என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஓடிடி தளங்களில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
    • புதுப்படங்கள் கூட தற்போது நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

    கொரோனா லாக்டவுன் சமயத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஒரே பிசினஸ் என்றால் அது ஓடிடி தளங்கள் மட்டும் தான். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு பொழுதைக்கழிக்க பெரிதும் உதவியாக இருந்தன இந்த ஓடிடி தளங்கள். தற்போது புதுப்படங்கள் கூட நேரடியாக இந்த ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

    ஓடிடி தளங்களில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்களும் இதில் இருப்பதனால் மக்கள் விரும்பி பார்க்கும் தளமாகவும் நெட்பிலிக்ஸ் இருந்து வருகிறது. இருப்பினும் அந்நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


    பயனர்கள் தங்களின் பாஸ்வோர்டை பிறருக்கு பகிர்ந்து உதவ முடியாத படி பாதுகாப்பு அம்சத்தை அந்நிறுவனம் அதிகரித்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அடுத்த காலாண்டில் இதனை சரிசெய்ய மைரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை நெட்பிலிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அது அந்நிறுவனத்துக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • நத்திங் போன் 1 வெளியானது முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
    • இதற்கு ஹார்ட்வேர் குறைபாடு தான் காரணம் என கூறப்படுகிறது.

    நத்திங் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நோட்டிபிகேஷன்கள் வரும் போது இது ஒளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    நத்திங் போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது.

    இதுதவிர முன்புறம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட இதில் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.


    இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன், வெளியானது முதல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இதில் உள்ள ஹார்ட்வேர் குறைபாடு காரணமாக டிஸ்ப்ளேவில் கருப்பு நிறத்திற்கு பதிலாக பச்சை நிறத்தில் காட்சி அளிக்கின்றன. ஒருசிலர் இந்த பிரச்சனை காரணமாக போனை திருப்பு அனுப்பிய போதும் அதற்கு பதிலாக வரும் போனிலும் இதே பிரச்சனை வருவதாக கூறி புலம்புகின்றனர்.

    ஒருசிலருக்கோ செல்ஃபி கேமராவில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பன்ச் ஹோல் செல்பி கேமரா என கூறிவிட்டு அதன் வடிவமே வித்தியாசமாக இருப்பதாக கூறி சிலர் புலம்பி வருகின்றனர். இதற்கெல்லாம் நத்திங் நிறுவனம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
    • ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்களை இதுவரை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் 10T என்கிற 5ஜி மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 4,800mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.


    இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம் லீக் ஆகி உள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் 3ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்பினிக்ஸ் Y1 ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • வருகிற ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

    பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் மலிவு விலை ஸ்மார்ட்டிவியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதன்படி இன்பினிக்ஸ் Y1 என்கிற பெயர் கொண்ட அந்த ஸ்மார்ட்டிவி 32 இன்ச் மாடல் ஆகும். பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.

    இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று உள்ளது. மேலும் இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. 32 இன்ச் எல்.இ.டி டிஸ்ப்ளே, குவாட்கோர் புராசஸர், 512எம்.பி ரேம், 4 ஜிபி ஸ்டோரேஜ், லினக்ஸ் இயங்குதளம் என எண்ணற்ற அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்டிவிக்கு ஒருவருட வாரண்டியும் வழங்கப்பட்டு உள்ளது.


    இந்த புதிய ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.8 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி டிஸ்கவுண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி வாங்குபவர்களுக்கு இந்த டிவி ரூ.8 ஆயிரத்து 99 ரூபாய்க்கு கிடைக்கும்.

    அதுமட்டுமின்றி பழைய டிவிக்கு ரூ.8 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அப்படி எக்ஸ்சேஞ் செய்து வாங்குபவர்கள் இந்த டிவியை ரூ.99 க்கும் வாங்கிச் செல்லலாம். இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 இன்ச் மாடல் ஸ்மார்ட்டிவி வருகிற ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. 

