட்டியில் உள்ள கியுஆர் கோட் ஸ்கேன் செய்து தொடர்பு கொள்ளலாம். குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் கோரிக்கை ஏற்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் அதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

    சிறிய மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் பிரச்சினைகள் பயனர் வீட்டிலேயே சரி செய்து தரப்படும். பெரிய பிரச்சினைகளை சரி செய்ய ஸ்மார்ட்போன் எடுத்துச் செல்லப்பட்டு சரி செய்த பின் பயனர் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும். இந்த திட்டத்தில் பயனர் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக பிக்கப் மற்றும் டெலவரி செய்யப்படுகிறது. இத்துடன் ஸ்கிரீன் மாற்றுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடியாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஐபோன் 14 சீரிஸ் வெளியிடப்பட இருப்பதை அடுத்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 ஆம் தேதி புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், புது ஐபோன் மாடல்கள் வெளியாகும் முன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு 128 ஜிபி ஐபோன் 13 மாடல் தற்போது ரூ. 69 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 256 ஜிபி விலை ரூ. 79 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி ஐபோன் 13 மாடலுக்கு அசத்தலான எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

    எக்சேன்ஜ் சலுகையில் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக், ஐந்து சதவீதம் வரை தள்ளுபடி ரூ. 1000 கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் பிராசஸர், 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன்களின் விலை அதன் முந்தைய மாடலை விட 50 டாலர்கள் வரை விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 14 மாடலின் விலை 750 டாலர்கள் என துவங்கும் என தெரிகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் பற்றிய புது விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மொத்தம் நான்கு ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புது ஐபோன் 14 மாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    2022 ஐபோன்களில் முற்றிலும் புது டிசைன் வழங்கப்பட இருக்கும் நிலையில், ஆப்பிள் இதே மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 14 சீரிசில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களில் ஆவது சிம் கார்டு ஸ்லாட் நீக்குவது பற்றி ஆப்பிள் நிறுவனம் விவாதித்து வருவதாக தெரிகிறது. மேலும் ஐபோன் 15 சீரிசில் முழுமையாக சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்படும் என கூறப்படுகிறது.


    இதன் மூலம் ஐபோன் மாடல்களில் இ சிம் மற்றும் போர்ட்-லெஸ் மாடலை கொண்டு வருவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இ"ந்த முறை இ சிம் வழங்குவதில் ஆப்பிள் அதிக முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறது. இதன் மூலம் பயனர்களை டிஜிட்டல் யுகத்திற்கு தயார்ப்படுத்த இருக்கிறது. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது," என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பெயருக்கு ஏற்றார்போல் இ சிம் என்பது டிஜிட்டல் சிம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் இ சிம் நிஜ சிம் கார்டு தேவையின்றி அதன் சேவைகளை வழங்கி வருகிறது. பல்வேறு நாடுகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனமும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்து வருகிறது.

    ×