என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கிய கூகுள் சேவைகள்
- கூகுள் நிறுவனத்தின் சர்ச், மேப்ஸ், டிரைவ் என ஏராளமான சேவைகளை மக்கள் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டது.
- இதற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
கூகுள் சர்ச் சேவை இன்று காலை உலகின் பெரும்பாலான பகுதிகளில் சீராக இயங்கவில்லை என பலர் ட்விட்டரில் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் அவுடேஜ் டிராகிங் வலைதளமான டவுன்டிடெக்டர் கூகுள் சேவைகள் முடங்கியதை உறுதிப்படுத்தி இருக்கிறது. கூகுள் சர்ச் தொடர்பாக சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு இருப்பதாக டவுன்டிடெக்டர் தெரிவித்து உள்ளது.
சர்வெர்களில் ஏற்பட்ட தற்காலிக பிரச்சினை காரணமாக உங்கள் கோரிக்கையை இப்போதைக்கு நிறைவு செய்ய முடியாது என்ற தகவலே கூகுள் சர்ச் செய்த போது காண்பித்தது. இது தவிர, உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயன்ற போது ஏதோ தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டு விட்டது என்ற தகவலும் காண்பிக்கப்பட்டது.
கூகுள் சர்ச் மட்டுமின்றி கூகுள் டிரெண்ட்ஸ், கூகுள் மேப்ஸ், கூகுள் டிரைவ் மற்றும் யூடியூப் என மற்ற சேவைகளிலும் இதே பிரச்சினை நீடித்தது. கூகுள் பயனர்களில் பெரும்பாலானோர் இந்த குறைபாடு பற்றி ட்விட் செய்து வந்தனர்.