என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கி விட்டது.
    • முதற்கட்டமாக 5ஜி பீட்டா சோதனையை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என இந்தியாவின் நான்கு நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 5ஜி சேவைகளின் பீட்டா டெஸ்டிங் நடைபெற இருக்கிறது. தசரா பண்டிகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த நகரங்களில் 5ஜி சேவைகளுக்கான வெளியீடு தயாராகி வருகிறது. மேலும் 5ஜி பீட்டா டெஸ்டிங்குடன் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. பீட்டா டெஸ்டிங்கின் அங்கமாக ரிலையன்ஸ் ஜியோ தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் முழுமையான 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். இத்துடன் சேவை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

    தீபாவளி வாக்கில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதை அடுத்து தற்போது 5ஜி பீட்டா டெஸ்டிங் துவங்கப்பட்டு உள்ளது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் (SA) தளத்தில் வெளியாகிறது.

    ஜியோ ட்ரூ 5ஜி அறிமுக சலுகைகள்:

    டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரனாசியில் ஜியோ 5ஜி அறிமுக சலுகைகள் இன்விடேஷன் முறையில் வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.

    நான்கு நகரங்களை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் பீட்டா டெஸ்டிங் துவங்கும். இதுபற்றிய அறிவிப்பு படிப்படியாக வெளியிடப்படும்.

    சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவம் அனைத்து வாடிக்கையாளருக்கும் கிடைக்கும் வரை பயனர்கள் பீட்டா டெஸ்டிங்கில் பயன்பெற முடியும்.

    இன்வைட் செய்யப்பட்ட ஜியோ அறிமுக சேவை பயனர்கள் தானாக 5ஜி சேவைக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்கள் தனியே 5ஜி சிம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    ஒவ்வொரு மொபைல் போனிலும் தலைசிறந்த 5ஜி சேவையை வழங்க ஏதுவாக மொபைல் போன் உற்பத்தியாளர்களுடனும் ஜியோ தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

    • இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் 5ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டன.
    • எனினும், 5ஜி வர்த்தக வெளியீட்டுக்கு மேலும் சில மாதங்கள் வரை ஆகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவைகள் சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி சேவை அறிமுகமானதை அடுத்து, 6ஜி பற்றிய பேச்சுவார்த்தைகள் பரவலாக துவங்கி உள்ளன. மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் உலகளவில் 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிக்கும் என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக 5ஜி வெளியீடு பற்றிய கேள்விக்கும் இதே போன்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    6ஜி மற்றும் 5ஜி சேவைகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் மிக முக்கிய குழுக்களை நிர்வகிக்கும் சர்வதேச தகவல் தொடர்பு யூனியனில் இந்திய அதிகாரிகள் நிறைந்துள்ளனர் என்றும் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார். 3ஜி-யில் இருந்து 4ஜி போன்றே அடுத்த தலைமுறை 6ஜி தொழில்நுட்பமும் 5ஜி சேவையை விட மேம்பட்டு இருக்கும். 4ஜி-யில் இருந்து 5ஜி-க்கான மாற்றத்திற்கு ஏராளமான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் மாற்றங்கள் அவசியமாக உள்ளன.

    இதன் காரணமாக 6ஜி தரம் மற்றும் அதை சுற்றிய ஆய்வுகளை எளிதில் முடித்துவிட முடியும். தற்போது சர்வதேச அளவில் 5ஜி சேவையை வழங்குவதில் இந்தியா பின்தங்கி இருந்த போதிலும், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் அதிவேகமானதாக இருக்கும். புதிய 5ஜி-யை விட 6ஜி தொழில்நுட்பம் பலமடங்கு அதிவேகமான ஒன்றாக இருக்கும்.

    • பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 4ஜி சேவை வழங்குவததற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் 2019 ஆண்டு வாக்கில் 4ஜி சேவைகளை வெளியிட திட்டமிட்டது. எனினும், உள்நாட்டு நிறுவனங்கள் வழங்கும் உபகரணங்களை கொண்டு தான் 4ஜி சேவைகளை வெளியிட வேண்டும் என அரசு அறிவித்தது. இதை அடுத்து தான் இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு தாமதமானது. மேலும் 4ஜி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் அறிக்கையை பிஎஸ்என்எல் வெளியிட்டது.

    இந்த கோரிக்கைக்கு டிசிஎஸ் நிறுவனம் மட்டுமே பதில் அளித்தது. இதை அடுத்து பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான சோதனைகள் துவங்கின. அந்த வகையில், பிஎஸ்என்எல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இணைந்து நாடு முழுக்க 4ஜி சேவையை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக இரு நிறுவனங்கள் இடையே ரூ. 16 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளன.

    இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சலுகைகளை வழங்குவது மற்றும் விலை நிர்ணயம் பற்றி இரு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் 3700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. கடந்த மாதம் விற்பனைக்கு வந்த கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் தற்போது புளூ நிற வேரியண்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 3700 எம்ஏஹெச் பேட்டரி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 புளூ நிற வேரியண்ட்டின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் முன்னணி சில்லறை விற்பனை மையங்கள், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    அறிமுக சலுகைகள்:

    புதிய சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ. 31 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் 4 மாடலை ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 7 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் பெற முடியும்.

    • சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக கேலக்ஸி S23 சீரிஸ் உருவாக்கப்பட்டு வருகின்றன.
    • புதிய கேலக்ஸி S23 சீரிஸ் விவரங்கள் மற்றும் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாக துவங்கி உள்ளன.

    சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் டிசைன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக கேலக்ஸி S23 ஸ்டாண்டர்டு மற்றும் ப்ரோ மாடல் விவரங்களை வெளியிட்ட ஸ்டீவ் ஹெமர்ஸ்டோபர் எனும் டிப்ஸ்டர் இம்முறை கேலக்ஸி S23 அல்ட்ரா விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்.

    அதன்படி புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா தோற்றத்தில் கேலக்ஸி S22 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம், டிஸ்ப்ளே, கேமரா மாட்யுல், எஸ் பென் மற்றும் இதர அம்சங்கள் முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை போன்றே இடம்பெற்று இருக்கிறது. தற்போதைய ரெண்டர்களில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யப்படலாம்.

    முன்னதாக ஸ்மார்ட்போனின் டிசைனில் அதிக மாற்றங்கள் இன்றி ஹார்டுவேர் அப்டேட்களுடன் சாம்சங் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் தற்போதைய ரெண்டர்களின் படி புதிய கேலக்ஸி ஒருவேளை மாற்றங்கள் இன்றி அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனின் நடுவில் பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் மேல்புறத்தில் முன்புறமாக காட்சியளிக்கும் ஸ்பீக்கர், கீழ்புறத்தில் எஸ் பென் இண்டகிரேஷன், ஸ்பீக்கர் கிரில், யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் சிம் கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா முந்தைய மாடலை விட அளவில் சற்று பெரியதாக இருக்கும் என ரெண்டர்களில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐந்து கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.

    Photo Courtesy: OnLeaksx @Smartprix

    • ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் பெயரில் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பொருட்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்த விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக மின்சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. சிறப்பு விற்பனையில் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு ப்ளிப்கார்ட் சார்பில் சோப் வினியோகம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    இது பற்றிய தகவல் லின்க்டுஇன் தளத்தில் வெளியாகி இருக்கிறது. டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவர் ப்ளிப்கார்ட் பிக் பில்லின் டேஸ் விற்பனையில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். எனினும், லேப்டாப்பிற்கு பதில் அவருக்கு டிடர்ஜெண்ட் சோப்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதை ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் மாணவர் தெரிவித்து இருக்கிறார். எனினும், இதற்கு பணம் திருப்பி தரப்பட மாட்டாது என ப்ளிப்கார்ட் அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    அதன் பின் வெளியான தகவல்களில் ப்ளிப்கார்ட் இந்த வாடிக்கையாளருக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்கான பணிகளை துவங்கி இருப்பதாக தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் உள்ள "ஓபன் பாக்ஸ்" திட்டத்திலேயே இந்த மாணவர் லேப்டாப்பை வாங்கி இருக்கிறார். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் பொருளை வாங்கும் போது, டெலிவரி செய்யும் நபர் கண் முன்னே அதனை திறந்து பார்க்க வேண்டும்.

    பின் தான் ஆர்டர் செய்த பொருள் சரியாக இருப்பதை உறுதி செய்த பின் அதனை வாங்கிக் கொள்ளலாம். எனினும், இந்த மாணவர் ஆர்டர் செய்த லேப்டாப்பை அவரி்ன் தந்தை டெலிவரி ஊழியரிடம் இருந்து பெற்று இருக்கிறார். இதன் காரணமாக லேப்டாப்பிற்கு பதில் சோப்பு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் தாமதமாக தெரியவந்துள்ளது. மேலும் டெலிவரி செய்ய வந்த நபருக்கும் ஓபன் பாக்ஸ் திட்டம் பற்றிய தகவல் தெரிந்திருக்கவில்லை. 

