search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஒரு ரூபாய் செலுத்தி ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் லான்ச் ஈவண்ட்டை நேரில் பார்க்கலாம் - எப்படி தெரியுமா?
    X

    ஒரு ரூபாய் செலுத்தி ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் லான்ச் ஈவண்ட்டை நேரில் பார்க்கலாம் - எப்படி தெரியுமா?

    • கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் ஒன்பிளஸ் நிறுவனம் நடத்தும் முதல் நேரடி ஈவண்ட் இதுவாகும்.
    • ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10T மாடல் ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி உலக சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக நியூயார்க்கில் பிரத்யேக ஈவண்ட் ஒன்றை அந்நிறுவனம் நடத்த உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் ஒன்பிளஸ் நிறுவனம் நடத்தும் முதல் நேரடி ஈவண்ட் இதுவாகும்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்திய சந்தையும் முக்கிய பங்காற்றி உள்ளது. இதனால் அந்நிறுவனம் அதன் லான் ஈவண்ட்டை இந்தியாவிலும் ஸ்கிரீனிங் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள இண்டர்நேஷனல் எக்சிபிஷன் செண்டரில் இந்த ஸ்கிரீனிங் ஆகஸ்ட் 3-ந் தேதி நடைபெற உள்ளது.


    இந்த ஈவண்ட்டுக்கான டிக்கெட்டை பயனர்கள் 1 ரூபாய் மட்டுமே செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒன்பிளஸ் இந்தியா வெப்சைட்டிற்கு சென்று ரிஜிஸ்டர் செய்பவர்களுக்கு அவர்களது மெயிலில் ஒரு லிங்க்கும், பிரத்யேகமான அழைப்பு எண்ணும் கொடுக்கப்படும். அந்த லிங்க்கை ஓபன் செய்து 1 ரூபாய் கட்டணமாக செலுத்தி ரிஜிஸ்டர் செய்தபின், அதில் பிரத்யேகமான அழைப்பு எண்ணை பதிவிட்டு தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டுமாம்.

    இந்த ஈவண்ட்டிற்கு வரும் பயனர்கள் ஒன்பிளஸ் 10T மாடல் ஸ்மார்ட்போனின் செயல்திறனை சோதித்து பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்களாம். அதுமட்டுமின்றி வருபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×