    • ஹூவாய் நிறுவனம் கடந்தாண்டு ஜூன் மாதம் தான் அந்நிறுவனம் அதன் ஹார்மோனி OS2 வெர்ஷனை அறிமுகப்படுத்தியது.
    • இத்துடன் சேர்த்து புது சாதனங்களையும் ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாம்.

    ஹுவாய் நிறுவனம் புது இயங்குதளத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஹார்மோனி OS3 என பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தை வருகிற ஜூலை 27-ந் தேதி அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதாம். அன்றைய தினம் நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட்டில் இத்துடன் சேர்த்து புது சாதனங்களையும் ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாம்.

    இந்த இயங்குதளம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட சாதனங்களில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் தான் அந்நிறுவனம் அதன் ஹார்மோனி OS2 வெர்ஷனை அறிமுகப்படுத்தியது.


    அது அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டே ஆகும் நிலையில் தற்போது அடுத்த இயங்குதளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது உலகளவில் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

    • ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.
    • வருகிற ஜூலை 20-ந் தேதி ரெட்மி K50i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ரெட்மி K50i என்கிற மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 20-ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. இது ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.


    அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட் போன் வர உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதன் வெளியீட்டுக்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில், ரெட்மி K50i ஸ்மார்ட்போனில் 5ஜி சோதனை நடத்தப்படுள்ளது. ஜியோ நிறுவனம் இந்த 5ஜி சோதனையை நடத்தியதாகவும், இதன் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 12 5ஜி பேண்ட்களுடன் கூடிய முதல் ரெட்மி ஸ்மார்ட்போன் இந்த K50i மாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 பேக்கில் இதுவரை ஒரு நாளைக்கு 2.5ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டு வந்தது.
    • ரூ.475 பேக்கில் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

    இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா, தற்போது அதன் பயனர்களுக்காக தங்களின் ரீசார்ஜ் பேக்குகளை கூடுதல் சலுகையுடன் புதுப்பித்து உள்ளது. ரூ. 500-க்கு கீழ் உள்ள ஒரு மாத வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 மற்றும் ரூ.475 ஆகிய இரு பேக்குகள் தான் தற்போது கூடுதல் சலுகைகளுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 பேக்கில் இதுவரை ஒரு நாளைக்கு 2.5ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை 3.5ஜிபி டேட்டாவாக அதிகரித்துள்ளனர். மற்றபடி ஏற்கனவே இருந்தது போலவே இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ், போன்ற சலுகைகளும் இதில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


    அதேபோல் ரூ.475 பேக்கில் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது 4 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி ஏற்கனவே இருந்தபடி வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர், இலவச காலிங், மெசேஜ் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்று உள்ளன.

    • பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்கி வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம்.
    • தற்போது வீடியோ மற்றும் போட்டோக்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.

    சமூக வலைதளமான வாட்ஸ்அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர், அதில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்கி வரும் அந்நிறுவனம் தற்போது மேலும் ஒரு முக்கிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸில் தான் இந்த புதிய அப்டேட் வர உள்ளது. அதன்படி தற்போது வீடியோ மற்றும் போட்டோக்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும், விரைவில் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.


    குரலை பதிவு செய்து வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சம் ஏற்கனவே வாட்ஸ் அப்பில் நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது ஸ்டேட்டஸிலும் அந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது இந்த அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை செய்து வருவதாகவும், விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • 4 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 8 மில்லியன் ஸ்மார்ட்டிவிக்களை விற்பனை செய்துள்ளது சியோமி நிறுவனம்
    • இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட்டிவி விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாகவும் சியோமி இருந்துள்ளது.

    சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்டிவி தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் அறிமுகமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இதனை அந்நிறுவனம் கொண்டாடி வரும் நிலையில், தற்போது ஸ்மார்ட்டிவி விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி உள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.