    • ஆப்பிள் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் தான் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
    • சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் 14 விற்பனை குறித்த புது தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய ஐபோன் 14 சீரிஸ் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    உலக நாடுகளில் ஐபோன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தனியார் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை 60 லட்சம் யூனிட்களாக குறைத்துக் கொள்ள ஆப்பிள் தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    60 லட்சம் யூனிட்கள் குறைந்த எண்ணிக்கை இல்லை என்ற போதிலும், புதிய ஐபோன்கள் சந்தையில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்பதையே குறிக்கிறது. மேலும் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதை முன்பதிவு காலக்கட்டத்தில் உணர முடிந்தது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கான காத்திருப்பு காலம் 36.5 நாட்களாக இருந்தது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும்.

    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 14 ப்ரோ சீரிசுக்கு அதிக முன்பதிவுகள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் 9 கோடி ஐபோன்களை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்தியாவில் அடுத்த தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
    • இந்தியாவில் முதன் முதலில் 5ஜி சேவை எங்கு வெளியிடப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் 5ஜி சேவை முதற்கட்டமாக புதுடெல்லியில் வழங்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியன் மொபைல் காங்கிரஸ் நிகழ்வை துவக்கி வைக்கிறார். மேலும் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்குகளை துவங்கி வைக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

    நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுவதால் 5ஜி நெட்வொர்க் முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டதும் வர்த்தக பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்காது என்றே தெரிகிறது. எனினும், 5ஜி வெளியீடு பற்றி டெலிகாம் நிறுவனங்களின் அறிவிப்பு மட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்திய டெலிகாம் சந்தையில் டெல்லி மிக முக்கிய வட்டாரமாக விளங்குகிறது.

    5ஜி நெட்வொர்க் சப்போர்ட் கொண்ட சாதனங்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை இயக்க முடியும். இந்த பண்டிகை காலக்கட்டத்தில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை அடுத்து பலரும் 5ஜி சாதனங்களுக்கு அப்கிரேடு செய்ய துவங்கி உள்ளனர்.  

    • ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைனில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • இதில் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 7 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் சேமிப்புகளை பெற முடியும்.

    ஆப்பிள் நிறுவனம் தீபாவளி விற்பனையை துவங்கி இருக்கிறது. பண்டிகை காலம் துவங்கி விட்டதாகவும், ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் ஏராளமான சலுகைகள் அனைவருக்கும் வழங்கப்படுவதாக ஆப்பிள் அறிவித்து இருக்கிறது. தீபாவளி விற்பனையை முன்னிட்டு பயனர்கள் அனைத்து சாதனங்களிலும் அதிகபட்சம் 7 சதவீதம் வரை உடனடி சேமிப்புகள், ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும்.

    ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தீபாவளி சலுகை விவரங்கள்:

    தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோர் ரூ. 7 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இந்த சலுகை ரூ. 41 ஆயிரத்து 900 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்டு அனைத்து சாதனங்களை வாங்கும் போதும் பொருந்தும். இது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை சேர்க்கும் போது ரூ. 41 ஆயிரத்து 900 வரையிலான பொருட்களை வாங்கும் போது பொருந்தும்.

    முன்னணி வங்கிகள் சார்பில் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஐபோனை எக்சேன்ஜ் செய்து உடனே புதிய ஐபோனினை வாங்கிக் கொள்ள முடியும்.

    ஆப்பிள் டிரேட்-இன் வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களின் பழைய ஸ்மார்போனை ஸ்டோர் கிரெட்-க்கு எக்சேன்ஜ் செய்து புதிய ஐபோன் வாங்கிக் கொள்ள முடியும்.

    சிறப்பு சலுகை:

    வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபேட், ஏர்பாட்ஸ், ஏர்டேக் மற்றும் ஆப்பிள் பென்சில் (2nd Gen) உள்ளிட்ட சாதனங்களில் பிரத்யேக என்கிரேவிங் செய்து கொள்ள முடியும். அதுவும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி, மராத்தி, குஜராத்தி மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இலவசமாக என்கிரேவிங் செய்யலாம்.

    மேலும் மேக் சாதனங்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கூடுதல் ரேம் மற்றும் கிராபிக்ஸ் கார்டு உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொள்ளலாம். ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைனில் ஆப்பிள் வல்லுனர்கள் பயனர் சந்தேகங்களை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயனர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தங்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

    • ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் புது ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் 14 இருக்கிறது.
    • 2017 முதல் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது.

    சீனாவுக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017 முதல் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. முதன் முதலில் ஐபோன் SE மாடல் தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த வரிசையில், ஐபோன் 12, ஐபோன் 13 மாடல்களுடன் ஐபோன் 14 தற்போது புதிதாக இணைந்துள்ளது. இம்மாத துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் மேம்பட்ட கேமரா, சக்திவாய்ந்த சென்சார்கள், செயற்கைக்கோள் மெசேஜிங் என ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஐபோன் 14 சீரிசில்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மாடல்களில் ஐபோன் 14 உற்பத்தி இந்தியாவில் அடுத்த சில தினங்களில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    இந்தியாவில் தமிழகத்தின் சென்னை அருகில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் புது ஐபோன் 14 மாடல்கள் உற்பத்தி நடைபெற உள்ளன. சர்வதேச சந்தையில் முன்னணி மின்சாதன உற்பத்தியாளர் மற்றும் மிக முக்கிய ஐபோன் உற்பத்தியாளர் என்ற பெருமையை ஆப்பிள் பெற்று இருக்கிறது.

    • சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது பண்டிகை கால சிறப்பு விற்பனையை சமீபத்தில் நடத்தியது.
    • பண்டிகை கால விற்பனையின் முதல் நாளிலேயே ரூ. 1000 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான கேலக்ஸி சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    சாம்சங் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது பண்டிகை கால சிறப்பு விற்பனையை சமீபத்தில் துவங்கியது. இந்த சிறப்பு விற்பனையின் முதல் நாளில் 12 லட்சத்திற்கும் அதிகமான கேலக்ஸி சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்திய ஆன்லைன் விற்பனையில் இது புது மைல்கல் ஆகும்.

    இந்த விற்பனையின் மூலம் 24 மணி நேரத்தில் சாம்சங் நிறுவனம் ரூ. 1000 கோடிக்கும் அதிக விலை கொண்ட சாதனங்களை விற்பனை செய்து இருக்கிறது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களிலும் சாம்சங் விற்பனை பல சாதனங்களை எட்டியுள்ளது.

    அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் முதல் நாளில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒவ்வொரு மூன்றாவது மாடலும் சாம்சங் பிராண்டை சார்ந்தது ஆகும்.

    கேலக்ஸி M13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறது. அமேசான் கிக்ஸ்டார்டல் டீல்ஸ் பிரிவில் நுகர்வோர் விருப்ப பட்டியலில் கேலக்ஸி M32 பிரைம் எடிஷன் முன்னணியில் இருந்தது.

    அமேசானில் அதிகம் விற்பனையான 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை சாம்சங் கேலக்ஸி M33 பெற்று இருக்கிறது. அமேசான் தளத்தில் அதிக சலுகை கொண்ட ஸ்மார்ட்போனாக கேலக்ஸி S22 இருக்கிறது. பிரீமியம் பிரிவில் அதிகம் விற்பனையான மாடல்கள் பட்டியலில் சாம்சஎங் கேலக்ஸி S20 FE முதலிடம் பிடித்துள்ளது.

    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் முதல் நாளில் சாம்சங் நிறுவன சந்தை பங்குகள் இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. 4ஜி பிரிவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி F13 பெற்று இருக்கிறது.

    இதே போன்று 5ஜி பிரிவில் கேலக்ஸி F23 ஆதிக்கம் செலுத்தியது. பிரீமியம் பிரிவு விற்பனையில் கேலக்ஸி S21 FE மற்றும் கேலக்ஸி S22 பிளஸ் போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ சீரிசில் டைனமிக் ஐலேண்ட் எனும் பெயரில் புது அம்சத்தை அறிமுகம் செய்தது.
    • ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கத் துவங்கி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் நாட்ச் பகுதியில் மிகவும் வித்தியாசமான அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் டைனமிக் ஐலேண்ட் பெயரில் புது விதமான நோட்டிபிகேஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம் பல்வேறு விதமான அலெர்ட்கள், நோட்டிபிகேஷன் மற்றும் உரையாடல்களை வழங்குகிறது.

    புதிய ஐபோன் மாடல்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை அடுத்து ஆண்ட்ராய்டு பயனர்கள் இதுபோன்ற அம்சம் இல்லையே என வருத்தம் கொள்ள வேண்டாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சம் கொண்டு வர மிக எளிமையான வழிமுறை உள்ளது.

    இதற்கு பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் டைனமிக்-ஸ்பாட் (dynamicspot) எனும் செயலியை இன்ஸ்டால் செய்தால் போதுமானது. ஜாவோமோ உருவாக்கி இருக்கும் இந்த செயலி ஆப்பிள் டைனமிக் ஐலேண்ட் போன்றே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கிறது.

    ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள நாட்ச் அளவுக்கு ஏற்ப ஐலேண்ட் அளவு மற்றும் எங்கு தோன்ற வேண்டும் என்ற விவரங்களை செட் செய்ய டைனமிக்-ஸ்பாட் வழி செய்கிறது. இத்துடன் செயலியை பல விதங்களில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எது போன்ற நோட்டிபிகேஷன்கள் திரையில் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க செய்கிறது.

    இந்த செயலியின் இலவச பதிப்பில் அம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. அதிக அம்சங்கள் நிறைந்த செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் விலை 4.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    ×