என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

ஒன்பிளஸ்சின் 10R மாடல் ஸ்மார்ட்போனிற்கு ரூ.8 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்தது அமேசான்
- அமேசான் ப்ரைம் டே விற்பனை வருகிற ஜூலை 23 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
- இதில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்டை ரூ.30 ஆயிரத்து 249க்கும் வாங்க முடியும்.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10T மாடல் ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், இதற்கு முந்தைய மாடலான ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி வருகிற அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது மட்டும் இந்த தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
அமேசான் ப்ரைம் டே விற்பனை வருகிற ஜூலை 23 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்டை ரூ.30 ஆயிரத்து 249க்கும் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூ.38 ஆயிரத்து 999 ஆகும். அமேசான் ப்ரைம் டே விற்பனையில் இதற்கு ரூ.8 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதேபோல் தற்போது ரூ.42 ஆயிரத்து 999க்கு விற்கப்பட்டு வரும் ஒன்பிளஸ் 10R-ன் 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட் மற்றும் ரூ.43 ஆயிரத்து 999-க்கு விற்கப்பட்டு வரும் 150 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலையும் ரூ.8 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட உள்ளது. அமேசான் வழங்கும் ரூ.4 ஆயிரம் டிஸ்கவுண்ட் கூபன் மற்றும் ரூ.4 ஆயிரத்திற்கான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மூலம் இந்த சலுகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






