என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்து புதிதாக இரண்டு சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இரண்டு புது சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 519 மற்றும் ரூ. 779 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவை தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகின்றன.

    பயனர்கள் மத்தியில் அதிக பிரபலம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால் புது சலுகைகள் பற்றிய அறிவிப்பு நல்ல வரவேற்பை பெறும். சமீப காலங்களில் ரிசார்ஜ் கட்டணங்கள் அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், குறைந்த விலை சலுகைகள் சற்றே ஆறுதலாக அமைந்துள்ளன.

    ரூ. 519 மற்றும் ரூ. 779 பிரீபெயிட் சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள், மூன்று மாதங்களுக்கு 24\7 சர்கிள் சந்தா, இலவச ஹெலோ-டியுன்கள் மற்றும் இதர பலன்களை வழங்குகின்றன.


    ஏர்டெல் ரூ. 519 பலன்கள்:

    புதிய ஏர்டெல் ரூ. 519 சலுகை அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. இத்துடன் 90 ஜிபி டேட்டா, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

    ஏர்டெல் ரூ. 779 பலன்கள்:

    ஏர்டெல் ரூ. 779 சலுகையும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. இத்துடன் 135 ஜிபி டேட்டா, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

    இரண்டு புதிய சலுகைகளுடன் ஏர்டெல் தேங்ஸ் பலன்கள், மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24\7 சர்கிள் சந்தா, பாஸ்டேக் மீது ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோ-டியுன்கள், விண்க் மியூசிக் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்த போதிலும் 64Kbps வேகத்தில் இணைய சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம். இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் செயலி மற்றும் ஏர்டெல் வலைதளத்தில் கிடைக்கின்றன.

    • கார்மின் நிறுவனம் இந்தியாவில் சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்து இருக்கிறது.
    • இந்த விற்பனையில் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கார்மின் நிறுவனம் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன் படி ஜிபிஎஸ் வசதி கொண்ட மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்கலுக்கு கார்மின் இந்தியா அதிகபட்சமாக ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

    ஃபோர்-ரன்னர் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் ஓட்டப்பயிற்சி மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஓட்டப் பந்தய வீரர்கள், அத்லெட்களை மனதில் வைத்து இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கார்மின் ஃபோர்-ரன்னர் 955 மற்றும் ஃபோர்-ரன்னர் 255 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    சலுகை விவரங்கள்:

    கார்மின் ஃபோர்-ரன்னர் 45 லாவா ரெட் ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 12 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 45 பிளாக் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 13 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 745 பிளாக் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 745 மேக்மா ரெட் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் பிளாக் ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் லாவா ரெட் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 29 ஆயிரத்து 990

    சுதந்திர தின சிறப்பு சலுகைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கார்மின் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த சலுகையை விற்பனையை பயன்படுத்தி அத்தல் தள்ளுபடியை பெறலாம்.

    • சியோமி நிறுவனம் மிக்ஸ் போல்டு 2 அறிமுக நிகழ்வில் சைபர் ஒன் ரோபோட்-ஐ அறிமுகம் செய்தது.
    • இதன் மொத்த எடை 52 கிலோ, உயரம் 1.77 மீட்டர்கள் ஆகும்.

    சியோமி நிறுவனம் நேரலை நிகழ்ச்சியில் தனது சைபர் ஒன் ரோபோட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இது மனித உருவம் கொண்ட ரோபோட் ஆகும். மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ரோபோட் மணிக்கு 3.6 கிமீ வேகத்தில் செல்லும்.

    சியோமி சைபர் குடும்பத்தில் இரண்டாவதாக அறிமுகமாகி இருக்கிறது சைபர் ஒன் ரோபோட். முன்னதாக கடந்த ஆண்டு நான்கு பயோனிக் கால்களை கொண்ட ரோபோட் டாக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோட் பற்றிய தகவல்கள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.


    இந்த ரோபோட் மொத்த எடை 52 கிலோ, உயரம் 1.77 மீட்டர்கள் ஆகும். நடப்பது, ஓடுவது, பொருட்களை எடுப்பது உள்ளிட்டவைகளை இந்த ரோபோட் செய்யும். மேலும் மணிக்கு அதிகபட்சமாக 3.6 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைபர் டாக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சைபர் ஒன் ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோட் 45 வித்தியாசமான உணர்ச்சிகளை கண்டறிய முடியும். இதன் முகம் வளைந்த OLED பேனல் கொண்டிருக்கிறது.

