என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  ஒன்பிளஸ் 10T மாடலின் இந்த ரேம் வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாதாம் - லீக்கான தகவல்
  X

  ஒன்பிளஸ் 10T மாடலின் இந்த ரேம் வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாதாம் - லீக்கான தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் 10T மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது.
  • இந்த போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வெளியிடப்பட உள்ளது.

  ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அதன் ஒன்பிளஸ் 10T மாடலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த போன் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

  அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது என தெரியவந்துள்ளது. 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட்டும், 12ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டும் இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


  இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.49 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் ஒன்பிளஸ் 10T-ன் சீன வெர்ஷனான ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோவில் இடம்பெற்று இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வெளியிடப்பட உள்ளது.

  Next Story
  ×