என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதை விட பெரிய சென்சார் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    • ஐபோன் 14 சீரிஸில் மொத்தம் 4 மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆப்பிள். அதன் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. விரைவில் அறிமுகமாக உள்ள ஐபோன் 14 சீரிஸில் மொத்தம் 4 மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதில் உள்ள ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ளதை விட பெரிய சென்சார் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது. அதன்படி இதன் இரு மாடல்கள் 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடனும், இதர இரு மாடல்கள் 6.7 இன்ச் பேனல்களுடனும் உள்ளன. இதன் ப்ரோ மாடல்களில் மட்டும் பெரிய கேமரா பம்ப் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. மேம்பட்ட 48 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படுவதால் இதில் கேமரா பம்ப் பெரிதாக இருக்கலாம்.


    இந்நிலையில், ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி தற்போது லீக் ஆகி உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 13ந் தேதி ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஈவண்டில் ஐபோன் 14 சீரிஸ் மட்டுமின்றி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் ப்ரோ வெர்ஷன் ஆகியவையும் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • இந்த ஆண்டு முதல் காலாண்டில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சாம்சங் நிறுவனம் முன்னிலை வகிப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எந்த கம்பெனி ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையானது என்பது குறித்த ஆய்வறிக்கையை இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி 23.4 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 73.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் இது 1.2 சதவீதம் குறைவாகும்.


    இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 18 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 56.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளதாம்.

    கடந்தாண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முதல் காலாண்டில் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சியோமி, ஓப்போ மற்றும் விவோ ஆகிய நிறுவனங்கள் முறையே 3, 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளன. இவையும் உற்பத்தியில் சரிவை சந்தித்துள்ளன.

    • பயனர்கள் மத்தியில் வி செயலியை பிரபலப்படுத்தவே அந்நிறுவனம் இவ்வாறு செய்துள்ளது.
    • இந்த புதிய சலுகை மூலம் இலவசமாக ரூ. 50 கேஷ்பேக்கும், 30 ரிவார்ட் காயினும் வழங்கப்படுகிறது.

    தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, தற்போது தனது பயனர்களுக்கு புது சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான வி ஆப் மூலம் பயனர்கள் ரூ.50 கேஷ்பேக் இலவசமாக பெற முடியும்.

    அது எப்படி என்று தற்போது பார்க்கலாம்.


    பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் வோடபோன் ஐடியா நிறுவன மொபைல் நம்பருக்கு ரிசார்ஜ் செய்ய வி செயலியை புதிதாக டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக்கும், 30 ரிவார்ட் காயின்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பயனர்கள் மத்தியில் வி செயலியை பிரபலப்படுத்தவும், அதன்மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும் வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    • ஒன்பிளஸ் TV 50 Y1S புரோ ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் ஒன்பிளஸ்ஸின் ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • இதில் உள்ள ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை பார்க்க முடியும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 43 இன்ச் Y1S புரோ மாடல் ஸ்மார்ட் டிவியை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது அதன் 50 இன்ச் மாடலை கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த டிவி பேசில் லெஸ் டிசைன் உடன் வருகிறது. இதில் ஹெச்.டி.ஆர் 10 பிளஸ், ஹெச்.டி.ஆர் 10 ஆகியவற்றுடன் HLG பார்மெட்டும் சப்போர்ட் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் MEMC எனும் புதிய தொழில்நுட்பமும் இடம்பெற்று உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 10.0, கூகுள் அசிஸ்டன்ட் ஆகிய அம்சங்களும் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள ஸ்மார்ட் மேனேஜர் அம்சம் மூலம் ஒன்பிளஸ் பட்ஸ், ஒன்பிளஸ் வாட்ச், ஒன்பிளஸ் கனெக்ட் 2.0 ஆகியவற்றை இணைக்க முடியும். இதில் உள்ள ஆக்சிஜன் பிளே 2.0 மூலம் 230க்கும் மேற்பட்ட லைவ் சேனல்களை பார்க்க முடியும்.


    43 இன்ச் மாடலை போல் இதிலும் 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ ஆகியவை இடம்பெற்று உள்ளன. இதன் விலை ரூ.32 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் TV 50 Y1S புரோ ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் ஒன்பிளஸ்ஸின் ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்களில் தற்போது அசத்தல் ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

    அதன்படி ஆக்சிஸ் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.3 ஆயிரம் உடனடி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர இந்த ஸ்மார்ட்டிவி வாங்குபவர்களுக்கு ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஒப்போவின் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி ஆகிய இரு வேரியண்ட்களில் வர உள்ளது.
    • இவை கொயட் நைட் பிளாக், டீப் சீ ப்ளூ மற்றும் செர்ரி பிளாசம் ஆகிய நிறங்களில் வரும் என தெரிகிறது.

