search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் ரேம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஒன்பிளஸ் நிறுவனம்
    X

    ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் ரேம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஒன்பிளஸ் நிறுவனம்

    • ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகமாக உள்ளது.
    • இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அதன் ஒன்பிளஸ் 10T மாடலை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளது. இதே மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த போன் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

    அதன்படி சமீபத்தில், ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் இந்தியாவில் வெளியாகாது எனவும் அதன் 8ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்ட்டும், 12ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டும் மட்டுமே வெளியாகும் என தகவல் பரவி வந்தது. அதுமட்டுமின்றி சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ என்ற பெயரில் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் இடம்பெற்றிருக்கும் என கூறப்பட்டது.


    இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் வெளியாவதை ஒன்பிளஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனின் ரேம் தொடர்பான சர்ச்சைக்கு அந்நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி அறிமுகமாக உள்ளது.

    Next Story
    ×