என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது.
- இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளம்பர நோக்கில் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி பி.எஸ்.என்.எல். பயனர்கள் ரூ. 150 டாப்-அப் செய்தால் ரூ. 150 மதிப்பிலான டாக்டைம் பெற முடியும். அதன்படி பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.150 ரிசார்ஜில் ஃபுல் டாக்டைம் பெறலாம்.
விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இந்த சலுகை மிக குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும். இது பற்றி வெளியாகி இருக்கும் அறிவிக்கையின் படி ஃபுல் டாக்டைம் சலுகை ஆகஸ்ட் 15, 2022 துவங்கி ஆகஸ்ட் 21, 2022 வரை வழங்கப்படும். முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் நீண்ட வேலிடிட்டி கொண்ட புது சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த பின் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்பட்டு விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.
இவை தவிர பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புது ஐபோன் சீரிஸ் மாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, புதிய ஐபோன் மாடல்கள் வெளியீட்டின் போதே உற்பத்தியும் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் தனது ஐபோன் 14 உற்பத்தியை சீனாவில் துவங்கும் போதே இந்திய சந்தையிலும் துவங்கும் என தெரிவித்து இருக்கிறார். சீனா மற்றும் இந்தியாவில் ஐபோன் 14 உற்பத்தி இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்குகிறது.

புது ஐபோன்கள் வெளியீட்டை தொடர்ந்து இந்திய உற்பத்தியும் துவங்க இருப்பது இதுவே முதல் முறை ஆகும். வழக்கமாக புது ஐபோன் வெளியான இரு காலாண்டுக்கு பின்பு தான் இந்தியாவில் அதன் உற்பத்தி துவங்கும். புதிய ஐபோன் 14 மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையின் படி ஆப்பிள் நிறுவன வருவாய் இந்தியாவில் இருமடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தான் ஆப்பிள் தனது புது ஐபோன்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய முடிவு எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போது புது ஐபோன்களின் விலை கணிசமாக குறையவும் வாய்ப்புகள் உண்டு.
தற்போதைய தகவல்களின் படி புதிய ஐபோன் 14 மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 200 முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்யலாம். இவை அனைத்திலும் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.
- பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
- இந்த சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஆயத்தமாகி உள்ளன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக புது சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
புதிய பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த போதும் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைந்து விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.
இதுதவிர ரூ. 2 ஆயிரத்து 022 விலை பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகையை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும்.

மற்ற சலுகைகள்:
புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 022 விலை சலுகை மட்டும் இன்றி நீண்ட வேலிடிட்டி வழங்கும் இதர சலுகைகளையும் பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது.
மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது.
- ஏலத்தில் அதானி குழுமமும் கலந்து கொண்டு 5ஜி அலைக்கற்றைகளை விலைக்கு வாங்கியது.
மத்திய தொலைத்தொடர்ந்து துறை சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை ரூ. 88 ஆயிரத்து 078 கோடி செலவில் விலைக்கு வாங்கியது.
ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை ரூ. 43 ஆயிரத்து 084 கோடி கொடுத்து வாங்கியது. வோடபோன் ஐடியா நிறுவனம் 3 ஆயிரத்து 300 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்தியாவில் 2023 முதல் 5ஜி சேவையை வழங்கும் என மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார். மத்திய டெலிமேடிக்ஸ் துறை சார்பில் NSA கோர் நெட்வொர்க் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஆகஸ்ட் மாதத்திற்குள் தயார் நிலைக்கு வந்து விடும். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் வரை சோதனை நடைபெற இருக்கிறது.
"அடுத்த ஆண்டு வார்ரில் இந்திய 5ஜி ஸ்டாக் தயார் நிலைக்கு வந்து விடும். அப்போது பி.எஸ்.என்.எல். மூலம் 5ஜி சேவைகள் வழங்கும் பணிகள் துவங்கி விடும்," என மத்திய மந்திரி மேலும் தெரிவித்தார்.
- நத்திங் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் சந்தையில் நத்திங் போன் (1) மாடல் மூலம் களமிறங்கியது.
- இந்த நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் (1) சமீபத்தில் அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் போன் (1) லைட் எனும் பெயரில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்றே குறைவாக இருக்கும் என்றும் இதன் பின்புறத்தில் குளேயிங் பேக் மற்றும் 900 எல்இடி-க்கள் நீக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர் வழங்கப்படலாம். இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

நத்திங் போன் (1) லைட் மாடலில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படலாம். நத்திங் போன் (1) மாடலின் 8 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நத்திங் போன் (1) மாடலில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
இத்துடன் டூயல் 50MP கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பிரைமரி லென்ஸ் சோனி IMX766 யூனிட் ஆகும். நத்திங் போன் (1) மாடலில் 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படாது. சார்ஜரை பயனர்கள் ரூ. 1500 கொடுத்து தனியே வாங்க வேண்டும். இந்த விலைக்கு 45 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற்று முடிந்து விட்டது.
- இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது.
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் ரூ. 88 ஆயிரத்து 078 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் மிகப் பெரிய 5ஜி நெட்வொர்க் கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி உள்ளது. இதற்காக ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 085 கோடி செலவிட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் 2 ஆயிரத்து 668 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை ரூ. 18 ஆயிரத்து 784 கோடிக்கு வாங்கி இருக்கிறது.

டெலிகாம் நிறுவனங்கள் மட்டும் இன்றி அதானி குழுமம் சார்பில் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டில் 400 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 212 கோடி ஆகும். இந்தியாவின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி மதிப்பிலான தொகை ஈட்டப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 71 சதவீத 5ஜி ஏர்வேவ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த ஏலத்தில் மொத்தம் 72 ஆயிரத்து 098 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 51 ஆயிரத்து 236 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஏலத்தின் முடிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 22 வட்டாரங்களிலும் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் உரிமத்தை பெற்று இருக்கிறது. இதன் மூலம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் ரியல்மி பேட் X டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
- ரியல்மி பேட் X மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் தனது புது டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ரியல்மி பேட் X என அழைக்கப்படும் புது டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0 ஓ.எஸ். கொண்டுள்ளது. இது டேப்லெட் மாடல்களுக்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்டது ஆகும்.
அறிமுகமாகி ஒரு வாரம் நிறைவுற்ற நிலையில், தற்போது இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. ரியல்மி பேட் X மாடல் ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது. புதிய ரியல்மி பேட் X மாடல் கிளேசியர் புளூ மற்றும் குளோயிங் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
ரி்யல்மி பேட் X 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, வைபை மாடல் ரூ. 19 ஆயிரத்து 999
ரி்யல்மி பேட் X 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, வைபை + 5ஜி மாடல் ரூ. 25 ஆயிரத்து 999
ரி்யல்மி பேட் X 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, வைபை + 5ஜி மாடல் ரூ. 27 ஆயிரத்து 999

புதிய ரியல்மி பேட் X மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். அறிமுக சலுகை ரியல்மி வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் இடையே வேறுபடும்.
ரியல்மி பேட் X அம்சங்கள்:
ரியல்மி பேட் X மாடலில் 10.95 இன்ச் எல்சிடி ஸ்கிரீன், 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் லெவல், ரியல்மி பென்சில் சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0, பிசி கனெக்ட், ஸ்ப்லிட் வியூ மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.
இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா, டால்பி அட்மோஸ் வசதி, குவாட் ஸ்பீக்கர் சப்போர்ட், டூயல் மைக்ரோபோன்கள், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1, 5ஜி, யுஎஸ்பி டைப் சி, 8340 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடலுக்கு அவ்வப்போது விலை குறைப்பை அறிவிப்பது வாடிக்கையான விஷயம் தான்.
- தற்போது கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது கேலக்ஸி வாட்ச் 4 மாடலின் விலையை குறைத்தது. தற்போது சாம்சங் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போன் விலையை குறைத்து இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடலின் விலை இந்தியாவில் தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடல் தற்போது ரூ. 1,500 வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. முன்னதாக கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17 ஆயிரத்து 499 விலையிலும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் ரூ. 18 ஆயிரத்து 499 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 15 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன், அக்வா புளூ மற்றும் கூப்பர் பிளஷ் நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டும் இன்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி அம்சங்கள்:
- 6.6 இன்ச் FHD+TFT, 120Hz டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- 4ஜிபி, 6ஜிபி ரேம்
- 128ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12
- 50MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
- 5000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- டூயல் சிம் ஸ்லாட்
- 3.5 எம்எம் ஆடியோ போர்ட்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
புதிய விலை விவரங்கள்:
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ரூ. 15 ஆயிரத்து 999
சாம்சங் கேலக்ஸி F23 5ஜி 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ரூ. 16 ஆயிரத்து 999
- நத்திங் நிறுவனம் தனது அடுத்த போனை விரைவில் வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.
- நத்திங் போன் 1-ன் லைட் வெர்ஷனாக அது இருக்கும் என கூறப்படுகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.
அதுமட்டுமின்றி இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸர், 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4,500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி, 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி என எண்ணற்ற அம்சங்களை இந்த போன் கொண்டிருந்தாலும், இதில் சில கோளாறுகள் ஏற்பட்டதாக பயனர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நத்திங் நிறுவனம் தனது அடுத்த போனை விரைவில் வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1-ன் லைட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. நத்திங் போன் 1-ற்கும் அதன் லைட் வெர்ஷனுக்கு சின்ன சின்ன மாற்றங்கள் தான் இருக்குமாம்.
குறிப்பாக நத்திங் போன் 1-ன் பேக் பேனலில் இடம்பெற்றுள்ள எல்.இ.டி ஸ்டிரிப்கள் அதன் லைட் வெர்ஷனில் இடம்பெற்று இருக்காது என கூறப்படுகிறது. அதேபோல் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இடம்பெற்று இருக்காது என தெரிகிறது. மற்றபடி நத்திங் போன் 1-ல் இடம்பெற்று இருக்கும் அனைத்து அம்சங்களும் அதன் லைட் வெர்ஷனிலும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- ஃபுளோரைட் AG கிளாஸ் விவோ V25 ப்ரோவில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கர்வுடு ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் AMOLED டிஸ்ப்ளேவும் இதில் இடம்பெற்று இருக்குமாம்.
விவோ நிறுவனம் அதன் V25 மாடலை விரைவில் இந்தியாவில் லான்ச் செய்ய உள்ளது. V25 சீரிஸில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். முதலில் விவோ V25 மாடலை அறிமுகப்படுத்திவிட்டு அதன்பின் விவோ V25 ப்ரோ மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விவோ நிறுவனம் வருகிற ஆகஸ்ட் மாதம் 17 அல்லது 18 ஆகிய தேதிகளில் இந்தியாவில் லாஞ்ச் ஈவண்ட் ஒன்றை நடத்தி அதில் விவோ V25 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. விவோ V25 ப்ரோ மாடலை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த போன்கள் குறித்த விவரங்கள் லீக்கான வண்ணம் உள்ளன. அதன்படி விவோ V25 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் கலர் சேஞ்சிங் பேனல் உடன் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஃபுளோரைட் AG கிளாஸ் இதில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த போன் கர்வுடு ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் AMOLED டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.
- ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகமாக உள்ளது.
- இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அதன் ஒன்பிளஸ் 10T மாடலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த போன் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதன்படி சமீபத்தில், ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது எனவும் அதன் 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட்டும், 12ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டும் மட்டுமே வெளியாகும் என தகவல் பரவி வந்தது. அதுமட்டுமின்றி சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் இடம்பெற்றிருக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் வெளியாவதை ஒன்பிளஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் ரேம் தொடர்பான சர்ச்சைக்கு அந்நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகமாக உள்ளது.
- ஐகூ 9T ஸ்மார்ட்போன் 4,700 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- அதுமட்டுமின்றி இதில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெற்று இருக்கிறதாம்.
ஐகூ நிறுவனம் இந்தியாவில் அதன் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்து இருந்தது. அதன்படி 9 சீரிஸில் இதுவரை ஐகூ 9, ஐகூ 9 ப்ரோ, ஐகூ 9 SE ஆகிய மாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ஐகூ 9T என பெயரிடப்பட்டுள்ள அந்த புது மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 SoC புராசஸரை கொண்டிருக்கும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவும் இதில் இடம்பெற்றுள்ளது. ஐகூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 4,700 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும் என்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்திய தகவல்படி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49 ஆயிரத்து 999 எனவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண் விலை ரூ.54 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த போன் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் அமேசான் மற்றும் ஐகூவின் இ-ஸ்டோர்களிலும் விற்பனைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