    அதன்படி அந்நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 8 மில்லியன் ஸ்மார்ட்டிவிக்களை விற்பனை செய்துள்ளது. சியோமி நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதன் முதல் ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்தியது. அதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தொடர்ந்து பல்வேறு மாடல்களை அந்நிறுவனம் வெளியிட்டது.

    இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக இந்தியாவில் 8 மில்லியன் ஸ்மார்ட்டிவிக்களை 4 ஆண்டுகளில் விற்பனை செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட்டிவி விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாகவும் சியோமி இருந்துள்ளது. பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்டிவிக்களை கொடுத்ததே அந்நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.

    • ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று உள்ளது.
    • அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்‌ஷிப் போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 5.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சார் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.


    புராசஸரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட இதன் பேஸ் மாடலின் விலை ரூ.60 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நத்திங் போனுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது.
    • #DearNothing என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியது. லண்டனைச் சேர்ந்த இந்நிறுவனம் அங்கு நடைபெற்ற ஈவண்ட்டில் நத்திங் போன் 1 மாடலை அறிமுகம் செய்தது. பயனர்கள் எதிர்பார்த்தபடி ஏராளமான சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த போனுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பும் கிளம்பியது.

    இதற்கு காரணம் ஒரு லெட்டர் தான். தென்னிந்தியாவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், நேற்று நத்திங் போன் வெளியான சமயத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் நத்திங் போன் அடங்கிய பாக்ஸை பிரிக்கும் போது அதில் போன் எதுவும் இன்றி காலியாக இருப்பது போலவும், ஒரு லெட்டர் மட்டும் அதில் இருப்பது போலவும் அந்த வீடியோவில் அவர் காட்டி இருந்தார்.


    அந்த லெட்டரில் 'இந்த சாதனம் தென்னிந்திய மக்களுக்கு வழங்கப்படாது' என எழுதப்பட்டிருந்தது. இந்த லெட்டர் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆனது. நத்திங் நிறுவனம் பயன்படுத்தும் ஸ்டைலிலேயே அந்த லெட்டரில் உள்ள எழுத்துக்கள் இருந்ததனால் நெட்டிசன்களும் அது நத்திங் நிறுவனத்தில் இருந்து வந்த லெட்டர் தான் நம்பி, கொதித்தெழுந்தனர்.

    இதையடுத்து #DearNothing என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது. ஏராளமானோர் நத்திங் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வந்தனர். இதனால் பரபரப்பி நிலவியது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு லெட்டரை நத்திங் நிறுவனம் அனுப்பவே இல்லையாம். அது அந்த யூடியூபர் செய்த பிராங்க் வீடியோ என்பது பின்னர் தான் தெரியவந்தது. நத்திங் நிறுவனமும் இந்த சர்ச்சை குறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

    • நத்திங் போனை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு அந்நிறுவனம் ஏராளமான சலுகைகளையும் வழங்கி உள்ளது.
    • முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும்.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை லண்டனில் நேற்று நடைபெற்ற ஈவண்ட்டில் வெளியிட்டுள்ளது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு. இந்த ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு பாஸ் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பெற்றவர்களுக்கு மட்டுமே முதலில் நத்திங் போன் வழங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த 2 ஆயிரம் ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    நத்திங் போன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு அந்நிறுவனம் ஏராளமான சலுகைகளையும் வழங்கி உள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு போனில் மொத்த விலையில் இருந்து ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, முன்பதிவு செய்தவர்கள் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மூலம் நத்திங் போனை வாங்கினால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உடனடி டிஸ்கவுண்ட் சலுகையும் வழங்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர நத்திங் போனை முன்பதிவு செய்தவர்கள் அந்நிறுவனத்தின் 45வாட் பவர் அடாப்டர் மற்றும் நத்திங் இயர் 1 TWS இயர்போனை ரூ.1000 சலுகையுடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடாப்டர் மற்றும் இயர்போனின் ஒரிஜினல் விலை ரூ.2,999 மற்றும் ரூ.6,999 ஆகும். வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் நத்திங் போனின் விற்பனை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×