search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன்களுக்கு புது அப்டேட் - சாம்சங் அசத்தல்
    X

    கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன்களுக்கு புது அப்டேட் - சாம்சங் அசத்தல்

    • சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு நீண்ட காலம் வரை அப்டேட் வழங்குவதாக சமீப காலங்களில் அறிவித்து வருகிறது.
    • இந்த வரிசையில் தற்போது ஒன் யுஐ 5.0 பீட்டா 2 வெர்ஷன் வெளியிடும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது.

    சாம்சங் நிறுவனம் ஒன் யுஐ 5 பீட்டா வெர்ஷனை கேலக்ஸி S22 சீரிஸ் சாதனங்களுக்கு இம்மாத துவக்கத்தில் வழங்கி வந்தது. இந்த நிலையில், இரண்டாவது பீட்டா வெர்ஷனை தற்போது அமெரிக்கா, லண்டன் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வழங்கி வருகிறது.

    இந்த அப்டேட் பல்வேறு பிழை திருத்தங்கள், ஸ்பீடு மேம்படுத்தல்கள் மற்றும் சாம்சங் ஸ்டாக் செயலிகளின் ஐகான் உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட ஒன் யுஐ 5.0 பீட்டா அப்டேட் அளவில் 3 ஜிபியாக இருந்தது. தற்போது கிடைக்கும் இரண்டாவது பீட்டா அளவில் 1 ஜிபியாக உள்ளது.


    இந்த பீட்டாவில் ஸ்மார்ட் சஜெஷன்ஸ் எனும் அம்சம் சமீபத்திய செயலிகளை பரிந்துரை செய்வது சிறப்பான அம்சமாக பார்க்கப்படுகிறது. இத்துடன் மெயிண்டனன்ஸ் மோட் கொண்டு ஸ்மார்ட்போனை சரி செய்ய கொடுக்கும் போது தனிப்பட்ட தகவல்களை மறைத்து வைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர பிரைவசி டிடெக்‌ஷன் அம்சத்தையும் சாம்சங் தனது சாதனங்களில் வழங்கி வருகிறது. புகைப்படம், கிரெடிட் கார்டு, ஐடி கார்டு அல்லது பாஸ்போர்ட் என மிக முக்கிய தகவல்களை பரிமாறும் போது அவசியம் இதனை அனுப்ப வேண்டுமா என்பதை கேட்கும். பிக்ஸ்பி ரொடின்ஸ் அம்சத்தில் தற்போது லைப்ஸ்டைல் மோட் சேர்க்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×