    மேலும் இதில் உள்ள இரு மைக்ரோபோன்கள் காதாகவும், இரண்டு கேமராக்கள் மூன்று கோணங்களில் பார்க்கவும் வழி செய்கிறது. 13 மணிக்கட்டுகள் மூலம் இந்த ரோபோட் 21 வித்தியாசமான டிகிரிக்களில் நடமாட முடியும். இதில் உள்ள மோட்டார்கள் 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

    ஆரம்பக் கட்டத்தில் உள்ள சியோமி சைபர் ஒன் ரோபோட்-ஐ உருவாக்க சுமார் ஒரு லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 லட்சத்து 68 ஆயிரம் வரை செலவாகும் என சியோமி நிறுவன தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்தார். 

    • ஐகூ நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • இது Z6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

    ஐகூ நிறுவனம் முற்றிலும் புதிய Z6 மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரிஜினல் Z6 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மாடல் அதிவேக பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    CNMO வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி சீன நிறுவனமான ஐகூ தனது Z6 மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. இது முற்றிலும் புது மாடலாக இருக்குமா அல்லது பேஸ் Z6 ஸ்மார்ட்போனின் ரிப்ரெஷ் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ Z6 மாடலில் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 6.44 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.


    அந்த வகையில், புது Z6 மாடல் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் LCD பேனல் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம். இவை தவிர இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்படுகிறது.

    புதிய ஐகூ Z6 மாடலின் ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. புது Z6 வேரியண்ட் பற்றி ஐகூ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடல் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம். 

    • ஸ்னாப்சாட் நிறுவனம் ஸ்னாப்சாட் பிளஸ் சேவையை முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.
    • இந்த சேவை பயனர்களுக்கு பிரத்யேக அம்சங்களை வழங்கி வருகிறது.

    ஸ்னாப்சாட் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்னாப்சாட் பிளஸ் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. ஏற்கனவே இந்த சேவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் ஸ்னாப்சாட் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 49 ஆகும். இந்த சேவையை கொண்டு பயனர்கள் விசேஷ அம்சங்கள் மற்றும் ஸ்னாப்சாட் சோதனை செய்து வரும் புதிய அம்சங்களையும் பயன்படுத்த முடியும்.

    ஸ்னாப்சாட் பிளஸ் சேவையை பயன்படுத்துவோர் ஆறு பிரத்யேக அம்சங்களை பெற முடியும். அந்த வகையில் பயனர்கள் ஆப் ஐகானை மாற்றிக் கொள்ளவும், எத்தனை பேர் ஸ்டோரிக்களை திரும்பி திரும்பி பார்க்கின்றனர் என்பதை டிராக் செய்ய முடியும்.

    ஸ்னாப்சாட் பிளஸ் பயனர்கள் நண்பர்களில் ஒருவரை தங்களின் ப்ரோஃபைலில் பெஸ்ட் பிரெண்ட் ஆக வைத்து கொள்ள முடியும். முன்னதாக ஸ்னாப்சாட் பிளஸ் சேவை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் மற்ற நாடுகளில் ஸ்னாப்சாட் பிளஸ் சேவை கட்டணம் 3.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 317 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    • வாட்ஸ்அப் செயலியில் பயனர் பாதுகாப்பை அதிகப்படுத்தும் புது அம்சங்கள் அடங்கிய அப்டேட் வெளியிடப்படுகிறது.
    • இந்த அம்சங்கள் ஏற்கனவே செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வாட்ஸ்அப் க்ரூப்களில் போன் நம்பர் ஷேர் செய்வது, லாக்-இன் அப்ரூவல் என ஏராளமான அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இத்துடன் வாட்ஸ்அப்-இல் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழித்துக் கொள்ளும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது.

    இந்த வரிசையில், வாட்ஸ்அப் மேலும் அதிக பாதுகாப்பு அம்சங்களை தனது செயலியில் வழங்க இருக்கிறது. இவற்றை கொண்டு ஆன்லைன் ஸ்டேட்டஸ்-ஐ மறைத்து வைப்பது, வாட்ஸ்அப் க்ரூப்களை விட்டு சத்தமின்றி வெளியேறுவது, உரையாடல்களில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தடுப்பது என ஏராள வசதிகளை பெற முடியும்.


    "வாட்ஸ்அப்-க்கு புதிய பிரைவசி அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. யாருக்கும் தெரியப்படுத்தாமல் க்ரூப் சாட்களில் இருந்து வெளியேறலாம், நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை கண்ட்ரோல் செய்வது, வியூ ஒன்ஸ் மெசேஜ்கள் மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தவிர்க்கலாம். உங்கள் குறுந்தகவல்களை பாதுகாத்து, தனியுரிமையை வழங்க தொடர்ந்து புது வழிகளை உருவாக்குவோம்," என மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

    • ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • மேலும் இந்தியாவில் 5ஜி சேவை எப்போது வெளியிடப்படும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் 5ஜி சேவைகளை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. அடுத்த தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டியை நாடு முழுக்க அறிமுகம் செய்ய ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. 2024 வாக்கில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவைகளை வழங்க ஏர்டெல் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    5ஜி வெளியீடு குறித்து ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 5ஜி வெளியீடு பற்றி தகவல் தெரிவித்து இருக்கிறார். 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடும் நாட்டின் முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கும் என கூறப்படுகிறது.


    ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபல் விட்டல், இந்தியாவில் 5ஜி சேவைகள் இந்த மாதமே வெளியிடப்படும் என தெரிவித்து இருக்கிறார். சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 050 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது.

    இந்தியாவில் 5ஜி சேவைகளை 5 ஆயிரம் நகரங்களில் இருந்து துவங்க திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் சிஇஒ தெரிவித்து இருக்கிறார். 2024 வாக்கில் நாட்டின் ஊரக பகுதிகளிலும் 5ஜி சேவைகளை வெளியிட ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    • ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
    • நோக்கியா நிறுவனத்துடனான காப்புரிமை விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போன்களில் வழங்கி இருக்கும் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கு முறையான உரிமம் வைத்திருக்காத காரணத்தால் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு எதிராக ஜெர்மனி நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு மூலம் பிரச்சினையை முடித்துக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், இதற்கு இருதரப்பும் உடன்படவில்லை.


    இதை அடுத்து ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களை ஜெர்மனியில் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒப்போ நிறுவன வலைதளத்தில், சாதனம் பற்றிய விவரம் எங்களின் வலைதளத்தில் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து ஒப்போ சாதனங்களை பயன்படுத்தலாமா, அப்டேட் மற்றும் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுமா என்ற கேள்வி ஒப்போவிடம் எழுப்பப்பட்டது.


    இதற்கு பதில் அளித்த ஒப்போ நிறுவனம், ஒப்போ சாதனங்களை எந்த விதமான தடையும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம். நிச்சயம் உங்களுக்கான எதிர்கால அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இயர்போன், சார்ஜர் போன்ற அக்சஸரீக்களை ஒப்போ நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • இந்த சலுகை பலன்கள் கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 2999 சுதந்திர தின சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் ரிசார்ஜ் செய்யும் போது 100 சதவீதம் கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் சலுகை ஆகஸ்ட் 9 அல்லது அதற்கு பின் ரூ. 2 ஆயிரத்து 999 விலை ரிசார்ஜ் செய்தால் பெறலாம்.

    கேஷ்பேக் தொகை நெட்மெட்ஸ், ஏஜியோ, இக்சிகோ அல்லது 75 ஜிபி 4ஜி டேட்டா வடிவில் வழங்கப்படுகிறது. இதற்கான ஆஃபர் கூப்பன்கள் பயனர்களின் மைஜியோ செயலியில் ரிசார்ஜ் செய்த 72 மணி நேரத்தில் கிரெடிட் செய்யப்பட்டு விடும். சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. இதில் வழங்கப்படும் வவுச்சர்களை மைஜியோ செயலியின் வவுச்சர் பகுதியில் பெற முடியும்.


    இத்துடன் 25 சதவீத தள்ளுபடி வழங்கும் மூன்று நெட்மெட்ஸ் கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன்களை ரூ. 1000 அல்லது அதற்கும் அதிக தொகைக்கு செலவிடும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கொண்டு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். இந்த கூப்பன்கள் நெட்மெட்ஸ் வலைதளம் மற்றும் செயலி என எதில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நெட்மெட்ஸ் கூப்பன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.

    இதே போன்று இக்சிகோ பயனர்கள் ரூ. 750 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களை பெற முடியும். இந்த கூப்பன்களை ரூ. 4 ஆயிரத்து 500 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட விமான புக்கிங்களின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கூப்பன் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். இத்துடன் ரூ. 1000 மதிப்புள்ள ஏஜியோ தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன் தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    மேலும் குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்து 990 மதிப்பிலான பொருட்களை வாங்கி இருக்க வேண்டும். அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி பெற முடியும். இந்த கூப்பன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லும். 

    • உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வரும் குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப்.
    • இதில் பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். சந்தையில் டெலிகிராம், சிக்னல் மற்றும் சில குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

    அந்த வகையில் வாட்ஸ்அப் இன்று வெளியிட்டு இருக்கும் புதிய அப்டேட் பயனர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழிக்க வழி வகுக்கிறது. இந்த புது அம்சமாகும் கடந்த ஜுலை மாத வாக்கில் சோதனை செய்யப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.15.8-இல் வழங்கப்பட்டு இருந்தது.

    பீட்டா டெஸ்டிங் நிறைவு பெற்றதை அடுத்து இந்த அம்சம் தற்போது செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் பலருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க அதிகபட்சமாக 1 மணி நேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளாக இருந்தது.

