search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OnePlus 10T"

    • ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகமாக உள்ளது.
    • இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அதன் ஒன்பிளஸ் 10T மாடலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த போன் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

    அதன்படி சமீபத்தில், ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது எனவும் அதன் 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட்டும், 12ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டும் மட்டுமே வெளியாகும் என தகவல் பரவி வந்தது. அதுமட்டுமின்றி சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் இடம்பெற்றிருக்கும் என கூறப்பட்டது.


    இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் வெளியாவதை ஒன்பிளஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் ரேம் தொடர்பான சர்ச்சைக்கு அந்நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகமாக உள்ளது.

    • ஒன்பிளஸ் 10T மாடல் சீனாவில் மட்டும் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    • ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன்கள் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 10T மாடலை வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இதே மாடல் சீனாவில் மட்டும் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரே மாடலை இரண்டு பெயர்களில் வெளியிடப்படுதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

    அது ஏனென்றால் ஒன்பிளஸ் 10T மாடலை விட ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ மாடல் கூடுதல் ரேம் வசதியை கொண்டுள்ளது. ஏஸ் ப்ரோ மாடலில் 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் இடம்பெற்று உள்ளது. ஆனால் அந்த வேரியண்ட் ஒன்பிளஸ் 10T மாடலில் இடம்பெறவில்லை. மற்றபடி இரண்டுமே ஒரே அம்சங்களை கொண்டுள்ளது.


    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோவில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்னாப்டிராகன் 8 ப்ளஸ் Gen 1 புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளதாம். ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி IMX766 பிரைமரி கேமராவும், 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா ஒயிடு கேமராவும், 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ கேமராவும் பின்புறம் இடம்பெற்று உள்ளது.

    அதேபோல் முன்பகுதியில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா உள்ளது. 4,800 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 150 வாட் ரேப்பிட் சார்ஜிங் திறன் கொண்டதாகும். இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • ஒன்பிளஸ் 10T மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது.
    • இந்த போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வெளியிடப்பட உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அதன் ஒன்பிளஸ் 10T மாடலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த போன் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

    அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது என தெரியவந்துள்ளது. 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட்டும், 12ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டும் இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.49 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் ஒன்பிளஸ் 10T-ன் சீன வெர்ஷனான ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோவில் இடம்பெற்று இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வெளியிடப்பட உள்ளது.

    • கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் ஒன்பிளஸ் நிறுவனம் நடத்தும் முதல் நேரடி ஈவண்ட் இதுவாகும்.
    • ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10T மாடல் ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி உலக சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக நியூயார்க்கில் பிரத்யேக ஈவண்ட் ஒன்றை அந்நிறுவனம் நடத்த உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் ஒன்பிளஸ் நிறுவனம் நடத்தும் முதல் நேரடி ஈவண்ட் இதுவாகும்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்திய சந்தையும் முக்கிய பங்காற்றி உள்ளது. இதனால் அந்நிறுவனம் அதன் லான் ஈவண்ட்டை இந்தியாவிலும் ஸ்கிரீனிங் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள இண்டர்நேஷனல் எக்சிபிஷன் செண்டரில் இந்த ஸ்கிரீனிங் ஆகஸ்ட் 3-ந் தேதி நடைபெற உள்ளது.


    இந்த ஈவண்ட்டுக்கான டிக்கெட்டை பயனர்கள் 1 ரூபாய் மட்டுமே செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட்டிற்கு சென்று ரிஜிஸ்டர் செய்பவர்களுக்கு அவர்களது மெயிலில் ஒரு லிங்க்கும், பிரத்யேகமான அழைப்பு எண்ணும் கொடுக்கப்படும். அந்த லிங்க்கை ஓபன் செய்து 1 ரூபாய் கட்டணமாக செலுத்தி ரிஜிஸ்டர் செய்தபின், அதில் பிரத்யேகமான அழைப்பு எண்ணை பதிவிட்டு தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டுமாம்.

    இந்த ஈவண்ட்டிற்கு வரும் பயனர்கள் ஒன்பிளஸ் 10T மாடல் ஸ்மார்ட்போனின் செயல்திறனை சோதித்து பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்களாம். அதுமட்டுமின்றி வருபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒன்பிளஸ் 10T டிரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் என கூறப்படுகிறது.
    • அந்த ஸ்மார்ட்போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்களை இதுவரை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் 10T என்கிற 5ஜி மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் 3ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அம்சங்களை பொருத்தவரை இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 4,800mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.


    இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதுகுறித்த மேலும் சில விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, பின்புறம் 50 மெகாபிக்சன் மெயின் கேமராவும், 16 மெகாபிக்சல் அல்ட்ரா ஒயிடு மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கிறதாம். இந்த ஸ்மார்ட்போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
    • ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்களை இதுவரை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் 10T என்கிற 5ஜி மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 4,800mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.


    இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம் லீக் ஆகி உள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் 3ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் ஜேடு கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.

    அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


    ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 4,800mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரம் லீக் ஆகி உள்ளது.

    அதன்படி ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் 1ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
    • 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு 2022ம் ஆண்டு பிசியான ஆண்டாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த நிறுவனம் தொடர்சசியாக போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுவரை ஒன்பிளஸ் 10 ப்ரோ, 10R ரேஸிங் எடிசன், நார்டு 2T, நார்டு CE 2 லைட் ஆகிய மாடல்கள் இந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்டு உள்ளன.

    அடுத்ததாக அந்நிறுவனம் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா என்கிற மாடலை வெளியிடும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலாக ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியாகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடைசி ஃபிளாக்‌ஷிப் போனாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


    ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட இந்த போன் செயல்திறனில் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப் மற்றும் 150W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த போன் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 4,800mAh பேட்டரி திறனுடன் இந்த போன் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த போனின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதைப்பார்க்கும் போது இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இதுதவிர 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

    ×