    ஒப்போ நிறுவனம் அதன் புதிய A சீரிஸ் பட்ஜெட் ஸ்மார்டோனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் A97 என்கிற 5ஜி மாடல் ஸ்மார்ட்போனை தான் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

    தற்போது லீக் ஆகி உள்ள புகைப்படத்தின் படி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. அதன்படி 48 மெகாபிக்சல் பிரமைரி கேமராவும், 2 மெகாபிக்சல் செகண்டரி கேமராவும் இதில் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. இதுதவிர 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் வருகிறது.


    லீக்கான புகைப்படம் மூலம் இந்த ஸ்மார்ட்போன் பிளாட் ஃபிரேமை கொண்டுள்ளது தெரிகிறது. மேலும் இதில் டைப் சி போர்ட், 3.5எம்.எம் ஹெட்ஃபோன் ஜேக், 6.56 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 5,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி ஆகிய இரு வேரியண்ட்களில் வர உள்ளது. கொயட் நைட் பிளாக், டீப் சீ ப்ளூ மற்றும் செர்ரி பிளாசம் ஆகிய நிறங்களில் வருகிறது.

    • ரூ.140-க்கும் குறைவாகவே இந்த புது ரீசார்ஜ் பேக்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • இவை அனைத்தும் ஒரு மாத வேலிடிட்டி உடன் கூடிய ரீசார்ஜ் பேக்குகள் ஆகும்.

    ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிதாக நான்கு ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு பேக்குகள் ஸ்மார்ட் ரீசார்ஜ் என்கிற பிரிவின் கீழும், மற்ற இரண்டும் ரேட் கட்டர் பிரிவின் கீழும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.140-க்கும் குறைவாகவே இந்த புது ரீசார்ஜ் பேக்குகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ரூ.109 மற்றும் ரூ.111 மதிப்புள்ள புதிய பேக்குகள் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் வந்துள்ளது. இந்த பேக்குகள் மூலம் ரூ.99-க்கான டாக்டைம், 200 எம்.பி டேட்டா ஆகியவை வழங்கப்படுகின்றன. அழைப்புகளை மேற்கொள்ள ஒரு விநாடிக்கு ரூ.2.5 பைசா வசூலிக்கப்படும் என்றும் மெசேஜ் அனுப்பினால் ரூ.1 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    ஏர்டெல்லின் புதிய ரூ.128 பிளான் ஒரு மாத வேலிடிட்டி உடன் வருகிறது. இதில் அழைப்புகளை மேற்கொள்ள ஒரு ஒரு விநாடிக்கு ரூ.2.5 பைசா வசூலிக்கப்படும் வீடியோ கால் செய்ய ஒரு விநாடிக்கு ரூ.5 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் இதன் ரூ.131 பேக்கிலும் ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ள விநாடிக்கு ரூ.2.5 பைசாவும், தேசிய வீடியோ கால்களை மேற்கொள்ள ரூ.1-ம் எஸ்.எம்.எஸ் அனுப்ப ரூ.1.5ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • ஐகூ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 SoC புராசசரை கொண்டிருக்கும்
    • மேலும் இது 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என கூறப்படுகிறது.

    ஐகூ நிறுவனம் இந்தியாவில் அதன் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்து இருந்தது. அதன்படி 9 சீரிஸில் இதுவரை ஐகூ 9, ஐகூ 9 ப்ரோ, ஐகூ 9 SE ஆகிய மாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

    இந்நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ஐகூ 9T என பெயரிடப்பட்டுள்ள அந்த புது மாடல் ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


    இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 SoC புராசசரை கொண்டிருக்கும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவும் இதில் இடம்பெற்றுள்ளது. ஐகூவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என கூறப்படுகிறது.

    8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இது கருப்பு நிறத்தில் மட்டும் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • போக்கோவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஷேடோ கிரே மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்தது.
    • இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 8,499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ சி31 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா என எண்ணற்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது.

    பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி இத்துடன் 10 வாட் சார்ஜிங் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டு இருந்தன. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்தது.


