என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஒன்பிளஸ் 10T மாடல் சீனாவில் மட்டும் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    • ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன்கள் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 10T மாடலை வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இதே மாடல் சீனாவில் மட்டும் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரே மாடலை இரண்டு பெயர்களில் வெளியிடப்படுதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

    அது ஏனென்றால் ஒன்பிளஸ் 10T மாடலை விட ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ மாடல் கூடுதல் ரேம் வசதியை கொண்டுள்ளது. ஏஸ் ப்ரோ மாடலில் 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் இடம்பெற்று உள்ளது. ஆனால் அந்த வேரியண்ட் ஒன்பிளஸ் 10T மாடலில் இடம்பெறவில்லை. மற்றபடி இரண்டுமே ஒரே அம்சங்களை கொண்டுள்ளது.


    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோவில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்னாப்டிராகன் 8 ப்ளஸ் Gen 1 புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளதாம். ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி IMX766 பிரைமரி கேமராவும், 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா ஒயிடு கேமராவும், 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ கேமராவும் பின்புறம் இடம்பெற்று உள்ளது.

    அதேபோல் முன்பகுதியில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா உள்ளது. 4,800 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 150 வாட் ரேப்பிட் சார்ஜிங் திறன் கொண்டதாகும். இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • ரெட்மி 10A ஸ்போர்ட் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6ஜிபி ரேம், 128ஜிபி இண்டர்னல் மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ரெட்மி 10A-விற்கும் அதன் ஸ்போர்ட் வெர்ஷனுக்கு உள்ள ஒரே ஒரு வித்தியாசம் ரேம் மட்டும் தான்.

    சியோமி நிறுவனம் ரெட்மி 10A என்கிற ஸ்மார்ட்போனை கடந்த ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி 3 மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது அதன் ஸ்போர்ட்ஸ் வெர்ஷனை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரெட்மி 10A-விற்கும் அதன் ஸ்போர்ட் வெர்ஷனுக்கு உள்ள ஒரே ஒரு வித்தியாசம் ரேம் மட்டும் தான். மற்றபடி அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி 10A ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் மாடலில் 6.53 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 IPS LCD டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G25 பிராசஸர், அதிகபட்சம் 6ஜிபி ரேம், 128ஜிபி இண்டர்னல் மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.


    ரெட்மி 10A ஸ்போர்ட் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 10 வாட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

    இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக், சீ ப்ளூ, ஸ்லேட் கிரே ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் மற்றும் சியோமி ஆன்லைன் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

    • ஒன்பிளஸ் 10T மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது.
    • இந்த போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வெளியிடப்பட உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அதன் ஒன்பிளஸ் 10T மாடலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த போன் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

    அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது என தெரியவந்துள்ளது. 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட்டும், 12ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டும் இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.49 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் ஒன்பிளஸ் 10T-ன் சீன வெர்ஷனான ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோவில் இடம்பெற்று இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வெளியிடப்பட உள்ளது.

    • பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 19 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு மாத வேலிடிட்டி கொண்டதாகும்.
    • உங்கள் சிம்மை ஆக்டிவாக வைக்க இதுவே சிறந்த திட்டமாகும்.

    தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை தான் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலான பயனர்கள் இந்த மூன்று நிறுவனங்களில் ஏதாவது ஒன்றைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பயனர்களை கவர்வதற்காக குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்கும் திட்டங்களை இந்நிறுவனங்கள் வழங்கி வந்தன.

    ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, இந்த மூன்று நிறுவனங்களும் தங்கள் திட்டங்களின் விலைகளை கிடுகிடுவென உயர்த்தி விட்டன. அந்நிறுவனங்கள் மலிவான விலையில் வழங்கி வந்த திட்டங்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ரகசியமாக அறிமுகப்படுத்தி உள்ளது.


    அதன்படி பி.எஸ்.என்.எல் நிறுவனம் 19 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இது ஒரு மாத வேலிடிட்டி கொண்டதாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு, அழைப்பு கட்டணம் 20 பைசாவாக குறைகிறது. இதன்பின் வேறு எந்த ரீசார்ஜும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் கவலையின்றி மாதம் முழுவதும் காலிங்க் வசதியை பெறலாம். உங்கள் சிம்மை ஆக்டிவாக வைக்க இதுவே சிறந்த திட்டமாகும்.

    • கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் ஒன்பிளஸ் நிறுவனம் நடத்தும் முதல் நேரடி ஈவண்ட் இதுவாகும்.
    • ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10T மாடல் ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி உலக சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக நியூயார்க்கில் பிரத்யேக ஈவண்ட் ஒன்றை அந்நிறுவனம் நடத்த உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் ஒன்பிளஸ் நிறுவனம் நடத்தும் முதல் நேரடி ஈவண்ட் இதுவாகும்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்திய சந்தையும் முக்கிய பங்காற்றி உள்ளது. இதனால் அந்நிறுவனம் அதன் லான் ஈவண்ட்டை இந்தியாவிலும் ஸ்கிரீனிங் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள இண்டர்நேஷனல் எக்சிபிஷன் செண்டரில் இந்த ஸ்கிரீனிங் ஆகஸ்ட் 3-ந் தேதி நடைபெற உள்ளது.


    இந்த ஈவண்ட்டுக்கான டிக்கெட்டை பயனர்கள் 1 ரூபாய் மட்டுமே செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட்டிற்கு சென்று ரிஜிஸ்டர் செய்பவர்களுக்கு அவர்களது மெயிலில் ஒரு லிங்க்கும், பிரத்யேகமான அழைப்பு எண்ணும் கொடுக்கப்படும். அந்த லிங்க்கை ஓபன் செய்து 1 ரூபாய் கட்டணமாக செலுத்தி ரிஜிஸ்டர் செய்தபின், அதில் பிரத்யேகமான அழைப்பு எண்ணை பதிவிட்டு தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டுமாம்.

    இந்த ஈவண்ட்டிற்கு வரும் பயனர்கள் ஒன்பிளஸ் 10T மாடல் ஸ்மார்ட்போனின் செயல்திறனை சோதித்து பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்களாம். அதுமட்டுமின்றி வருபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புராசஸரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் அசுஸ் சென்போன் 9-ல் இடம்பெற்று உள்ளது.
    • இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போனை வெளியிட தயாராகி வருகிறது. அதன்படி அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனை வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 5.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சாரும் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்-அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இதில் உள்ளது.


    புராசஸரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.

    அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட இதன் பேஸ் மாடலின் விலை ரூ.60 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தற்போது ரீல்ஸில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும்.
    • விரைவில் வர உள்ள புது அப்டேட்டின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம்.

    இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் என்பது வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும். இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்படுகிறது. தற்போது ரீல்ஸில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை தொகுத்து அதற்கு பின்னணியில் பாடல்களை ஒலிக்கவிட்டு ரீல்ஸாக பதிவிட முடியும் என்கிற புதிய அம்சத்தை அந்நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டுவர் உள்ளது.


    தற்போது ரீல்ஸில் வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும். விரைவில் வர உள்ள புது அப்டேட்டின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம். இதற்காக விதவிதமான டெம்ப்ளேட்களையும் அந்நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் அமேசான் ப்ரைம் டே சேல் நடைபெறுகிறது.
    • இதில் சாம்சங் கேலக்ஸி M13 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தில் சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

    சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி M13 4ஜி மற்றும் கேலக்ஸி M13 5ஜி ஆகிய மாடல்களை இந்தியாவில் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்கள் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இரு மாடல்களுக்கும் அறிமுக ஆஃபராக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    அம்சங்களை பொறுத்தவரை இதில் இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெற்று உள்ளது. M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் மிட்நைட் ப்ளூ, ஆக்வா கிரீன் மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

    M13 5ஜி ஸ்மார்ட்போனில் ரேம் ப்ளஸ் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. டைமென்சிட்டி 700 புராசஸரை கொண்டுள்ளது. அதேபோல் M13 4ஜி ஸ்மார்ட்போன் 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரியை கொண்டு உள்ளது. இதில் எக்சினோஸ் 850 புராசஸர் இடம்பெற்றுள்ளது.


    M13 4ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 எனவும், அதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.12 ஆயிரத்து 999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அதேபோல் M13 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14 ஆயிரத்து 999 என்றும் அதன் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.15 ஆயிரத்து 999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் தற்போது ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் அமேசான் ப்ரைம் டே சேல் நடைபெறுவதால், அதில் ரூ.2 ஆயிரம் டிஸ்கவுண்ட் உடன் இந்த போன்களை வாங்க முடியும். அதுவும் ஐசிஐசிஐ மற்றும் எஸ்.பி.ஐ. ஆகிய வங்கிகளின் கார்ட்கள் மூலம் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.
    • இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் என்பது வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும்.

    இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் என்பது வீடியோ-மியூசிக் ரீமிக்ஸ் சேவை ஆகும். இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்படுகிறது. தற்போது ரீல்ஸில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் பயனர்கள் பதிவிடும் 15 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்கள் அனைத்தும் தானாகவே ரீல்ஸ் பக்கத்திற்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    15 நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோக்கள் மட்டுமே வீடியோ செக்‌ஷனில் இடம்பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் இனி பதிவிடும் வீடியோக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே உள்ள பழைய வீடியோக்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

    • அமேசான் ப்ரைம் டே விற்பனை வருகிற ஜூலை 23 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
    • இதில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்டை ரூ.30 ஆயிரத்து 249க்கும் வாங்க முடியும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10T மாடல் ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், இதற்கு முந்தைய மாடலான ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி வருகிற அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது மட்டும் இந்த தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.


    அமேசான் ப்ரைம் டே விற்பனை வருகிற ஜூலை 23 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்டை ரூ.30 ஆயிரத்து 249க்கும் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூ.38 ஆயிரத்து 999 ஆகும். அமேசான் ப்ரைம் டே விற்பனையில் இதற்கு ரூ.8 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதேபோல் தற்போது ரூ.42 ஆயிரத்து 999க்கு விற்கப்பட்டு வரும் ஒன்பிளஸ் 10R-ன் 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட் மற்றும் ரூ.43 ஆயிரத்து 999-க்கு விற்கப்பட்டு வரும் 150 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலையும் ரூ.8 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட உள்ளது. அமேசான் வழங்கும் ரூ.4 ஆயிரம் டிஸ்கவுண்ட் கூபன் மற்றும் ரூ.4 ஆயிரத்திற்கான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மூலம் இந்த சலுகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • சமீபத்தில் நத்திங் போனை பயன்படுத்தியவர்கள் அதன் டிஸ்ப்ளேவில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தனர்.
    • டிஸ்ப்ளேவில் உள்ள கோளாறை சரிபடுத்தும் வகையில் விரைவில் ஒரு அப்டேட்டை வெளியிட நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த ஜூலை 12-ந் தேதி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம் இந்தியாவில் இந்த மொபைல் அறிமுகமானது. பல்வேறு நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வந்தாலும், இந்தியாவில் இன்று இரவு 7 மணிக்கு தான் விற்பனை தொடங்கப்பட உள்ளது. ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த போன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், நத்திங் நிறுவனம் அதன் முதல் போனான நத்திங் போன் (1) மாடலுக்கு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட்டில் யூசர் இண்டர்பேஸ், பேட்டரி, கேமரா ஆகியவற்றில் சில மேம்படுத்தல்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட் மொத்தம் 93.81 எம்.பி அளவு கொண்டதாகும்.


    அதன்படி இந்த அப்டேட்டில் நத்திங் இயங்குதளத்தின் சிஸ்டம் ஒலிகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கேமராவில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. குறிப்பாக அதில் HDR10 ப்ளஸுக்கான ஆதரவை பெற்றுள்ளன. இதன்மூலம் ஹெச்டிஆர், போர்ட்ரெய்ட், இரவுக் காட்சி மற்றும் பிற மோட்களுக்கான கேமரா எபெக்ட்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    நத்திங் போன் 1-ன் பேட்டரி ஆயுளும் இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நத்திங் போனை பயன்படுத்தியவர்கள் அதன் டிஸ்ப்ளேவில் கோளாறு இருப்பதாக புகார் அளித்தனர். இதனை சரிபடுத்தும் வகையில் விரைவில் ஒரு அப்டேட்டை வெளியிட நத்திங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • விவோ நிறுவனம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெண்ணிலா மாடல் விவோ V25 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
    • விவோ V25 ப்ரோ மாடலை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    விவோ நிறுவனம் அதன் V25 மாடலை விரைவில் இந்தியாவில் லான்ச் செய்ய உள்ளது. V25 சீரிஸில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். முதலில் விவோ வெண்ணிலா V25 மாடலை அறிமுகப்படுத்திவிட்டு அதன்பின் விவோ V25 ப்ரோ மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்திய தகவல்படி விவோ நிறுவனம் வருகிற ஆகஸ்ட் மாதம் 17 அல்லது 18 ஆகிய தேதிகளில் இந்தியாவில் லாஞ்ச் ஈவண்ட் ஒன்றை நடத்தி அதில் வெண்ணிலா மாடல் விவோ V25 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. விவோ V25 ப்ரோ மாடலை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


    விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போனில் 120 ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.56 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் கர்வுடு AMOLED டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா ஒயிடு கேமரா, 2 மெகாபிக்சல் போர்ட்ரேட் கேமரா என பின்புறம் டிரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, மீடியாடெக் டைமென்சிட்டி 8100 SoC புராசஸர், 4500 எம்.ஏ.ஹெச் பேட்டரி. 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் என எண்ணற்ற அம்சங்களை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    ×