search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப்4 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்
    X

    சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப்4 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

    • சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் 3700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. கடந்த மாதம் விற்பனைக்கு வந்த கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் தற்போது புளூ நிற வேரியண்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 3700 எம்ஏஹெச் பேட்டரி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 புளூ நிற வேரியண்ட்டின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் முன்னணி சில்லறை விற்பனை மையங்கள், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    அறிமுக சலுகைகள்:

    புதிய சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ. 31 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் 4 மாடலை ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 7 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் பெற முடியும்.

    Next Story
    ×