    பின் இந்த அளவு தற்போது இரண்டு நாட்கள் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனுப்பிய குறுந்தகவல்களை அதிக பொறுமையாக அழித்துக் கொள்ள முடியும்.

    • கூகுள் நிறுவனத்தின் சர்ச், மேப்ஸ், டிரைவ் என ஏராளமான சேவைகளை மக்கள் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டது.
    • இதற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    கூகுள் சர்ச் சேவை இன்று காலை உலகின் பெரும்பாலான பகுதிகளில் சீராக இயங்கவில்லை என பலர் ட்விட்டரில் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் அவுடேஜ் டிராகிங் வலைதளமான டவுன்டிடெக்டர் கூகுள் சேவைகள் முடங்கியதை உறுதிப்படுத்தி இருக்கிறது. கூகுள் சர்ச் தொடர்பாக சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு இருப்பதாக டவுன்டிடெக்டர் தெரிவித்து உள்ளது.


    சர்வெர்களில் ஏற்பட்ட தற்காலிக பிரச்சினை காரணமாக உங்கள் கோரிக்கையை இப்போதைக்கு நிறைவு செய்ய முடியாது என்ற தகவலே கூகுள் சர்ச் செய்த போது காண்பித்தது. இது தவிர, உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயன்ற போது ஏதோ தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டு விட்டது என்ற தகவலும் காண்பிக்கப்பட்டது.

    கூகுள் சர்ச் மட்டுமின்றி கூகுள் டிரெண்ட்ஸ், கூகுள் மேப்ஸ், கூகுள் டிரைவ் மற்றும் யூடியூப் என மற்ற சேவைகளிலும் இதே பிரச்சினை நீடித்தது. கூகுள் பயனர்களில் பெரும்பாலானோர் இந்த குறைபாடு பற்றி ட்விட் செய்து வந்தனர். 

    • வாடகை டாக்சி சேவையை வழங்கி வரும் உபெர், சமீபத்தில் தனது கார்களை பயணிக்க புது வசதியை அறிமுகம் செய்தது.
    • இதன் மூலம் உபெர் செயலி இல்லாமலேயே டாக்சியை புக் செய்யலாம்.

    முன்னணி டாக்சி சேவை வழங்கும் நிறுவனம் உபெர் சமீபத்தில் உபெர் ரைடுகளை வாட்ஸ்அப் செயலியில் இருந்த படி புக் செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் கொண்டு உபெர் செயலி இன்ஸ்டால் செய்யாதவர்களும் உபெர் ரைடு செய்ய வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே புக் செய்து பயணிக்கலாம்.

    சேவையை அறிவிக்கும் போது உபெர் நிறுவனம் பயனர்கள் ரைடுகளை புக் செய்ய ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியையும் பயன்படுத்தலாம் என கூறி இருந்தது. மேலும் முதற்கட்டமாக இந்த வசதி டெல்லி-என்சிஆர் பகுதியில் மட்டும் அறிமுகப்படுத்தப்படும் என உபெர் அறிவித்தது. அறிமுகம் செய்வதற்கு முன் இந்த சேவை கடந்த ஆண்டு லக்னோவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.


    வாட்ஸ்அப் மூலம் உபெர் ரைடுகளை புக் செய்வது எப்படி?

    வாட்ஸ்அப் செயலியில் உபெர் ரைடு புக் செய்ய விரும்பும் பயனர்கள் வாட்ஸ்அப் டு ரைடு (WA2R) எனும் சாட்பாட்-ஐ பயன்படுத்த வேண்டும். இது வாட்ஸ்அப் செயலியின் பிஸ்னஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்ய சேவையின் பிஸ்னஸ் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினாலே போதுமானது. இதை அடுத்து பிக்கப் மற்றும் டிராப் லொகேஷன்களை வழங்க வேண்டும்.

    வழிமுறை 1: முதலில் +917292000002 என்ற எண்ணிற்கு உங்களின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்தபடி குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இல்லை எனில், https://wa.me/91792000002?text=Hi%20Uber எனும் வலைதள முகவரிக்கு சென்றும் உபெர் பிஸ்னஸ் அக்கவுண்டிற்கு குறுந்தகவல் அனுப்பலாம்.

    வழிமுறை 2: உபெர் செயலியில் கேட்கப்படுவதை போன்றே, சாட்பாட் உங்களின் பிக்கப் மற்றும் டிராப் லொகேஷன் விவரங்களை வழங்க கேட்கும்.

    வழிமுறை 3: இனி தோராயமான கட்டண விவரம் மற்றும் ஓட்டுனர் வர எவ்வளவு நேரம் ஆகும் என்ற விவரங்கள் திரையில் தோன்றும்.

    ×