என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை துவக்கம்
  X

  இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை துவக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சிரிஸ், வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் SE மாடல்கள் விற்பனை இந்தியாவில் துவங்குகிறது.
  • செப்டம்பர் மாத துவக்கத்தில் தான் இந்த சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.

  ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் விற்பனை இந்தியாவில் துவங்குகிறது. ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை துவங்குகிறது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் வாட்ச் SE மாடல்களின் விற்பனையும் துவங்குகிறது.

  ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஐபோன் 14 விற்பனை ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இம்மாத துவக்கத்தில் "ஃபார் அவுட்" நிகழ்வில் புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.


  இந்தியாவில் ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி மாடல்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 990, ரூ. 89 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது ஐபோன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்படும் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  ஐபோன் 14 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 விலை ரூ. 45 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இந்த வாட்ச் கோல்டு கிராபைட், சில்வர், மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்படும் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

  Next Story
  ×