search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஏராள சலுகைகள், அதிரடி விற்பனை - செப்டம்பர் 23-ஐ குறிவைக்கும் அமேசான், ப்ளிப்கார்ட்
    X

    ஏராள சலுகைகள், அதிரடி விற்பனை - செப்டம்பர் 23-ஐ குறிவைக்கும் அமேசான், ப்ளிப்கார்ட்

    • இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் சார்பில் அதிக சலுகை வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
    • இந்த சிறப்பு விற்பனைக்கான தேதி பற்றிய அறிவிப்புகளை வலைதள நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

    ப்ளிப்கார்ட் தளத்தின் பிளாக்‌ஷிப் நிகழ்ச்சி "தி பிகே பிலேலியன் டேஸ்" செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் ஒன்பது ஆண்டாக ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை துவங்கும் இதே தேதியில் தான் அமேசான் நிறுவனத்தின் "கிரேட் இந்தியன் பெஸ்டிவல்"சிறப்பு விற்பனையும் துவங்குகிறது.

    ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது பல லட்சம் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் கிரானா வினியோகஸ்தர்கள் ஒருங்கிணைக்கிறார்கள். இந்த விற்பனையின் மூலம் அனைவருக்கும் பண்டிகை காலத்தை மகிழ்ச்சியானதாக மாற்றுகிறோம். சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் செயலியில் பிரத்யேக சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.


    அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் துவங்கும் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விற்பனையில் 2 ஆயிரம் புது பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. முன்னணி பிராண்டுகளான சாம்சங், புமா, லோ-ரியல், பிலிப்ஸ், ஹவெல்ஸ், ஹீரோ சைக்கிள்ஸ், போஷ் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை அறிமுகம் செய்கின்றன. அமேசான் தளத்தில் வாடிக்கையாளர்கள் எட்டு மொழிகளில் தங்களுக்கு விருப்பமுள்ள பொருட்களை வாங்க முடியும்.


    இது மட்டுமின்றி பொருட்களை வாங்கும் போது ரூ. 7 ஆயிரத்து 500 மதிப்பிலான ரிவார்டுகளை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு. இதற்கு பயனர்கள் அமேசானில் ஷாப்பிங் செய்வதற்கு அமேசான் பே மூலம் பணம் செலுத்தினாலே போதும். இது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சமயத்தின் போது செல்லுபடியாகும். முன்னதாக சிறப்பு விற்பனை துவங்க இருப்பதை உணர்த்தும் டீசர்களை அமேசான் வெளியிட்டு இருந்தது.

    அமேசான் வழக்கப்படி பிரைம் சந்தா வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு விற்பனை முன்கூட்டியே துவங்கி விடும். இந்த விற்பனையில் மொபைல் போன் மாடல்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் தள்ளுபடி, டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வங்கி சார்ந்த சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×