search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஐபோன்களுக்கு இவ்வளவு சலுகைகளா? அசத்தல் டீசர் வெளியிட்ட ப்ளிப்கார்ட்
    X

    ஐபோன்களுக்கு இவ்வளவு சலுகைகளா? அசத்தல் டீசர் வெளியிட்ட ப்ளிப்கார்ட்

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வருடாந்திர பிளாக்‌ஷிப் சலுகை விற்பனையை அடுத்த வாரம் நடத்த இருக்கிறது.
    • இந்த விற்பனையில் ஐபோன்களுக்கு வழங்கும் சலுகை விவரங்களை டீசர்களாக வெளியிட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 சீரிஸ் மாடல்களுக்கு பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையில் அசத்தல் சலுகைகளை வழங்க இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு சலுகை விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    அந்த வகையில் ஐபோன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் வழங்க இருக்கும் சலுகை விவரங்களை டீசர்களாக தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. வலைதளம் மட்டுமின்றி ஸ்மார்ட்போன் செயலியிலும் ஐபோன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் டீசர்களாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.


    சலுகை விவரங்கள்:

    டீசர்களின் படி ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனையில் ஐபோன் 13 மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐபோன் 13 ப்ரோ மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 990 என என்று துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபோன் 13 மாடல் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

    ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையின் போது ஐபோன் 12 மினி விலை ரூ. 39 ஆயிரத்து 990 அல்லது குறைவாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஐபோன் 11 மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 990-க்கு கிடைக்கும். ஐபோன் 12 மினி மாடலின் விலை ரூ. 55 ஆயிரத்து 359 என்றும் ஐபோன் 11 விலை ரூ. 43 ஆயிரத்து 990 என கிடைக்கும் என்று ப்ளிப்கார்ட் டீசர்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×