    ஷேடோ கிரே மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் வந்த போக்கோ சி31 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 8,499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ. 7999 மற்றும் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    இதன்காரணமாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனை மளமளவென உயர்ந்தது. தற்போது இந்தியாவில் போக்கோ சி31 ஸ்மார்ட்போன் 10 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 

    • ஒன்பிளஸ் நார்டு 2T ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 5) முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
    • அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளத்தில் வாங்குபவர்களுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நாட்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அண்மையில் அறிமுகமாகமானது. ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 5) முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

    இதன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜேடு ஃபாக் மற்றும் கிரே ஷேடோ ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.


    இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளத்தில் வாங்குபவர்களுக்கு ரூ.1500 வரை உடனடி சலுகை வழங்கப்பட்டு உள்ளது. ஐசிஐசிஐ பேங்கின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம், 6.43 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வந்துள்ளது. 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய மாடல்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன.
    • அதிகபட்சமாக ரூ.12 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் விதவிதமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி புது ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் போது, பழைய மாடல்களுக்கான விலை அதிரடியாக குறைக்கப்பட்டு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐபோனுக்கான விலை ரூ.12 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய மாடல்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன. ஐபோன் 12 மாடல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.12 ஆயிரத்து 500 வரை விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. இது 64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி ஆகிய 3 மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.


    அதேபோல் ஐபோன் 13 மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 901 வரை குறைக்கப்பட்டு உள்ளது. ஐபோன் 13 மினி மாடலை பொருத்தவரை ரூ.5 ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட இரண்டு மாடல்களும் 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி ஆகிய 3 மெமரி வேரியண்ட்களில் கிடைக்கின்றன.

    • தவறான மெசேஜ்களை 1 மணிநேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகளுக்குள் அழித்துக் கொள்ளலாம் என்கிற கால அளவு தற்போது உள்ளது.
    • விரைவில் வர உள்ள அப்டேட்டில் இந்த கால அளவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    வாட்ஸ்அப்பில் எண்ணற்ற அப்டேட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 2 புதிய அம்சங்களை அந்நிறுவனம் அதன் பயனர்களுக்கு விரைவில் வழங்க உள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தவறாக அனுப்பிவிட்டாலோ, அல்லது அனுப்பப்பட்ட மெசேஜ்களில் எழுத்துப் பிழை இருந்தாலோ அதனை அழித்துவிடும் அம்சம் ஏற்கனவே உள்ளது.

    முதலில் தவறான மெசேஜ்களை 8 நிமிடங்களுக்குள் அழிக்க வேண்டும் என நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் இதன் கால அளவு 1 மணிநேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகள் என நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த கால அளவு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை 2 நாட்கள் 12 மணிநேரத்திற்குள் அழித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


    இந்த காலக்கட்டத்திற்குள் ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட் என நீங்கள் அனுப்பிய தரவுகள் எதுவாக இருந்தாலும் அழித்துக் கொள்ள முடியும். இதுதவிர பயனர்கள் வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து வெளியேறும் போது நீங்கள் வெளியேறியதற்கான மெசேஜ் குரூப் அட்மினுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும் என்றும், இதன்மூலம் சத்தமின்றி வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து வெளியேற முடியும். இந்த இரு அம்சங்களும் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒப்போ நிறுவனம் ரூ.6 ஆயிரம் வரை குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.
    • மற்ற இரண்டு மாடல்களின் விலை ரூ.4 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ நிறுவனம் அதன் F19 ப்ரோ பிளஸ், A76 மற்றும் A54 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை இந்தியாவில் அதிரடியாக குறைத்துள்ளது. ஒப்போ நிறுவனம் அதன் F19 ப்ரோ பிளஸ் மாடலை கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அப்போது இதன் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போது இந்த மாடலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி இதன் 8 ஜிபி ரேம் + 128ஜிபி ரேம் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.6 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கிரிஸ்டல் சில்வர் மற்றும் ஃபுளூயிட் பிளாக் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.


    அதேபோல் ஒப்போவின் A76 மாடல் விலை ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ரேம் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அறிமுகப்படுத்தும் போது ரூ.17,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த மாடல் ரூ.16,490-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர ஓப்போவின் A54 ஸ்மார்ட்போன் மாடலின் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3 விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் அறிமுகமாகி இருந்தாலும், இதன் ஹை எண்ட் மாடலான 6ஜிபி ரேம் + 128ஜிபி ரேம் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. அறிமுகம் ஆகும் போது ரூ.15,990 ஆக இருந்த இதன் விலை தற்போது 4 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ×