என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
- இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனை பிளஸ் சந்தாதாரர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 வரை நடைபெற இருக்கிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அனைத்து பொருட்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதே போன்று ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் மின்சாதன பொருட்களுக்கும் அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் வழங்கும் சிறப்பு சலுகை விவரங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம். ஸ்மார்ட்போன் சலுகை மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ரெட்மி நோட் 11SE - இந்திய சந்தையில் ரூ. 16 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 12 ஆயிரத்து 249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா மோட்டோ ஜி5 - ரூ. 17 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான மோட்டோரோலா மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 12 ஆயிரத்து 999-க்கு கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி F13 - ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி கேலக்ஸி F13 ஸ்மார்ட்போனினை ரூ. 15 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது.
விவோ T1 44W - இந்திய சந்தையில் ரூ. 19 ஆயிரத்து 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ T1 44W ஸ்மார்ட்போன் தற்போது ப்ளிப்கார்ட் விற்பனையில் ரூ. 13 ஆயிரத்து 499 விலைக்கு கிடைக்கிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது விவோ T1 44W மாடலை ரூ. 12 ஆயிரத்து 850 விலைக்கும் வாங்கிட முடியும்.
ஒப்போ K10 5ஜி - 64MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஒப்போ K10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ரூ. 25 ஆயிரத்து 999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ K10 5ஜி தற்போது ரூ. 15 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
- ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் விரைவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக பாரதி ஏர்டெல் விளங்குகிறது. 5ஜி சேவைகளை பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஏர்டெல் 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கி வருகிறது. பிரீபெயிட் பயனர்கள் மட்டும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும்.
ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் பயனர்கள் ரிவார்டுகளை பெறுவது, மின் கட்டணம் செலுத்துவது, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியை இயக்குவது, மொபைல் ரிசார்ஜ் என ஏராளமான சேவைகளை பெறலாம். குறிப்பாக தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் 5 ஜிபி டேட்டா 1 ஜிபி வீதம் ஐந்து வவுச்சர்களாக வழங்கப்பட உள்ளன.

பாரதி ஏர்டெல் நிறுவனம் புதிய பிரீபெயிட் பயனர்களுக்கு 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குகிறது. இதற்கு பயனர்கள் புதிதாக ஏர்டெல் இணைப்பை பெற வேண்டும். அதன் பின் ஏர்டெல் தேங்ஸ் செயலியை இன்ஸ்டால் செய்து ஏர்டெல் மொபைல் நம்பர் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். பின் செயலியின் மை கூப்பன்ஸ் பகுதியில் 5 ஜிபி டேட்டா வழங்கும் வவுச்சர்கள் மூலம் இலவச டேட்டாவை பெறலாம்.
புதிதாக ஏர்டெல் சேவையில் இணையும் பிரீபெயிட் பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் லாக்-இன் செய்ததும் இலவச டேட்டா வழங்கப்பட்டு விடும். இந்த இலவச டேட்டா ஐந்து வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படும். ஒவ்வொரு வவுச்சரிலும் 1 ஜிபி டேட்டா வழங்கும். இந்த வவுச்சர்களை 90 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது மட்டுமின்றி வெற்றிகரமாக மற்றவர்களையும் ஏர்டெல் சேவையில் இணைய வைக்கும் பட்சத்தில் ரூ. 100 வரை பெற முடியும். ஏர்டெல் தேங்ஸ் செயலியில் ஏர்டெல் பிரீபெயிட் சிம்-ஐ நண்பருக்கு பரிந்துரை செய்யும் இணைய முகவரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்டெல் சிம் வாங்க நண்பர் நீங்கள் அனுப்பிய இணைய முகவரியை பயன்படுத்தினால், ரூ. 100 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும்.
- ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
- இந்த சிறப்பு விற்பனை இன்று ஒரு நாள் ப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது.
ப்ளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2022 துவங்கி நடைபெற்று வருகிறது. மற்ற பயனர்கள் நாளை முதல் சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். இம்முறை மின்சாதன கேஜெட்களான லேப்டாப், மொபைல், ஸ்மார்ட்வாட்ச், டிவி மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு அதிகபட்சமாக 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம். சிறப்பு விற்பனையின் போது புதிதாக சேரும் பயனற்களுக்கு ரூ. 100 தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது ப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்கள் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கிட முடியும்.
பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. இந்த விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோர் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி பெற முடியும். ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு கூடுதலாக 8 சதவீதம் தள்ளுபடி மற்றும் 5 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையின் ஒவ்வொரு நாளிலும் சரியாக நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணி உள்ளிட்ட நேரங்களில் அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரஷ் ஹவர் பெயரில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள், சாம்சங், கூகுள் என முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள், விலை குறைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை சலுகைகள், ஸ்கிரீன் பாதுகாப்பு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.
- சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடலுக்கு சிறப்பு சலுகை விற்பனையில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி இந்த ஸ்மா்ட்போனிற்கு ரூ. 2 ஆயிரம் வரை விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் 11T ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனிற்கு "தீபாவளி வித் Mi" சிறப்பு விற்பனையில் அதிரடி விலை குறைப்பு வழங்கப்படுகிறது. சியோமி 11T ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் தற்போது ரூ. 34 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இத்துடன் வங்கி சலுகைகள் மற்றும் இதர ஆபர்களை சேரக்கும் போது இந்த ஸ்மார்ட்போனை ரூ. 28 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும்.
சியோமி 11T ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த விலை அமேசான் மற்றும் சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் சியோமி 11T ப்ரோ 5ஜி மாடல் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 36 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 38 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது பிரத்யேக சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இவை ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 28 ஆயிரத்து 999 வரை குறைக்கிறது. முன்னதாக சியோமி 11T ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி 11T ப்ரோ 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் AMOLED FHD+ 1080x2400 பிக்சல் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
அட்ரினோ 660 GPU
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5
108MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
5MP டெலிமேக்ரோ கேமரா
16MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5000 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் ஹைப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
- ரெட்மி பிராண்டின் புதிய டேப்லெட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது சியோமி 12T சீரிஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் முதல் ரெட்மி டேப்லெட் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் ரெட்மி பேட் என அழைக்கப்பட இருக்கிறது.
குவைத் மற்றும் ஈராக் பகுதிகளுக்கான சியோமி இன்ஸ்டாகிராம் வலைபக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதனை டிப்ஸ்டரான கேஸ்பர் சிபெக் தெரிவித்து இருக்கிறார். இது மட்டுமின்றி டேப்லெட் மாடலின் கமர்ஷியல் படத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த தகவல்களின் படி ரெட்மி பேட் மாடல் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.
இந்த டேப்லெட் எந்த நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் மர்மமாகவே உள்ளது. எனினும், குவைத்தில் இதன் விலை 232.5 டாலர்கள், ஈராக்கில் இதன் விலை 225 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் மாடல் மெட்டாலிக் ரியர், ஒற்றை கேமரா லென்ஸ் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் எல்இடி பிளாஷ் மற்றும் ரெட்மி பிராண்டிங் உள்ளிட்டவை இடம்பெறவில்லை.
ரெட்மி பேட் அம்சங்கள்:
ரெட்மி பேட் மாடலில் 11 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13, 7800 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த டேப்லெட் கிராபைட் கிரே, மூன்லைட் சில்வர் மற்றும் மிண்ட் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல் விற்பனை சில தினங்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
- விற்பனை துவங்கியதும் ஐபோன் 14 ப்ரோ மாடலில் உள்ள பிரச்சினை அம்பலமாகி இருக்கிறது.
இந்திய சந்தையில் ஐபோன் 14 ப்ரோ விற்பனை சமீபத்தில் துவங்கியது. புதிய ஐபோன் மாடலை வாங்கி இருப்பின் அதில் கேமரா பிரச்சினை இருப்பதை நீங்களாகவே அறிந்திருப்பீர்கள். ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 124 ப்ரோ மேக்ஸ் மாடல்களை வாங்கியவர்கள் தங்களது யூனிட்களில் கேமரா ஷேக் ஆவதாகவும், விசித்திரமான சத்தம் கேட்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கேமரா பிரச்சினை இருப்பதாக பலர் தங்களின் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். கேமராவை மூன்றாம் தரப்பு செயலிகளில் இயக்க முயன்றவர்களுக்கு பெரும்பாலும இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் கேமரா இயக்கும் போது பிரச்சினை ஏற்படுகிறது.

ஸ்னாப்சாட் செயலியை பயன்படுத்திய போது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் கேமரா வைப்ரேட் ஆகும் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஐபோன் லென்ஸ் பகுதியில் இருந்து விசித்திரமான சத்தம் கேட்பதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இத்தனை இடையூறுகளுக்கு பின் புகைப்படம் மற்றும் வீடியோ தெளிவற்ற நிலையிலேயே காணப்படுகிறது.
ஐபோன் 14 ப்ரோ மாடலில் கேமரா இயக்கிய போது இது போன்ற பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. தற்போதைய பிரச்சினை கேமராவை மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து இயக்கிய போது தான் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு செயலிகளின் மென்பொருள் தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட செயலிகள் தரப்பில் ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு என பிரத்யேகமாக அப்டேட் வெளியிடுவது அவசியம் ஆகும். எனினும், ஐபோனில் அதிர்வுகள் மற்றும் கிரைண்டிங் ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- கேமிங் உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேம்களில் ஒன்றாக GTA 6 இருக்கிறது.
- புதிய GTA 6 டெஸ்ட் பில்டில் இருந்து எடுக்கப்பட்ட கேம்பிளே வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
ராக்ஸ்டார் நிறுவனத்தின் புதிய GTA 6 கேமிற்கு உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. GTA 6 வெளியீடு மற்றும் இதர தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்போது GTA 6 கேம்பிளே வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
தற்போது லீக் ஆகி இருக்கும் வீடியோ GTA 6 டெஸ்ட் பில்டில் இருந்து எடுக்கப்பட்டவை போன்றே காட்சியளிக்கின்றன. கேம்பிளே வீடியோக்களின் படி GTA 6 பல்வேறு கதாபாத்திரங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. கேம்பிளே வீடியோவானது "டீபோடியுபர்ஹேக்கர் -teapotuberhacker" என்ற நபர் GTA ஃபோரம்களில் பகிர்ந்து இருக்கிறார். முன்னதாக இதே நபர் தான் உபெர் நிறுவன சர்வர்களை ஹேக் செய்து இருந்தார்.

இணையத்தில் வெளியாகி இருக்கும் கேம்பிளே வீடியோக்கள் உண்மை தான் என ராக்ஸ்டார் கேம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் இம்முறை வெளியாகி இருக்கும் GTA 6 வீடியோ உண்மையே. வீடியோ கேம் வரலாற்றில் இது மிகப் பெரும் லீக் என இணையத்தில் பரவலாக கூறப்படுகிறது.
கேம்பிளே வீடியோ மட்டுமின்றி ஸ்கிரீன்ஷாட்களும் ட்விட்டர் மற்றும் ரெடிட் போன்ற தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. சில தகவல்களில் புதிய GTA 6 கேமில் லுசியா, ஜேசன் என சில கதாபாத்திரங்களின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன. GTA 6 கேம் 2014 முதல் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த கேம் சார்ந்த விவரங்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி GTA 6 கேம் 2025 ஆண்டு தான் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக GTA 6 கேம் கணினிகளில் வெளியாகும் முன் பிளே ஸ்டேஷன் 4 மற்றும் அதன் பின் வெளியான கன்சோல்கள், எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எஸ், எக்ஸ் மற்றும் அதன் பின் வெளியான கன்சோல்களுக்கு முதலில் வெளியிடப்பட இருக்கிறது.
- அமேசான் வலைதளத்தில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது.
- இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 மாடல்களை அறிவித்ததை தொடர்ந்து பழைய ஐபோன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது. அதன்படி ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஐபோன் 12 மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 57 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஐபோன் 12 மாடல் விலை அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் சிறப்பு விற்பனையின் போது ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக மாறும் என அமேசான் அறிவித்து இருக்கிறது. இதே தகவலை உறுதிப்படுத்தும் டீசர் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஐபோன் 12 மாடலின் விலை ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது ஐபோன் 12 (64ஜிபி) மாடலுக்கான விலையாக இருக்கும் என தெரிகிறது.
ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட், 4 ஜிபி ரேம், ஐஒஎஸ் 14, டூயல் 12MP பிரைமரி கேமராக்கள், 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது ஐபோன் 12 மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சிரிஸ், வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் SE மாடல்கள் விற்பனை இந்தியாவில் துவங்குகிறது.
- செப்டம்பர் மாத துவக்கத்தில் தான் இந்த சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் விற்பனை இந்தியாவில் துவங்குகிறது. ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை துவங்குகிறது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் வாட்ச் SE மாடல்களின் விற்பனையும் துவங்குகிறது.
ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஐபோன் 14 விற்பனை ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இம்மாத துவக்கத்தில் "ஃபார் அவுட்" நிகழ்வில் புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியாவில் ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி மாடல்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 990, ரூ. 89 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது ஐபோன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்படும் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 14 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 விலை ரூ. 45 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இந்த வாட்ச் கோல்டு கிராபைட், சில்வர், மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்படும் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது GT நியோ 3T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
- புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் இந்திய சந்தையில் ரூ. 29 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வருகிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. "ரியல்மி பெஸ்டிவ் டேஸ்" சிறப்பு விற்பனையின் அங்கமாக புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது. அந்த வகையில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் மற்றும் 80 வாட் சார்ஜிங் வசதி கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரியல்மி GT நியோ 3T பெற்று இருக்கிறது.
ரியல்மி GT நியோ 3T அம்சங்கள்:
புதிய ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் AMOLED E4 ஸ்கிரீன், FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 5 ஜிபி வரை எக்ஸ்டெண்டட் ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், 5ஜி, வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இதே ஸ்மார்ட்போன் இந்தோனேசிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. அங்கு இதன் விலை IDR 54 லட்சத்து 99 ஆயிரம், இந்திய மதிப்பில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் டேல் எல்லோ, ட்ரிப்டிங் வைட் மற்றும் ஷேட் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
- ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வருடாந்திர பிளாக்ஷிப் சலுகை விற்பனையை அடுத்த வாரம் நடத்த இருக்கிறது.
- இந்த விற்பனையில் ஐபோன்களுக்கு வழங்கும் சலுகை விவரங்களை டீசர்களாக வெளியிட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 சீரிஸ் மாடல்களுக்கு பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையில் அசத்தல் சலுகைகளை வழங்க இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு சலுகை விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.
அந்த வகையில் ஐபோன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் வழங்க இருக்கும் சலுகை விவரங்களை டீசர்களாக தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. வலைதளம் மட்டுமின்றி ஸ்மார்ட்போன் செயலியிலும் ஐபோன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் டீசர்களாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.

சலுகை விவரங்கள்:
டீசர்களின் படி ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனையில் ஐபோன் 13 மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐபோன் 13 ப்ரோ மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 990 என என்று துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபோன் 13 மாடல் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.
ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையின் போது ஐபோன் 12 மினி விலை ரூ. 39 ஆயிரத்து 990 அல்லது குறைவாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐபோன் 11 மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 990-க்கு கிடைக்கும். ஐபோன் 12 மினி மாடலின் விலை ரூ. 55 ஆயிரத்து 359 என்றும் ஐபோன் 11 விலை ரூ. 43 ஆயிரத்து 990 என கிடைக்கும் என்று ப்ளிப்கார்ட் டீசர்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கூகுள் நிறுவனம் அக்டோபர் மாத முதல் வாரத்தில் புதிய பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த நிகழ்வில் பிக்சல் 7 சீரிஸ், பிக்சல் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாகும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.
கூகுள் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி "மேட் பை கூகுள்" பெயரில் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கூகுள் I/O 2022 நிகழ்வில் இந்த ஆண்டு பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது.
இரு சாதனங்களை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், பிக்சல் டேப்லெட் மாடல் ஒன்றை கூகுள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர பிக்சல் சீரிசில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் மினி பிக்சல் போன் உள்ளிடடிவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நெய்லா எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் வைக்கப்படுகிறது. இது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
இவை தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.






